திரைப்பட விழா அனுபவங்கள் : கலை – சந்தை – அரசியல் - யமுனா ராஜேந்திரன்

ஆண்டுக்கணக்கிலாக கோவையில் இன்று கோணங்கள் திரைப்பட இயக்கத்தை நிருவகிக்கிற நண்பர்கள் ஆனந்த், சந்திரன் போன்றவர்களை நினைக்கிறபோது, திரைப்பட விமர்சன நூலுக்கான இந்திய விருதினை கோவை நண்பர் ஜீவா பெற்றபோது, கோணங்களுக்காக டேனிஷ்-ஸ்பானிஷ் திரைப்பட விழாக்களைக் கோவையில் ஒருங்கிணைத்து அறிமுகப்படுத்திய போது, கோவையின் திரை ஆர்வ முன்னோடிகளை நினைக்கப் பெருமிதமாகவும் மனம் நிறைவாகவும் இருக்கிறது. அன்று சென்னை பிலிம் கிளப் சார்பில் வெளியிடப்பட்ட நூல்கள், பிலிம் சொஸைட்டிகள் மூலம் அவ்வப்போது தமிழகத்தின் வேறு வேறு சிற்றூர்களில் அபூர்வமாகத் திரையிடப்பட்ட படங்கள்தான் அன்று திரைப்படங்களின் மேல்காதல் கொண்டவர்களுக்குள் இருந்த கனவுத் திரைப்பட விழாக்களுக்கு மறுதலையாக, தாகம் தணிக்கும்....

  மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------------------------------------

சென்னைத் திரைப்பட விழா - தங்கராஜ் நேர்காணல் - தினேஷ், அருண் (தமிழ் ஸ்டுடியோ)

2003 ஆண்டு தொடங்கப்பட்ட ICAF (Indo Cine Appreciation Foundation) என்கிற ப்லிம் சொசைட்டியின் செயலாளரும், சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவின் நிறுவனருமான தங்கராஜ் அவர்களை பேசாமொழி இணைய இதழுக்கு நேர்காணல் செய்தோம். சுமார் 500 உறுப்பினர்களுடன், ஒவ்வொரு மாதமும் இரண்டு அல்லது மூன்று திரைப்பட விழாக்களை இந்த அமைப்பு நடத்துகிறது. இதன் மூலம் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் திரைப்படங்களை குறுந்தகடுகளாக வாங்கி அதனை ICAF இன் உறுப்பினர்களுக்கு காண்பிக்கிறார்கள். இங்குள்ள திரைப்பட துறையைச் சார்ந்தவர்கள் வெளிநாட்டு திரைப்படங்களின் தொழில் நுணுக்கங்களைப் படித்து நன்கறிந்து தங்களுடைய திறமைகளை வளர்த்துக்கொள்ள ஒரு தூண்டுகோலாக அமையும் என்பதுதான் இதன் முழுமையான நோக்கம் என்கிறார் தங்கராஜ். எளிமையாகவும், இளைஞர்களை (வயதில் மூப்படைந்திருந்தாலும் இன்னமும் பலர் இங்கே சுறுசுறுப்பாக வேலை செய்துக்கொண்டிருக்கிறார்கள்) வைத்து வேலை வாங்கிக்கொண்டும் இருந்த தங்கராஜிடம் பேசியதில் இருந்து கிடைத்த தகவல்களையும் இங்கே படிக்கக் கொடுத்திருக்கிறோம்.

  மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------------------------------------
   
 
வூட்லேண்ட்ஸ் திரையரங்க உரிமையாளர் வெங்கட்டுடன் நேர்காணல் - தினேஷ், அருண் (தமிழ் ஸ்டுடியோ)

1945லேயே எங்களுக்கான ஒரு தியேட்டர் உட்லேண்ட்ஸ் என்ற பெயரிலேயே மைசூரில் இருந்தது. 1945லிருந்தே சினிமா சம்பந்தமான தொழிலிலேயே இருக்கிறோம். சென்னையில் 1986லிருந்து திரையரங்க வியாபாரத்தை ஆரம்பித்தோம். சென்னை சர்வதேச திரைப்பட விழாவினை 2003ஆம் ஆண்டு பைலட் தியேட்டரில் திரையிட ஆரம்பித்தார்கள். பின்னர் 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டில் ஆனந்த் தியேட்டரில் திரையிட்டார்கள். ஆனந்த் தியேட்டர் மூடப்பட்டவுடன் உட்லேண்ட்ஸ் திரையரங்கத்தில் திரையிடுகிறார்கள். அந்த வருடத்திலிருந்து தொடர்ந்து நாங்கள் ஒன்பது வருடங்களாக திரைப்பட விழாவிற்காக உட்லேண்ட்ஸ் திரையரங்கத்தை கொடுத்து வருகிறோம். திரைப்பட விழாவிற்கான சூழலைக் கொடுப்பதற்காக இரண்டு தியேட்டர்களையுமே (உட்லேண்ட்ஸ் மற்றும் சிம்பொனி) கொடுத்துவிடுகிறோம்.


  மேலும் படிக்க
 
 
கேரளத் திரைப்பட விழா - அனுபவங்கள் - வைஷ்ணவ் சங்கீத்


திரைப்படங்கள் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமே என்பது ஒரு பொதுவான கருத்து. மக்களின் அன்றாட இறுக்கமான வாழ்க்கைக்கு நடுவில் திரைப்படங்கள் அவர்களின் சோர்வையும், சலிப்பையும் போக்கும் ஒரு மருந்தாகவே பார்க்கப்படுகிறது. அதுவும் ஒரு விதத்தில் உண்மைதான். இரண்டரை மணி நேரம் படத்தை பார்த்தோமா, சிரித்து மகிழ்ந்தோமா என்பதே அவற்றை எதிகொள்ளும் முறையாக நாம் பழக்கப்படுத்திக் கொண்டுள்ளோம். இதனால் நம்மூரில் எடுக்கப்படும் திரைப்படங்களிலும் அவ்விதியே கையாளுப்படுகின்றன. திரையரங்கில் படம் பார்ப்பவர்களை குதூகலப்படுத்த வேண்டும் என்பதே பெரும்பாலான திரைப்படங்களின் நோக்கமாக இருந்து வருகிறது. ஆனால் தற்போதைய நிலையில், திரையரங்குகளையும் தாண்டி ஒரு கைப்பேசிக்குள் வைத்து திரைப்படங்களை பார்க்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.




  மேலும் படிக்க
       
 
 
பெங்களூரு திரைப்பட விழா - அனுபவங்கள் - 'கருந்தேள்' ராஜேஷ்

பெங்களூரில் இந்த வருடம் நடைபெற்ற திரைப்பட விழா, டிசம்பர் நான்காம் தேதியில் இருந்து பதினோராம் தேதிவரை நடைபெற்றது. வழக்கப்படி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த படங்கள் பங்கேற்றன. மொத்தம் 170 படங்கள். 44 நாடுகள். 11 திரையரங்குகள். இந்த ஆண்டின் retrospective பிரிவின்கீழ் புகழ்பெற்ற போலிஷ் இயக்குநர் க்ஷிஸ்டாஃப் ஸானூஷீ (Krzysztof Zanussi) மற்றும் ஃபில்லிப் நாய்ஸின் படங்கள் மொத்தம் பதினொன்று திரையிடப்பட்டன. இந்த ஏழாவது பட விழாவின் மையக்கரு பாலியல் வன்முறையாக இருந்தது. இந்தத் தலைப்பில் மொத்தம் ஏழு சிறப்புப் படங்கள் திரையிடப்பட்டன. இதற்கெனவே ஒரு கருத்தரங்கமும் நடைபெற்றதைக் காணமுடிந்தது. சென்றமுறை மொத்தம் ஏழே..

 

  மேலும் படிக்க
 
 
கோவா - திரைப்பட விழா - அனுபவங்கள் - உலக சினிமா ரசிகன்

‘பள்ளிக்கட்டு சபரி மலைக்கு…கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை’ என ஐயப்ப பக்தர்கள் கேரளா கிளம்பிச்செல்லும் போது நாங்கள் கோவா செல்வோம். ஐயப்பபக்தர்கள் இருமுடி கட்டி கிளம்புவது போல் இரண்டு டிசர்ட்டை மட்டும் மூட்டை கட்டிக்கொண்டு புறப்பட்டு விடுவார் என் குருசாமி இயக்குனர் அருண் கார்த்திக். 22 வயது அருண் கார்த்திக்கை குருசாமியாக ஏற்றுக்கொள்ள எந்த தயக்கமும் இல்லாத 52 வயது உலகசினிமா பக்தன் நான். 2013ல் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இருவரும் கலந்து கொண்டோம். 2014ல் தமிழில் ஒரு உலகசினிமாவை படைத்து, அந்த படைப்போடு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என சத்தியம் செய்து கொண்டோம். 2013 சத்தியம்….2014ல் சாத்தியமாயிற்று.



  மேலும் படிக்க
   
------------------------------------------------------------------------------------------------------------------------------
   
 
விருப்பம் வேலையானால் – பிலிம்நியூஸ்ஆனந்தன் - 10 - தினேஷ் குமார்

”களத்தூர் கண்ணம்மா”, படத்தில் நடித்துக்கொண்டிருந்த ஜெமினி கணேசன், என்னை அழைத்துச் சொன்னார், அவர் அருகில் ஒரு சிறு பையனும் நின்றுகொண்டிருந்தான். ”ஆனந்தா இந்தப்பையனை நல்லா பார்த்துக்கோ, பிற்காலத்துல இவன் பெரிய நடிகனா வரப்போறான், இப்பவே இவனை போட்டோ எடுத்து வச்சுக்க” என்று அந்தச் சிறுவனை என்னிடம் அறிமுகப்படுத்தினார். அந்தச் சிறுவன்தான் பின்னாளில் ’உலக நாயகன்’ என்று நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஜெமினி கணேசனின் வாக்குகள் பொய்க்கவும் இல்லை. நான் கமல ஹாசனுக்காக அவர் பிறந்த நாளிலும், அவர் நூறு....




  மேலும் படிக்க
 
 
தமிழ் ஸ்டுடியோ ஏழாம் ஆண்டு விழா - தினேஷ்

நான் பிற்காலத்தில் என் வாழ்வை ஆர்டிஸ்ட்டாக அமைத்துக்கொள்ள எனக்கான உந்துதலாக இருந்தது கூட அனிமேஷன் படங்களும், ஓவியங்களும் தான், இவையெல்லாவற்றையும் தாண்டியதாக சினிமா இருக்கிறது. மிக இள வயதிலேயே குறிப்பாகச் சொல்லவேண்டுமானால், பத்தாம் வகுப்பு படிக்கின்ற காலகட்டத்திலேயே 2001 ஸ்பேஸ் ஒடிசி (ஸ்டான்லி குப்ரிக்கின் படம் - 1968) போன்ற படங்களையெல்லாம் பார்க்கின்ற வாய்ப்புகிடைத்திருக்கின்றது. ஆனால், நீங்கள் என்னதான் அதிகமான இலக்கியம் படித்திருந்தாலும், ஓவியங்களின் மீதான பரிச்சயங்கள் இருந்தாலும் திரையரங்கினுள் இருக்கைகளுக்குள் அமர்கிறபொழுது உங்களை குழந்தை மனோபாவத்துடன் வைத்துக்கொண்டால்தான் திரையில் சொல்லப்படுகின்ற விஷயங்களை உள்வாங்கிக்கொள்ள இயலும்.




  மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------------------------------------
 
 
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
     
     
     
     
     
     
     
     
 
 
 
 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

காப்புரிமை © பேசாமொழி

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome