|
|
|
காணும் முறைகள் 2 - ஜான் பெர்ஜர் - தமிழில்: யுகேந்தர்
ஒரு இயற்கைக்காட்சியை பார்க்கும் போது, நம்மை அதில் இருத்திக்கொள்கிறோம். கடந்தகால கலைப்படைப்பை பார்த்தால், நாம் வரலாற்றில் நம்மை இருத்திக்கொள்வோம். அதை நாம் பார்க்க தடைவிதிக்கப்பட்டால், நமக்கு சொந்தமான வரலாற்றை நாம் இழக்கிறோம். இந்த இழப்பினால் யாருக்கு நன்மை? இறுதியில், கடந்த கால கலைப்படைப்பை புதிராக்குக்கிறார்கள். தனி சலுகை பெற்ற ஒரு சிறுபான்மை ஆளும் கூட்டம் வரலாற்றை தங்களுக்கு நியாயப்படுத்த முயலும். அப்படியான நியாயப்படுத்தல் நவீன முறையில் பயனளிக்காது. அதனால், தவிற்க இயலாமல், அது புதிராகுகிறது. ஓவியர் ஃப்ரான்ஸ் ஹால்ஸ் (Frans Hals) குறித்த ஆய்வு புத்தகம் இரண்டு தொகுதிகளாக 1971'இல் வெளியானது. இந்த ஓவியர் குறித்து வெளியான புத்தகங்களில் இது அதிகாரபூர்வமானதாகும் (1972'ஆம் ஆண்டு வரை).
|
|
------------------------------------------------------------------------------------------------------------------------------ |
சாரு நிவேதிதாவின் புதிய தொடர் - லத்தீன் அமெரிக்க சினிமா - ஆகஸ்ட் 15 முதல் |
|
நண்பர்களே, சாரு நிவேதிதா பல வருடங்களுக்கு முன்னர் லத்தீன் அமெரிக்க சினிமா பற்றிய ஒரு சிறு புத்தகம் ஒன்றை எழுதியிருந்தார். உலகில் மிக முக்கியமான சினிமாக்கள் பல லத்தீன் அமெரிக்க நாடுகளில் உருவானவை. காத்திரமணா அரசியல், இருண்ட பக்கங்களின் துயர் தோய்ந்த வாழ்க்கை, அருமையான சினிமா வடிவம் என லத்தீன் அமெரிக்க சினிமாக்கள், திரைப்பட ஆர்வலர்களை, அவர்களது ரசனையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும் வல்லமை பெற்ற ஒன்று. அத்தகைய லத்தீன் அமெரிக்க சினிமாக்கள் பற்றி சாரு நிவேதிதா, பேசாமொழி இதழில் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் எழுதவிருக்கிறார். வழக்கம் போலவே, இந்த புதிய தொடருக்கு நண்பர்களின் ஆதரவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். தமிழின் வணிக சினிமாவோடு எத்தகைய சமரசமும் செய்துக்கொள்ளாமல், உலக சினிமாக்களை தமிழ் திரைப்பட ஆர்வலர்களுக்கு அறிமுகம் செய்ததில் சாரு நிவேதிதாவின் பங்கு அளப்பரியது. சாரு நிவேதிதாவின் இந்த புதிய தொடர், உலக சினிமா ரசிகர்களுக்கு, குறிப்பாக அரசியல் சினிமா ரசிகர்களுக்கு புதிய களமாக அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. பேசாமொழி ஆசிரியர் குழு. |
|
------------------------------------------------------------------------------------------------------------------------------ |
|
விருப்பம் வேலையானால் – பிலிம்நியூஸ்ஆனந்தன் - 6 - தினேஷ் குமார்
“உன்ன உங்க அரசாங்கமே கூப்பிடுது, அதனால மறுக்க முடியாம அங்கபோற, அதுல ஏண்டா நீ தமிழன குத்தம் சொல்ற?,”தேவதாஸ்”,ங்கிற படம் தெலுங்கு மொழில தான் தமிழ்நாட்டுல ரிலீஸ் ஆகுது. அந்தப்படம் நூறு நாள் இதே தமிழ்நாட்ல தான ஓடியிருக்கு. அதுபோக அந்தப்படமே தமிழ்ல டப் செஞ்சு மறுபடியும் நூறு நாள் ஓடுது. ”மாயக்குகை”,ங்கிற இன்னொரு தெலுங்குப்படமும் நூறு நாள் ஓடியிருக்கு, அதையும் நீ சொன்ன இதே தமிழ்நாட்டு மக்கள் தானே பார்த்திருக்காங்க.(அந்நாட்களில் தெலுங்கு திரைப்படங்கள் தமிழ்நாட்டில் பரவலாக திரையிடப்படுவதும், அவை கணிசமான வசூலை ஈட்டித் தருவதும் சகஜனமான ஒன்றாக இருந்தது.) உனக்கு அங்கதான் பணம் அதிகமாக் கிடைக்கும்னு சொல்லாம, தமிழங்க மேல நீ பழி போட்ற மாதிரி பேசுனத என்னால ஒத்துக்கவே முடியாது,“ என்றார் சிவாஜி. இவர் பேச்சிற்கு கரவொலி எழுப்பாதவர்களே அங்கு இல்லை எனலாம், என்னையும் சேர்த்தே.
|
|
------------------------------------------------------------------------------------------------------------------------------ |
|
|
|
|
|
|
|
|
|