ஒரு கதை கவிதையாகும் தருணம் - யாளி - 2

(பாலு மகேந்திராவின் கதைநேரத்தை முன்வைத்து)
 
 
  நேர்காணல் - கல் மனிதர்கள் - ஆவணப்படத்தை முன்வைத்து குட்டி ரேவதியுடன் ஒரு நேர்காணல் - ஜெயச்சந்திரன் ஹஸ்மி
 
 
  திரைப்பட ரசனை வளர்க்கும், தமிழின் மிக முக்கியமான நூல் - அருண் மோகன்
 
 
   

உயிர் கொடுக்கும் கலை - ட்ராட்ஸ்கி மருது (எழுத்தாக்கம்: யுகேந்தர்)

அனிமேஷன் என்ற வார்த்தை சமீப காலமாக, மிக பரிச்சயமான ஒரு வார்த்தையாக மாறிவிட்டது. திரைப்படம் தோன்றிய கடந்த நூற்றாண்டில், அனிமேஷன் குறிப்பிடத்தக்க கலை வடிவமாக வளர்ந்து வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. கணிப்பொறி, அனிமேஷன் கலையை ஜனநாயக படுத்தியது. முன்பெல்லாம் 1 அல்ல 2 விழுக்காடு கலைஞர்கள் மட்டுமே அனிமேஷன் கலையில் ஈடுப்பட்டிருந்தனர். கணினியின் வருகைக்கு பின், இப்போது அனைவரும் அனிமேஷன் கலையில் ஈடுபட வாய்ப்பு இருக்கிறது. கடந்த 100 ஆண்டுகளில், கலைஞர்களில் ஒரு சிறு பகுதியினர்தான் இந்த கலையோடு சம்பந்தப்பட்டிருந்தார்கள். அவர்களும் பல பிரிவுகளாக இருந்தார்கள்.

  மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------------------------------------

‘தி பியானிஸ்ட்‘ திரைப்படத்தின் இயக்குனர் ரோமன் பொலான்ஸ்கியின் நேர்காணல் - தமிழில் - கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி

ஒரு சிறுவனாக நான் கடந்துவந்த சம்பவங்களை இப்புத்தகம் விவரித்தது. பல காலமாக, இந்த காலகட்டத்தை வைத்து ஒரு திரைப்படம் எடுப்பதற்கு நான் முயன்று கொண்டிருந்தேன். ஆனால் சரியான கருவும், ஒரு மூலமும் கிடைக்கவில்லை. இந்த புத்தகம் ஒரு வீரக்கதையை சொல்லும் மற்றோர் சாதாரணமான புத்தகம் அல்ல. ஸ்பில்மென் தன்னுடைய நினைவுகளில் இருந்து விரியும் சம்பவங்களை, அதை அனுபவித்த ஒருவனின் பார்வையிலிருந்து கூறுகிறார். போர் முடிந்த காலகட்டத்திலேயே எழுதப்பட்ட புத்தகம் இது. அதனால், 20,30 வருடங்களுக்கு பிறகு எழுதப்படும் புத்தகங்களை விட மிகவும் புதிதாக, ஒரு நிகழ்வுத்தன்மையோடு இருந்தது.

  மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------------------------------------
   
 
புரொபெசர் ஹானிபல் - எஸ்.ஆனந்த்

‘புரொபெசர் ஹானிபல்’ (1956) திரைப்பட மேதை ஜோல்த்தான் ஃபாப்ரி (Zoltan Fabri) இயக்கிய ஹங்கேரியத் திரைப்படம். கதா நாயகன் பெலா ந்யூல் இளகிய மனம் கொண்ட வெகுளி. லத்தீன் மொழி கற்பிக்கும் பள்ளி ஆசிரியர். பண்டைய ரோமானிய அரசின் அசுர படை பலத்தை எதிர்த்து நின்ற சரித்திர நாயகன் ஹானிபல்லின் தீவிர ரசிகர். புரொபெசர் ஹானிபல் என்றே அழைக்கப்படுகிறார். அன்பான மனைவியும் மூன்று பெண்..


  மேலும் படிக்க
 
 
நேசிக்கப்படுகிறதா சினிமா? - அருண் மோகன்

சினிமாவை இப்படி கொண்டாடும் ஒரு நாட்டில் சினிமாவிற்கான அடிப்படை வசிதிகள், அதை பார்ப்பதற்கு இருக்கின்ற திரையரங்க வசதிகள் என் எதைஎடுத்தாலும், கொடூரமாகவே இருக்கிறது. குறிப்பாக தமிழ் சினிமாக்களை வருட வாரியாக பிரித்து எந்த வருடம் என்னென்னப் படங்கள் வெளிவந்தது, அவை எப்படி மக்களின் வரவேற்பை பெற்றிருந்தது, இதுவரை மிக சரியாக தமிழ்நாட்டில் எத்தனை..


  மேலும் படிக்க
       
 
 
A Separation - ‘நாதிரும் ஸிமினும் இவர்களுக்கிடையிலான பிரிவும்' - எம். ரிஷான் ஷெரிப்

படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான மூன்று ஆண்களும், மூன்று பெண்களும் இணைந்து படத்தினை தொய்வின்றி நகர்த்தியிருக்கிறார்கள். நாம் பார்த்துப் பழகியிருக்கும் சினிமாக்களில் மிகைத்திருக்கும் சினிமாத்தனங்களுக்கு மத்தியில் எந்தவொரு சினிமாத்தனமும் இல்லாத காட்சியமைப்புக்களும், நடிப்பும், யதார்த்தமும் அதன் ஒவ்வொரு உணர்வுகளையும் பார்வையாளனுக்குள்ளும் ஏற்படுத்தி விடுகிறது.

  மேலும் படிக்க
 
 
Ten டென் மினிட்ஸ் - கார்த்திக் பாலசுப்பிரமணியன்

ஒரு செல்ஃபோன் வாடிக்கையாளர் சேவை மைத்திற்கு தனக்குத் தேவையான தகவல் ஒன்றை தரக் கோரி அழைக்கும் ஒருவருக்கும், அந்த அழைப்பை ஏற்றுப் பேசும் வாடிக்கையாளர் மைய அதிகாரிக்கும் நடக்கும் ஒரு சிறு உரையாடல்தான் இக்குறும்படம். அவர்களுக்கிடையேயான அனுமதிக்கப் பட்ட உரையாடல் நேரமே மொத்தம் 10 நிமிடங்கள் தான். வாடிக்கையாளர் கேட்கும் அந்தக் குறிப்பிட்ட விபரத்தை சேவை மைய அதிகாரி அளிப்பதற்கான அனுமதி அவருக்கில்லை. இப்படியே இருவருக்குமான வாக்குவாதம் தொடர்கிறது. பத்து .

  மேலும் படிக்க
   
 
 
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
     
     
     
     
     
     
     
     
 
 
 
 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

காப்புரிமை © பேசாமொழி

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome