பிழை மறைக்கும் கலை அழகியல்
அழகியலின் ஊடாக காட்சிதரும் எப்பொருளுக்கும், அப்பொருளின் மீதான பிழையென்பது சற்று கூர்ந்தாராய்ந்தால் தவிர தெளிவடைவதில்லை.
இது சினிமாவிற்கு மிகப்பொருந்தும்.
ஒரு காலத்தில் நம்மால் மிகவும் போற்றிப் பாராட்டப்பட்ட திரைப்படங்கள், அது தமிழாக இருந்தாலும், ஆங்கிலமாக இருந்தாலும், ஏன்? வேறெந்த மொழியினதாக இருந்தாலும் அதில் சிற்சில தவறுகள் இருப்பதற்கு வாய்ப்புண்டு. அவை சில சமயங்களில் நமக்குத் தெள்ளென தெரிந்துவிடும், மற்றும் பல இன்றளவும் தெரிவதற்கு வாய்ப்பில்லை. இந்த தவறுகள் பலபரிமாணங்களில் உலாவுகின்றன.
அதாவது படம் மொழிந்த கருத்துக்களில் உடன்பாடில்லாதது, வரலாற்றை மறைக்கும் விதமாக தவறான கருத்துக்களை திணிப்பது. பொதுப்பார்வையில்லாமல் தான் எண்ணிய கருத்துக்களே சரியென நினைந்து அதனையே காட்சியின் சாராம்சமாக வைத்திருப்பது. மேலும் அப்படம் எடுக்கப்பட்ட காலகட்டங்களில் பிழை, மற்றும் ஒப்பனைகளில், என்று பல விதமாக உள்ளது.
ஆனால் இவையெல்லாம் ஒரு சில சினிமா ஆர்வலர்கள்(ஆய்வாளர்கள்) மட்டுமே அறிந்துகொள்ள இயலும். எனினும் கடைநிலை மனிதன் வரை எளிதில் சுட்டிக்காட்டப்படுபவையாக இருப்பவையாதெனில் அது சினிமாவின் கண்டினியூட்டி சாட்ஸ்.
திரையில் நாம் காணும் பல காட்சிகள் ஒரே சமயத்தில் காட்சியளிப்பதும், அவை ஒரே இடத்தில் படம் பிடிக்கப்பட்டது போல இருப்பினும் ஊன்றிக் கவனித்தால் அவை வெவ்வேறு இடங்களில் காட்சியமைக்கப்பட்டுள்ளது என்பது அப்பட்டமாக தெரிந்துவிடும். இதில் தவறென்பதில்லை.
எடுத்துக்காட்டாக: வீட்டின் உட்புறத்தில் படப்பிடிப்பு நடக்கிறதெனில், அந்த வீட்டின் தன்மை கதைக்கு தோதாக வருவதனால் அங்கு நடத்தப்பட்டிருக்கும்.
குடும்பத்தில் நிகழும் சண்டையால் ஹீரோ வீட்டை விட்டு வெளியேறிவிடுவதாக காட்சி எடுக்கப்படுவதாக வைத்துக்கொள்வோம்.
முதலில் காட்சி வீட்டின் உட்புறத்தில் நடக்கும் அங்கு குடும்ப உறுப்பினர்கள் இடம்பெறுவர். அங்கு ஏதேனும் பிரச்சினையால் ஹிரோ வெளியேறுகின்றாரெனில் அவரை சமாதானம் செய்ய அந்த குடும்ப உறுப்பினர்கள் வெளியே வருவர். ஆனால் அந்த வீட்டின் வெளிப்புறம் கதைக்கு உதவாததாக இருந்தால், இரண்டாம் கட்ட காட்சி வேறொரு தளத்தில் நடத்தப்படும். கதைக்கு பொருத்தமான வெளிப்புறம் எங்கு அமையுமோ அங்கு நடத்தப்படுமெனில் முதல் காட்சியில் இடம்பெறும் கதாபாத்திரங்களின் உடை, அணிகலன், தோற்றம், மற்றும்பலவும் இரண்டாம் காட்சியிலும் உடைபடாமல் தொடர்ச்சியாக இருக்க வேண்டும்.
முதல் கட்ட காட்சி எடுத்து சில பல காலம் கடந்த பின்னும் கூட இரண்டாம் காட்சி படம்பிடிக்கப்படலாம் ஆனால் கண்டினியூட்டியை தவறவிட்டு விடக்கூடாது.
