|
|
உயிர் கொடுக்கும் கலை 15 - டிராட்ஸ்கி மருது - ஒலிப்பதிவும் எழுத்தும் : யுகேந்தர்
வசந்த பாலன் எனக்கு வேண்டிய நண்பர்தான். அவரது முந்தைய படமான அரவானை நான் பார்க்க வில்லை. வாய்ப்பு அமையாமல் போய்விட்டது. அது மட்டுமல்லாமல், அந்த படத்தை தேடி பார்க்க வேண்டுமென்ற அபிப்பிராயமும் இல்லாமல் போய்விட்டது. பரத் மற்றும் அஞ்சலி இருவரும் இருக்கும் காட்சி படிமங்களை நிழற்படத்தில் பார்த்தேன், அதெல்லாம் அந்த காலத்துடன் ஒட்டாமல் இருந்ததால் எனக்கு அப்படத்தைப் பார்க்க வேண்டும் என்ற தோன்றவில்லை. சமீபத்தில் வெளிவந்த காவியத்தலைவனும் அதே உணர்வையே ஏற்படுத்தியது. மனோகருக்கு பின், சென்னையில் க்ரேஸி மோகன் நடத்திய நாடகங்களின் கடைசி எச்சமான ஒரு பீரியட் நாடகம் செய்து காண்பிப்பது மாதிரியான இடத்தில்தான் படம் இருக்கிறது.
|
|
------------------------------------------------------------------------------------------------------------------------------ |
|
உலக சினிமா வரைபடத்தில் தமிழ் சினிமா? - சாரு நிவேதிதா
ஒரு நல்ல சினிமாவின் நம்பகத்தன்மையைக் கெடுப்பதில் பாடல்களே முன்னணி இடம் வகிப்பவை. தமிழ் சினிமாவில் பாடல்களின் இடம் பற்றிப் புரிந்துகொள்ளவும் நாம் தமிழ் சினிமாவின் ஆரம்ப கட்டத்திற்கே செல்ல வேண்டியிருக்கிறது. மெளனப்பட காலகட்டத்தில் தமிழ் மக்களின் பிரதான பொழுதுபோக்கு சாதனமாக இருந்தவை இசைப் பாடல்களால் அமைந்த புராண நாடகங்கள், அதனால் மெளனப் படம் நடக்கும் கொட்டகைகளில், அந்தப் படத்திற்குச் சம்பந்தமேயில்லாமல் நடன கோஷ்டியினரின் கேளிக்கை நடனங்கள் நிகழ்த்தப்பட்டன. இதுபோல் சில குத்துச்சண்டை காட்சிகளும் நிகழ்த்தப்பட்டதுண்டு. மெளனப்பட காலத்தில் இசைக் கலைஞர்களுக்கும் சினிமாவுக்கும் தொடர்பு இல்லாமலேயே இருந்தது. இந்த நிலை பேசும் படங்கள் வந்ததும் மாறியது. பேசும் படங்களும் இசைப் பாடல்களால் நிறைந்த புராணப் படங்களாகவே இருந்ததால் சாஸ்த்ரீய சங்கீதக் கலைஞர்கள் இப்படங்களில் பாடகர்களாகவும் இசையமைப்பாளர்களாகவும் நடிகர்களாகவும் பங்குபெற முடியாது. அவர்களில் முக்கியமானவர்கள் ஜி.என்.பாலசுப்ரமணியம்.
|
|
------------------------------------------------------------------------------------------------------------------------------ |
|
------------------------------------------------------------------------------------------------------------------------------ |
|
|
|
|
|
ஆய்வு: வங்காளிகளின் தேடல்கள் - (2005 ஆம் ஆண்டு வங்காளிகளின் படங்களை முன்வைத்து) - சுப்ரபாரதிமணியன்
சத்யஜித் ரேயின் மகன் சந்திப் ரே, சத்யஜித் ரேயுடன் பல படங்களில் பணிபுரிந்தவர். அவரின் மூன்று படங்களில் ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்திருக்கிறார். அவரின் திரைக்கதையை மையமாகக்கொண்டு பத்து ஆண்டுகளுக்கு முன் டார்கெட் என்ற படத்தையும் எடுத்திருப்பவர். அவரின் ஐந்தாவது படம் சமீபத்தில் வந்திருக்கிறது. மனிதர்கள் தங்களை எடை போட்டுக்கொள்வதற்கும், தங்களைப் பற்றின பரிசீலனையைச் செய்து கொள்வதற்கும் இயற்கை தரும் அதிர்ச்சிகள் உதவுகின்றன. பிமல் தாஸ் அரசாங்கப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்பு ஹிமாலாயாவின் ஒரு கோடியில் தனிமையை அனுபவித்து வாழ்ந்து வருபவர்.
|
|
மேலும் படிக்க |
|
|
|
பாலு மகேந்திராவின் ஒரு மனுஷி & சந்தியா ராகம் - வீராக்குமார்
வறுமையின் நெருக்கடியில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு துணைநடிகை, தான் ஆரம்பத்தில் சினிமாவுக்குள் நுழையும் போது தனக்கு உதவியாய் இருந்த ஒரு ஸ்டில் போட்டோகிராபரின் ஒரு நாளைய பணப்பிரச்சனைக்கு உதவி செய்கிறாள். கேட்பதற்குச் சாதாரணமாக இருக்கும் இந்தச் சம்பவத்துக்குள் ஒரு பெண்ணின் மனிதத்தன்மை எவ்வாறு மிளிர்கிறது என்பதை மிகவும் இயல்பாக நமக்கு உணர்த்துகிறது இந்தக் கதை. அவன் இவளிடம் கைமாற்றாகக் கொஞ்சம் பணம் கேட்கிறான். இவளோ சோற்றுக்கே கஷ்டப்படும் நிலையில் தான் இருக்கிறாள். ஆனாலும் நண்பன் கேட்டுவிட்டானே என்று வேறு ஒருவரிடம் ஏற்பாடு செய்துகொடுத்து உதவுகிறாள். இதுதான் கதை. ‘நாமாக இருந்தாலும் இதைத்தானே செய்திருப்போம்.
|
|
மேலும் படிக்க |
|
|
------------------------------------------------------------------------------------------------------------------------------ |