நேசிக்கப்படுகிறதா சினிமா?
நேசிக்கப்படுகிறதா சினிமா?
தமிழ்நாட்டில் சினிமா ரசிகர்கள் பற்றி சொல்லவே வேண்டாம். ஆட்சியையே (தங்களை ஆளும் அதிகாரத்தையே) திரைப்பட நடிகர்களிடம் கொடுக்கும் அளவிற்கு திரைப்படத்தை நேசிப்பவர்கள்!! என் படம் நட்டமானால் என் வீடு பறிபோய்விடும் என்று நடிகர் சொன்னால், வீடு போனால் என்ன உங்களை கோட்டையிலேயே உட்கார வைக்கிறோம் என்று சூளுரைக்கும் அளவிற்கு உயர்ந்த மனம் கொண்டவர்கள்.
சினிமாவை இப்படி கொண்டாடும் ஒரு நாட்டில் சினிமாவிற்கான அடிப்படை வசிதிகள், அதை பார்ப்பதற்கு இருக்கின்ற திரையரங்க வசதிகள் என் எதைஎடுத்தாலும், கொடூரமாகவே இருக்கிறது. குறிப்பாக தமிழ் சினிமாக்களை வருட வாரியாக பிரித்து எந்த வருடம் என்னென்னப் படங்கள் வெளிவந்தது, அவை எப்படி மக்களின் வரவேற்பை பெற்றிருந்தது, இதுவரை மிக சரியாக தமிழ்நாட்டில் எத்தனை படங்கள் திரையரங்கிற்கு வந்துள்ளது, எத்தனை படங்கள் வெளிவர முடியாமல் முடங்கிப் போய் இருக்கிறது என்று முழுக்க முழுக்க ஒரு திரைப்படம் பற்றிய அத்தனை தகவல்களையும் உள்ளடக்கிய ஏதாவது ஒரு இணையத்தளம் இருக்கிறதா? எனக்கு தெரிந்து ஆங்காங்கே சில இணையதளங்கள் வெகு சல தகவல்களோடு இருக்கிறது. அவ்வளவுதான். பிலிம் நியூஸ் ஆனந்தன் சேகரித்த தகவல்களை அரசாங்கம் வாங்கிக் கொண்டது. அந்த தகவல்களை ஏன் இணையத்தில் வெளியிடக்கூடாது? அந்த தகவல் இப்போது எங்கே இருக்கிறது? எனக்கு தெரிந்து, திரைப்படக் கல்லூரியின் ஏதோ ஒரு அறையில் இந்நேரம் பூச்சிகள் அரித்துக் கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன்.
நாம் நமது கலாச்சாரத்தையும், நமது வரலாற்றையுமே திரைப்படங்கள் வழியேதான் கட்டமைக்கிறோம். அப்படியான சூழலில் திரைப்படங்கள் பற்றிய தகவல்கள் கூட சரியாக பராமரிக்கப்படாமல் அல்லது அது சார்ந்த எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாமல் இருந்தால் எப்படி?
தமிழ் மட்டுமல்ல, தமிழ் திரைப்படங்களும் இன்னும் சில ஆண்டுகளில் அழிந்து விடும் போலிருக்கிறது. திரைப்படங்கள் குறித்த அனைத்து தகவல்களையும் ஓரிடத்தில் திரட்டி வைக்க திரைப்பட துறையில் இருப்பவர்கள்தான் முயற்சிக்க வேண்டும். அல்லது அவர்கள்தான் அதற்கு பண உதவி செய்ய வேண்டும். ஆனால் அதில் அவர்களுக்கு என்ன லாபம்? தொலைக்காட்சிகள் இல்லையென்றால் இன்னும் எத்தனை பழைய படங்கள் அழிந்துப் போயிருக்குமோ?
இந்த இணையத்தளம் சில ஆண்டுகள் வரை வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் பற்றிய அடிப்படை தகவல்களை கொடுக்கிறது. தமிழ் சினிமா தோன்றி, இன்றுவரை வெளிவந்த அத்தனை படங்களும் நிச்சயம் தொகுக்கப்பட வேண்டும்.
http://www.thiraipadam.com/docs/home_tamil.html
---------------------------------------------------------------------------------------
The Birth of a Nation – படத்தொகுப்பின் உன்னதம்.
திரைப்படத் துறையில் படத்தொகுப்பிற்காக போற்றப்படும் ஒருவர் D.W. Griffith. படத்தொகுப்பின் மூலம் திரைமொழியை உருவாக்கியதில் அவரது பங்கு மிகப்பெரியது. இன்று எல்லாராலும் பயன்படுத்தப்படும் Cross Cutting முறை கிரிப்பித் உருவாக்கிய ஒன்று. தவிர வெவ்வோறு கோணங்கள், காட்சிகளை இணைத்து அதை ஒரு படமாக மாற்ற முடியும் என்றும் நிரூபித்தவர். இந்த திரைப்படத்தை பாருங்கள். படத்தொகுப்பு பற்றி படிக்கும் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் இது. படத்தொகுப்பின் உன்னதத்தை இந்த படம் நிச்சயம் உங்களுக்கு உணர்த்தும்.
http://www.youtube.com/watch?v=iEznh2JZvrI
---------------------------------------------------------------------------------------
12 Angry Men – An Experimental Film……
இந்த திரைப்படம் ஒரு Experimental Film. ஆஸ்கர் விருது தொடக்க விழாவில் லெனின் இந்த படம் பற்றி என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். அன்று இரவே இந்தப் படத்தை பார்த்து முடித்தேன்.
ஒரே இடத்தில் (Jury Room) தான் இந்த படத்தின் 98 சதவீத காட்சிகள் படம்பிடிக்கப்பட்டிருகிறது. அவசியம் இந்த படத்தை ஒருமுறைப் பாருங்கள்.
ஆனால் இந்த மாதிரிப் படங்கள் குறித்து நிச்சயம் விவாதிக்க வேண்டும்.
http://www.youtube.com/watch?v=s0NlNOI5LG0
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |