ஒரு கதை கவிதையாகும் தருணம் - யாளி - 4 - மாலனின் "தப்புக் கணக்கு"

(பாலு மகேந்திராவின் கதைநேரத்தை முன்வைத்து)
 
 
  நேர்காணல் - 'பீ' ஆவணப்படத்தை முன்வைத்து இயக்குனர் RP அமுதனுடன் ஒரு நேர்காணல் - கு. ஜெயச்சந்திர ஹஸ்மி
 
 
  துபாய் குறும்பட இயக்குனர் லெனினுடன் நேர்காணல் - வி.களத்தூர்ஷா
 
 
   

உயிர் கொடுக்கும் கலை 3 - டிராட்ஸ்கி மருது (எழுத்தாக்கம்: யுகேந்தர்)

ஓவியர் / சிற்பி தனபால் சென்னை ஓவியக் கல்லூரியின் முதல்வராக இருந்த தருணத்தில், பத்திரிகை ஒன்றில் ஓவியக் கல்லூரி குறித்து எழுதிய கட்டுரை ஒன்றை படிக்க நேர்ந்தது. அப்போது நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அந்த கட்டுரையை படித்த பின் இந்த கல்லூரியில் தான் நான் சேர வேண்டும் என்று முடிவு எடுத்தேன். அதற்கான முயற்சிகளையும் எடுக்க தொடங்கினேன்.

என்னுடைய தாத்தா (அம்மாவின் சித்தப்பா) எம்.எஸ்.சோலைமலை, தமிழ் திரைப்பட உலகில் கொடிக்கட்டி பறந்த கதாசிரியர். திரைக்கதை மற்றும் வசனம் எழுதுவதிலும் சிறப்பாக செயல்பட்டவர். பீம் சிங்கினுடைய பெரும்பாலான படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியவர்.

  மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------------------------------------

வேண்டும் ஒரு மாற்றுக் குரல் – மகாதேவனின், மணிரத்னம் - தலைகீழ் ரசவாதி - வெங்கட் சாமிநாதன்

மணிரத்னம் இன்று திரைப்படத் துறையில் ஒரு மகா மேதை, ஒரு சிகர உச்சியில் அமர்ந்திருக்கும் கலைஞன், என்று தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, இந்தியப் பரப்பு முழுதும் ஆராதிக்கப்படும் தெய்வம். யாரும் அவரைப் பற்றி ஏதும் கேள்வி எழுப்புவது ஏதோ மத நிந்தனை செய்துவிட்டது போன்ற குற்றத்துக்கு ஆளாகும் காரியம். அந்த பிம்பத்தை மகாதேவன் தன் புத்தகத்தில் ஏதும் சுக்கு நூறாக சிதைத்து விடவில்லை தான். ஆனால்,. விக்கிரகத்தின் கைகால்கள் உடைந்திருக்கின்றன. ஒரு பெரிய விரிசல் தோளிலிருந்து தொடைவரை குறுக்கே விக்கிரஹத்தைப் பிளந்திருப்பது தெரிகிரது. பிம்பம் ஒரு விக்கிரஹமாக இன்னும் கொஞ்சம் தக்க வைத்துக்கொண்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்த இரண்டு மூன்று சம்மட்டி அடிகளுக்கே கூட மகாதேவனுக்கு நிறைய மூட்டை மூட்டையாக தைரியம் வேண்டும். தமிழ் சினிமா உலகில் துணை..

  மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------------------------------------
   
 
ஐந்தாவது முத்திரை - The Fifth Seal - எஸ். ஆனந்த்

இரண்டாவது உலகப்போர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. விமானத் தாக்குதல்கள், ஊரடங்கு உத்தரவு என அந்த நகரம் இருட்டடிப்பில் மூழ்கியிருக்கிறது. மதுபானக்கூடத்தின் ஒற்றை விளக்கொளியில் அதன் உரிமையாளரும் மூன்று நண்பர்களும் அமர்ந்திருக்கின்றனர்.. மதுவுடன் உரையாடல் உற்சாகமாகத் தொடர்கிறது. நண்பர் கிராலி அந்தப் பற்றாக்குறை காலத்தில் தான் வைத்திருந்த ஒரு நல்ல ஓவியத்திற்குப் பதிலாகப் பெற்ற..

  மேலும் படிக்க
 
 
வீட்டிற்கான வழியிலொரு மூதாட்டியும், சிறுவனும் - எம்.ரிஷான் ஷெரீப்

எழுபத்தைந்து வயது மூதாட்டிக்கும் ஏழு வயதுச் சிறுவனுக்குமான பாசப் பிணைப்பின் உள்நோக்கங்கள் எந்தவித போலிப் பூச்சுக்களும் அற்றவை. அவை எந்த எதிர்பார்ப்புக்களையும் கொண்டிருப்பதில்லை. வாழ்க்கையின் அனைத்து அனுபவங்களையும் கண்ட மனிதனொருவனும், காணத் துடிக்கும் மனிதனொருவனும் எக் கட்டத்தில் ஒன்றாக இணைகிறார்கள்? எது அவர்களிடையே ஒரு ஒற்றுமையாகக்..

  மேலும் படிக்க
       
 
 
லிட்டில் டெரரிஸ்ட் - குறும்பட திறனாய்வு - கார்த்திக் பாலசுப்ரமணியன்

'பாக்கோஃபோபியா' என்ற பததத்தை இதற்கு முன் கேள்வி பட்டிருக்கிறீர்களா? இது ஏதேனும் காரணம் கருதியோ காரணமின்றியோ பாகிஸ்தான் மீதும், அம்மக்கள் மீதும் காட்டப்படும் வெறுப்புணர்வைக் குறிக்கிறது. 1930-களில் முகம்மது இக்பால், முகம்மது அலி ஜின்னா போன்றோர்களால் பாகிஸ்தான் (புனித மண்) என்ற தனிநாடு கோரிக்கை எழுந்தபோதில் இருந்து, ஜூனாகத், காஷ்மீர், வங்கம், கார்கில், மும்பை என்று ஏதோ ஒன்றிற்காக எப்போதும் இந்தியாவும், பாகிஸ்தானும் பகை பாராட்டியே வந்துள்ளன. நட்பு நாடி நாம்...

  மேலும் படிக்க
 
 
பிழை மறைக்கும் கலை அழகியல் - தினேஷ்

ஒரு காலத்தில் நம்மால் மிகவும் போற்றிப் பாராட்டப்பட்ட திரைப்படங்கள், அது தமிழாக இருந்தாலும், ஆங்கிலமாக இருந்தாலும், ஏன்? வேறெந்த மொழியினதாக இருந்தாலும் அதில் சிற்சில தவறுகள் இருப்பதற்கு வாய்ப்புண்டு. அவை சில சமயங்களில் நமக்குத் தெள்ளென தெரிந்துவிடும், மற்றும் பல இன்றளவும் தெரிவதற்கு வாய்ப்பில்லை. இந்த தவறுகள் பலபரிமாணங்களில் உலாவுகின்றன.
அதாவது படம் மொழிந்த கருத்துக்களில் உடன்பாடில்லாதது, வரலாற்றை மறைக்கும் விதமாக தவறான கருத்துக்களை...

  மேலும் படிக்க
   
 
 
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
     
     
     
     
     
     
     
     
 
 
 
 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

காப்புரிமை © பேசாமொழி

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome