|
|
|
உயிர் கொடுக்கும் கலை 5 - டிராட்ஸ்கி மருது (எழுத்தாக்கம்: யுகேந்தர்)
சுந்தர பாண்டியனும் (நடிகர் சந்திரசேகரின் அண்ணன்) நானும் ஓவியக் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். இவர்கள் இருவர் மூலமாக எனக்கு மணிவண்ணனுடனான பழக்கம் ஏற்ப்பட்டது. கல்லூரி படிப்பிற்கு பிறகு நாங்கள் தங்கியிருந்த அறையில் சந்திரசேகரும் வந்து சேர்ந்துக்கொண்டான். நாடக அனுபவங்களுக்கு பிறகு சினிமா முயற்சியில் அவன் ஈடுபட்டிருந்தான்.நாங்கள் மூவரும் சுற்றிக்கொண்டிருந்த காலகட்டம். சினிமாவுக்கான முயற்சி, weavers service centre'இல் நான் சேர்ந்தது, ராபர்ட் ராஜசேகரின் படங்கள், அறை வாழ்க்கை என எங்கள் உறவு வளர்ந்தது.பாரதிராஜாவின் இரண்டாவது படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்கும் முயற்சியில் தொடர்ந்து சந்திர சேகர் இருந்த நேரம், அங்கு பாரதிராஜா மூலம் மணிவண்ணனின் அறிமுகம் அவனுக்கு கிடைத்தது.
|
|
|
------------------------------------------------------------------------------------------------------------------------------ |
|
கோபால் ராஜாராம் - த காமன் மேன்
- யமுனா ராஜேந்திரன்
சோவியத் யூனியனையும் தலிபான் அமைப்பையும் எந்த விமர்சனமும் இல்லாது நான் ஆதரிக்கிறேன் என்று இருவரும் எப்படி முடிவுக்கு வந்தார்கள் என்றே எனக்குத் தெரியவில்லை. முந்நூறு பக்கத்தில் அரசியல் இஸ்லாம் பற்றி ஆறு ஆண்டுகள் முன்பு உயிர்மை வெளியிட்ட என் நூலில் முப்பத்து ஐந்து பக்கங்களுக்கு சோவியத் யூனியன், அமெரிக்கா, ஆப்கான், தலிபான்களின் அரசியல், இதனோடு இப்பிரச்சினைகள் குறித்த திரைப்படங்கள் என நான் எழுதியிருக்கிறேன். அடையாளம் பதிப்பகம் வெளியிட்ட எனது அரபுப் புரட்சி குறித்த முன்னூறு பக்கநூல் இன்றைய அரசியல் இஸ்லாம் குறித்த எனது பார்வையை முன்வைக்கிறது. இந்து முஸ்லிம் பிரச்சினையும் தேசப்பிரிவினையும் குறித்த திரைப்படங்கள் பற்றிய எனது தனிநூலை உயிர்மை வெளியிட்டிருக்கிறது.
|
|
------------------------------------------------------------------------------------------------------------------------------ |
|
ராமையாவின் குடிசை - எரிக்கப்படாத உண்மைகள் - கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி
கலை என்பது கலைக்காகவா மக்களுக்காகவா என்ற விவாதம் காலந்தொட்டு இன்றும் நிகழ்ந்தே வருகின்றது. கலையழகியலுடன் உருவாக்கப்பட்ட கலைவடிவங்களும் இன்றுவரை போற்றப்பட்டு வந்தாலும், மக்களுக்காக உருவாக்கப்பட்ட கலைதான் காலங்கள் கடந்து இன்றும் மக்கள் வாழ்வோடு வாழ்ந்து வருகின்றது. நெற்களஞ்சியமாக புகழப்பட்ட தஞ்சாவூரில் நெற்களைத் தவிர்த்து சாதியும் எத்தனை ஆழமாக விதைத்து வளர்க்கப்பட்டது என்பது அரசியல் மறைத்து வரும் உண்மை. வர்க்கம், சாதி, நிலப்பிரபுத்துவம் போன்ற அத்தனை குரூரங்களும் எப்படி 44 உயிர்களை உயிரோடு எரித்துக் கொன்றது என்பதை, சட்டம் தவறவிட்ட உண்மைகளோடு நம் கண்முன்னே கொண்டுவருகின்றது ‘ராமையாவின் குடிசை’ என்னும் ஆவணப்படம்.
|
|
------------------------------------------------------------------------------------------------------------------------------ |
|
|
|
|
|
|
|
|
|