காணும் முறைகள் - ஜான் பெர்ஜர்
அத்தியாயம் 1 - பகுதி 3
உருவ படங்களை (pictorial images) பொறுத்தமட்டில், கடந்த காலத்தைப் புதிராக்குவதிலிருந்து தவிர்க்க (போலி மார்க்சிய புதிராக்கத்தையும் சேர்த்து), நிகழ் காலம் மற்றும் கடந்த காலத்துக்குமான குறிப்பிட்ட தொடர்பை ஆராய்வோம். நிகழ்காலத்தைத் தெளிவாக போதுமானளவு பார்க்க முடியுமென்றால், கடந்த காலத்தைக் குறித்து சரியான கேள்விகளை நாம் கேட்க முடியும்.
கடந்த கால கலையை வேறுயாரும் முன்பு பார்த்ததில்லாதளவு இன்று நாம் பார்க்கிறோம். உண்மையில் நாம் அதை வித்தியாசமான வழியிலேயே உணர்கிறோம்.
எந்த கண்ணோட்டத்தில் (perspective) என்பதை வைத்து இந்த வித்தியாசத்தை விளக்க முடியும். கண்ணோட்டம் என்ற வழக்காறு, ஐரோப்பிய கலைக்கென தனித்தன்மை வாய்ந்தது மற்றும் மறுமலர்ச்சியின் ஆரம்ப காலத்தில் முதலில் நிறுவப்பட்டது. இது காண்பவரின் பார்வையிலேயே அனைத்தையும் மையப்படுத்துகிறது. கலங்கரை விளக்கிலிருந்து வரும் ஒளிக்கற்றைப் போன்றதது, மேல்நோக்கி ஒளி பயணிப்பதற்கு பதில் தோற்றங்கள் உள்நோக்கி பயணிக்கின்றது. அந்த தோற்றங்களையே "யதார்த்தம்" என்று வழக்காறு குறிப்பிடுகிறது. புலப்படும் உலகத்தின் மையமாக ஒற்றைக் கண்ணை கண்னோட்டம் உருவாக்குகிறது. முடிவிலியின் மறையும் புள்ளி போன்று அனைத்தும் கண் மீது குவிகிறது. பிரபஞ்சம் கடவுளுக்காக ஏற்படுத்தபட்டதென முன்பொரு முறை நினைத்தது போல, புலப்படும் உலகம் பார்வையாளருக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
கண்ணோட்டம் என்ற வழக்காறு படி, எதிரெதிர் காட்சி என்பது கிடையாது. மற்றவர்களின் தொடர்பில் தன்னை இருத்திக்கொள்ள கடவுளுக்கு தேவையில்லை, அவர் தன்னை தான் ஒரு நிலைமையாகிறார். யதாரத்தின் அனைத்து படிமங்களையும் ஒரு பார்வையாளருக்காகவே கட்டமைப்படுகிறது என்பது கண்ணோட்டத்தின் உள்ளார்ந்த முரண்பாடாகும். கடவுள் போல் அல்லாமல், அந்த ஒற்றை பார்வையாளர் ஒரு நேரத்தில் ஒரு இடத்தில் தான் இருக்க முடியும்.
கேமராவின் கண்டுபிடிப்பிற்கு பிறகு இந்த முரண்பாடு படிப்படியாக வெளிப்படையானது.
புரட்சிகர சோவியத் இயக்குனர் Dziga Vertov 1923'இல் எழுதிய கட்டுரையிலிருந்து இந்த மேற்கோள்,
**
நான் ஒரு கண். ஓர் இயந்திர கண்.
நான், இயந்திரம், நான் பார்க்கும் விதத்தில் மட்டும் ஓர் உலகத்தை உங்களுக்கு காட்டுவேன்.
நான், இன்றைக்கும் என்றைக்குமாய் மனித அசைவற்றநிலையில் இருந்து என்னை விடுவித்துக்கொள்கிறேன்.
நான், நிலையான இயக்கத்தில் எப்போதும் இருப்பேன்.
நான், பொருட்களை அணுகவும் அவற்றைவிட்டு விலகவும் செய்வேன்.
நான், அவற்றுக்கு கீழாகவும் செல்வேன்.
நான். ஓர் ஓடும் குதிரையின் வாய்க்கு பக்கத்திற்குப் பக்கமாகவும் செல்வேன்.
நான், விழுந்து எழும் உடல்களோடு விழுந்தும் எழுவேன்.
இதுவே நான், இயந்திரம், ஒழுங்கற்ற இயக்கங்களை தொடர்ந்து செய்வேன், மிகவும் சிக்கலான சேர்க்கைகளுடன் ஒன்றன் பின் ஒன்றாக இயக்கத்தை பதிவு செய்வேன்.
நேரம் மற்றும் இடத்தின் எல்லைகளிலிருந்து விடுபட்டு, எனக்கு எங்கு வேண்டுமோ அங்கு பிரபஞ்சத்தின் எந்த மற்றும் அனைத்து புள்ளிகளையும் ஒருங்கியப்பேன். உலகம் குறித்து ஒரு புதிய புரிதலை உருவாக்குவதை நோக்கி என் வழி செல்கிறது. உங்களுக்கு தெரியாத உலகை ஒரு புதிய வழியில் நான் விளக்குகிறேன்.
**
தற்காலிகமான தோற்றங்களை கேமரா தனிமைப்படுத்தியது, இதனால் படிமங்கள் காலமற்றது என்ற எண்ணம் அழிக்கப்பட்டது. அல்லது, வேறு விதமாக சொல்லவேண்டுமென்றால், காட்சியை அனுபவித்தல் என்பதிலிருந்து நேரம் கடத்தல் என்ற கருத்தை பிரிக்க முடியாது என்று கேமரா காட்டியது (ஓவியங்களை தவிர்த்து). நீங்கள் என்ன பார்த்தீர் என்பது நீங்கள் எங்கு இருந்தீர், எப்போது இருந்தீர் என்பதை பொறுத்து இருக்கும். நீங்கள் என்ன பார்த்தீர் என்பது நேரம் மற்றும் இடத்தில் உங்கள் நிலையை ஒப்பிடுவதை பொறுத்து இருக்கும். முடிவிலியின் மறையும் புள்ளி போன்று அனைத்தும் மனித கண் மீது குவிகிறது என இனி கற்பனை செய்ய சாத்தியமில்லை.
கேமரா கண்டுபிடிக்கப்படுவதற்கு முன், அனைவரும் அனைத்தையும் பார்க்க முடியும் என்று மனிதர்கள் நம்பினார்கள் என சொல்ல முடியாது. ஆனால் கண்னோட்டம், அவை உண்மையில் பொருத்தமாக இருந்தது. ஒவ்வொரு சித்திரம் அல்லது ஓவியம், அவனே உலகின் தனித்துவமான மையமென பார்வையாளரக்கு முன்மொழியப்பட்ட கண்ணோட்டத்தையே பயன்படுத்தியது. கேமரா மற்றும் குறிப்பாக திரைப்பட கேமரா, மையம் என்பது இல்லை என நிரூபித்துள்ளது.
கேமராவின் கண்டிபிடிப்பு மனிதர்களின் பார்க்கும் முறையை மாற்றிவிட்டது. புலப்படும் ஒவ்வொன்றும் வேறு ஏதோவாக தெரியவந்தது. இது ஓவியத்தில் உடனடியாக பிரதிபலித்தது.
உணர்வுப்பதிவுவாதிகள் (Impressionists), பார்க்ககூடியவையை மனிதன் பார்க்கும் பொருட்டு வழங்கவில்லை. மாறாக, பார்க்ககூடியவை, தொடர்ந்து தப்பியோடியவையாக மாறியது. கியூபிஸ்டுகள், பார்க்ககூடியவை என்பது ஒற்றை கண் எதிர்கொள்வது மட்டுமல்ல, சித்தரிக்கபட்டுள்ள பொருளை (அல்லது நபரை) சுற்றியுள்ள சாத்தியமாகக்கூடிய அனைத்து காட்சிகளாகும்.
கேமரா கண்டுபிடிக்காத காலத்தில் வரையப்பட்ட ஓவியங்களை மனிதர்கள் பார்க்கும் முறை, கேமராவின் கண்டுபிடிப்பிற்கு பிறகு மாற்றம் அடைந்துள்ளது. முதலில் ஓவியங்கள் வடிவமைக்கப்பட்ட கட்டிடத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருந்தன. சில நேரங்களில், ஆரம்ப மறுமலர்ச்சி தேவாலயத்தில், சுவரிலிருக்கும் படங்கள் கட்டிடத்தின் உட்புற வாழ்க்கையை பதிவு செய்துள்ளதாக உணர்வு ஏற்படும், அவை கட்டிடத்தின் குறிப்புகளாக ஒன்றிணைந்து கட்டிடத்தின் நினைவை உருவாக்கும்,
ஒவ்வொரு ஓவியத்தின் தனித்துவம், அது எங்கு இருந்ததோ, அந்த இடத்தின் தனித்துவத்தின் ஒரு பகுதியாக இருந்தது. சில நேரங்களில் ஓவியம் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்து செல்லப்படும். ஆனால் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் ஒர் ஓவியத்தை பார்க்க முடியாது. கேமரா ஓர் ஓவியத்தை மறு உருவாக்கம் செய்யும் போது, அதன் தனித்துவத்தை அது அழிக்கிறது. இதன் விளைவாக அதன் பொருள் மாற்றமடைக்கிறது. அல்லது இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், அதன் பொருள் பெருகி, பல பொருள்களாக சிதறுகிறது.
ஓரு ஓவியத்தை தொலைக்காட்சியில் காட்டும் போது என்ன நடக்கிறது என்பதன் மூலம் இது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. ஓவியம் ஒவ்வொரு பார்வையாளரின் வீட்டினுள் நுழைகிறது. அங்கே அந்த ஓவியம் வீட்டின் வால்பேப்பர், தளபாடங்கள், நினைவுச்சின்னங்களால் சூழப்பட்டுள்ளது. குடும்ப சூழ்நிலைக்குள் அது நுழைகிறது. அவர்களின் பேசப்படும் புள்ளியாக அது மாறுகிறது. அது அதன் அர்த்தத்தை அவர்களின் அர்த்தத்திற்கு வழுங்குகிறது. அதே நேரத்தில், அந்த ஓவியம் பல இலட்சக்கணக்கான மற்ற வீடுகளிலும் நுழைகிறது, அவர்கள் ஒவ்வொரிடத்திலும் அது வித்தியாசமான சூழலில் காணப்படுகிறது. கேமராவினால், பார்வையாளர் ஓவியத்தை நோக்கி பயணிக்காமல், ஓவியம் பார்வையாளரை நோக்கி பயணிக்கிறது. அதன் பயணத்தில், அதன் பொருள் பல்வேறாகிறது.
தொடரும்...
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |