|
 |
 |
|
|
|
 |
கோஸ்டா காவ்ரஸ்/Costa Gavras : பொது அனுபவங்களிலிருந்து ஆழ்ந்த அரசியல் பிரக்ஞை நோக்கி - யமுனா ராஜேந்திரன்
கோஸ்டா காவ்ரஸ் துருக்கிய புரட்சிகர இயக்குனர் இல்மஸ் குணேவின் நண்பர். குணேவின் படங்கள் குறித்து மிக உயர்ந்த அபிப்ராயங்களை வெளியிட்டவர் காவ்ரஸ். காவ்ரஸ் கிரேக்க-பிரெஞ்சுத் திரைப்பட இயக்குனர். இவரது பாணி புகழ்பெறவும் பரவலாக மக்களிடத்தில் விவாதத்தைத் தூண்டவுமான காரணங்கள் இரண்டு. மிகவும் சாதாரணமாகக் காணக்கிடைக்கிற மனிதர்களை இவர் கதைமாந்தர்களாகத் தேர்ந்து கொள்கிறார். அரசியல் நெருக்கடிகளை இவர் படம் தனது களமாகத் தேர்ந்துகொள்கிறது. இதன் மூலம் உடனடியான தொடர்பை இவர் பார்வையாளர்களோடு ஏற்படுத்திக் கொள்கிறார்.
|
|
------------------------------------------------------------------------------------------------------------------------------ |
 |
கலை ரூபத்திற்காக அரூபமாய் - ட்ராட்ஸ்கி மருது
Matte Painting என்ற இக்கலை வடிவம் திரைக்கலையின் ஆதி முதல்வரான ஷார்ஷே மெலீயிடமே துவங்கிவிட்டது. திரைப்பட வரலாற்றோடு கூடிய, 100 ஆண்டு Matte Painting வரலாற்றை எழுதிய காரிஜ் பரன், 1940களில் வந்த “Thief of Bagdad” திரைப்படத்திற்கு தந்திரக் காட்சிகளைச் செய்த, தற்போது வயது முதிர்ந்த லாரன்ஸ் பட்லரை சந்திக்கச் சென்ற அனுபவத்தை அவர் வார்த்தைகளிலேயே கேட்கலாம்.
’கலிபோர்னியா மாநிலத்தின் பால் பூருக்கில் ஒரு 100 ஏக்கர் எஸ்டேட்டின் வாசலைக் கண்டுபிடிக்க கிட்டத்தட்ட பல மணி நேரமாக நான் அலைந்து திரிய வேண்டியிருந்தது. தந்திரக் காட்சிகளைச் செய்த முதிய ஓவியர் லாரன்ஸ் பட்லர் அங்குதான் தன் ஓய்வு நாட்களைக் கழித்து வருகிறார்....
|
|
------------------------------------------------------------------------------------------------------------------------------ |
|
 |
|
 |
|
காணும் முறைகள் - ஜான் பெர்ஜர் - தமிழில்: யுகேந்தர்
ஒரு வழியாக கேள்வி கேட்க துவங்கியுள்ள, ஆனால் எந்த விதத்திலும் கடந்து செல்லாமல் இருக்கும் மரபுகள் மற்றும் பயன்பாட்டு படி, பெண்ணின் சமூக இருப்பு என்பது ஆணிடமிருந்து வேறுபட்ட வகையாகவே இருக்கிறது. ஆணின் இருப்பு அவன் தன்னக்கத்தே கொண்டிருக்கும் அதிகாரப்பலத்தை சார்ந்தே இருக்கிறது. அவனது பலம் பெரியதாகவும் நம்பகத் தன்மையானதாகவும் இருந்தால், அவனது இருப்பு கவரும் விதமாக இருக்கும். அது சிறியதாகவோ அல்லது நம்பகத் தன்மையற்றதாகவோ இருந்தால், அவனது இருப்பு சிறியதாகவே காணப்படும். அதிகாரப்பலம் என்பது தார்மீகம், உடல், இயற்கை மனநிலை, பொருளாதாரம், சமூகம், பாலியல் சார்ந்து இருக்கலாம் -
|
|
மேலும் படிக்க |
|
|
|
திரைமொழி - 15 - Steven D. Katz தமிழில்: ராஜேஷ்
பல திரைப்படங்களில் மாடல்களும் மினியேச்சர்கள் என்று அழைக்கப்படும் செட் ப்ராப்பர்ட்டிகளும் இன்றியமையாதவை. இப்போது ஸிஜி என்று அழைக்கப்படும் க்ராஃபிக்ஸ் வந்துவிட்டாலும், மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் அவசியம் இவை தேவை. உதாரணமாக நமது காட்சியில் ஜெனரல் லீ சரணடைய வருகையில் அங்கே இருக்கக்கூடிய நூற்றுக்கணக்கான படை வீரர்கள், அவர்களின் ஆயுதங்கள், குதிரைகள், பீரங்கிகள், வண்டிகள் போன்றவையெல்லாம் இந்தக் கணக்கில்தான் சேரும். இத்தகைய பிரம்மாண்டமான காட்சியை எடுக்கையில் நேரும் பிரச்னைகள் கணக்கிலடங்காதவை. போலவே கேமராவின் முன்னால் என்ன நடக்கிறது என்பதைப்போலவே கேமராவின் பின்னால் என்ன நடக்கிறது என்பதையும் யோசித்துவைத்துக்கொள்ளுதல் மிக முக்கியம். |
|
மேலும் படிக்க |
|
 |
|
 |
|
 |
|
|
|
|
நாடு கடந்த கலை: குறும்படங்களின் பெரும்தடம் - சொர்ணவேல்
இந்த புத்தகத்தில் தேர்ந்தெடுத்திருக்கும் படங்கள் யாவையுமே காத்திரமாக தேர்வு செய்யப்பட்டவையே. ஆயினும் இன்று யூட்யூபில் காணக்கிடைக்கும் நூற்றுக்கணக்கான குறும்படங்களிலிருந்து அத்தகைய தேர்வு என்பது மிகச் சிரமமான காரியம் என்பதை யாவரும் உணரலாம். அத்தகைய தேர்வு எல்லோருடைய ருசியையும் திருப்திப் படுத்துவதாக அமைவதும் கடினம். ஆனால் அததகைய ஒரு குறும்பட அட்டவணையை அருண் வெற்றிகரமாக இப்புத்தகத்தின் மூலம் தயார் செய்திருக்கிறார். அதற்கு ஒரு காரணம் அவர் இந்த குறும்பட வரிசையை தனக்கு தற்செயலாக ப்ரௌஸ் செய்து கொண்டிருக்கையில் கிடைத்து தான் பார்த்து ரசித்த படங்களிலிருந்து அல்லாமல் தான் பல வருடங்களாக பார்த்து ரசித்த படங்களிலிருந்து தொகுத்திருப்பதுதான்.
|
|
மேலும் படிக்க |
|
|
|
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை ‘வெண் சங்கு’ - தம்பிஐயா தேவதாஸ்
‘தெய்வநீதி’ (1950), ‘கலாவதி’ (1951), நம்ம குழந்தை’ (1955), ‘வைரமாலை’ (1956) போன்ற படங்களே அவை. இவற்றை இந்த இளைஞனே நெறியாண்டான். நீண்ட நாட்களின்பின் இலங்கை திரும்பினான். பல சிங்களப் படங்களைத் தயாரித்து நெறியாண்டான். ‘மீனா மூவீஸ்’ என்ற சினிமா நிறுவனத்தை உருவாக்கினான். வெல்லம்பிட்டியில் ஆர்.ரீ. ஸ்ரூடியோவைக் கட்டினான். இந்தத் தமிழ் இளைஞனின் மனதில்தான் இலங்கையிலும் ஒரு தமிழ்ப் படத்தைத் தயாரித்தால் என்ன? என்ற கேள்வி உருவானது. அந்த இளைஞனின் பெயர்தான் டபிள்யூ.எம்.எஸ். தம்பு. அவர் தயாரிக்கத் தொடங்கிய தமிழ்ப் படத்தின் பெயர்தான் ‘வெண்சங்கு’. தம்புவே மூலக் கதையை எழுதினார். அவரது கதைக்கு வானொலி எழுத்தாளரான சிறில் ஜே. பெர்னாண்டோ திரைக்கதை வசனம் எழுதினார்.
|
|
மேலும் படிக்க |
|
|
|
|
------------------------------------------------------------------------------------------------------------------------------ |
|
 |
|
 |
|
வெள்ளித்திரை வித்தகர்கள் - ஷியாம் பெனகல் - அறந்தை மணியன்
அதற்கு முன் அப்படத்தைக் குறித்த எந்தவொரு செய்தியையும் நான் படித்திருக்கவில்லை. இயக்குனர் , கதாநாயகர், கதாநாயகி அத்தனை பேருமே புதுமுகங்கள் என்பதாலும் பாடல்கள் எதுவும் முன்னதாகப் பிரபலமாகவில்லை என்பதாலும், படத்திற்குச் சென்னையில் அதிக வரவேற்பில்லை. ஆனால் எனக்குள்ளே ஏதோ ஓர் உந்துதல்... படத்தில் என்னவோ இருக்கிறது என்று தோன்றியது. படத்தைப் பார்த்தேன். அசந்து போய் விட்டேன்... இப்படியெல்லாம் கூடப் படம் உருவாக்க முடியுமா என்று எண்ணி வியந்து நின்றேன். ஷியாம் பெனகல் என்ற அந்த இயக்குனரின் பெயர் பசுமரத்தாணி போல என்னுள்ளே பதிந்து போனது. |
|
மேலும் படிக்க |
|
|
|
கலையை நேசித்த தலைசிறந்த இயக்குநர்கள் - பரசுராம்
மிக எளிமையான கதை. நகரத்திற்கு வந்து நிரந்தரமாகக் குடியேறிவிட்ட ஒரு இளைஞன் கிராமத்தில் பள்ளி ஆசிரியராக வேலை பார்த்து வாழ்ந்து மறைந்த தன் தந்தையின் மரணச் செய்தி கேட்டு இறுதிச் சடங்கிற்குச் செல்கிறான். அங்கே அவனுடைய வயதான அம்மா, வேறொரு ஊரில் வைத்து இறந்துபோன தந்தையின் உடலை ட்ரக் அல்லது கார் போன்ற வாகனத்தில் எடுத்துவரக் கூடாது என்று தடுக்கிறாள். சீனாவின் பழைய நம்பிக்கைகளின் படி இறந்தவர் உடலை, மனிதர்கள் அவர் நடந்த சாலைகளின் வழியே சுமந்தபடி, ‘பயப்படாதீர்கள்... இது நீங்கள் நடந்த சாலைதான்.. உங்கள் வீடு போகும் சாலைதான் என்று சொல்லிக்கொண்டே வருவார்கள்.
|
|
மேலும் படிக்க |
|
|
------------------------------------------------------------------------------------------------------------------------------ |
|
|
|
|
|
|
|
|
|
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
காப்புரிமை © பேசாமொழி
Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome
|
|
|