இதழ்: 7, நாள்: 15 - ஆனி -2013 (June)
   
 
  உள்ளடக்கம்
 
உயிர் கொடுக்கும் கலை 4 - ட்ராட்ஸ்கி மருது
--------------------------------
தென்மேற்கு பருவக் காற்று – புதிய முயற்சிகளில் ஒன்று - வெங்கட் சாமிநாதன்
--------------------------------
திரைமொழி 5 - ராஜேஷ்
--------------------------------
கடவுளரின் தலையீடு : கனவும் யதார்த்தமும் - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
நண்பரும் தோழருமான மணிவண்ணன் - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
நாவலும் திரைப்படமும் - எழுத்து திரைப்படமாகும் போது - எஸ். ஆனந்த்
--------------------------------
அன்பைத் தேடி ஒரு தப்பித்தல் - எம்.ரிஷான் ஷெரீப்
--------------------------------
குறும்பட இயக்குனர் பாலாஜி சுப்பிரமணியன் உடன் ஒரு நேர்காணல் - சுரேஷ் சுந்தர்
--------------------------------
இலங்கை திரைப்பட இயக்குநர் - பிரசன்ன விதானகே - விஸ்வாமித்ரன்
--------------------------------
தமிழ் ஸ்டூடியோவின் 54ஆவது குறும்பட வட்டம் - தினேஷ்
--------------------------------
ரிதுபர்னோ கோஷ் - மாற்றம் தந்த இயக்குனர் - அருண் மோ.
 
 
   
   


குறும்பட இயக்குனர் பாலாஜி சுப்பிரமணியன் உடன் ஒரு நேர்காணல்

- சுரேஷ் சுந்தர்

பெரிய திரைப்படங்களை தொடர்ந்து, குறும்படங்களிலும் காதலும், காதல் சார்ந்தவைகளை மட்டுமே பின்னணியாக கொண்டு நிறைய நண்பர்கள் கதைப் பின்ன தொடங்கிவிட்ட சூழலில், கொஞ்சம் பிரச்சாரத் தன்மை இருந்தாலும், ரத்த தான விழிப்புணர்வு பற்றிய ஒரு குறும்படத்தை எடுத்து கொஞ்சம் மாற்று பாதையில் சிந்திக்க துவங்கியுள்ள இளைங்கர்களை அடையாளம் காட்டும் விதமாகவே நண்பர் பாலாஜி சுப்ரமணினுடனான இந்த நேர்காணல் அமைந்துள்ளது.

1) உங்கள் பின்னனி குறித்து சொல்லுங்கள்?

பாண்டிச்சேரி தான் என் செந்த ஊர்..பள்ளி படிப்பு வரை அங்கு படித்து விட்டு சினிமா கனவோடு சென்னையை நேக்கி பயணப்பட்டேன்…சினிமாவுக்கு கொஞ்சம் கூட சம்மந்தமில்லாத குடும்பத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவன்…பள்ளியில் படிக்கும் போது பேச்சு,கட்டுரை போட்டுகளில் வெற்றி பெற்றதன் பின்னனியும்…சிறுவயதிலிருந்து மேடை நாடகங்களில் நடித்தன் காரணமாகவே சினிமாவிற்குள் பிரவேசமானேன்…

2) குறும்படம் இயக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போது எழுந்தது?

2005ல் வந்தே மாதரம் என்ற குறும்படத்தை எடுத்தேன்… 5 வயது சிறுமிக்கு இருக்கும் நாட்டு பற்றை கருவாக வைத்து எடுக்கப்பட்ட குறும்படம்…அப்போதைய குடியரசு தலைவர் Dr.அப்துல் கலாம் அவர்கள் அந்த குறும்படத்தை பார்த்துவிட்டு எனக்கு பாரட்டு கடிதம் அனுப்பி வைத்தார்…அப்போது அந்த கடிதம் எனக்கு மிக பெரிய தன்னம்பிக்கையை தந்தது…பள்ளி பருவத்தில் பேச்சு,கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற பணத்தைக்கொண்டு எடுக்க பட்டப்படம்… போட்டிகளில் வெற்றி பெற்ற பணத்தை காலத்தால் அழிக்க முடியாது அதை ஒன்றில் செலவிட எண்ணிய போது…குறும்படத்தில் செலவிட முடிவு செய்தேன்.

3) இதற்கு முன்பாக சினிமத்துறையில் யாரிடாமவது வேலை செய்திருக்கிறீர்களா?

”வேதம் புதிது” திரு.கண்ணண் அவர்களிடம் அமிர்தம் திரைப்படத்தில் உதவி இயக்குனராகவும், திரு.கே.எஸ்.ரவிகுமார் அவர்களிடம் ஜக்குபாய், ஆதவன் போன்ற படங்களில் உதவி இயக்குனராகவும். திரு.விஜய் ஆதியராஜ் அவர்களிடம் புத்தகம் திரைப்படத்தில் இணை இயக்குனராகவும்….first fear என்ற அமெரிக்க திரைப்படத்தில் திரு.பால் நிக்கோலஸ் அவர்களிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளேன்.

4) குறும்படங்கள் நிறைய பார்ப்பீர்களா? பிடித்த குறும்படங்கள் பற்றி சொல்லுங்கள்?

சில வருடங்களுக்கு முன்பு வரை நிறைய பார்த்திருக்கிறேன்…ஆயிஷா என்ற குறும்படத்தை பார்த்து தான் குறும்படம் எடுக்கும் ஆசையே வந்தது…தற்பொழுது நிறைய குறும்படங்கள் வருகின்றது… புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம், விசித்திரம், feb-4, வேதம், நவரசம், brian’s Gandhi போன்ற குறும்படங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானது.

5) இலக்கிய வாசிப்பனுபவம் உண்டா?

நான் இலக்கியம் சார்ந்த மாணவணாகத்தான் பள்ளி பருவத்தில் வளர்ந்தேன்…ஆங்கில வழியில் பயின்றாலும் தமிழில்தான் அதிக மதிப்பெண் எடுப்பேன்… தமிழ் வழி கல்வியே சிறந்ததாக கருதினேன்…ஏனோ தெரியவில்லை தற்பொழுது இலக்கிய வாசிப்பு குறைந்து விட்டதை மிகவும் வெட்கத்தொடு ஒப்புக்கொள்கிறேன்…மீண்டும் இலக்கியத்தின் மீதான ஆர்வத்தை அதிக படுத்திக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

6) சிறுகதை ஏதேனும் குறும்படம் எடுக்கும் திட்டம் இருக்கிறதா?

சுஜாதா, பாலகுமாரன் போன்றோரின் சிறுகதைகளை குறும்படமாக எடுக்க ஆசைப்படுகிறேன்… நல்ல தாயரிப்பளர்கள் கிடைத்தால் நிச்சியம் முயர்ச்சி செய்வேன்.

7) பின்னனி இசை, எடிட்டிங், ஒளிப்பதிவு, ஒலிக்கலவை போன்றவை குறித்து உங்களது புரிதல் என்ன? இவைகளை எந்த அளவிற்கு உங்கள் படங்களில் உபயோகிப்பீர்கள்?

எடிட்டிங்,ஒளிப்பதிவில் இருக்கும் அறிவு எனக்கு இசையில் இல்லை என்பதை நேர்மையாக ஒப்புக்கொள்கிறேன். ஆதலால் சிறந்த ஒலிக்கலவையை கொடுக்காமலும் போயிருக்கலாம்… எதிர்காலத்தில் இவைகளில் அதிக கவனம் செலுத்தி தரமான படங்களை தர முயற்சி செய்வேன்.

8) சினிமா தவிர்த்து இசை, ஓவியம், போன்றவேறு துறைகளில் ஆர்வம் உள்ளதா?

இசை, ஒவியம், நடனம் தவிர்த்து மற்ற எல்லா துறைகளிலும் எனக்கு ஆர்வம் அதிகம்..

9) முதல் குறும்பட அனுபவம் எப்படி இருந்தது?

”வந்தே மாதரம்” தான் என் முதல் குறும்படம்….அப்போது சினிமா அனுபவம் இல்லததால் நிறையப்பேர்….என்னை பயன்படுத்திக்கொண்டு ஆதாயம் தேடிக்கொண்டார்கள்….சினிமாவே வேண்டாம் என்ற தவறுதலான அனுபவமே கிடைத்தது….நிறைய பாரட்டுகளும், திரு.அப்துல் கலாம் அவர்களின் பாரட்டு கடிதமும் தான் என் எல்லா காயங்களுக்கும் மருந்தாக இருந்தது…

10) உங்கள் படத்திற்கு தயாரிப்பாளர் எப்படி கிடைத்தார்?

