லத்தீன் அமெரிக்க சினிமா - 6 - சாரு நிவேதிதா

Hans Staden என்ற ஜெர்மானியர் 1547 மற்றும் 1550-ஆம் ஆண்டுகளில் தென்னமெரிக்காவுக்கு இரண்டு முறை பயணம் செய்தார். இரண்டாவது முறை அவர் ஒரு ஸ்பானியக் கப்பலில் சென்ற போது ப்ரஸீலில் உள்ள பரனாகுவா என்ற துறைமுகத்தில் நின்றது கப்பல். அப்போது அங்கிருந்த போர்த்துக்கீசியர்களால் சிறைப் பிடிக்கப்பட்ட ஹான்ஸ் ஸ்டாடனை அவர்கள் தங்களுடைய கோட்டை ஒன்றில் உள்ள ராணுவத்தில் பணிபுரியும்படி உத்தரவிடுகின்றனர். வேறு வழியில்லாததால் 1553 வரை அந்த வேலையைச் செய்கிறார் ஸ்டாடன். ஆனால் ப்ரஸீலில் போர்த்துக்கீசியர்கள் துப்பி ஆதிகுடிகளை ஒழித்துக் கட்டிக் கொண்டிருந்ததால் அவர்கள் போர்த்துக்கீசியர்களைத் தங்கள் ஜென்ம எதிரியாக பாவித்தனர். போர்த்துக்கீசியர்கள் துப்பி இனத்தவரை சிறைப் பிடித்து அவர்களை கிறித்தவர்களாக மாற்றுவதும் அதற்கு உட்படாதவர்களைக் கொல்வதுமாக இருந்தனர். பதிலுக்கு துப்பி இனத்தவர் போர்த்துக்கீசியர்கள் மீது கெரில்லா தாக்குதல் செய்து கொண்டிருந்தார்கள்.

  மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------------------------------------

இயக்குனர் சீனு ராமசாமி நேர்காணல் - தினேஷ்

தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் சினிமா என்பது ஒரு தியேட்டர் வியாபாரம். ஏன், இந்தியாவைப் பொருத்தவரையிலும் சினிமா என்பது தியேட்டர் வியாபாரம் மட்டுமே. இங்கு என்னமாதிரியான சினிமாக்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதை தணிக்கைத்துறை தீர்மானிக்கிறது. இங்கு ராணுவத்தில் என்ன மாதிரியான பிரச்சனைகள் இருக்கின்றது என்பதைப்பற்றி ஒரு படம் எடுத்துவிட முடியாது. ராணுவத்தை விமர்சித்து ஒரு படம் எடுத்தால் இந்தியன் டிபன்ஸ் மினிஸ்ட்ரிக்கு உங்கள் படத்தை அனுப்பி, அவர்கள் பார்த்து ஆட்சேபணை இல்லை என்று சொன்னவுடன் தான் அதற்கான ஒப்புதல் பெற முடியும். அப்படியெனில் ஆறு மாத அளவிற்குள் எடுக்கப்படுகின்ற ஒரு வணிக படத்திற்கு, இந்த சாத்தியக்கூறுகள் சரியாக இருக்குமா? காத்திருக்க முடியுமா? அந்த தயாரிப்பாளரால் கடனுக்கான வட்டிக்கட்ட முடியுமா? என்றெல்லாம் பார்க்கையில் சில விஷயங்களை நம்மால் விமர்சிக்க முடியாது. இந்திய நாட்டுடன் நட்பு நாடுகளாக இருப்பவைகளை விமர்சிக்க முடியாது.

  மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------------------------------------
   
 
காணும் முறைகள் - ஜான் பெர்ஜர் - தமிழில்: யுகேந்தர்

காண்பியல் கலை படைப்பு எப்போதும் பாதுகாக்கப்பட்ட ஒரு நிலையிலேயே இருந்தது; ஆரம்பத்தில் இது மந்திரம் அல்லது புனிதம் என்று பாதுகாக்கப்பட்ட நிலையில் இருந்தது. ஆனால் அதற்கு ஒரு சரீரமும் இருந்தது: அது இருந்த இடம், குகை, கட்டிடம், படைப்பு செய்யப்பட்ட இடம் அல்லது செய்யப்பட்டத்தற்கான இடம். கலை அனுபவம் என்பது ஆரம்பத்தில் சடங்கு அனுபவமாகவே இருந்தது, அதன் மீது அதிகாரம் கொள்வதன் பொருட்டு, வாழ் நாள் முழுவதும் அது தனியாக வைக்கப்பட்டது. பின்னர் கலை படைப்பை பாதுகாப்பதென்பது சமூக நிகழ்வானது. ஆளும் வர்க்கத்தின் கலாச்சாரத்தில் அது நுழைந்தது. அதே நேரத்தில் அவை மக்களுடன் ஒட்டாமலும் தனித்த இடத்திலும் அவர்களது அரண்மனைகள் மற்றும் வீடுகளில் வைக்கப்பட்டது.


  மேலும் படிக்க
 
 
தமிழ் ஸ்டுடியோ ஏழாம் ஆண்டு விழா - தினேஷ்


தமிழ்ஸ்டுடியோ இயக்கமாக ஆறு ஆண்டுகளைக் கடந்து ஏழாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதையொட்டியே கடந்த நவம்பர் மாதம் 23ஆம் தேதி ஞாயிறன்று மாலை 6 மணியளவில் சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் நிகழ்ச்சி நடந்துமுடிந்தது. அந்நாளிலேயே “நாடு கடந்த கலை” என்ற புத்தகமும் வெளியானது. சிறப்பு அழைப்பாளர்களாக படத்தொகுப்பாளர் பீ.லெனின், ஓவியர் ட்ராஸ்ட்கி மருது, நடிகர் சார்லி, இயக்குனர்கள் மிஷ்கின், ராம், விக்ரம் சுகுமாரன், அம்ஷன்குமார் எழுத்தாளர் பவா செல்லத்துரை ஆகியோர் கலந்துகொண்டனர்.
தமிழ் ஸ்டுடியோ அருண் எழுதியிருக்கும் “நாடு கடந்த கலை” புத்தகத்தை அனைத்து சிறப்பு விருந்தினர்களும் வெளியிட, அருனின் ஆசிரியர் திருமதி. புஷ்பராணி அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.



  மேலும் படிக்க
       
 
 
திரைப்பட இயக்குனர் ப்ரசன்ன விதானகேயுடன் ஒரு நேர்காணல் - தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்

பல விருதுகளுக்குச் சொந்தக்காரரான இலங்கையைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர் ப்ரசன்ன விதானகேயின் 'With You, Without You' (உன்னுடன், நீயில்லாமல்) எனும் திரைப்படமானது, கடந்த ஜூன் மாதத்திலிருந்து இந்தியத் திரையரங்குகளில் திரையிடப்பட திட்டமிடப்பட்டிருந்தது. யுத்த கால இலங்கையைப் பின்புலமாகக் கொண்ட இத்திரைப்படமானது, ஒன்று சேரவே முடியாத இடைவெளியை ஏற்படுத்திச் சென்ற மோதலொன்றின் இடையே, தற்செயலாகச் சந்திக்க நேரும் இருவரைச் சுற்றி பின்னப்பட்ட கதையாகும். அவர்கள் இருவருக்கும், அந்த இடைவெளியை அழித்து ஒன்று சேர காதல் உதவுமா அல்லது அவர்களது இறந்த காலமானது தொடர்ந்தும் நிகழ்காலத்தைப் பாதித்துக் கொண்டேயிருக்குமா என்பதைப் பற்றியே இத் திரைப்படம் பேசுகிறது.

 

  மேலும் படிக்க
 
 
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை‘நிர்மலா’- தம்பிஐயா தேவதாஸ்

இலங்கையின் ‘நாடகத் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் அமரர் கலையரசு சொர்ணலிங்கம். இவரது நாடகப் பண்ணையில் நவாலியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பயின்று வந்தார். பின்பு கொழும்பு இராணுவத் தலைமை அலுவலகத்தில் எழுதுவினைஞராக நியமனம் பெற்றார். கொழும்பில் பல நாடகங்களை எழுதி மேடையேற்றினார். ‘தேரோட்டி மகன்’, ‘நெஞ்சில் ஓர் ஆல்பம்’ போன்ற நாடகங்களில் இவர்தான் கதாநாயகன். ‘கடமையின் எல்லை’ திரைப்படத்திலும் தோன்றினார். இந்த இளைஞர்தான் ‘நிர்மலா’வைத் தயாரிப்பதில் முன்னின்ற ஏ.ரகுநாதன். இவர் 1967ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு நாள் யாழ்ப்பாணம் நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்.


  மேலும் படிக்க
   
------------------------------------------------------------------------------------------------------------------------------
   
 
வாழ்க்கை – கீஸ்லோவ்ஸ்கி எனும் கலைஞன் - நா.முத்துகுமார்

இவருடைய கடைசிப்படம் ‘த்ரீ கலர்ஸ் ரெட்’ சினிமாவை மக்களுக்காக ஒரு சாதனமாகக் கையாண்ட கீஸ்லோவஸ்கி சிறந்த உலக இயக்குநர்களின் வரிசையில் கடைசிக் காலத்தில் போற்றப்பட்டார். இவருடய ‘ஷார்ட் பிலிம் அபெளட் கில்லிங்கை’ப் பற்றி சினிமா இதழான வெரைட்டி ‘ஹிட்ச்காக், தாஸ்தாயெவஸ்கியின் நாவலைப் படமெடுத்தால் எப்படியிருக்குமோ… அப்படி உள்ளது’ என்று பாராட்டுகிறது. தன் பயணம் முழுவதும் வாழ்க்கை குறித்தான தேடல்களில் செலவிட்ட கீஸ்லோவஸ்கி இறப்பதற்கு முந்தைய வருடங்களை கவனிக்கத் தொடங்கினார். இது உலக சினிமாவிற்கு மிகப் பெரிய இழப்பு.


  மேலும் படிக்க
 
 
திரைப்பட நடிகர் : இயக்குனரின் பார்வையில் - மைக்கலஞ்சலோ அந்தோனியோனி

ஒரு நடிகரும், இயக்குநரும் இணைந்து பணிபுரிந்தாலும், உண்மையில் ஒருமித்த நிலையில் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. இருவரும், இரு மாறுபட்ட நிலையில் பணியாற்றுவார்கள். இயக்குநர்கள், படத்தில் இடம் பெறும் அனைத்து கதாபாத்திரங்களைப் பற்றியும், பொதுவான விளக்கம் தரவே கடமைப்பட்டுள்ளார். விளக்கமாக நடிகர்களுக்கு தெரிவிக்க வேண்டியதில்லை. அவ்வாறு விளக்குவது ஆபத்தானதும் கூட. இயக்குநரும், நடிகரும் சில வேளைகளில் எதிர் கருத்து கொள்ளுதல் அவசியமாகிறது. மேலும் இயக்குநர் தான் வெளிப்படுத்த நினைக்கும் எண்ணங்களுக்கு எக்காரணத்தைக் கொண்டும் சமாதானம் செய்து கொள்ளுதல் ஆகாது. நடிகர் என்பவர், இயக்குநரின் கோட்டையில் உள்ள ஒரு டிரோஜான் குதிரையினைப் போன்றவர்.




  மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------------------------------------
 
 
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
     
     
     
     
     
     
     
     
 
 
 
 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

காப்புரிமை © பேசாமொழி

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome