|
|
|
உயிர் கொடுக்கும் கலை 6 - டிராட்ஸ்கி மருது (எழுத்தாக்கம்: யுகேந்தர்)
ஒரு திரைப்படத்தை காட்சி பூர்வமாக, சிறப்பாக வழுங்குவதற்காக பணி செய்பவர் ப்ரொடக்சன் டிசைனர். நம் தமிழ் சினிமாவில், கலை இயக்குனரை ப்ரொடக்சன் டிசைனர் என்று ஒரு விதத்தில் கூறலாம். முதல் முறையாக ப்ரொடக்சன் டிசைனர் என்ற வார்த்தை 1939`இல் வெளிவந்த Gone with the wind திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது. கலை இயக்குனரின் பங்கு அல்லாமல், Menzies`இன் பங்களிப்பை குறிப்பிடும் நோக்கத்தில் ப்ரொடக்சன் டிசைனர் என்பதை இயக்குனர் அறிமுகப்படுத்தினார். வண்ணம், ஓவியம், mood, படத்தின் மிக முக்கியமான லாங் ஷாட், உட்புற வடிவமைப்பு, உடை என இவை எல்லாவற்றிலும் மென்சிஸின் பங்களிப்பு இருந்தது. திரைப்படத்தை கலைநயத்துடன் உருவாக்க இயக்குனருக்கு மென்சிஸ் உறுதுணையாக இருந்ததால் ப்ரொடக்சன் டிசைனர் என அவரை குறிப்பிட்டிருந்தார்.
|
|
|
------------------------------------------------------------------------------------------------------------------------------ |
|
பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் பெயரில் வந்த கௌரவம்: பலரோடு எனக்கும் ஒன்று - வெங்கட் சாமிநாதன்
சரி இப்படித்தான் தொடங்குகிறது. அம்ருத வர்ஷினி என்ற பங்களூரிலிருந்து செயல்படும் ஒரு ஸ்தாபனத்திலிருந்து கே.எஸ்.எல் ஸ்வாமி என்பவர் கையெழுத்திட்டு 5.12.2012 தேதியிட்ட கடிதம் இரண்டு நாட்களுக்குப் பிறகு எனக்கு வந்தது. அந்த ஸ்தாபனம் 22.12.2012 அன்று டாக்டர் பி.பி. ஸ்ரீனிவாஸ் என்னும் பிரபல சினிமா பின்னணி பாடகருக்கு 82 வயது பூர்த்தி யாகிறது (பி. 22.9.1931) அன்று அவரது ஸ்ஹஸ்ர சந்திர தர்ஸனமும் பூர்த்தி ஆவதால் அந்த வைபவத்தைக் கொண்டாடவும் அவரை கௌரவிக்கவும் ஒரு பெரும் விழா ஒன்று ஏற்பாடு செய்துள்ளோம், அந்த சந்தர்ப்பத்தில் பி.பி ஸ்ரீனிவாஸ் கன்னட சினிமாவுக்கு மட்டுமல்ல, தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி சினிமா படங்களிலும் ஆயிரக்கணக்கான பாட்டுக்கள் பாடி இரண்டு தலைமுறை ரசிகர்களை மகிழ்வித்துள்ளவர். இந்த அனைத்து மொழிகள் தவிர, ஆங்கிலம், உருது சமஸ்கிருதம் மொழிகளிலும் அவர் வல்லுனராக இருந்தவர்.
|
|
------------------------------------------------------------------------------------------------------------------------------ |
|
ஊருக்கு நூறு பேர்: சினிமாவின் வலிமைக்கு ஒரு சான்று - தியடோர் பாஸ்கரன்
தமிழ் சினிமாவில் அவ்வப்பொழுது நம்பிக்கையூட்டும் மின்னல் கீற்றுகள் தோன்றுவதுண்டு. அப்படியொரு பளிச்சிடுதல் தான் பி.லெனினின் ஊருக்கு நூறுபேர்.ஜெயகாந்தனின் அதே தலைப்பில்1979-ல் வெளிவந்த குறுநாவலை மிகச் செறிவான திரைப்படமாக தந்திருக்கிறார் அதனால்தான் ஒரு அங்கீகரிப்பு போல பெங்களூரில் நடைபெறவிருந்த பன்னாட்டு திரைப்பட விழாவில் இது முதல் படமாக திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. துரதிர்ஷ்டவசமாக அவ்விழாவே நடைபெறவில்லை.என்றாலும்2001 ஆம் ஆண்டு தமிழில் வெளியான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை இப்படம் பெற்றது. லெனின் சிறந்த திரைப்பட இயக்குனருக்கான தேசிய விருதைப் பெற்றார்.
|
|
------------------------------------------------------------------------------------------------------------------------------ |
|
|
|
|
|
தமிழில் அரசியல் சினிமா - யமுனா ராஜேந்திரன்
தமிழ் அரசியல் சினிமா வரலாற்றில் இந்திய தேசபக்தியை மறுபடி முன்வைத்து, திரைப்படத்தின் அழகியல் சாத்தியங்களையும் ஸ்வீகரித்துக் கொண்டு, தமிழ் சினிமாவுக்குள் பிரவேசம் செய்தவர் என இயக்குனர் மணிரத்தினத்தை நாம் குறிப்பிடலாம். திராவிட இயக்க சினிமாக்கள் சித்திரித்த இனம், மதம், சாதியம் போன்றவற்றைச் சுற்றின பிரச்சினைகளை அகண்ட இந்திய...
|
|
மேலும் படிக்க |
|
|
|
தமிழ் ஸ்டுடியோ லெனின் விருது வழங்கும் விழா - 2013 - தினேஷ்
புகழின் வெளிச்சம் படாமலிருந்தாலும், பாராட்டும் நண்பர்கள் தொடராமலிருந்தாலும், நேர்மையான படைப்பின் அதிர்வுகளை தாங்க வலுவில்லாமல் அவதூறுகளை எய்து விடும் ஆணாதிக்கங்கள் ஒரு புறமிருந்தாலும், தன் மொன்னைத்தனத்தினை மறைத்துக்கொண்டு பல்லிளிக்கும் சமூகத்திற்கு மத்தியிலும், தன் படைப்பினை படைக்கும்...
|
|
மேலும் படிக்க |
|
|
|
|
|
|
|
|
|
|
ஒருத்தி – ஒப்பனையற்ற கிராமத்து சித்திரம் - பிச்சைக்காரன்
அம்ஷன் குமாரின் ஒருத்தி திரைப்படம், தலித் பெண் ஒருத்தியைப் பற்றிய படம் என கேள்விப்பட்டபோது, அவரும் இப்படித்தான் எடுத்து இருப்பார் என நினைத்தேன். ஆனால் அந்த படம் கிரா அவர்களின் கிடை குறுநாவலை தழுவி எடுக்கப்பட்டது என தெரியவந்தபோது லேசான ஆர்வம் வந்தது. கிரா என்றாலே கரிசல் மண்ணின் அழகியல் , நுட்பமான சித்திரிப்பு , நகைச்சுவை போன்றவைதான் நினைவுக்கு வரும்.
|
|
மேலும் படிக்க |
|
|
|
நுழைவுச் சீட்டா குறும்படங்கள்? - அருண் மோ.
தமிழ்நாட்டில் தற்போது வெற்றிபெற்ற முக்கியமான ட்ரெண்ட் குறும்படங்கள் மூலம், பெரிய திரைக்குள் நுழைவது. குறும்படங்கள் எடுத்து, அதற்கென்று நடத்தப்படும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற்று, பிறகு நேரடியாக எவ்வித தடையுமின்றி பெரிய திரைப்படம் எடுக்க வந்துவிடுகிறார்கள், நாளைய இயக்குனர்கள்.
|
|
மேலும் படிக்க |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|