|
|
|
லத்தீன் அமெரிக்க சினிமா 2 - சாரு நிவேதிதா
பாரவெந்த்தோ படத்தில் நகரத்திலிருந்து வந்த ஃபர்மினோ அவனுடைய உறவுக்காரர்களான மீனவ மக்களிடம் கேட்கிறான். “இது என்ன ஆஃப்ரிக்காவா? இது ப்ரஸீல். முதலாளிகள் கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு நம்மை சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள். நீங்களும் கடலிலேயே மீன் பிடித்து மீன் பிடித்துச் சாகிறீர்கள்…” இந்த வசனத்தைக் கேட்கும் போது ஏதோ ஒரு தமிழ் முற்போக்கு நாவலில் ஒரு கதாபாத்திரம் பேசுவது போல் இருக்கும். ஆனால் க்ளாபர் ஏழ்மையும் அவலமும் சினிமாவில் எப்படி கலையாக மாறுகிறது என்பது பற்றிய ஒரு திட்டவட்டமான பார்வையைக் கொண்டிருந்தார். க்ளாபர் ரோச்சாவும் நெல்ஸனும் (Nelson Pereira dos Santos) இன்னும் சில ப்ரஸீலிய இயக்குனர்களும் புதிய சினிமா (Cinema novo) என்ற இயக்கத்தின் மூலம் சினிமாவுக்கான ஒரு புதிய அழகியலை உருவாக்கினார்கள்.
|
|
------------------------------------------------------------------------------------------------------------------------------ |
|
உயிர் கொடுக்கும் கலை 12 - டிராட்ஸ்கி மருது
தமிழர் கலை பண்டைய காலத்திலிருந்து மிக உயர்ந்து நிற்கும் ஒன்று. தமிழக சிற்பங்கள், ஓவியங்கள் மற்றும் படிமங்கள் மூலமாக உறைந்திருக்கும் எல்லாமுமே தமிழருடைய வாழ்வையும் பண்பாட்டையும் சொல்லுவதாக அமைந்திருக்கிறது. தமிழகத்தில் இருக்கிற குகை ஓவியங்களிலிருந்து வளர்ச்சிப்பெற்று பல்லவ/சோழர் மற்றும் பண்டைய கால சிற்பங்கள், சித்தன்ன வாசல், நாயக்கர் கால ஓவியங்கள் அனைத்தும் தமிழருடைய வாழ்வு நிலையையும் கலையினுடைய சிறப்பையும் உலகெல்லாம் சொல்லியிருப்பதைப் பற்றி மீண்டும் புதிதாகப் பேச ஒன்றுமில்லைதான். அவ்வளவு தொலைவுக்கு அது எடுத்து சொல்லியாயிற்று. இவை அனைத்தையும் கடந்து, காலனிய காலத்திலிருந்து, குறிப்பாக கடந்த 200 ஆண்டுகளாக, இந்திய வரலாறு, இந்திய வாழ்வு, இந்தியாவில் தென்னிந்திய...
|
|
------------------------------------------------------------------------------------------------------------------------------ |
|
|
|
|
|
அத்தியாயம் 5 – Production Cycle - Steven D. Katz தமிழில்: ராஜேஷ்
எந்தத் திரைப்படமாக இருந்தாலும், அவைகளை எப்படிப் படமெடுத்து முடிக்கிறார்கள் என்பது கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவைதான். அந்தந்தப் படங்களில் ஒரு இயக்குநர் என்பவர் படப்பிடிப்புத் தளத்தில் நேரக்கூடிய மாற்றங்கள், கேமராவை வைக்கும் கோணங்கள் ஆகியவற்றில் பெரும்பங்கு வகிக்கிறார். செட்கள், காஸ்ட்யூம்கள், ப்ராப்பர்ட்டி எனப்படும் விதவிதமான பொருட்கள் ஆகியவையெல்லாம் அந்தந்தப்...
|
|
மேலும் படிக்க |
|
|
|
காணும் முறைகள் - ஜான் பெர்ஜர் - தமிழில்: யுகேந்தர்
எந்த கண்ணோட்டத்தில் (perspective) என்பதை வைத்து இந்த வித்தியாசத்தை விளக்க முடியும். கண்ணோட்டம் என்ற வழக்காறு, ஐரோப்பிய கலைக்கென தனித்தன்மை வாய்ந்தது மற்றும் மறுமலர்ச்சியின் ஆரம்ப காலத்தில் முதலில் நிறுவப்பட்டது. இது காண்பவரின் பார்வையிலேயே அனைத்தையும் மையப்படுத்துகிறது. கலங்கரை விளக்கிலிருந்து வரும் ஒளிக்கற்றைப் போன்றதது, மேல்நோக்கி ஒளி பயணிப்பதற்கு.....
|
|
மேலும் படிக்க |
|
|
|
|
|
|
|
|
|
|
ஹெர்ஸாக் பற்றி ஹெர்ஸாக் - 7 - பால் க்ரானின் :: தமிழில்: எஸ்.ஆனந்த்
Fitzcarraldo படப்பிடிப்பு நடந்த இடங்களில் ஏராளமான பிரச்சினைகள். பெருவிற்கும் ஈக்வேடாருக்கும் எல்லைப்போர் நடப்பதற்கான அபாயம் நிறைந்திருந்தது. சுற்றிவர ராணுவம். ஆற்றின் ஒவ்வொரு வளைவிலும் ராணுவமுகாம்கள் இருந்தன. சிப்பாய்கள் குடிபோதையில் அலைந்துகொண்டிருந்தனர். எண்ணெய்க் கம்பெனிகள் அந்த இடங்களை ஆக்கிரமித்திருந்தன. ஆதிவாசிகள் வாழும் இடங்கள் வழியாக எரிஎண்ணெய் செல்லும் பெரிய.....
|
|
மேலும் படிக்க |
|
|
|
எதிர்பார்ப்பது கரிசனம் அல்ல, சம உரிமையை! - தினேஷ் குமார்
பொதுவாகவே கண்பார்வை இழந்தவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள் என்பதைக்காட்டிலும், அவர்களிடம் நாம் கற்றுக்கொள்ளத் தேவையான பல குணங்கள் மண்டிக்கிடக்கின்றன. இதிலும் முகமத் இயற்கையோடு மிகுந்த கரிசனம் காட்டுபவனாக இருக்கின்றான். பிரெய்லி (Braille) முறைப்படிதான் இவனது கல்வி முறை இருக்கும். இதனை முகமத் ஒவ்வொரு மணல் குவியல்களிலும், கோதுமைப் பயிர்களிலும், ஒப்பிட்டுப் பார்த்து ஆனந்தம் அடைகின்றான்.
|
|
மேலும் படிக்க |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|