காணும் முறைகள் - ஜான் பெர்ஜர்
அத்தியாயம் 3 - பகுதி 3
.ஆண் அல்லது ஆண்கள், நிர்வாணமாக இருக்கும் பெண்களைப் பார்ப்பது என்ற அதே பாவனையைக் கொண்டது "தி ஜட்ஜ்மென்ட் ஆஃப் பேரிஸ்" என்ற மற்றொரு கருப்பொருள்.
|
[THE JUDGEMENT OF PARIS BY CRANACH 1472-1553] |
ஆனால் மற்றொன்றும் இப்போது சேர்க்கப்பட்டுள்ளது. மதிப்பீடு என்ற ஒன்று. பேரிஸ், தனக்கு மிக அழகாக தெரியும் பெண்ணுக்கு ஆப்பிளை விருதாக அளிப்பான். இவ்வாறு, அழகு போட்டிக்குரிய ஒன்றாக மாறியது. (இன்று தி ஜட்ஜ்மென்ட் ஆஃப் பேரிஸ், அழுகு போட்டியாக மாறியுள்ளது.) அழகானவர் என்று தீர்ப்பளிக்கப்படாதவர்கள் அழகானவர்கள் அல்ல. அழகானவர் என்று தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
|
[THE JUDGEMENT OF PARIS BY RUBENS 1577-1640] |
தீர்ப்பளிப்பவருக்கு உரியவராவதே பரிசு, அதாவது அவருக்கு கிடைக்கக்கூடியவராக உள்ளேன் என சொல்வதாகும். இரண்டாம் சார்லஸ் இரகசியமாக ஒரு ஒவியம் தீட்ட சொல்லி லீலியை நியமித்தார். அந்த பாரம்பரியத்தின் மிகவும் வழக்கமான ஓவியம் அது. பெயரளவில் அது "வீணஸ் அன்ட் குப்பிட்" ஆக இருக்கலாம். உண்மையில் அது ராஜாவின் வைப்புகளில் ஒருவரான நெல் கிவெயெனின் ஓவியம். தன்னை நிர்வாணமாக பார்த்துக்கொண்டிருக்கும் பார்வையாளரை பரபரப்பின்றி அவள் பார்பதாக அந்த ஓவியம் காட்டுகிறது.
|
[NELL GWYNNE BY LELY 1618-1680] |
இது நிர்வாணம் ஆகாது, அவளுடைய சொந்த உணர்வுகளின் ஒரு வெளிப்பாடு எனலாம்; உரிமையாளரின் உணர்வுகள் அல்லது கோரிக்கைகளுக்கு அடிபணிதல் என்பதற்கான அறிகுறியாகும். (பெண் மற்றும் ஓவியம் ஆகிய இரண்டின் உரிமையாளருக்கும்). இந்த ஓவியத்தை அரசன் மற்றவர்களுக்கு காட்டிய போது இந்த அடிபணிதலை தெரியக்காட்டினான், அவரது விருந்தினர்கள் அவன் மேல் பொறாமைக் கொண்டனர்.
இந்திய கலை, பாரசீக கலை, ஆப்பிரிக்க கலை, முந்தைய கொலம்பிய கலை என ஐரோப்பிய மரபல்லாத கலைகளில், நிர்வாணம் என்பது இந்த வழியில் எப்போதும் செயலற்று இல்லை என்பதை கவனிப்பது முக்கியமாகும். இந்த கலாச்சாரங்களில், பாலின கவர்ச்சி கருப்பொருளாக இருக்கும் பட்சத்தில், இருவருக்கும் இடையேயான உயிர்ப்புள்ள பாலின அன்பை காட்டுவதாகவே இருக்கும், ஆண் செயல்படும் அதே உயிர்ப்புடன் பெண்ணும் இருப்பாள், ஒருவரின் செயல்கள் மற்றவரையும் உறிஞ்சுக்கொள்ளும்.
|
ஐரோப்பிய மரபில் நிர்வாணத்திற்கும் (Naked) ஆடையற்று (Nude) இருப்பதற்குமான வேறுப்பாட்டை நாம் இப்போது பார்க்க துவங்க முடியும். கென்னத் கிளார்க் "தி நியுடு" என்ற தனது புத்தகத்தில், நிர்வாணமாக (Naked) இருத்தல் என்பது ஆடைகள் இல்லாமல் இருப்பது மட்டுமே என்கிறார், அதே சமயம் ஆடையற்று (Nude) இருப்பது என்பது ஒரு கலை வடிவம் என்கிறார். அவரை பொறுத்தவரை, ஆடையற்று இருப்பது என்பது ஓவியத்தின் தொடக்க புள்ளியல்ல, ஆனால் ஓவியம் சாத்தியமாக்கும் ஒரு காணும் முறை. ஓரளவிற்கு இது உண்மை, எனினும் 'ஆடையற்று' இருப்பதை பார்ப்பது என்பது கலையாக மட்டும் இருக்க வேண்டிய அவசியமில்லை; ஆடையற்று இருக்கும் ஒளிப்படங்கள், தோரணைகள், சைகைகளும் இருக்க தான் செய்கிறது. உண்மையென்னவெனில், ஆடையற்று இருப்பது என்பது எப்போதும் மரபாக்கப்படுகின்றது, அதை மரபாக்கும் அதிகாரம் ஒரு குறிப்பிட்ட பாரம்பரியத்தில் இருந்து பெறப்படுகிறது.
இந்த மரபுகள் என்ன அர்த்தம் தருகிறது?. ஆடையற்று இருப்பது எதை குறிக்கின்றது ?. இந்த கேள்விகளுக்கு வெறுமனே கலை வடிவ அடிப்படையில் பதிலளிப்பது போதுமானதல்ல, ஆடையற்று இருப்பது மிக தெளிவாக பாலியல் தொடர்பானதாகவும் இருக்கிறது.
நிர்வாணமாக (Naked) இருப்பது என்பது ஒருவர் தாமாக இருப்பதே ஆகும்.
ஆடையற்று (Nude) இருப்பது என்பது மற்றவர் நம்மை நிர்வாணமாக (Naked) பார்ப்பதாகும், இருந்தும் ஒருவர் தம்மை அடையாளம் காணமல் இருப்பதாகும். நிர்வாணமான உடலை ஆடையற்று இருப்பதாக மாற்ற அதை ஒரு பொருளாக (Object) பார்க்க வேண்டும். (ஒரு பொருள் என அதை பார்க்கும் பார்வை, அதை ஒரு பொருளாக பயன்படுத்த தூண்டுகிறது). நிர்வாணம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. ஆடையற்று இருப்பது என்பது காட்சிக்கு வைக்கப்பட்டதாகும்.
நிர்வாணமாக இருப்பதென்பது பொய்த்தோற்றமின்றி இருப்பதாகும்.
காட்சிக்காக வைக்கப்படும் போது, தனது சொந்த தோலின் மேற்பரப்புடன், தனது சொந்த உடலின் முடிகளுடன் பொய்தோற்றமாக மாறும், அந்த சூழ்நிலையில் அதை நிராகரிக்க முடியாது. ஆடையற்று இருப்பவரை நிர்வாணமாக எப்போதும் இருக்கக்கூடாது என்று கண்டிக்கப்படுகிறது. ஆடையற்று இருப்பதென்பது ஒரு ஆடை வடிவமாகும்.
ஆடையற்று இருக்கும் ஐரோப்பிய ஓவியங்களின் சராசரியில், முக்கிய உறுப்பினர் எப்போதும் வரையப்பட்டத்தில்லை. ஓவியத்தின் முன்னுள்ள பார்வையாளன் அவன் மற்றும் ஆணாகவே அவன் இருக்க வேண்டும். அனைத்தும் அவனுக்கு தெரிவிப்பதாக இருக்க வேண்டும். அனைத்தும் அவன் அங்கு இருப்பதன் விளைவினால் தோன்றியதாக இருக்க வேண்டும். அவனுக்காகவே அவர்கள் ஆடையற்று இருப்பதற்கு ஏற்க்கொண்டனர். ஆனால் அவன், வரையறை படி, ஆடைகள் இன்னும் கொண்டுள்ள ஒரு அந்நியன்.
பிரொன்சினோவின் "அலிகாரி ஆஃப் டைம் அன்ட் லவ்" ஓவியத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.
|
[VENUS, CUPID TIME AND LOVE BY BRONZINO 1503-1572] |
தொடரும்...
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |