|
|
|
லத்தீன் அமெரிக்க சினிமா 5 - சாரு நிவேதிதா
கிரேக்கக் கவிஞர் அப்பல்லோனியஸ், ரோம் நகரத்துக் கவிகளான வர்ஜில், ஆவிட் போன்றவர்களால் பாடப்பட்டவன் ஓர்ஃபியூஸ். மாபெரும் இசைக் கலைஞன். அவன் கையிலிருக்கும் யாழை இசைத்தால் மேகம் திரண்டு வந்து மழை பொழியும். கொடிய மிருகங்களும் அவன் அடி பணியும். விருட்சங்களும் பட்சிகளும் கூட அசைவின்றி அவன் பாடலைக் கேட்கும். நதிகளும் பாதை மாறி அவன் பக்கம் ஓடி வந்ததற்கான சாட்சிகள் இருக்கின்றன. பாறைகளும் கசிந்து உருகியிருக்கின்றன. அப்பேர்ப்பட்ட இசைக் கடவுள் ஓர்ஃபியூஸ். அவன் யூரிடிஸி என்ற பெண்ணைக் காதலித்து மணக்கிறான். விதி வசத்தினால் மண நாள் அன்றே யூரிடிஸி சர்ப்பம் தீண்டி மரணம் அடைகிறாள். அந்தத் துயரத்தைத் தாங்க முடியாத ஓர்ஃபியூஸ் பாதாள உலகத்துக்குள் சென்று மரண தேவனை சந்தித்துத் தன் பாடலால் அவனை மகிழ்வித்து யூரிடிஸியின் உயிரைத் திரும்ப வாங்கி வருவேன் என முடிவெடுக்கிறான்.
|
|
------------------------------------------------------------------------------------------------------------------------------ |
|
பெர்லின் சுவர் தகர்ப்பிற்குப் பின் : போவதற்கு இடமில்லை - யமுனா ராஜேந்திரன்
சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப்பின்னான ஐரோப்பாவில் முன்னனைய மேற்கு ஜெர்மனியின் மூனிச் நகரில் வாழ்ந்த ஒரு மார்க்ஸிஸ்ட் பெண் எழுத்தாளரின் வாழ்வையும் தற்கொலையையும் திரைப்படம் போவதற்கு இடமில்லை. கம்யூனிஸ எதிர்ப்பு ஆதரவு எழுத்துக்கள் பற்றிய முகாந்தரத்துடன் இவ்வறிமுகத்தைத் தொடங்க வேண்டியிருக்கிறது. ஒஸ்கார் ரோலர் இயக்கியிருக்கும் இப்படம் இரண்டாயிரமாண்டின் மிகச்சிறந்த ஜெர்மானியப்படமாக விருது பெற்றிருக்கிறது. இரண்டாயிரமாண்டு ஜுன் மாதம் இலண்டன் இன்ஸ்டிட்யூட் ஆப் கன்டம்பரரி ஆர்ட்ஸ் அரங்கில் நடந்த பெர்லின் திரைப்படவிழாவில் இப்படம் தொடர்ந்து பதினைந்து நாட்கள் திரையிடப்பட்டது. படம் மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு மார்க்ஸிஸ்ட் பெண் எழுத்தாளரின் வாழ்வைச் சொல்கிறது. அவர் மேற்கு ஜெர்மனியில் வாழ்ந்தாலும் கிழக்கு ஜெர்மனி சமூக அமைப்பின் மீது ஆர்வம் கொணடவர்.
|
|
------------------------------------------------------------------------------------------------------------------------------ |
|
|
|
|
|
காணும் முறைகள் - ஜான் பெர்ஜர் - தமிழில்: யுகேந்தர்
கலை படைப்புகளை மறு உருவாக்கம் செய்யலாம். கோட்பாட்டளவில் யார் வேண்டுமானாலும் அவற்றை பயன்படுத்தவும் முடியும். பெரும்பாலும், கலை சார்ந்த புத்தகங்கள், பத்திரிக்கைகள், திரைப்படங்கள் அல்லது தங்க முலாம் பிரேம்களுடன் அறைகளில் இன்றும் மறு உருவாக்கங்கள் பயன்படுத்தப்படுகின்றது. எதுவும் மாறவில்லை என்ற மாயையை அதிகரிக்க, தனது தனிப்பட்ட குறைவற்ற அதிகாரம் கொண்ட கலை, பிற வடிவங்களான....
|
|
மேலும் படிக்க |
|
|
|
திரைமொழி - 13 - Steven D. Katz தமிழில்: ராஜேஷ்
வடபகுதியில் படைகள் போரிடும் மெல்லிய எல்லைக்கோட்டின் பின்புறம் இருக்கிறோம். அத்தனை படைவீரர்களும் ஆச்சரியமாக எதிரே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அங்கே நான்கு குதிரைவீரர்கள், சமாதானக்கொடியுடன் ஒரு திறந்தவெளியில் இருந்து வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் ஜெனரல் ராபர்ட். லீ. இந்தக் குதிரைவீரர்கள் ராணுவத்தினூடே செல்ல வசதியாகப் போர் வீரர்கள் நகர்ந்து வழிவிடுகிறார்கள்.
|
|
மேலும் படிக்க |
|
|
|
|
|
|
|
|
|
|
வெள்ளித்திரை வித்தகர்கள் - சத்யஜித் ராய் - அறந்தை மணியன்
சத்யஜித் ராய் போன்றவர்களின் படங்கள் ‘கலைப்படங்கள்’ (ART FILMS) என்றும் ‘கவைக்குதவாத படங்கள்’ என்றும் பொழுதுபோக்கு அம்சமில்லாத வர்த்தகரீதியில் வெற்றி பெற முடியாத படங்கள் என்றும் நம்மவரில் பெரும்பாலானோர் கருதுகின்றனர். ஆனால் சத்யஜித் ராயின் அனேகமாக அத்தனை படங்களுமே, குறைந்தபட்சம், மேற்கு வங்கம், பீஹார், ஒரிஸா, அஸ்ஸாம், ஆகிய மாநிலங்களில் வர்த்தக ரீதியில் வெற்றி பெற்றன என்பதுடன் உலகளவில் புகழ்பெற்று நமது நாட்டுத் திரையுலகிற்கு சர்வதேச அங்கீகாரம், புகழ், பெருமை ஆகியவற்றைக் கொணர்ந்தன என்பதுதான் மறுக்க... |
|
மேலும் படிக்க |
|
|
|
சொர்க்கத்தின் நாட்கள் - Days of Heaven - வருணன்
மாலிக்கின் முதல் திரைப்படமான Badlands குற்றப் பிண்ணனியில் எடுக்கப்பட்ட திரைப்படம். உட்பொருளில் அடர்வு அதிகமில்லாத போதிலும் அப்படம் எடுக்கப்பட்ட விதத்தால் விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்த படைப்பானது. தனது முதல் முழுநீள திரைப்படத்திலேயே காட்சிமொழியில் தனக்கிருந்த ஆளுமையை வெளிக்காட்டினார். இவரது இரண்டாவது படைப்பான Days of Heaven (1978) இன்றளவும் நினைவுகூறத்தக்க ஒரு படைப்பாக விளங்குகிறது. இப்படத்திற்கு பிறகு அவர் மிக நீண்ட இருபது வருட இடைவேளைக்குப் பிறகே தந்து மூன்றாவது திரைப்படத்தை...
|
|
மேலும் படிக்க |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|