வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
   
 
  உள்ளடக்கம்
 
அம்மா, உழைப்பதை நிறுத்திக்கொண்டார் - அழகிய பெரியவன்
--------------------------------
கருப்பு பாலைவனம் 7 - எங்க ஊர் வெம்பூர் - கவிஞர் சமயவேல்
--------------------------------
அஞ்சலி: ஜெயகாந்தன் - எம்.டி.முத்துக்குமாரசாமி
--------------------------------
நிமித்தம் - எஸ்.ராமகிருஷ்ணன் - தமிழ்மகன்
--------------------------------
பப்பாசி (BAPASI)அமைப்பின் செயலாளர் திரு. புகழேந்தி அவர்களுடன் ஒரு நேர்காணல் - விக்னேஷ் சேரல்
--------------------------------
பூத்துக் குலுங்கும் பூஜ்ஜியங்கள் - கவிஞர் பச்சோந்தி
--------------------------------
சென்னைப் புத்தகக் கண்காட்சி அரங்கம் வடிவமைப்பு செய்த கே.மாமுண்டி நேர்க்காணல் - விக்னேஷ் சேரல்
--------------------------------
சென்னை புத்தகக்கண்காட்சி - காளிமுத்து
--------------------------------
சென்னை புத்தகக்காட்சி - வாசகர்களின் அனுபவங்கள் - விக்னேஷ் சேரல்
--------------------------------
 
   
 
1

 
 
 
 
   
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     




38வது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அரங்கம் வடிவமைப்பு செய்த கே.மாமுண்டி நேர்க்காணல்:

- விக்னேஷ் சேரல்


உங்களை பற்றி?

கே.மாமுண்டி திருச்சி, முப்பத்திமூன்று வருடமாக பந்தல் காண்ட்ராக்ட், அரங்க வடிவமைப்பு போன்ற தொழில்கள் செய்து வருகிறோம். அனைத்துவகையான கண்காட்சிக்கும் அரங்கம் வடிவமைக்கிறோம். புத்தகக் கண்காட்சிக்கு மட்டுமில்லமால், ஹைடேக் கண்காட்சி போன்ற எல்லா வகையான கண்காட்சியும் செய்துக்கொடுக்கிறோம். டெல்லிக்கு சென்று கூட நாங்கள் வேலை செய்துக்கொடுத்துருக்கிறோம்.

எத்தனை புத்தகக் கண்காட்சிக்கு இதுவரை அரங்கம் வடிவமைப்பு செய்து இருக்கிறிர்கள், சென்னைக்கு புத்தகக் கண்காட்சிக்கு எத்தனை வருடம் மற்றும் எந்தந்த ஊர்களில் இது போன்ற புத்தகக் கண்காட்சி செய்கிறிர்கள்?

புத்தகக் கண்காட்சி சென்னையில் நடப்பது இதுவே முதல்முறை, மற்றபடி சின்னச் சின்ன பொருட் காட்சிகளுக்கு செய்துருக்கிறோம். திருச்சி, மதுரை, தஞ்சாவூர், கோயம்புத்தூர், நாமக்கல் போன்ற ஊர்களில் பொருட்காட்சி பண்ணியிருக்கோம்.

38 வது சென்னை புத்தகக் கண்காட்சிக்கு அலங்காரம், அரங்க வடிவமைப்புக்கு செய்வதற்கு எத்தனை நாட்கள் ஆனது மற்றும் எத்தனை பேர் இதில் இடுப்பட்டிர்கள்?

பொதுவாக இருபது நாட்கள் கொடுப்பார்கள். ஆனால் இந்த வருடம் எங்கள் குழு பத்து நாளில் முடித்து கொடுத்தோம். அது தான் பெரிய சாதனை. திருச்சியில் இருந்து சாமான்கள் எடுத்து வந்து பத்து நாளில் முடித்து கொடுத்து இருக்கிறோம். ஐநூறு ஆட்கள் இந்த பணியில் ஈடுப்பட்டோம்.

உங்களுக்கு வாசிப்பு பழக்கம் உண்டா ?

இருக்கு! எல்லாவகையான புத்தகங்களும் வாசிப்பேன், கதை புத்தகம், பொன்னியின் செல்வன், சீக்ரெட் (secret), பன்னீர்செல்வம் அவர்களின் நாவல்கள், குழந்தைக்கு தேவையான புத்தகங்கள் வாங்கினோம். ஒரு லட்ச ரூபாய்க்கு என் குடும்பத்துடன் வந்து வாங்கினேன் மற்றும் என்னுடன் பணியாற்றியவர்களுக்கும் புத்தகம் வாங்கி கொடுத்தோம்.

தொடர்ந்து பதிமூன்று நாட்களாக புத்தகக் கண்காட்சியில் இருந்துள்ளிர்கள் எவ்வாறு உணர்கிறிர்கள் ?


எத்தனையோ பொருட் காட்சி செய்துருக்கோம். ஆனால் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் மக்கள் சாரைசாரையாக வருவது பார்த்தல் வியப்பாக உள்ளது. எங்களுக்கு மறுபடியும் இதுப்போன்ற புத்தகக் கண்காட்சிக்கு வேலை செய்வதற்கு ஆர்வமாக உள்ளோம். நாங்கள் எந்த வித லாபம் நோக்கம் எதிர்ப்பாக்கவில்லை, இது மக்களுக்கு பயன்படுகிறது என்பதால் தான். முதல் நாள் புத்தகக் கண்காட்சியில் ஒரு எழுபது வயது நிரம்பிய வயதானவர் பத்து மணிக்கு திறக்கப் போகும் புத்தகக் கண்காட்சிக்கு ஏழரை மணிக்கே வந்து விட்டார். முதலில் அவரை தான் பார்த்தேன் எனக்கு ஒரே ஆச்சரியம் ஆனால் மனத் திருப்தியாகவும் ஆத்ம திருப்தியாகவும் இருத்தது.

சென்னை புத்தகக் கண்காட்சியில் என்ன மாதரியான அரங்க வடிவமைப்புகள் உருவாக்கணும்னு முடிவு பண்ணுகிறிர்கள்?

அமாம், நாங்களே சிந்திச்சு உருவாக்கிறது தான். இந்த முறை கோட்டை வடிவமைப்பில் செய்துருக்கோம். நாங்கள் வடிவமைத்த பின் அவர்கள் அனுமதி பெறுவோம். ஆனால் கடைசியாக நடந்த புத்தகக் திருவிழா வரை இதுப்போன்று செய்ததில்லை எனவும், இந்த முறை நல்ல வடிவமைப்பில் இருத்ததாகவும் நிர்வாகத்தில் சொன்னார்கள்.

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் செய்த அரங்க வடிவமைப்பு வேலைகளுக்கு போதுமான வருமானம் கிடைத்ததா ?


இது முதல் முறை என்பதால் நாங்கள் கணக்கு பார்க்கவில்லை வேலை செய்யவேண்டும் என்ற ஆர்வமே மேலோங்கியிருந்தது. அதுவும் பத்து நாளில் முடிக்கவேண்டும் என்று கேட்டதால் எதையும் எதிர்பாக்காமல் சிறப்பாக செய்யவேண்டும் என்று நோக்கம் மட்டுமே இருந்தது. உலகத்திலே பெரிய செல்வம் கல்வி செல்வம் தான் அதற்காக வேலை செய்ததும் அதுவும் மக்கள் பயன்படற வகையில் இருத்தும் ரொம்ப மகிழ்ச்சி.

மேலே செல்க...(go to top)


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

  </