|
|
|
உயிர் கொடுக்கும் கலை 8 - டிராட்ஸ்கி மருது (எழுத்தாக்கம்: யுகேந்தர்)
பத்திரிக்கையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள், மேலோட்டமான சில வேறுபாடுகளால் ஏற்பட்ட ஏமாற்றம், திரைப்பட கதாபத்திர தேர்வினால் கலக்கமுற்று, தவிர்க்க முடியாத சுருக்கம் மற்றும் பிடித்த பாத்திரங்கள் அல்லது நிகழ்வுகள் இழப்பு ஆகியவையினால் எதிர் வினை தெரிவிக்கிறார்கள். இப்படியான படங்களை இலக்கிய மூலத்தில் இருந்து எவ்வளவு பயன்படுத்திகிறார்கள் அல்லது எவ்வளவு வேறுபடுகிறார்கள் என்ற அளவிலே தீர்மானிக்கிறார்கள். 'குறிப்பிடத்தக்க நேர்மையான தழுவல்' அல்லது 'இலக்கிய மூலத்தின் கருவை சொல்ல முடியவில்லை' என்ற அளவிலே பார்க்கின்றார்கள். ஆனால் அவர்கள் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று அதில் என்ன இருக்கிறது?
|
|
|
------------------------------------------------------------------------------------------------------------------------------ |
|
மெட்ராஸ் கஃபே - யமுனா ராஜேந்திரன்
மெட்ராஸ் கஃபே படத்தின் உருவாக்கம் குறித்து அதனது இயக்குனர் சுஜித் சர்க்கார் சொல்லும்போது இப்படம் இலங்கைப் பிரச்சினை குறித்த படம் என்றும், ராஜீவ்காந்தி படுகொலை குறித்த படம் என்றும், நிஜங்களின் அடிப்படையிலான புனைவுப்படம் எனவும் குறிப்பிடுகிறார். ஏழு ஆண்டுகள் இப்படத்தின் திரைக் கதைக்காக ஆய்வு மேற்கொண்டதாகவும் குறிப்பிடுகிறார். படத்தின் ஓரு காட்சியில் கூட தமிழ் இனப் பிரச்சினைக்கான வேர்கள் என்ன என்பது குறித்தோ, தமிழர்கள் ஏன் ஆயுதமேந்தினார்கள் என்பது குறித்தோ, ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை, இந்திய ராணுவத்தினரின் படுகொலைத் தாக்குதல்கள் குறித்தோ எந்தவிதமான உரையாடல்களும் இடம்பெறவில்லை.
|
|
------------------------------------------------------------------------------------------------------------------------------ |
|
எழுத்தாளர்களும் தமிழ் சினிமாவும் – தியோடர் பாஸ்கரன்
திரைப்படம் ஒரு பொழுதுபோக்கு உபகரணமாக தமிழ் நாட்டில் தோன்றிய சமயத்தில்தான் தொழிலாளி வர்க்கம் என்ற ஒரு மக்கள் பகுதி உருவாக்கிக்கொண்டிருந்தது. துணி ஆலைகள், தொடர்வண்டி போக்குவரத்து முதலியன தோன்றிய சமயம், மக்கள் திரள் சமுதாயம் தோன்ற ஆரம்பித்த காலகட்டம். இந்த புதிய தொழிலாளர் சமூகத்தை , ஜாதி, வர்க்க பேதமில்லாமல் எல்லாரும் கூடமுடிந்த திரை அரங்கு, வசீகரித்தது. 1900ல் முதல் திரையரங்கு சென்னையில் உருவானது. பல கூடாரக் கொட்டகைகளும் இருந்தன. யாவரும், பாகுபாடின்றி பார்த்து அனுபவிக்கக்கூடிய ஒரு பொழுதுபோக்குச் சாதனமாகச் சலனப்படம் பரிணமித்தது. சமூகத்தின் எல்லா அடுக்களிலிருந்த மக்களும், கலாச்சார வரம்புகளை மீறி ஒருங்கே கூடக்கூடிய ஒரு ஜனநாயக பொது இடமாக உருவானது. இம்மாதிரியான கூடுகை தமிழ்ச்சமுதாயத்திற்கே முற்றிலும் ஒரு புதிய நிகழ்வு.
|
|
------------------------------------------------------------------------------------------------------------------------------ |
|
|
|
|
|
|
|
|
|