வந்தே மாதரத்திற்கு நானே தாயரிப்பளராகவும் இருந்தேன்…14/6 குறும்படத்திற்கு என் பள்ளி பருவத்து நண்பர் பாக்கியநாதனும் அவருடைய நண்பர் சந்தரஹாசனும் தான் தயாரிப்பாளர்கள்….பள்ளி பருவத்தில் என் வெற்றியை பார்த்து கை தட்டியவர் பாக்கியநாதன்…என் வந்தே மாதரம் குறும்படத்தை பார்த்து..மிகவும் என்னை பாராட்டி எனக்கு இந்த வாய்ப்பை தந்தார்…அவருக்கும் அவருடைய நண்பர் சந்தரஹாசனுக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

11) ஒரு கதையை எவ்வாறு தேர்ந்தெடுக்கிறீர்கள்? அதை நண்பர்களோடு விவாதிப்பது உண்டா?

இதுவரை யாரும் தொடாத கதை கருவைத்தான் தேர்ந்தெடுப்பேன்.. youtube-ல் அது சம்மந்தாமக எதேனு படம் வந்திருக்கிறதா என்று ஆராய்ந்து தான் ஒரு கதையை தேர்ந்தெடுப்பேன்….நண்பர்கள் மற்றும் என் உதவி இயக்குனர்களிடம் கதையை செல்லி அவர்கள் திருப்பதி அடைந்தால் மட்டுமே அதை படமாக்க முயற்சி செய்வேன்.

12) இரத்த தானத்தை கருவாக கொண்டு குறும்படம் இயக்க வேண்டும் என்று எண்ணம் எப்படி வந்தது?

15க்கும் மேற்பட்ட தடவை நான் இரத்த தானம் செய்துள்ளேன்…இரத்த தானத்தை பற்றிய விழிப்புணர்வு நம்மிடம் மிகவும் குறைவாக உள்ளது….இரத்ததை தானமாக மட்டுமே கொடுக்க முடியும்….சமூகத்தின் மீது அக்கறைக்கொண்ட படைப்பாளியாக இரத்த தானத்தை பற்றிய விழிப்புணர்வுக்காகவே இந்த படம்.

13) இந்தப்படம் ரத்ததான விழிப்புணர்வூட்டும் பிரச்சார படம்போல் உள்ளது என்ற விமர்சனத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

யார் எப்படி விமர்சித்தாலும், இது ரத்ததான பற்றி விழிப்புண்ரவூட்டும் படமே…ஆனால் இது பிரச்சார படம் அல்ல…..படத்தில் எந்த இடத்திலும் ரத்த தானம் செய்யுங்கள் என்று..எந்த கதாபாத்திரமோ…அல்லது இயக்குனராக நானோ எங்கு பிரச்சாரம் செய்யவில்லை…

14) உங்கள் படங்களை தொடர்ந்து இதுப்போன்ற கருத்துக்களை முன்வைத்துதான் இயக்குவீர்களா?

நிச்சியமாக அப்படித்தான இயக்க ஆசைப்படுகிறேன்….ஒருவேளை காலம் என்னை மாற்றினால் அதற்காக இப்பவே என் மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன்.

15) குறும்படத்திற்கு ஜெயபிரகாஷ் போன்ற பெரியதிரை நடிகர்களை நடிக்கவைப்பதால் பட்ஜெட் அதிகமாகாதா?

சத்தியமாக இந்த குறும்படத்திற்காக அவர் ஒரு பைசா கூட சம்பளம் வாங்கவில்லை…ஒரு நடிகராக இந்த சமூகத்திற்கு அவருடைய ஒரு சேவையாக தான் இந்த படத்தில் நடித்தார்…ஒரு பாட்டில் தண்ணீர் கூட அவரால் எங்களுக்கு செலவாகவில்லை…இப்படி ஒரு மனிதர், நடிகர், எங்கள் குறும்படத்தில் நடித்தற்காக நாங்கள் மிகவும் அவருக்கு கடமைப்பட்டுள்ளோம்…

16) ஒருவரிடமிருந்து எடுக்கப்பட்ட ரத்தத்தை அன்றே ஒருவருக்கு செலுத்துவது போன்று எடுத்திருப்பது உண்மைக்கு எதிரானது இல்லையா?

உண்மையை மட்டுமே எடுக்க வேண்டும் என்றால் ஆவணப்படம் மட்டுமே எடுக்க முடியும்…சில நேரங்களில் பார்வையாளனை கதைக்குள் கொண்டுவர சில கற்பனையான விஷயங்களை சேர்பதில் தவறு இல்லை என்பது என்னுடைய கருத்து….அதே சமயத்தில் கதையின் கருவை அது பாதிக்கவும் கூடாது…..இன்னும் சொல்ல போனால் 20 ஆண்டுகளுக்கு முன் நேரடியாக ஒருவருடைய ரத்தம் மற்றொருவருக்கு மாற்றப்பட்டுள்ளது….இதை எத்தனையோ திரைப்படங்களில் நாம் பார்த்திருக்கிறோம்….இந்த விஷயம் எங்கள் குறும்படத்தின் போக்கை எந்தவிதததிலும் பாதிக்கது என்ற நம்பிக்கையில் தான் அப்படி வைத்தோம்…

17) தமிழ் ஸ்டுடியோ குறும்பட வட்டத்தில் உங்கள் படம் திரையிட்டு விவாதிக்கப்பட்ட விமர்சனங்களை எவ்வாறு எடுத்துக்கொள்கிறீர்கள்? இதுப்போன்ற விவாதங்கள் அவசியம் என்று நினைக்கிறீர்களா?

மிகவும் சத்தான விஷயம்... எங்கள் குறும்படத்தை எங்களைவிட அதிகமாகவும் ஆழமாகவும் சென்று யோசித்து விவாதித்த அத்துனை நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்…தன்னலம் கருதாது இப்படி ஒரு நிகழ்வை மாற்றுசினிமாவுக்காக நடத்தும் தமிழ் ஸ்டுடியோவிற்கும்..மரியாதைகுரிய அருண் அவர்களுக்கும் எங்களின் நன்றிகள்… அடுத்த தலைமுறைக்கு இது போன்ற விவாதங்களும் திரையிடலும் நிச்சயம் தேவை..தொடர்ந்து நடத்த என்னுடைய வாழ்த்துக்கள்.

18) உங்கள் குறும்படத்தை குறும்பட விழாக்களுக்கு அனுப்புவீர்களா?

நிறைய குறும்பட விழாக்களில் திரையிடப்பட்டு..விருதுகளும் பரிசுகளும் பெற்றுக்கொண்டிருக்கிறோம்…

19) வருங்காலங்களில் திரைப்படம் இயக்கும் எண்ணம் உள்ளதா?

நிச்சியமாக நல்ல திரைப்படங்களை…தரமான முறையில் இயக்குவேன்…

20) குறும்படங்களை அதற்கான நுழைவுச்சீட்டாகத்தான் பயன்படுத்துவீர்களா?

குறும்படம் என்பது வேறு,,,திரைப்படம் என்பது வேறு என்பதை நன்கு புரிந்து கொண்டு செயல்படுகிறேன்… நிச்சயமாக குறும்படங்களை நுழைவுச்சீட்டாக பயன் படுத்தும் எண்ணம் இல்லை…

21) மாற்று சினிமாவின் அவசியம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மாற்று சினிமா என்பது நிச்சயம் வேண்டும்…தற்பொழுது தமிழ் சினிமா ரசிகனின் ரசனை திசைமாறி போய்க்கொண்டு இருக்கிறது…. நல்ல சினிமா மீது ரசிகனுக்கு ரசனையை எற்படுத்துவது படைபாளிகளின் கடமை….விரைவில் மாற்று சினிமா தலைதூக்கும் என்பது என் நம்பிக்கை…

22) நீங்கள் மாற்று சினிமாவில் இயங்குவீர்களா? வெகுஜன சினிமாவில் இயங்குவீர்களா?

மாற்று சினிமாவை வெகுஜன மக்களிடம் கொண்டி செல்ல முயற்சி செய்வேன்.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </