திரைமொழி - 7
முதல் பாகம் – Visualization – The Process
அத்தியாயம் 3 – Storyboards (தொடர்ச்சி)...
film directing
shot by shot
visualizing from concept to screen
Steven D. Katz தமிழில்: ராஜேஷ் |
சென்ற மாதம் ஸ்டோரி போர்ட்களை பார்த்து வருகையில், ஹிட்ச்காக்கின் படங்களில் உபயோகிக்கப்பட்ட சில ஸ்டோரிபோர்ட்களை கண்டோம். 1943ல் Lifeboat படத்தை உருவாக்கியபோது ஹிட்ச்காக்கே தனது கைப்பட வரைந்த ஸ்டோரிபோர்டுகளை இனிகாணப்போகிறோம்.
ஃபைல்செய்துவைத்துக்கொள்வதற்கானதுவாரங்கள்இதில்இருக்கின்றன. கூடவே, வசனங்கள் மற்றும் காட்சிகளில் நடக்கும் சம்பவங்கள் ஆகியனவும் இருக்கின்றன. இங்கு இருக்கும் வசனங்களுக்கான அடிக்குறிப்புகளை கவனித்தால், படம் எடுக்கும்போதே ஹிட்ச்காக் எந்தெந்த ஸீன்களை எடிட்டிங் செய்யப்படும்போது இந்தவரிசை முடிவு செய்யப்படுவதற்கு மாறாக படம் எடுக்கும்போதே வரிசையான காட்சிகள் கோர்வையாக அமைந்துவிடுகின்றன. இதற்கு ‘Cutting in the Camera’ என்றுபொருள். முதலாவதாக இங்கே கொடுத்திருக்கும் படத்தில், ஃப்ரேமை சுற்றியும் வரையப்பட்டுள்ள கறுப்பு வரிகளை கவனித்தால், ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுவிட்ட ஷாட்டின் வடிவத்தில் சிறிய மாற்றத்தை ஹிட்ச்காக் ஏற்படுத்தியிருக்கிறார் என்று புரிந்துகொள்ளலாம். அதாவது, இன்னும் கொஞ்சம் க்ளோஸப்பில் நகர்ந்து, கேமராவை சற்றே இடதுபுறமாக நகர்த்தும் படியான ஷாட்இது. அதேபோல் இரண்டாம்படத்தில், இடதுஓரத்தில் ‘Repeat all with closer lens’ என்று எழுதப்பட்டிருப்பதை கவனித்தால், அந்தப் படத்தில் இருக்கும் படகோட்டியை இன்னும் க்ளோஸப்பில் எடுக்க வேண்டிய ஷாட் இது என்று புரிந்து கொள்ளலாம்.
அதற்கேற்றவாறு அந்தப் படகோட்டியை சுற்றிலும் வரையப்பட்டுள்ள கோடிட்ட வரிகளும் இருக்கின்றன.
அடுத்து, ஸ்டோரிபோர்ட் வரைவதற்கான பொருட்களை கவனிப்போம்.
பென்ஸில்
Graphite அல்லது charcoal
பென்ஸில்கள் ஸ்டோரிபோர்டுகளுக்கு உபயோகப்படுகின்றன. இங்க்கினால் வரையப்பட்டிருந்தால்கூட, அதற்கு முன்பே ஔட்லைன் வரையப்படும்போது பென்ஸில்தான் உபயோகப்படுகிறது. அதேபோல், பிரதிகள் எடுக்கப்படும்போதும் பென்ஸில் வரிகள் மேலும் அடர்த்தியாகவே மாறுகின்றன. இதையெல்லாம் விட பென்ஸிலின் பெரிய அனுகூலம் என்னவென்றால், எப்போது வேண்டுமானாலும் அந்தப்படங்களை அழிக்கலாம் என்பதே. ஒரு ஆர்டிஸ்டின் word processor அது. பல ஸ்டோரிபோர்டுகளில், பென்ஸிலால் வரையப்படும் கறுப்பு வண்ணமும் கோடுகளும், இங்க்கினால் கூட சாத்தியமில்லை.
இங்க் மற்றும் கரிப்பொடி
ஸ்டோரிபோர்டுகளுக்கு மட்டுமே பிரத்யேகமாக உபயோகப்படும் ஊடகம் இது. படுவேகமான கோடுகள் வரைவதற்கும், அவற்றை பின்னர் அழிக்கவோ பெரிது படுத்தவோ செய்வதற்கும் இவை மிகவும் உபயோகப்படுகின்றன.
பென்ஸிலை விடடும் ஆழமான கோடுகள் மற்றும் கறுப்பு வெள்ளை வண்ணங்கள் இவற்றால் சாத்தியம். பல ஸ்டோரிபோர்ட் ஆர்டிஸ்ட்களின் விருப்பத்திற்குரிய ஊடகமாக இது இருக்கிறது. இந்தத் தொடரிலேயே பலரும் இவைகளையே உபயோகித்திருக்கிறார்கள்.
மார்க்கர்கள்
ந்யூயார்க்கின் மேடிஸன் அவென்யூதான் ஹாலிவுட்டின் பிரபல விளம்பர நிறுவனங்கள் இருக்கும் இடம். இங்கே விளம்பரங்களில் மார்க்கர்கள்தான் பெரும்பாலும் உபயோகப்படுத்தப்பட்டு வந்தன. விலையும் குறைவு. மிகவும் வேகமாக உலர்ந்துவிடும் தன்மையும் இவற்றுக்கு உண்டு.
பிறவண்ணங்களோடு சேர்த்துக்குழைத்து வரையும் வேலையும் இங்கே இல்லை. மட்டுமில்லாமல், கைதேர்ந்த ஒரு ஆர்டிஸ்டின் கைகளில் இந்த மார்க்கர் மாயாஜாலங்களையே நிகழ்த்தும் தன்மையுடையது. மார்க்கரால் வரைந்து முடிக்கப்பட்டபிறகு, அந்தஸ்கெட்க்களில் பென்ஸில், வண்ணங்கள் ஆகியன சேர்க்கப்படுவதுண்டு. அடிப்படை டிஸைன்களை வேகமாக முடித்து அனுப்ப மார்க்கர்களே ஸ்டுடியோ ஆர்டிஸ்ட்கள், ப்ரொடக்ஷன் டிஸைனர்கள் போன்றவர்களால் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், எளிதில் பின் வாங்கும் தன்மையுடைய, தனது திறமையில் நம்பிக்கையில்லாத ஆர்டிஸ்ட்களால் மார்க்கர்களை உபயோகப்படுத்த முடியாமல் போகலாம். காரணம், ஒரேஒரு சிறிய தவறான கோடுகூட அந்தஸ்கெட்ச்சின் தன்மையையே மாற்றிவிடலாம். இறுதியாக, மார்க்கர்களால் வரையப்படும் ஸ்கெட்ச்கள், காலத்தின் சுழற்சியினால் மங்கிவிடலாம். எத்தனைக்கெத்தனை புறஊதாக்கதிர்கள் (குறிப்பாக, சூரியஒளி) இந்தஸ்கெட்ச்களின் மீதுபடுகின்றனவோ, அத்தனைக்கத்தனை வேகமாக மார்க்கர்களினால் வரையப்பட்ட கோடுகள்மங்கிவிடும். சில சமயங்களில் ஒருசிலவாரங்களிலேயே அவை மங்கும் வாய்ப்புகளும் அதிகம்.
கேமரா நுட்பங்களை எப்படி வரைவது?
ஒரு ஸ்டோரிபோர்டின் தலையாய பிரச்னை, நகர்தல் என்ற motionஐ அது எப்படி வெளிப்படுத்துகிறது என்பதே. இங்கே நகர்தல் என்பது அந்த ஃப்ரேமுக்குள் நிகழும் விஷயங்கள் மட்டும் அல்லாது, கேமராவின் அசைவும் சேர்த்துதான். கேமராவின் எஃபக்ட்களான Dissolve மற்றும் fade in, fade out போன்றவையும் ஸ்டோரிபோர்ட்களில் சாத்தியமில்லை. போலவே ஃபோகஸ் மற்றும். ஃப்ரேமின் depth காட்டுதலும் இதில் முடியாது. எதையெல்லாம் வரைய முடியாதோ அதையெல்லாம் சின்னச் சின்ன வாசகங்கள் மற்றும் சித்திரங்கள் மூலம் காட்டுவதே ஒரேவழி. இதைப் போலவே இன்னும் சிலவழி முறைகள் மூலம் கேமரா நுணுக்கங்களையும் ஃப்ரேமில் இருக்கும் இடைவெளிகளையும் காட்டலாம். முதலில், ஸ்டோரிபோர்டின் ஃப்ரேமின் எல்லை. கேமராவில் தெரியும் இடத்தில் நடக்கும் சம்பவத்தின் ஒரு குறிப்பிட்ட ஷாட்டை காட்டுவதே இந்த ஃப்ரேமின் வேலை. ஆகவே, ஸ்டோரிபோர்ட் வரையும்போது, அந்த ஸ்கெட்சினுள் இருக்கும் விஷயத்தை ஃப்ரேமின் எல்லைகளுக்கு வெளியேயும் நீட்டிக்கலாம். அப்படித்தானே நிஜத்திலும் இருக்கும்? ஃப்ரேமில் ஒரு மரத்தை காட்டினால், ஒட்டுமொத்த மரமும் ஃப்ரேமுக்குள்தான் இருக்கும் என்று சொல்ல முடியாதே? உண்மையில், காட்சியை வரைந்து முடித்துவிட்டு, அதன் மேல்தான் இந்த எல்லைக்கோடுகள் வரையப்படுதல் வழக்கம். காரணம், அப்போதுதான் தேவையான காட்சியின் வடிவமைப்பு நமக்குத் தேவைப்படும் வகையில் வடிவமைத்துக் கொள்ளலாம். கேமரா மற்றும் ஃப்ரேமில் இருக்கும் நடிகர்கள் (அல்லது) நடிகரும் நகர்வது சாத்தியம் என்பதால், ஒரு பெரிய ஸ்கெட்ச்சினுள் ஸ்டோரிபோர்டின் ஃப்ரேமை வைத்து, நமக்குத் தேவையான ஷாட்டை முடிவு செய்தலே பலரது விருப்பமாக இருக்கிறது.
இனி வரும் ஸ்டோரிபோர்ட் உதாரணங்களில் பல்வேறுவரையும் முறைகளை வைத்து கேமரா மூவ்மெண்ட் மற்றும் நிலைமாற்றத்தை (transition) கவனிக்கலாம். Pan Shot மற்றும் Tracking Shot
கொலையாளியைத் துரத்திக்கொண்டு ஓடும் ஒரு மனிதனின் பல்வேறு நிலைகளை கீழேயுள்ள படத்தில் காணலாம். அவனது நிலைகள், அம்புக் குறிகள் மூலம் காட்டப்பட்டுள்ளன. இதைப் போன்ற ஸ்டோரிபோர்ட் சட்டகத்தை வைத்துக்கொண்டு ஒரு Pan ஷாட் மற்றும் tracking ஷாட்டைகாட்டலாம். ஆனால் இதில் ஃப்ரேமுக்குள் எந்தெந்த காட்சிகளை வரவைப்பது என்பது இருக்காது. மாறாக, காமெராவின் நிலை மற்றும் காட்சியை எப்படிக் காண்பிப்பது போன்றவை தெளிவாக இருக்கும்.
|
ஃப்ரேமை எப்படி அமைப்பது என்பதைக் கூட தெளிவாக ஸ்டோரிபோர்டில் காண்பிக்க முடியும். இதோ கீழேயுள்ள படத்தில் ஒரு கார்சேஸிங் காண்பிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்துக்குள் இருக்கும் சிறிய ஃப்ரேம் – A வில் காமெரா எப்படி இந்த காட்சியைக் காண்கிறது என்பது விளக்கப்பட்டுள்ளது. இதில் காரோடு சேர்ந்து நகரும் காமெரா (pan), வலது பக்கத்தில் உள்ள ஃப்ரேம் B அளவுஸூம் செய்யப்படுகிறது. இதைத்தான் படத்துக்குக் கீழே உள்ள Zoom in என்ற வாசகம் குறிக்கிறது. இப்படித்தான் காட்சியை வைக்க வேண்டும் என்றில்லை. நமக்கு எப்படித் தோன்றுகிறதோ அப்படி அமைத்துக் கொள்ளலாம். அதற்கு இந்த படங்கள் உதவி செய்கின்றன.
|
இதோ அடுத்து கொடுக்கப்பட்டிருக்கும் படம், கேமராவின் செங்குத்தான மூவ்மெண்ட்டை (Vertical Pan) குறிக்கிறது.மேலே அந்த மனிதன் குதிக்க ஆரம்பிப்பதில் இருந்து அவனைத் தொடரும் காமெரா, கீழே அவன் தண்ணீருக்குள் குதிப்பதுவரை அவனை தொடர்கிறது. இதில் நாம் வைக்கப்போவது க்ளோஸப்பா, wide ஷாட்டா அல்லது மீடியம் ஷாட்டா என்றெல்லாம் சொல்ல முடியாமல் போனாலும், சிறிய ஷாட்கள் மூலம் அந்த மனிதனின் செய்கையை பலஷாட்களாக காண்பித்தால், அது இந்த காட்சியின் முக்கியத்துவத்தையும் பிரம்மாண்டத்தையும் சரியாக பதிவு செய்யாது.
|
Dolly மற்றும் Zoom ஷாட்கள்
டாலிஸூம் என்பது ஒரு குறிப்பிட்ட வகையான ஸ்பெஷல் எஃபக்ட் ஷாட். பல காட்சிகளில், ஹீரோவோ அல்லது ஹீரோயினோ அதிர்ச்சி அடையும் நேரத்தில், காமெரா அவர்கள் மேல்ஸூம் ஆகும். அப்போது அதே நேரத்தில் கேமரா பின்னுக்கு நகரவேண்டும். அதாவது, லென்ஸைஸூம் செய்து கொண்டே கேமரா பின்னுக்கு நகர்ந்தால் (அல்லது) லென்ஸைஸூம் அவுட் செய்து கொண்டே கேமராவை முன்னுக்கு நகர்த்தினால், ஃப்ரேமில் காட்டப்படும் கதாபாத்திரம் அப்படியே இருக்கும். அதேசமயம், அதன் பின்னணி, லென்ஸின்ஸூமை பொறுத்து நம்மை நோக்கியோ அல்லது நமக்கு எதிராகவோ நகரும்.
இத்தகைய ஷாட்கள், கதாபாத்திரத்தின் அதிர்ச்சி, பயம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்த உபயோகப்படுகின்றன.
கீழேயுள்ள படத்திற்குள் இருக்கும் சிறிய ஃப்ரேமை கவனியுங்கள். அதன் ஓரங்களில் உள்ள அம்புக்குறிகளின் மூலம் கேமரா உள்ளே ஸூம் செய்யப்படுகிறதா அல்லது வெளியேவா என்பது விளங்கும். இந்தப் படத்திலேயே, உள்ளே இருக்கும் ஃப்ரேமை வெளியே இருக்கும் ஃப்ரேமோடு இணைக்கும் கோடுகள் அழிக்கப்பட்டுவிட்டால், ஒரே தொடர்ச்சியான ஷாட்டாக அது இல்லாமல், ஷாட்டின் சைஸ் மாறக்கூடிய இரண்டு ஷாட்கள் என்றுபொருள் கொள்ளப்படுகிறது. முதல் ஷாட் சிறிதாகவோ பெரிதாகவோ இருக்கும். அதன் பின்வரக்கூடிய ஷாட், முதல்ஷாட் சிறிதாக இருந்தால் பெரிதாகவும், பெரிதாக இருந்தால் சிறிதாகவும் அமைக்கப்பட்டு கதாபாத்திரத்தை காட்டும்.
அடுத்த மாதம், காமெராவின் சிலவகையான நுட்பங்களை விளக்கும் ஸ்டோரிபோர்டுகளை காண்போம்.
தொடரலாம்.
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |