|
இயக்குனர் மகேந்திரனுடன் ஒரு நேர்காணல் - கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி
மகேந்திரன் – வசனங்களிலும் நாடகங்களிலும் சினிமா சிக்கிக்கொண்டிருந்த காலத்தில், தனது காட்சி மொழியால் சிறிதளவேனும் அதற்கு ஆசுவாசமளித்த இயக்குனர். சினிமா என்பது ஒரு காட்சி மொழி என்பதை இன்றைய சினிமாவிலும் தேட வேண்டிய சூழலில், அந்த காலகட்டத்தில் சினிமா என்பது ஒரு விஷுவல் மீடியம் என்பதை ஆணித்தரமாக நிரூபித்தவர். அப்போது சத்தமாக பேசிய படங்கள் எல்லாம் இப்போது மௌனமாகி விட, அப்போது மௌனத்தால் பேசிய மகேந்திரனின் படங்கள் இப்போதும் சத்தமாக நம்மோடு பேசிக்கொண்டிருக்கின்றன. முள்ளும் மலரும் படத்திற்கு பின்னால், மகேந்திரன் எடுத்த ‘உதிரிப்பூக்கள்’ அவரது சிறந்த படைப்பாகும். காட்சி மொழியிலும், இயக்கத்திலும், மென் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதத்திலும் மகேந்திரனின் ஆளுமை உச்சத்தில் இருந்த படம் உதிரிப்பூக்கள். பேசாமொழியாக பேசிய படங்களை அளித்த இயக்குனர் மகேந்திரனுடன் பேசாமொழிக்காக பேசிய போது...............
|