வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை
இதழ்: 2 :: சித்திரை (May), 2015
 
 
   

நகுலனின் இரு கவிதைகள் - விக்ரமாதித்தன் நம்பி

‘நண்பர் கேட்டார், ‘இப்பொழுது எல்லாம் நீங்கள் பிராந்தி அடிக்கடி அருந்துவதாகக் கேள்விப்பட்டேன். இதே அனுபவத்தை எந்தச் சமயத்திலும் யோகத்தின் மூலம் அடையலாம் என்பது உங்களுக்குத் தெரிந்ததுதானே’ . நான் ஒன்றும் சொல்லவில்லை. ஏனென்றால் எனக்கு அது தெரியும். அவர் போய்ச் சேர்ந்தார். அப்பொழுது ஒரு சுருதி சேர்ந்த சமயத்தில் என்றுதான் சொல்லவேண்டும். வழக்கம்போல் பிராந்திக் கசப்பை அனுபவித்ததின் பின் ஒரு கவிதை எழுதியது நினைவிற்கு வருகிறது.

  மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------------------------------------
   
 
மனிதன் - ஈ.பீ.டொங்காலா - தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்

இராணுவ வீரர்கள் பிரதேசத்தின் தொழிலாளர் குடியிருப்புக்களை ஆக்கிரமித்தனர். வீடுகளின் கதவுகளை உடைத்த அவர்கள் பஞ்சையும், வைக்கோலையும் பாவித்து தயார் செய்யப்பட்டிருந்த மெத்தைகளை துப்பாக்கி முனையில் பொருத்தப்பட்டிருக்கும் இரும்பு உளியினால் குத்தி ஓட்டையாக்கி, அவற்றுக்குள் தாம் தேடி வந்த மனிதன் இருக்கிறானா எனத் தேடிப் பார்த்தனர். தானியங்களைச் சேமித்து வைத்திருந்த சாக்கு மூட்டைகளில் துவாரங்களிட்டுப் பரிசோதித்தனர். தாம் கேட்கும் கேள்விகளுக்கு உடனடியாகப் பதில் கூறாத ஊராரை துப்பாக்கிக் கட்டையால் தாக்கினர். தமது வீடு உடைபடுவதற்கு எதிர்ப்பைத் தெரிவித்த ஒவ்வொருவரும் தாக்குதலுக்குள்ளாக நேர்ந்தது.

  மேலும் படிக்க
 
 
வந்தாரங்குடி - கண்மணி குணசேகரன் - தமிழ்மகன்


இத்தகைய அரிதாரம் பூசாத உரையாடல்கள் நம்மை நடுநாட்டுக்கு கைபிடித்து அழைத்துச் செல்கின்றன. மொழியின் உயிர் அதன் வட்டார வழக்கில் இருக்கிறது. அதை அவர்கள் பேசுகிற பேச்சோடு நிறுத்திக்கொண்டு, ஆசிரியரின் வர்ணனைகள் உரைநடைத் தமிழில் அதாவது பொதுத் தமிழில் சொல்லியிருப்பது கூடுதல் சிறப்பு. சில ஆசிரியர்கள் கதை சொல்லலையே அந்த வட்டார வழக்கில் அமைக்கின்றனர். அது போன்ற சித்ரவதை இருக்க முடியாது. அத்தகைய தவற்றை கண்மணி செய்யவில்லை.


  மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------------------------------------
       
 
 


மூர் மார்க்கெட் எரிந்து முடிந்தது - விட்டல்ராவ்

மூர் மார்க்கெட் பிரதான சிவப்பு நிற இந்தோசார்சானிக் கட்டிடத்துக்கு வெளியில் வெளிச்சுற்றுச் சுவர் வரை பரந்து கிடக்கும் வெட்டவெளியில் ஏராளமாய் நாலாவித சாமான்களைக் குவித்துப் போட்டு விற்கும் கடைகளும், திருட்டுப் பொருட்களை வைத்து விற்கும் கடைகளும், பழைய சாமான்களை விற்கும் கடைகளும் நிறைய விரிக்கப்பட்டிருக்கும். டிசம்பர் – ஜனவரி மாதங்களில் இந்த வெட்டவெளியில் 1962 வரை சீன இளம்பெண்கள் வண்ணக் காகிதங்களால் தயாரித்த கண்ணையும் மனதையும் கவரும் அழகிய கிறிஸ்துமஸ் – புத்தாண்டு விளக்குகளைக் கொண்டு வந்து விற்பார்கள்.

 

  மேலும் படிக்க
 
 
கோடை - எம்.ரிஷான் ஷெரீப்

ஊருக்குள் வெயிலலையும் காலங்களில்தான் ஐஸ்பழம், இளநீர் விற்பவர்களின் நடமாட்டத்தைக் காண முடியுமாக இருக்கிறது. தோல் கருக்கச் சுட்டுப் பொசுக்கி, வீதிகள் தோறும் அவர்களுடனேயே தொடர்ந்து நடக்கும் வெயிலினைத் தங்கள் நெற்றி வியர்வையைச் சுண்டியெறிவது போலவே அவர்கள் சுண்டியெறிகிறார்கள். வெயிலும், கோடையும் அவர்களது விருப்புக்குரியவையாக இருக்கக் கூடும். வெயில் காலங்களில்தான் தங்களது அதிகபட்ச வருமானத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடிய அவர்கள், தாங்கள் சுமந்தலையும் இளநீரையோ, ஐஸ்பழத்தையோ சுவைத்துக் கொண்டிருந்ததை இதுவரை நான் பார்த்ததில்லை.
  மேலும் படிக்க
   
------------------------------------------------------------------------------------------------------------------------------
   
 
அஞ்சலி : திருமதி. கமலினி செல்வராஜன் - எம்.ரிஷான் ஷெரீப்

இலங்கையில், யாழ். பருத்தித்துறை புலோலியூரில் தமிழ் வித்துவப் பரம்பரையில் உதித்த தமிழ் பண்டிதர் புலோலியூர் மு. கணபதிப்பிள்ளைக்கும், வயலின் வித்தகியாகத் திகழ்ந்த தனபாக்கியத்திற்கும் மூத்த மகளாக 1954 ஆம் ஆண்டு பிறந்த இவர் இலங்கையில் தமிழ் முற்போக்கு எழுத்தாளர்களின் எழுச்சிக் காலமாக இருந்த 1970 காலப் பகுதியில், முற்போக்கு எழுத்தாளர் அமைப்பில் பிரதானமானவர்களில் ஒருவராக இருந்த கவிஞர் சில்லையூர் செல்வராஜனைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்.

 

  மேலும் படிக்க
 
 
மொழியும், இலக்கியமும் - விட்டல்ராவ்

அமெரிக்க பத்திரிக்கைகள் சோவியத் யூனியன் விஷயங்களை கூடியமட்டிலும் நக்கலாக , தாக்குதலோடு, வெளிப்படையாக மட்டந்தட்டி – குற்றம் காணும் தொனியிலே எழுதி வந்த காலம் அது. 1958 - மார்ச் லைஃப் இதழில் மாபெரும் தொடர் கட்டுரையொன்றை The Russian Revolution எனும் தலைப்பில் தொடங்கிற்று. நான்கு பாகங்களில் அமைந்திருந்தது கட்டுரை. சிறந்த ஓவியங்கள், மிக அரிய புகைப்படங்கள் துணையுடன் கட்டுரை அமைந்திருந்தது. ருஷ்ய புரட்சி பற்றி ஓர் அமெரிக்க வணிக இதழ் எவ்வாறு எழுதியிருக்கும் என்பதை எல்லோரும் ஊகித்துக் கொள்ள முடியும்.  மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------------------------------------
 
 
ஒளிப்படத் தொகுப்பு
 
  தமிழ் ஸ்டுடியோ சார்பாக நடக்கும் நிகழ்வுகளின் புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பு. இந்த இணைப்பில் பெரும்பாலான நிகழ்வுகள் சார்ந்த புகைப்படங்களை பார்க்கலாம்.  
     
   
     
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
     
     
     
     
     
     
     
     
 
 
 
 
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)


  </