வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 
   

பப்பாசி (BAPASI)அமைப்பின் செயலாளர் திரு. புகழேந்தி அவர்களுடன் ஒரு நேர்காணல் - விக்னேஷ் சேரல்

இந்தியாவிலேயே மிகப் பெரிய புத்தகத் திருவிழாவாக மாறிக்கொண்டிருக்கும், சென்னை புத்தகக் காட்சியை மிகுந்த கவனத்தோடும், அக்கறையோடும் ஒவ்வொரு ஆண்டும் பப்பாசி (BAPASI) அமைப்பினர் நடத்தி வருகின்றனர். பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், இத்தனை சிறப்பாக புத்தகக் காட்சியை வேறு யாராலும் நடத்த முடியாது என்பதும் உண்மைதான். குறைகளே இல்லையென்றால் அதில் சிறப்புகளும் இல்லாமல்தான் இருக்கும் என்கிற உண்மை பலருக்கும் புரிவதில்லை.

  மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------------------------------------

அம்மா, உழைப்பதை நிறுத்திக்கொண்டார் - அழகிய பெரியவன்

அம்மா திடகாத்திரமாகத்தான் இருந்தார். தொண்ணூற்றாறு வயது , என்னைக்கேட்டால் இந்த வயது கூட அவரைப் பொருத்தமட்டில் சாகிற வயது இல்லை! இரண்டே இரண்டு நாட்கள் முடியவில்லை என்று படுத்தார். திடீரென்று தீவிரமான காய்ச்சலும், சளியால் மூச்சடைப்பும் வந்துவிட்டன. எப்படி வந்தனவென்று தெரியவில்லை. அம்மா, ஒரு இடத்தில் என்று இருப்பதில்லை. பொருட்களை ஒதுங்கவைப்பது, கட்டைத் துடைப்பத்தை எடுத்துக்கொண்டுப் பெருக்குவது என்று எப்போதும் ஏதாவது வேலையாகவே இருப்பார்.

  மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------------------------------------
   
 
கருப்பு பாலைவனம் 7 - எங்க ஊர் வெம்பூர் - கவிஞர் சமயவேல்

எங்கள் வெம்பூர், எட்டையபுரம் வட்டத்தில், மதுரை-தூத்துக்குடி நால்வழிச்சாலையிலிருந்து இடதுபுறம் உள்ளே ஒரு அரை கிலோமீட்டர் ஒதுங்கியிருக்கிறது. இதனாலேயே தங்க நாற்கரம் எனப்படும் இராட்சஸ அனகொண்டாப் பாம்பிடம் சிக்கி தரைமட்டமாகிவிடாமல், ஊர் தன்னைக் காப்பாற்றிக் கொண்டுவிட்டது. தீர்க்கதரிசிகளால் உருவாக்கப்பட்ட கிராமம் என்று பெருசுகள் பெருமையடித்துக் கொள்கின்றன. நெடுஞ்சாலையிலிருந்து ஊர் செல்லும் ஓடைப்பதை இப்பொழுது நகர்ப்பேருந்துகள் செல்கிற சிறுதார்ச்சாலை ஆகிவிட்டது. இருபுறமும் ரயில்கள்ளிகள் பேய்களைப்போல நிற்கிற, பகலிலும் சிள்வண்டுகள் கத்துகிற பீதியூட்டுகிற அந்தப் பழைய ஓடைப்பாதையை எல்லோரும் மறந்து பல ஆண்டுகள் கடந்துவிட்டன.

  மேலும் படிக்க
 
 
சென்னை புத்தகக்கண்காட்சி - காளிமுத்து


ஒரு எழுத்தாளன் தான் இறந்துவிட்டதாகவும் இனி எழுத போவதில்லை என்று சொல்லும் அளவிற்கு அவர்களின் அறமற்ற செயல்கள் இருந்தது. இத்தனை எதிர்க்கும் விதத்தில் கருத்துரிமை பாதுகாப்போம் என்று எழுத்தாளர்கள், ஆவணப்பட இயக்குனர்கள், பத்திரிக்கையாளர்கள், படைப்பாளிகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தினார்கள். தமிழ் ஸ்டுடியோ படிமை மாணவர்கள் மூலம் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் ஒன்றையும் நடத்தியது. ஒரு பெரியவர் தன் மகளுடன் பெருமாள் முருகனும், சார்லியும் நான்தான் என்ற வாசகம் எழுதிய பலகையுடன் புத்தகக்கண்காட்சியை வளம் வந்தனர், இந்த புத்தகத்தை எதிர்த்த சாதி சங்கங்கள், மதஅமைப்புகள், அரசியல் கட்சிகளின் இந்த செயலை கண்டிக்கும் வகையில் இந்த போராட்டம் இருந்தது, ஒரு எழுத்தாளனுக்காக போராட்டம், கையெழுத்து இயக்கம் எல்லாம் புத்தக்கண்காட்சிக்கு புதியவை தான்.
  மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------------------------------------
       
 
 


சென்னை புத்தகக்காட்சி - வாசகர்களின் அனுபவங்கள்

இதில் என்னை கவனிக்க வைத்த நாவல் உம்மத். நாவலின் மைய கரு, ஈழ போரின் அவலங்களை காட்சி படுத்துகிறது. மூன்று பெண்களின் ஊடே கதை களம் உயிர் பெறுகிறது. இஸ்லாமிய அடிப்படைவாதம் பெண்ணை எப்படி அடக்கி ஒடுக்குகிறது. மக்கள் அகதிகளாக அலைக்கழிக்கப்படுவதும், போரினால் மாற்று திறனாளியாக மாறுவதும், உடமைகளை இழப்பதையும், பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கபடுவதும், என பல அடிப்படை பிரச்சனைகளை பேசுகிற படைப்பு உம்மத். படைப்பாளர் “ஷர்மிளா செய்யத்”.
மனிதன் உயிர் வாழ சுவாசிப்பு எத்தனை அவசியமோ அது போன்று வாசிப்பு அவசியமானது .இதில் பெண்களுக்கான வாசிப்பு சூழல் என்பது மிககுறைவானது. இந்த சமூக கட்டமைப்பு பெண்களுக்கான அறிவார்ந்த தேடலை ஊக்குவிப்பதாக இல்லை. புத்தக கண்காட்சிகள் பெண் படைப்பாளிகளை வாசிப்பாளர்களை பெருக்கும் வகையில் புதிய நிகழ்வுகளை உருவாக்க வேண்டும்.

 

  மேலும் படிக்க
 
 
நிமித்தம் - எஸ்.ராமகிருஷ்ணன் - தமிழ்மகன்

நிறைய சம்பவங்கள், நிறைய மனிதர்கள். நாவலின் மிகப்பெரிய பலம் அது. சரித்திர பூர்வமாக பல செய்திகளை நாவலின் வழியே சொல்லிச் செல்கிறார். காந்தி, நேரு, இந்திரா, எமெர்ஜென்ஸி, இலங்கை யுத்தம், அகதிகளாக வந்தவர்கள் என வரலாற்றின் இழை, நாவலைக் கால் ஊன்ற வைக்கிறது.
காந்தி பக்தர் ராஜாமணி கொல்லப்பட்ட கதை. பர்மாவில் இருந்து செட்டியாரால் அழைத்துவரப்பட்ட புவன்ஸ்ரீ&க்கு விக்கல் நின்ற கதை. வீமன் சொல்லும் ஆவிகள் கள்ளு குடிக்கும் கதை. சுதர்சனம் சார், அங்கையற்கண்ணி டீச்சர் காட்டும் அன்பின் கதை. கிரேசம்மா சொல்லும் அசையாத மரங்களின் கதை. வண்டிப் பேட்டை தம்பையா சொல்லும் ‘ஆண் கிணறு பெண் கிணறு’ கதை என எத்தனைக் கிளைக் கதைகள்?

ஜோஸ்லின் சிந்தியா, சவீதா காதல் பூக்க வைத்த பெண்கள், தேவராஜுக்குக் கை கூடாத சோகம் விரக்தியின் உச்சத்தில் அவனைத் தள்ளுகிறது.



  மேலும் படிக்க
   
------------------------------------------------------------------------------------------------------------------------------
   
 
பூத்துக் குலுங்கும் பூஜ்ஜியங்கள் - கவிஞர் பச்சோந்தி

ஏன் அந்த குருட்டுப் பூனை மூடிய வாசல் முன் கத்துகிறது. என்னை விட்டுவிட்டு ஏன் கதவை மூடிக்கொண்டீங்கன்னு கேற்கிறதா? இல்லை பசியில் கத்துகிறதா? எதிர் வீட்டுப் பூனையா? இல்லை எதிர் வீட்டுக்கு பால் குடிக்கச் சென்ற பூனையா? இல்லை வெகுநாட்களாய் வெப்பத்தில் கிடந்து, மழையில் நனைந்து துள்ளிக் குதிக்கும் குழந்தையின் பேரானந்தமா? என்னோடு நனைய நீங்களும் வாங்க என்று கூப்பிடிகிறதா? வெறுமனே கதவை சாத்திவிட்டு அக்கம் பக்கம் வீட்டுக்காரங்க போனபோது திருடன் ஏதும் வந்துவிட்டானா? இல்லை வெளிச்சத்திலே வளர்ந்த பூனை முதன்முதலாய் ஒரு இருட்டைப் பார்த்து பயப்படுகிறதா? இல்லை முதன் முதலாய் பூனையைக் கண்ட இருட்டு அலறியதா?. பூனையின் கூப்பாட்டில் ஏன் அந்த இரவு அசைந்தது. பூனை பேசியது தமிழ் மொழி என்பதாலா?

 

  மேலும் படிக்க
 
 
38வது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அரங்கம் வடிவமைப்பு செய்த கே.மாமுண்டி நேர்க்காணல்

தொடர்ந்து பதிமூன்று நாட்களாக புத்தகக் கண்காட்சியில் இருந்துள்ளிர்கள் எவ்வாறு உணர்கிறிர்கள்?

எத்தனையோ பொருட் காட்சி செய்துருக்கோம். ஆனால் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் மக்கள் சாரைசாரையாக வருவது பார்த்தல் வியப்பாக உள்ளது. எங்களுக்கு மறுபடியும் இதுப்போன்ற புத்தகக் கண்காட்சிக்கு வேலை செய்வதற்கு ஆர்வமாக உள்ளோம். நாங்கள் எந்த வித லாபம் நோக்கம் எதிர்ப்பாக்கவில்லை, இது மக்களுக்கு பயன்படுகிறது என்பதால் தான். முதல் நாள் புத்தகக் கண்காட்சியில் ஒரு எழுபது வயது நிரம்பிய வயதானவர் பத்து மணிக்கு திறக்கப் போகும் புத்தகக் கண்காட்சிக்கு ஏழரை மணிக்கே வந்து விட்டார். முதலில் அவரை தான் பார்த்தேன் எனக்கு ஒரே ஆச்சரியம் ஆனால் மனத் திருப்தியாகவும் ஆத்ம திருப்தியாகவும் இருத்தது.


  மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------------------------------------
 
 
ஒளிப்படத் தொகுப்பு
 
  தமிழ் ஸ்டுடியோ சார்பாக நடக்கும் நிகழ்வுகளின் புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பு. இந்த இணைப்பில் பெரும்பாலான நிகழ்வுகள் சார்ந்த புகைப்படங்களை பார்க்கலாம்.  
     
   
     
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
     
     
     
     
     
     
     
     
 
 
 
 
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)


  </