|
உயிர் கொடுக்கும் கலை 4 - டிராட்ஸ்கி மருது (எழுத்தாக்கம்: யுகேந்தர்)
மூன்றாவது அல்லது நான்காவது படித்துக்கொண்டிருந்த காலம் என்று நினைக்கிறேன். சிறு வயதில் அப்பாவுடன் மதுரை ரீகல் தியேட்டரில் பார்த்த திரைப்படங்களில் ஒரு சில பிம்பங்கள் (Images) என்னை பாதித்தது, மிக அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது. மனிதர்களை விரட்டும் பெரிய ஒற்றை கண் பூதம், மலைகளுக்கு நடுவில் தண்ணீரில் பெரிய கப்பல் ஒன்று வந்துக்கொண்டிருக்கும், ஆனால் அந்த பூதத்திற்கு தண்ணீர் இடுப்பளவு தான் இருக்கும், மிக பெரிய அந்த கப்பலை அந்த பூதம் பிடிக்க வருவது போன்ற காட்சிகள் அப்படத்தில் இடம்பெற்றது. சிறு வயதில் அப்பாவுடன் திரையரங்கத்தில் படம் பார்க்கும் போது, முன்பு அமர்ந்து இருப்பவர்கள் மறைப்பார்கள், சிறுவனாக இருப்பதால் எனக்கு திரை சரியாக தெரியாது. அதனால் முன்னிறுக்கையில் அமர்ந்து இருக்கும் இருவரின் தலைக்கு இடையில் திரையை பார்ப்பேன்.
|
|
|
------------------------------------------------------------------------------------------------------------------------------ |
|
தென்மேற்கு பருவக் காற்று – புதிய முயற்சிகளில் ஒன்று - வெங்கட் சாமிநாதன்
கடைசியாக தமிழ் சினிமா கிராமத்தையும் கிராமத்து மக்களையும் தனதாக்கத் தொடங்கியுள்ளது. சந்தோஷமான விஷயம். கவனிக்கவும், “தனதாக்கத் தொடங்கியுள்ளது” என்று தான் சொல்கிறேன். கிராமத்துப் பக்கம் பார்வை செல்லத் தொடங்கிய பெருமை பாரதிராஜாவுக்கு நாம் தந்து வெகு வருஷங்களாயிற்று. நாம் தமிழ் சினிமாவில் பார்க்கும் எந்த ஒரு சிறு மாற்றத்தையும் கண்டு பரவசமாகிவிடுகிறோம். இவையெல்லாம் தானாக தன் இயல்பில் நம் வாழ்க்கையின் இயல்பில், நம் ஒவ்வொருவரின் வளர்ச்சியின் இயல்பில் நிகழ்வேண்டியது அனைத்தும் நம் சினிமாவில் அந்த ஒழுங்கில் நிகழ்ந்திருக்க வேண்டும். இங்கு வரலாறு தலைகீழாகவே நம் முன் விரிந்து கொண்டு இருக்கிறது. நம் வளர்ச்சியின் உடன் நிகழும் இயல்புக்கு மாறாக....
|
|
------------------------------------------------------------------------------------------------------------------------------ |
|
கடவுளரின் தலையீடு : கனவும் யதார்த்தமும் - யமுனா ராஜேந்திரன்
பாலஸ்தீன இயக்குனர் எலியா சுலைமானின் டிவைன் இன்டர்வென்சன் அல்லது கடவுளரின் தலையீடு இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டுக்கான கேன் திரைப்பட விழா நடுவர்களின் விருதுபெற்ற திரைப்படம். குரோனிக்கல் ஆப் த டிஸ்ஸப்பியரன்ஸ் எனும் அவருடைய முதல் படத்தினையடுத்து குரோனிக்கல் ஆப் லவ் அன்ட பெய்ன் எனும் துணைத்தலைப்புடன் எடுக்கப்பட்ட திரைப்படம் டிவைன் இன்டர்வென்சன். அவருடைய முதல் படத்தில் பாலஸ்தீன நிலப்பரப்பினுள் பாலஸ்தீன மனிதனின் இருப்பு காணாமல் போகிறது. அவரது இரண்டாவது படத்தில் அந்த காணாமல்போன பாலஸ்தீன மனிதனினது இருப்பின் வலியும் காதலும் சொல்லப்படுகிறது. இந்த வலியும் காதலும் கூட பாலஸ்தீன மனிதனால் புலன்வழி உணரப்படுவதற்கு கடவுளரின் தலையீட்டின் மூலமே சாத்தியமாகும் என்பதைக் காட்சிக்கனவுகளாக இழைத்திருக்கிறார் சுலைமான்.
|
|
------------------------------------------------------------------------------------------------------------------------------ |
|