வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
   
 
  உள்ளடக்கம்
 
அம்மா, உழைப்பதை நிறுத்திக்கொண்டார் - அழகிய பெரியவன்
--------------------------------
கருப்பு பாலைவனம் 7 - எங்க ஊர் வெம்பூர் - கவிஞர் சமயவேல்
--------------------------------
அஞ்சலி: ஜெயகாந்தன் - எம்.டி.முத்துக்குமாரசாமி
--------------------------------
நிமித்தம் - எஸ்.ராமகிருஷ்ணன் - தமிழ்மகன்
--------------------------------
பப்பாசி (BAPASI)அமைப்பின் செயலாளர் திரு. புகழேந்தி அவர்களுடன் ஒரு நேர்காணல் - விக்னேஷ் சேரல்
--------------------------------
பூத்துக் குலுங்கும் பூஜ்ஜியங்கள் - கவிஞர் பச்சோந்தி
--------------------------------
சென்னைப் புத்தகக் கண்காட்சி அரங்கம் வடிவமைப்பு செய்த கே.மாமுண்டி நேர்க்காணல் - விக்னேஷ் சேரல்
--------------------------------
சென்னை புத்தகக்கண்காட்சி - காளிமுத்து
--------------------------------
சென்னை புத்தகக்காட்சி - வாசகர்களின் அனுபவங்கள் - விக்னேஷ் சேரல்
--------------------------------
 
   
 
1


 
 
 
 
   
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     



சென்னை புத்தகக்கண்காட்சி

- காளிமுத்து


ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது நடைபெறுகிற சென்னை புத்தகத்திருவிழா தமிழ் வாசிப்புச்சூழலில் மிக முக்கியமான கலாச்சார நிகழ்வாகக்கருதப்படுகிறது, ஒரு காலத்தில் ஆங்கில புத்தகங்கள் அதிகமாக விற்று வந்த புத்தக கண்காட்சியில் இன்று தமிழ் புத்தகங்கள் நல்ல வரவேற்ப்பு பெற்று அதிகமாக விற்பனையும் ஆகியுள்ளது, புத்தகம் என்பது வெறும் காகிதம் மட்டுமல்ல. அது பண்பாட்டின் அடையாளம், கலாச்சாரத்தின் பதிவு, நம்மை மேம்படுத்தும் வழிகாட்டி அதனால் தான் ஒருவனின் வரலாற்றை அழிக்க வேண்டுமா அவனது நூல்களையும் நூலகங்களையும் அழி என்று ஒரு வாக்கியத்தைக் கூறுகிறார்கள்.

இந்தாண்டு நடைபெற்ற சென்னை 38வது புத்தகக்கண்காட்சி புத்தக திருவிழாவாக கொண்டாடப்பட்டது, இதனை தென்னிந்திய புத்தக விற்ப்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமான பபாசி தொடர்ந்து நடத்திவருகிறது. வாசகர்களிடம் புத்தகவாசிப்பு தொடர்பான ஆர்வத்தை விதைப்பதற்கும், பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் என்று பலரையும் ஊக்கத்துடன் இயக்கவைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சியே இந்த புத்தகக் கண்காட்சி, நந்தனம் YMCA மைதானத்தில் ஜனவரி 9 முதல் 21ம் தேதி வரை வெகு சிறப்பாக நடைப்பெற்றது. ஒவ்வொரு நாளும் சிறுவர்களும், இளைஞர்களும், பெரியவர்களும், பெண்களும், படைப்பாளிகளும், குடும்பமாகவும், பெரும் திரளாகவும் வந்து புத்தகங்களை வாங்கி சென்றனர்.

இந்த புத்தகக்கண்காட்சி தொடக்கவிழாவை சந்திராயன் திட்ட இயக்குனர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை தொடங்கி வைத்தார், புத்தகக்கண்காட்சியின் விழா அரங்கில் தினமும் மாலையில் இலக்கியம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெற்றன, புதிய நூல்கள் வெளியீட்டு விழா பட்டிமன்றம் மற்றும் எழுத்தாளர்கள்,வாசகர்கள் சந்திப்பு என விழாக்கோலம் கண்டது. புத்தககண்காட்சியில் உள்ள குறுந்திரையரங்கில் வாசிப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட குறும்படங்களுக்கான போட்டியில் தேர்வான குறும்படங்கள் திரையிடப்பட்டன.

இசை நிகழ்ச்சிகளும், நடனநிகழ்ச்சிகள், உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் புத்தககண்காட்சிக்கு சிறப்பை சேர்த்தது.

இந்தாண்டு புத்தகக்கண்காட்சியில் புதியவை என்று பார்த்தால் நுழைவு சீட்டு ரூ.50 கொடுத்து வாங்கிவிட்டால் பதிண்மூன்று நாட்களுக்கும் கண்காட்சியை சுற்றிவர அனுமதி வழங்கப்பட்டது. தினமும் ரூ 10 கொடுத்து நுழைவு சீட்டு எடுப்பதை விட இது சிறப்பானதாக இருந்ததது, புத்தகக்காட்சி தொடர்பாக எந்தசந்தேகம் வந்தாலும் WWW.CHENNAIBOOKFAIR2015 .COM என்ற பிரத்யேக இனையத்தளம், மற்றும் FREE WIFI வசதி, உடல் நலக்குறைவு ஏற்ப்பட்டால் உதவிக்கு மருத்துவக்குழு என்று புதியவைகள் பயனுள்ளதாக இருந்தது.

புத்தகக்கண்காட்சி அரங்கில் வெளியே இருந்த கடைகளில் தின்பண்டங்களும், நொறுக்குதீனிகளும், சாப்பாடுகடைகளும் மிக பிரம்மாண்டமாக இருந்தது. உணவுகளின் விலை சற்று அதிகமாக இருந்தும் வாசகர்கள் கூட்டமாக உட்கார்ந்து சாப்பிடுவதை பார்க்கையில் புத்தகக்காட்சி புத்தகப்பொருட்காட்சிபோல் இருந்தது.

புத்தகக்காட்சி தொடங்கிய அதே வேளையில் எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘’மாதொருபாகன்’’ புத்தககம் குறித்து பெரும் சர்ச்சை எழுந்தது, முன்பெல்லாம் ராயல்டி கொடுக்கவில்லை என்று எழுத்தாளர், பதிப்பாளர் பிரச்சனைதான் சர்ச்சையாக இருக்கும். புத்தகங்கள் ஆதிக்க சக்திகளின் எதிர்ப்புக்கு உட்படுவதை பார்க்கையில் ஜனநாயகத்தின் மீதும் கருத்து சுதந்திரத்தின் மீதும் பெரும் கேள்வி எழுகிறது. அதுவும் மாதொருபாகன் புத்தகம் வெளியாகி நான்கு ஆண்டுகளுக்கு பின்பு எதிர்ப்பு வருவதை பார்க்கையில் அரசியல் காட்சிகள் சாதி அமைப்புகளை தூண்டிவிடுவது வெளிப்படையாக தெரியவருகிறது.

ஒரு எழுத்தாளன் தான் இறந்துவிட்டதாகவும் இனி எழுத போவதில்லை என்று சொல்லும் அளவிற்கு அவர்களின் அறமற்ற செயல்கள் இருந்தது. இத்தனை எதிர்க்கும் விதத்தில் கருத்துரிமை பாதுகாப்போம் என்று எழுத்தாளர்கள், ஆவணப்பட இயக்குனர்கள், பத்திரிக்கையாளர்கள், படைப்பாளிகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தினார்கள். தமிழ் ஸ்டுடியோ படிமை மாணவர்கள் மூலம் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் ஒன்றையும் நடத்தியது. ஒரு பெரியவர் தன் மகளுடன் பெருமாள் முருகனும், சார்லியும் நான்தான் என்ற வாசகம் எழுதிய பலகையுடன் புத்தகக்கண்காட்சியை வளம் வந்தனர், இந்த புத்தகத்தை எதிர்த்த சாதி சங்கங்கள், மதஅமைப்புகள், அரசியல் கட்சிகளின் இந்த செயலை கண்டிக்கும் வகையில் இந்த போராட்டம் இருந்தது, ஒரு எழுத்தாளனுக்காக போராட்டம், கையெழுத்து இயக்கம் எல்லாம் புத்தக்கண்காட்சிக்கு புதியவை தான்.

இந்த புத்தகக்கண்காட்சியில் 15 பெண் எழுத்தாளர்கள் எழுதிய புதிய புத்தகங்கள் வெளியாகி விற்பனையானது வரவேற்க்கத்தக்க ஒன்றாகும், அம்பை, ஔவை, சல்மா, அ. வெண்ணிலா, சந்திரா, தி. பரமேசுவரி, ஷர்மிளாசெய்யித், கீதாசுகுமாரன், ஊர்வசி, மனுஷிபாரதி, விஜயலட்சுமி, பிருந்தா, பிரேமாரேவதி, உமாமோகன், ஈழவாணி, கவிதாசொர்ணவல்லி, என இவர்கள் எழுதிய கதை, கட்டுரை, கவிதை, நாவல்கள் என எல்லாம் முக்கியமானவை. எதுவாக இருந்தாலும் பெண் படைப்பாளிகள் இன்னும் அதிகமாக உருவாக வேண்டும் அவர்களின் பங்களிப்பே நமது சமுதாய முன்னேற்றமாகும்.
புத்தகக்கண்காட்சி தொடங்குவதற்கு முன்தினம் என்னுடைய பணியின் காரணமாக YMCAமைதானம் செல்லவேண்டியிருந்தது, அப்போது நான் பார்த்த காட்சிகள் எல்லாம் என்னை வியப்பில் ஆழ்த்தியது, புத்தகக்காட்சி அரங்குகளைபணியாளர்கள் அமைத்து கொண்டு இருந்தார்கள்.

அவர்கள் உருவாக்கும் 7௦௦ அரங்குகளின் பணி முடிவடையும் நிலையில் இருந்தது, எந்த திசை திரும்பினாலும் சுத்திளை கொண்டு ஆணிகளை அடிக்கும் சத்தமும், ரம்பம் வைத்து பலகையை அறுக்கும் சத்தமும் கேட்டுக்கொண்டே இருந்தது. நேரம் ஆக ஆக பணியின் தீவிரம் கூடி கொண்டே போனதை காண முடிந்தது, விளக்குகளை உயரமான இடத்தில் தொங்கவிடுவதும், அவற்றை சரியான முறையில் ஒளிர செய்வதும், நடைபாதையில் சிவப்பு நிற தார் பாய்களை விரிப்பதும், இரும்பு கம்பிகளை அப்புறபடுத்துவதும் என்று பணிகள் வேகமாக நடைப்பெற்றது. 7௦௦ அரங்குகளின்றி சாப்பாடு கடைகள், விழாமேடை,கழிவறைகளுக்கு மறைவு தட்டி அமைப்பது என்று அவர்களின் வேலை பயங்கரமானதாக இருந்தது. ஒரு பக்கம் லாரிகளிலும், டிப்போவேன்களிலும், மினி ஆட்டோவிலும் புத்தகங்கள் வந்து இறங்க தொடங்கிவிட்டது. விற்பனையாளர்கள் தங்களின் கடைகளில் புத்தகங்களை அடுக்கும் பணியில் தீவிரமாக செயல்படுவது, புத்தகங்களை சிறிய கைப்பையிலும், அட்டைப்பெட்டியிலும், வண்டிகளிலும் வைத்து தொழிலாளர்கள் தள்ளிக்கொண்டும், தூக்கிக்கொண்டும் போவதை பார்க்கையில் பிரம்மிப்பாக இருந்தது.
ஒரு புத்தகக்காட்சி நடைபெறுவதற்கு பின்னால் எத்தனை தொழிலாளர்களின் உழைப்பு இலை மர காயாக ஒளிந்துள்ளது. என்று பார்க்கையில் வியப்பாக இருந்தது, இது போன்ற பல்வேறுபட்ட செயல்பாடுகளை காணுகையில் இந்த புத்தகக்கண்காட்சி பற்றிய ஒரு முழுமையான ஆவணப்படம் எடுக்கும் எண்ணம் எனக்குள் தோன்றியது.

புத்தகக்காட்சியில் விருது வழங்கும் நிகழ்வு தொடக்க நாளன்று தொடங்கியது. இந்த ஆண்டின் சிறந்த தமிழறிஞருக்கான விருது சிலம்பொலி செல்லப்பனுக்கும், சிறந்தப்பதிப்பாளருக்கான விருது பி.இரத்தின நாயக்கர் மற்றும் சன்சீக்கும், சிறந்த விற்பனையாளருக்கான விருது ஆர். ராஜ் ஆனந்துக்கும், சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான விருது நெல்லை ஆ. கணபதிக்கும், சிறந்த ஆங்கில எழுத்தாளருக்கான விருது ஸ்ரீ குமார் வர்மாவுக்கும், சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான விருது டாக்டர் இ.கே.தி. சிவக்குமாருக்கும், சிறந்த நூலுக்கான விருது ஆர் சம்யுக்தாவுக்கும் வழங்கப்பட்டது. வெகு சிறப்பாக நடைபெற்ற இந்த புத்தகக்கண்காட்சியில் பத்துலட்சம் புத்தகங்கள் விற்பனையானதாக சொல்லப்பட்டது. விற்பனையான இந்த புத்தகங்களுக்கு பின்னால் எத்தனையோ தொழிலாளர்களின் உழைப்பு, விற்பனையாளர், பதிப்பாளரின் ஒத்துழைப்பு, பண முதலீடு மேலும் இதனை எடுத்து நடத்திய பப்பாசி அவர்களின் முயற்சியும் அயராத செயல்பாடும் அதற்க்கெல்லாம் மேலாக ஒரு எழுத்தாளரின் நீண்ட உழைப்பு, கனவு, எல்லாம் நமக்கு புத்தகத்தின் வழியே எழுத்து என்னும் ஆன்மாவாக வந்தடைகிறது.
புத்தகங்கள் நமக்கு அறத்தை போதிக்கும், சக மனிதன் மீது அன்பு செலுத்த கற்றுக்கொடுக்கும், உலகை பற்றிய நமது பார்வை விரிவடைய செய்யும், பல நிலப்பரப்பின் கலாச்சாரத்தையும், வரலாற்றையும், அந்த மக்களின் வாழ்க்கை முறையையும், போர் பற்றிய புரிதலையும் நமக்கு தெரியப்படுத்தும். அடங்கு முறைகளுக்கு எதிராக நம்மை போராட தூண்டும் சாதி, மத அமைப்பின் ஏற்றத்தாழ்வுகளை கேள்விக்கு உட்படுத்தும் இதற்க்கெல்லாம் மேலாக நம்மை நாம் புரிந்துகொள்ள வழிவகுக்கும் ஆம் நண்பர்களே ஒவ்வொரு புத்தகமும் நமது ஆன்மாவோடு உரையாடுகிறது. ‘’புத்தகம் என்பது வெறும் காகிதம் மட்டுமல்ல’’ ........!

மேலே செல்க...(go to top)


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

  </