ஆனால் இவை பலசமயங்களில் அடிபட்டுவிடுகின்றன. இதனை நம் உள்ளூர் திரைப்பட இயக்குனர்கள் மட்டுமல்ல, நாம் அதிகமாக மெச்சிக்கொண்டிருக்கும் பல உலக திரைப்படங்களை இயக்கிய ஸ்டீபன் ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் கேமரான் போன்ற ஆளுமைகள் கூட இதற்கு விதிவிலக்கல்ல.
|
இத்தகைய தவறுகள் முக்கியமான காட்சியைக்கூட கோமாளித்தனமாக மாற்றிவிடும் அபாயமுண்டு அத்தோடு நில்லாமல் படம் பார்ப்பவர்களை புத்திசாலிகளாக மாற்றிவிடும், இந்த புத்திமான்களை மீண்டும் காட்சியின்பால் ஒன்றவைப்பதென்பது மிகவும் சிரமமான காரியம்.
ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் மிக முக்கியமான படமான ஜீராஸிக் பார்க் அனைவராலும் சிலாகித்து பார்த்து வியந்த படம். அச்சமயத்தில் வெளியிடப்பட்ட தமிழ்ப்படங்களுக்கு நிகராக தியேட்டர்களில் கல்லா கட்டிய படமாக இருந்தது. குழந்தைகளோடு பெரியவர்களும் குழந்தைகளாக மாறி பார்த்த திரைப்படம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் இதே படத்தில் தான் ஒரு காட்சியில் பெரியவர்(john Hammond- founder of Jurassic park) கையில் வெள்ளை நிற கைக்குட்டை இருக்கும், அதுவே வேறொரு கோணத்தில் காண்பிக்கும் பொழுது அதுவே பிங்க் நிறத்தில் மாறியிருக்கும். இதே காட்சியில் மூன்று பேர் இடம்பெறுவார்கள், மற்றும் டைரக்டர், கேமரா மேன், உதவியாளர்கள் என்று ஒரு பெரும்படையே சூழ்ந்திருக்கக் கூடிய ஒரு இடத்தில் இதுபோன்ற தவறை மிக சுலபமாக தவிர்த்திருக்கலாம். பெருங்கூட்டத்தினிடையே ஒருவர் கூடவா இதனைக் கவனிக்கவில்லை என்பது கேள்விக்குறியே. படம்பார்ப்பவர்கள் எப்படி இதனையெல்லாம் கவனிக்கப்போகின்றார்கள் என்ற அலட்சியத்தில் கூட விட்டிருக்கலாம். அந்தப் படத்தில் இது ஒன்றுதான் தவறு என்றால் இது சகஜம்தான் என புறந்தள்ளியிருக்கலாம். ஆனால் பல்வேறு காட்சிகளில் தொடர்ந்து பகுதி 2 எடுக்கும் வரையில் நீழ்கின்றது, என்ற உண்மை கொஞ்சம் ஜீரணிக்க கடினமாகவே உள்ளது. அதுவும் இத்தகைய தவறுகள் இன்னொருவர் கண்டறிந்து இணையத்தில் பதிவேற்றும் வரையில் நமக்கும் தெரிந்திருக்கவில்லை. இங்குதான் இயக்குனரின் சாமர்த்யம் உள்ளது. இந்தக் கட்டுரையில் முன்பே குறிப்பிட்டது போல படம் வேகமாக நகர்வதால் காட்சியின் சக்கரத்தில் இந்த மாதிரியான பிழைகள் கடந்து விடுகின்றன.
ஆனால் இதற்காகவே இயக்குனர்களுக்கு கீழ் கண்டினூட்டி சாட்ஸ் கவனிப்பதற்காகவே ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பார். இவரது வேலையே காட்சி கோர்வையாக வரவேண்டும் என்பதற்காக உழைப்பதுதான்.
பாலுமகேந்திராவிடம் உதவியாளராக பணியாற்றிய பாலா அவர்கள் கண்டினூட்டி சாட்ஸ்களை மட்டுமே கவனிப்பதற்காக ஒரு கையேடு ஒன்றை தனியாக வைத்திருப்பாராம் அதில் ஹீரோயின் உபயோகித்த ஸ்டிக்கர் பொட்டு முதற்கொண்டு ஒட்டிவைத்து அதில் காட்சி எண், காட்சி முதலியவற்றை குறித்துவைத்திருப்பதாக அவர் எழுதிய ”இவண்தான் பாலா” என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கின்றார். இது போன்று திட்ட மிட்டு வேலை செய்யும் பொழுது தவறு நிகழ வாய்ப்பில்லை என்பதைக் காட்டிலும் குறைத்துக் கொள்ளலாம்.
இத்தகைய தவறுகள் பெரும்பாலும் படத்தொகுப்பு செய்யும்பொழுது எளிதாக கணித்துவிடலாம். ஆனால் அப்பொழுது தெரிந்து எந்தவிதமான பயனும் இல்லை. ஏனென்றால் எந்த இயக்குனரும் மீண்டும் ஒரு படையை திரட்டிக்கொண்டு விடுபட்டு போன தரவை மீண்டும் நிறுவ தயாராக இல்லை. இத்தகைய தவறுகள் அந்தக்காலத்தில் நிகழ்ந்தால் இரண்டே வழிதான். 1.)படத்தில் கண்டினூட்டி சாட்ஸ் தவறு இடம்பெறும் இடத்தை வெட்டிவிடுவது.
2.) அவ்வாறு வெட்ட முடியாமல் முக்கியமான காட்சியாக இருந்தால் அவற்றை சரிசெய்ய மீண்டும் படமெடுக்க குழுவுடன் செல்வது, ஆனால் இதனை செய்ய எவரும் முன்வருவதில்லை என்று முன்பே குறிப்பிட்டிருப்பதால் மூன்றாவதாக. ரசிகர்கள் மேல் உள்ள நம்பிக்கையால்.
ஆனால் இக்காலத்தில் அறிவியலில் ஏற்பட்ட வளர்ச்சியானது சினிமாவையும் முழுமையாக ஆட்கொண்டிருக்கிறது. இத்தகைய தவறுகள் நிகழ்ந்த காட்சியில் விஷீவல் எஃபெக்ட்ஸ் ஏதேனும் செய்து இதனை சரிசெய்து விடலாம். ஆனாலும் இத்தனை இடங்களையும் தாண்டித்தான் சில காட்சிகள் பிழைகளோடு நம் பார்வைக்கு வருகின்றன.
ஜுராஸிக் பார்க் படத்திற்கான இணைப்பு.
பகுதி 1
http://www.youtube.com/watch?v=q1D-_BjYv_k
கண்டினியூட்டி சாட்ஸ்களில் தப்பித்து வெளிவந்துவிட்டாலும் நம்மை வசமாக மாட்டிவிட பலதவறுகள் தொடர்ந்துகொண்டேயிருக்கும். அவற்றில் ஒவ்வொன்றிலிருந்தும் பிழைத்து வருவதாலேயே சிறப்பான படம் என்பது உருவாகும். கண்டினியூட்டி தான் படத்தில் பெரும்பான்மையான தவறுகள் ஏற்பட களம் அமைத்துக்கொடுக்கும் என்பதனால் அதனை முதலாவதாக குறிப்பிட்டுள்ளோம்.
ஆனால் இவற்றில் வேறு வகையான தவறுகளும் இடம்பெறும் அவை. படப்பிடிப்புத்தளங்களில் வேடிக்கை பார்க்க வருபவர்களும், அல்லது அத்தளங்களில் வேலை செய்பவர்களும் கூட கேமிராவில் பதிவாகிவிட வாய்ப்புண்டு, இத்தகைய தவறுகளையும் கவனிக்கவேண்டியது ஒரு இயக்குனரின் தலையாய கடைமையே.
|
சமகாலத்தை களமாக கொண்ட படத்திற்கே இப்படியான மெனக்கெடல்கள் தேவைப்படுமேயானால் வரலாறு சம்பந்தப்பட்ட படங்கள் எடுக்க வரும்பொழுது இன்னும் அதிகமான கவனம் தேவைப்படும். எவர் கவனிக்கப்போகின்றனர் என்ற அலட்சியத்தைக் கைவிட்டாலே முக்கால்பங்கு தவறுகள் சரிசெய்யப்பட்டுவிடும்.
இப்படியாக “க்ளாடியேட்டர்” என்னும் படத்தில் படப்பிடிப்புக் குழுவில் இருந்த ஒருவர் ஜீன்ஸ் பேண்டுடன் காட்சியளிப்பது குதிரையின் கழுத்திற்கு கிழாக தெரிகின்றது. நம் கவனம் முழுவதும் பிரதான கதாபாத்திரம்மேல் தான் இருப்பதால் இப்படியான பிழைகள் கவனிக்கப்படுவதில்லை. இயக்குனர்களும் அதேபோலவேதான் முக்கியக் கதாபாத்திரங்கள் மேலே மட்டுமே கவனம் செலுத்தியிருப்பதால் அவரும் இப்படியான தவறுகளை காண்பதில்லை.
After the battle with the Germanians, the next morning after the tavern, he is walking in the army camp and he feeds a horse a piece of apple. If you look closely between Maximus and the horse, there is a crewman wearing a pair of blue jeans.
|
ஒரு காட்சியினை படம்பிடிக்க ஒரு காமிராதான் பயன்படுத்துவார்கள் என்பதை உறுதியாக கூறிவிடமுடியாது. வெவ்வேறு கோணங்களில் வெவ்வேறு இடங்களில் கேமிராக்கள் பயன்படுத்தப்படும். அவ்வாறு வைக்கப்படும்பொழுது முதல் கேமிரா காட்சிப்படுத்தும் சமயத்தில் இரண்டாவது காமிரா காட்சிதர சந்தர்ப்பம் இருக்கின்றது. இதனையும் கணக்கில்கொண்டு செயல்படுவது வேண்டும்.
In the dueling scene, when Snape pulls Malfoy back onto his feet, a cameraman is visible on the far left of the screen.
When Neo is going to open the door to enter the Oracle's house, you can clearly see a camera on the doorknob. There's a sheet over it painted to look like the wall behind it, with a representation of Morpheus' tie too, because he's blocked by the camera.
மேலும் முன்னமே சொன்னதுபோல வரலாற்றையே தனக்கு சாதகமாக திரித்துக் கூறுவது. இது பலங்காலமாக இருப்பினும் அண்மையில்கூட அரங்கேறியுள்ளது. அதுவும் அப்படத்திற்கு ஆஸ்கார் விருது அளித்தும் அமெரிக்கா பெருமையடைந்துள்ளது. இப்படிப்பட்ட பிழைகளை இயக்குனரும் அவருடன் இருக்கும் உதவியாளர்கள் மட்டுமல்ல விருது தந்து பெருமைபட்டுக்கொள்ளும் அறிஞர் பெருமக்கள் கூட அறிந்துகொள்வதில்லை.
Argo mistakes
• In 1980 the Canadian airport we see was called Dorval international airport, not Trudeau
• Iranian revolutionary guards didn’t have caps with their uniforms until 1988. (after the end of the iran Iraq war)
இப்படியான 29 தவறுகள் ”அர்கோ” படத்தில் நிகழ்ந்துள்ளன. அவை moviemistakes.com தளத்தில் காணக்கிடைக்கின்றன.
ரெட் டிராகன் படத்திலிருந்து:
In the scene when Will is opening the drawer of films from the Leeds home, there is clearly a copy of Mrs. Doubtfire in the left column of tapes. How can that be? Red Dragon is clearly set "several years" after 1980, as the caption says, but before the 1991 Silence of the Lambs, but "Mrs. Doubtfire" came out in 1993.
இவ்வாறான தவறுகள் சிறிய அளவினதாக இருப்பதனால் அவையாவையும் யாரும் பெரியனதாக எடுத்துக்கொள்வதில்லை. முன்பே சொன்னதுபோல பலருக்கும் இத்தகைய தவறுகள் தெரிவதுமில்லை, காட்சியமைப்பினை ஊன்றிக்கவனிக்கவும் தயாராகவும் இல்லை. மேலும் காட்சிகளின் வேகத்துடன் போட்டியிட இயலாமல் இத்தகைய பிழைகள் தோற்றுப்போகின்றன. தோற்றுப்போயினும் அவைகள் பிழைகளே என்பது மறுப்பதிற்கில்லை.
கீழே கமெண்டோ படத்திற்கான இணைப்பு.
http://www.youtube.com/watch?v=203_o0V5Yy0
ஜீராஸிக் பார்க் படத்திற்கான இணைப்பு
பகுதி 2
http://www.youtube.com/watch?feature=fvwp&NR=1&v=wU_I0Ulpp78
மேலும் பல இணைப்புகள் இணையத்தில் காணக்கிடைக்கின்றன, இவைகளும் பகுதி, பகுதிகளாக தொடர்ந்து போய்க்கொண்டேயிருக்கின்றது. காத்திருப்போம் இனிமேலாவது குறையும் என்ற நம்பிக்கையில்.
கட்டுரைக்கு உதவி: www.moviemistakes.com
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |