|
|
|
லத்தீன் அமெரிக்க சினிமா 3 - சாரு நிவேதிதா
1908-இல் பெல்ஜியத்தில் ஒரு பணக்கார ப்ரஸீலியத் தம்பதிகளுக்குப் பிறந்த மாரியோ பெய்ஹோத்தோவின் இளமைக்காலமும் படிப்பும் லண்டனில் கழிந்தது. 1929-ஆம் ஆண்டு ஒருநாள் பாரிஸில் நடந்து சென்று கொண்டிருந்த போது Vu என்ற ஃப்ரெஞ்சுப் பத்திரிகையில் பின்வரும் புகைப்படத்தைப் பார்த்தார் மாரியோ. ஒரு பெண்; அவளுக்குப் பின்னால் இருந்து கை விலங்கு மாட்டப்பட்ட ஒருவன் அவளைக் கட்டி அணைக்கிறான். இதை எடுத்தவர் உலகப் புகழ்பெற்ற புகைப்படப் பத்திரிகையாளர் André Kertesz. இந்தப் புகைப்படத்தினால் உந்தப்பட்டு அன்றைய இரவே ஒரு படத்துக்கான கதைச் சுருக்கத்தை எழுதினார் பெய்ஹோத்தோ. உடனே ப்ரஸீல் திரும்பிய அவர் பட வேலைகளை ஆரம்பித்தார். மே 17, 1931 அன்று ரியோ தி ஹனைரோவில் Limite என்ற அந்த மௌனப் படம் திரையிடப்பட்டது. இதுதான் பெய்ஹோத்தோ தன் வாழ்நாளில் இயக்கிய ஒரே படம்.
|
|
------------------------------------------------------------------------------------------------------------------------------ |
|
கென்லோச் : பார்லிக் கதிர்களை அசைத்துச் செல்லும் காற்று - யமுனா ராஜேந்திரன்
"சுதந்திரத்திறகான போராட்டம் பற்றிய கதை என்பது திரும்பத் திரும்ப சொல்லப்படுகிறது. திரும்பத் திரும்பவும் அது நிகழ்கிறது. எந்தக் காலமும் இந்தக் கதையைச் சொல்வதற்கான பொருத்தமான காலம்தான். உலகத்தில் எப்போதுமே ஏதோ ஒரு இடத்தில் ரரணுவ ஆக்கிரமிப்பு நடந்து கொண்டே இருக்கிறது. ஆக்கிரமிப்புக்கு உள்ளான மக்கள் ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்துப் போராடிக் கொண்டேயிருக்கிறார்கள். பிரித்தானியப் படைகள் இப்போது எங்கே இருக்கிறது என நான் சொல்லத் தேவையில்லை. துரதிருஸ்டவசமான, வன்முறை நிறைந்த, சட்டவிரோதமான ராணுவ ஆக்கிரமிப்பு இப்போது எங்கே நடந்து கொண்டிருக்கிறது என நான் சொல்லத் தேவையில்லை. எனது திரைப்படம் அன்னிய ஆக்கிரமிப்பு குறித்தது. அதனோடு அசாதாரணமான தோழமையும்....
|
|
------------------------------------------------------------------------------------------------------------------------------ |
|
|
|
|
|
காணும் முறைகள் - ஜான் பெர்ஜர் - தமிழில்: யுகேந்தர்
இந்த மறு உருவாக்கத்தைப் பார்த்த பின்பு, அசல் ஓவியத்தைப் பார்க்க ஒருவர் லன்டன் நேஷனல் கேலரிக்கு செல்லலாம், மறு உருவாக்கத்தில் என்ன குறைபாடு உள்ளதென கண்டறியலாம். மாற்றாக, மறு உருவாக்கத்தின் தரத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, அந்த ஓவியத்தை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டு உண்மையான அசல் ஓவியத்தைப் காண்பார் என்றால், புகழ்ப்பெற்ற இந்த ஓவியத்தின் மறு உருவாக்கத்தை எங்கோ...
|
|
மேலும் படிக்க |
|
|
|
வெள்ளித்திரை வித்தகர்கள் - 1 - அறந்தை மணியன்
’நமது நாட்டின் வறுமையைப் படமெடுத்துக் காட்டி மேலை நாடுகளில் பிரபலமடைந்தவர் அவர்’ என்று விமரிசித்தவர்கள் ஏராளம். ஆனால், அப்படிக் கூறியவர்கள் யாருமே அவரது அத்தனை படங்களைக்கூட வேண்டாம்; மூன்று அல்லது நான்கு படங்களைக் கூட பார்க்காதவர்களாகத்தான் இருந்தார்கள். ஏனெனில், அவர் உருவாக்கிய முப்பது முழு நீளக் கதைப் படங்களில் மூன்றில் மட்டுமே வங்க மாநிலத்தில் நிலவிய வறுமையைக் கருப்பொருளாகக் கொண்டிருந்தார்.
|
|
மேலும் படிக்க |
|
|
|
|
|
|
|
|
|
|
விருப்பம் வேலையானால் – பிலிம்நியூஸ்ஆனந்தன் - 6 - தினேஷ் குமார்
முன்னர் ‘பாட்டும் பரதமும்’ என்ற தலைப்பில், பரத நாட்டியம் குறித்தான மையத்துடன் பி.மாதவன் ஓர் படம் எடுக்க விரும்பினார். பரதநாட்டியம் என்றால் அப்போது நாட்டியப் பேரொளி ‘பத்மினி’,தான் அனைவரின் விருப்பமும். ஆனால், பத்மினி அப்போது நடிப்பிலிருந்து ஒதுங்கிய காலகட்டம். அடுத்த நிலையில், பரதநாட்டியம் ஆடும் பெண்ணின் கதாபாத்திரத்திற்கு தகுதியான ஒரே ஆள் ஜெயலலிதா மட்டுமே. ஜெயலலிதாவைச் சந்திக்கின்ற சமயத்தில் ’பாட்டும்...
|
|
மேலும் படிக்க |
|
|
|
திரையில் புதினம் - வருணன்
ஆண்டர்ஸனின் கதைக் கருக்கள் எப்போதுமே எளிமையானவை. அவற்றை சொல்லும் விதங்களில் மட்டும் அவரது தனித்துவம் மிளிரும். நிகழ்காலத்திலிருந்து பின்னகரும் படியான கதையோட்டம் கொண்டது இத்திரைப்படம். ‘The Author’ என்று மட்டுமே அறியப்படும் ஒரு கல்லறையிலுள்ள எழுத்தாளரின் நினைவிடத்திற்கு ஒரு பதின்ம வயது வாசகி வருகிறாள். அவருக்கு மரியாதை செய்யும் வாசகி அருகில் அமர்ந்து தனது கரங்களில்....
|
|
மேலும் படிக்க |
|
|
|
|
|