இதழ்: 26    கார்த்திகை (December 01 - 15), 2014
   
 
  உள்ளடக்கம்
 
சத்யஜித்ரே : இந்திய மரபின் செவ்வியல் முகம் - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
லத்தீன் அமெரிக்க சினிமா - 6 - சாரு நிவேதிதா
--------------------------------
இயக்குனர் சீனு ராமசாமி நேர்காணல் - தினேஷ்
--------------------------------
காணும் முறைகள் - ஜான் பெர்ஜர் - தமிழில்: யுகேந்தர்
--------------------------------
தமிழ் ஸ்டுடியோ ஏழாம் ஆண்டு விழா - தினேஷ்
--------------------------------
ப்ரசன்ன விதானகேயுடன் ஒரு நேர்காணல் - தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்
--------------------------------
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை‘நிர்மலா’- தம்பிஐயா தேவதாஸ்
--------------------------------
வாழ்க்கை – கீஸ்லோவ்ஸ்கி எனும் கலைஞன் - நா.முத்துகுமார்
--------------------------------
திரைப்பட நடிகர் : இயக்குனரின் பார்வையில் - மைக்கலஞ்சலோ அந்தோனியோனி
--------------------------------
 
   


   

 

 

காணும் முறைகள் - ஜான் பெர்ஜர்

- தமிழில்: யுகேந்தர்


அத்தியாயம் 1 - பகுதி 7

அப்பாவித்தனம் என்ற கருத்து இரு வழிகளை எதிர்க்கொள்கிறது. ஒருவன் ஒரு சதித்திட்டத்தினுள் நுழைய மறுப்பதன் மூலம், அந்த சதித்திட்டத்தில் சம்பந்தமற்ற அப்பாவியாக இருக்கிறான். ஆனால் அப்பாவியாக இருப்பதென்பது அறியாமையிலும் இருப்பதுமாகும். அப்பாவிதனத்திற்கும் அறிவுக்கும் இடையிலான பிரச்சனை இல்லை இது (அல்லது இயற்கைக்கும் பண்பாட்டுக்குமானதும் இல்லை). ஆனால், ஒவ்வொரு அனுபவத்தின் அம்சத்தையும் தொடர்புபடுத்த முயற்சி செய்து கலையை முழுவதும் அணுகும் முறைக்கும், ஆளும் வர்க்கத்தின் எழுத்தர்களாக இருக்கும் சில சிறப்பு வல்லுநர்களின் எளிதில் புரியாத ஆழந்த அணுகுமுறைக்குமாகும். உண்மையான கேள்வியானது: கடந்த கால கலை படைப்பின் அர்த்தம் முறையாக யாருக்கு சொந்தம்? தங்கள் சொந்த வாழ்வில் பயன்படுத்த முடியும் என்பவர்களுக்காகவா, அல்லது கலாச்சார உயர்மட்டத்தில் இருக்கும் புனித வல்லுநர்களுக்காகவா?.

காண்பியல் கலை படைப்பு எப்போதும் பாதுகாக்கப்பட்ட ஒரு நிலையிலேயே இருந்தது; ஆரம்பத்தில் இது மந்திரம் அல்லது புனிதம் என்று பாதுகாக்கப்பட்ட நிலையில் இருந்தது. ஆனால் அதற்கு ஒரு சரீரமும் இருந்தது: அது இருந்த இடம், குகை, கட்டிடம், படைப்பு செய்யப்பட்ட இடம் அல்லது செய்யப்பட்டத்தற்கான இடம். கலை அனுபவம் என்பது ஆரம்பத்தில் சடங்கு அனுபவமாகவே இருந்தது, அதன் மீது அதிகாரம் கொள்வதன் பொருட்டு, வாழ் நாள் முழுவதும் அது தனியாக வைக்கப்பட்டது. பின்னர் கலை படைப்பை பாதுகாப்பதென்பது சமூக நிகழ்வானது. ஆளும் வர்க்கத்தின் கலாச்சாரத்தில் அது நுழைந்தது. அதே நேரத்தில் அவை மக்களுடன் ஒட்டாமலும் தனித்த இடத்திலும் அவர்களது அரண்மனைகள் மற்றும் வீடுகளில் வைக்கப்பட்டது. அனைத்து வரலாற்றின் போதும், கலை அதிகாரமும், பாதுகாப்புக்கான குறிப்பிட்ட அதிகாரமும் பிரிக்க முடியாது இருந்தது.

கலை படைப்பின் அதிகாரத்தை அழித்தும் மற்றும் அதை நீக்கியும், அல்லது மாறாக சேமிப்பிலுள்ள தங்களின் மறு உருவாக்க படங்களை நீக்கவும், நவீன மறு உருவாக்க வழிகள் வகை செய்தது. முதன் முறையாக, கலை படங்கள் நிலையற்றதாகவும், எங்கும் நிறைந்திருப்பதாகவும், பொருளற்றதாகவும், கிடைக்கப்பெறுகின்றதாகவும், மதிப்பற்றதாகவும், இலவசமாகவும் மாறிவிட்டன. மொழி நம்மைச் சுற்றியுள்ளது போலவே அவை எங்கும் சூழ்ந்துள்ளது. வாழ்க்கையின் பெருவோட்டத்திற்குள் அவை நுழைந்துவிட்டது. வாழ்க்கையின் மீது அவைகளுக்கு எந்த சக்தியும் இனி இல்லை.

ஆயினும் மிக சில மக்களுக்கே என்ன நடந்தது என தெரியும், ஏனென்றால் மறு உருவாக்க முறைகள் கிட்டத்தட்ட அனைத்து நேரமும், மக்களை தவிர எதுவுமே மாறவில்லை என்ற மாயையான பொய் தோற்றத்தை ஊக்குவிக்கவே பயன்படுத்தப்பட்டது. மறு உருவாக்கங்களுக்கு நன்றி, மக்கள் கலையை புரிந்துக்கொள்ள, பாராட்ட துவங்க முடியும். ஒரு காலத்தில் கலாச்சாரமிக்க சிறுபான்மையினர் செய்ததை இப்போது பெரும்பாலனவர் செய்யலாம். மக்கள் ஆர்வமில்லாதவர்களாகவும், சந்தேகம் கொண்டவர்களாகவும் இருப்பது உணர்ந்து கொள்ளத்தக்கதே.

படிமங்களின் புதிய மொழியை வேறுவிதமாக பயன்படுத்தினால், அதன் மூலம் ஒரு புதிய வகையான சக்தியை வழங்க முடியும். அதற்க்குள், வார்த்தைகள் போதாத பகுதிகளில் நாம் இன்னும் துல்லியமாக நமது அனுபவங்களை வரையறுக்க தொடங்க முடியும். (வார்த்தைகளுக்கு முன்பு காண்பது வருகிறது). தனிப்பட்ட அனுபவம் மட்டுமல்ல, கடந்த காலத்துடனான நமது உறவின் அத்தியாவசியமான வரலாற்று அனுபவமும்: தேடுதல் அனுபவத்தின் மூலம் நமது வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்து, வரலாற்றைப் புரிந்து கொள்ள முயற்சி செய்து, அதன் தீவிர முகவர்களக இருக்கலாம்.

கலையின் கடந்த காலம் முன்பிருந்தது போல இனி இல்லை. அதன் அதிகாரத்தை இழந்துவிட்டது. படிமங்களின் மொழி அதன் இடத்தில் உள்ளது. அந்த மொழியை எந்த நோக்கத்திற்காக யார் பயன்படுத்துக்கிறார்கள் என்பதையே கருத்தில் கொள்ள வேண்டும். மறு உருவாக்கத்தின் காப்புரிமை, கலை அச்சகங்கள் மற்றும் வெளியீட்டாளர்களின் உடமை, பொது கலை காட்சியங்கள் மற்றும் அருங்காட்சியங்களின் மொத்த கொள்கை ஆகியவை இதனால் கேள்விக்குள்ளாகிறது. இவை குறுகிய தொழில்முறை விடயங்களாகும். இந்த கட்டுரையின் ஒரு நோக்கம், உண்மையில் இங்கு கவனிக்க வேண்டியது மிக பெரியது என்பதை காட்டுவதே ஆகும். குறிப்பிட்ட மக்கள் அல்லது வர்க்கம் தங்களது கடந்த காலத்திலிருந்து துண்டிக்கபட்டிருந்தால், தேர்வு செய்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. வரலாற்றில் தங்களை இருத்திக்கொள்ள முடிந்த மக்கள் அல்லது வர்க்கத்தினர் போல் செயல்பட வேண்டும். இந்த காரணத்திற்காக - இந்த ஒரே காரணத்திற்காகவே - கலையின் ஒட்டு மொத்த கடந்த காலம் ஒரு அரசியல் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

# இந்த கட்டுரைக்கான பல கருத்துக்கள், ஜெர்மானிய விமர்சகர் மற்றும் தத்துவாதி வால்டர் பெஞ்சமின் அவர்களின் "The Work of Art in the Age of Mechanical Reproduction." என்ற கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது.

தொடரும்...

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </