|
|
|
 |
உயிர் கொடுக்கும் கலை 16 - டிராட்ஸ்கி மருது - ஒலிப்பதிவும் எழுத்தும் : யுகேந்தர்
"Sequential Art" என்று உலகம் முழுவதும் அறியப்படும் சித்திர தொடர் மரபு (காமிக்ஸ்), ஒரு கலை வடிவமாக பெரிய அங்கீகாரம் பெற்றுள்ளது. அச்சு இயந்திரத்திலிருந்து வந்த காமிக் புத்தகங்கள், இன்று ஐ-பேட், ஆண்ட்ராய்ட் பேசி என அடுத்த கட்டமான மின்னனு மற்றும் சமூக ஊடகத்தில் இடம் பெற ஆரம்பித்து விட்டது. உலகளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய கலைஞர்களை தாண்டி அறியப் படாத இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட கலைஞர்கள் அல்லது அமெச்சுர் ஒவியர்கள் தாமே படம் வரைந்து அதற்கான கதையை எழுதி, படிமங்களின் மூலம் தொடர்பு ஏற்படுத்த இயலும் படைப்புகளை வெளியிடும் சாத்தியக்கூறுகளும் கிடைத்து விட்டது.
|
|
------------------------------------------------------------------------------------------------------------------------------ |
 |
காணும் முறைகள் - ஜான் பெர்ஜர் - தமிழில்: யுகேந்தர்
பிளாரன்ஸின் பிரபு பிரான்ஸ் நாட்டு அரசருக்கு பரிசாக அனுப்பியதே இந்த ஓவியம். மண்டியிட்டு பெண்னை முத்தமிடும் அந்த பையன் "கியுபிட்". அவள் வீனஸ். ஆனால் அவள் உடல் அமைப்பின் ஒழுங்கிற்கும் முத்தம் கொடுப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த படத்தை பார்க்கும் மனிதனுக்கு காட்சியளிப்பது போன்றே அவளது உடல் அமைப்பு ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது. அவனது பாலின்ப ஆர்வத்தை ஈர்ப்பதற்காகவே இந்த ஓவியம் வரையப்பட்டது. அவளது பாலின்ப ஆர்வம் குறித்து செய்வதற்கு ஒன்றுமில்லை. ( இங்கே மற்றும் ஐரோப்பிய பாரம்பரியத்தில் பொதுவாக, பெண்ணின் உடலில் ரோமத்தை வரையாமல் இருப்பது அதே நோகத்தினாலே ஆகும்.
|
|
------------------------------------------------------------------------------------------------------------------------------ |
|
 |
|
 |
|
ஹனா மெக்மல்பஃப் நேர்காணல் - தமிழில் - எம். ரிஷான் ஷெரீப்
1988, செப்டம்பர் மாதம் 03 ஆம் திகதி தெஹ்ரானில் பிறந்த ஹனா மெக்மல்பஃப், தனது தந்தையான மூஸின் மெக்மல்பஃப்பின் “A moment Of Innocence” எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது 7 வயதில் திரையுலகில் பிரவேசித்தார். தொடர்ந்து கையடக்க கேமராவின் மூலம் “The Day My Aunt Was ill” எனும் குறுந்திரைப்படத்தை தனது எட்டு வயதில் எடுத்து சாதனை படைத்தார். 1997 ஆம் ஆண்டு, இக் குறுந் திரைப்படமானது, லொகார்னோ சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்தபோது ஹனாவுக்கு வயது ஒன்பது.. அதனைத் தொடர்ந்து இவர் தனது பதினான்காவது வயதில் எடுத்த “Joy of Madness” எனும் ஆவணத் திரைப்படமானது.
|
|
மேலும் படிக்க |
|
|
|
ஒளி எனும் மொழி நூல் வெளியீட்டு விழா - II - தினேஷ்
இந்தப்புத்தகம் ஒரு உதாரணத்தோடு ஆரம்பிக்கிறது. நான் ஒரு பாமரன். த்ரிஷ்யம் பட்த்தின் இயக்குனர் பேட்டி ஒன்றை சமீபத்தில் பார்த்தேன். அவருக்கு சினிமாவின் மீது எப்படி ஆசை வந்த்து என்று தொலைக்காட்சியில் கேட்கிறார்கள். அவர் சொல்வது என்னவென்றால், நான் எனது உறவினரோடு பட்த்திற்குச் செல்வேன். திரும்பித் திரும்பி படம் பார்ப்பேன். படம் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே, என் உறவுக்கார பையன் கண்டினூட்டி பற்றியெல்லாம் சொல்வான். அவன் சொல்வதைக் கேட்ட பின்பாக படம் பார்க்கிற பொழுது எனக்கும் கண்டினூட்டி என்றால் என்ன என்பது புரிந்த்து. அதற்குப் பின்பாக படம் பார்க்கவும் எனக்கு மிகவும் பிடித்துப்போனது. சினிமாவில் மீது ஆர்வம் வந்த்து.
|
|
மேலும் படிக்க |
|
 |
|
 |
|
 |
|
|
|
|
பார்வையாளர்களின் கூட்டு உளவியலும், ஹாலிவுட் மையநீரோட்ட சினிமாவும் 3 - வருணன்
அமெரிக்காவின் ராணுவத் தலைமையகம் பென்டகன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இன்று வரை உலக நாடுகள் அமெரிக்காவை எதிர்க்கத் துணியாததன் மிக முக்கிய காரணங்கள் அதன் பணபலமும், ராணுவ பலமுமே. ஹாலிவுட்டிற்கு Pentagon’s Mouthpiece என்று ஒரு பட்டப் பெயரே உண்டு. அந்த அளவிற்கு அமெரிக்க திரையுலகம் வலதுசாரி அமெரிக்க அரசியல் சாய்வு உடையது. இரண்டாம் உலக யுத்தத்தின் போது மிக அதிகமாக பிரச்சாரத் திரைப்படங்கள் உருவாக்கப்பட்டன என்பது நாம அறியாததல்ல. பல முன்னணி ஹாலிவுட் இயக்குனர்களும் ஒளிப்பதிவாளர்களும் தங்களது பங்களிப்பை திறம்பட அளித்திருக்கின்றனர்.
|
|
மேலும் படிக்க |
|
|
|
வெள்ளித்திரை வித்தகர்கள் - ஷியாம் பெனகல் - அறந்தை மணியன்
பெனகலின் திரைப்படங்கள் சமூக அக்கறைக்கும் பரிசோதனை முயற்சிகளுக்கும் இடையே ஒரு சுவாரஸ்யமான மாறுதலை வெளிப்படுத்துகின்றன. திரைப்படங்களை அவரவர் விருப்பப்படி வகை பிரித்துக்காட்டுவது அவருக்கு உடன்பாடானதல்ல; எனினும், ‘மாற்று சினிமா’ப் பணி என்பதில்தான் அவரது படங்கள் அடையாளப்படுத்தப்பட்டன. அது ஏன் என்பதற்கான விடை எளிதானது.! தொடக்கக் காலங்களில் தனிப்பட்ட ஒரு நிறுவனத்திற்காகத்தான் (BLAZE FILMS) அவர் படமெடுக்க வாய்ப்பு பெற்றார் எனினும், கூட்டுறவு அமைப்புகள், மாநில அரசுகள் ஆகியவற்றின் சார்பாகவும் அவர் அடுத்தடுத்து படங்களை உருவாக்கினார். ஜவஹர்லால் நேருவின் எதிர்காலக் கனவை ஒட்டி, நாட்டு வளர்ச்சி என்ற கருவின் அடிப்படையில் அவர் படமெடுத்தார் என்று வருணிக்கப்படுவதும் உண்டு.
|
|
மேலும் படிக்க |
|
|
|
|
------------------------------------------------------------------------------------------------------------------------------ |
|
 |
|
 |
|
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை - தம்பிஐயா தேவதாஸ்
இசை அமைக்கும் பொறுப்பு ரீ. எப். லதீப்புக்கு வழங்கப்பட்டது. அதுவரை வானொலியில் பாடி வந்த வீ. முத்தழகுவும், சி. கலாவதியும் முக்கியப் பாடகர்களாகத் தெரிவு செய்யப்பட்டார்கள். இவர்களுடன் சுஜாதா அத்தநாயக்க, சுண்டிக்குளி பாலச்சந்திரன் புத்தூர் கனகாம்பாள் சதாசிவம், ஏ. ஈ மனோகரன் ஆகியோரும் பாடினார்கள். சாது, கௌரி ஆகியோர் பாடல்களை இயற்றினர். கவிஞர் கண்ணதாசன், பூவை செங்குட்டுவன் ஆகியோர் பாடல்களை இயற்றுவதில் துணை செய்திருக்கிறார்கள். இசையமைப்பில் சங்கர் கணேஷ் உதவியிருக்கிறார்கள். ‘மே தினம்’ என்ற பாடலைக் கண்ணதாசனும் ‘ஓ என்னாசை’ என்ற பாடலைப் பூவை செங்குட்டுவனும் எழுதினார்கள். கே. பாலசிங்கமும் ஹரிஹரனும் ஒலிப்பதிவு செய்தார்கள். 5 மாதங்களுக்குள் படம் தயாரிக்கப்பட்டு விட்டது.
|
|
மேலும் படிக்க |
|
|
|
டி.வி. விளம்பரப் படங்கள் - அம்ஷன்குமார்
டெலிவிஷன் ஒரு தயாரிப்பாளரின் சாதனம். ரேடியோவும் தயாரிப்பாளரின் சாதனம்தான். அது ஒலி நிகழ்ச்சியாளரின் சாதனம். டி.வி. தயாரிப்பாளர் அதாவது நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஒளி-ஒலியாக தரப்படுவதற்கு சாத்தியமான அனைத்தையும் நிகழ்ச்சியாக டெலிவிஷனில் இடம்பெற வைத்து விடுகிறார். கலை, வியாபாரம் ஆகியனவற்றை டெலிவிஷன் கடந்து விட்டது. அதன் ரங்கராட்டின சுழற்சியில் அவைகள் வெறும் நிகழ்ச்சிகளேயன்றி வேறில்லை. ஆனாலும் கூட டி.வி. விளம்பரப்படம் கமர்ஷியல் என்று அழைக்கப்படுகிறது. இப்படங்களைக் காட்டுவதால் டி.வி.க்கு வருவாய் கிட்டுகிறது. தூர்தர்ஷனுக்கு விளம்பரப் படங்களினால் கடந்த வருமானம் ரூ.350கோடி. பண்ட விற்பனையை முழுதாகக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்படுவதாலும் விளம்பரப் படம் கமர்ஷியல் ஆகிறது.
|
|
மேலும் படிக்க |
|
|
------------------------------------------------------------------------------------------------------------------------------ |
|