இதழ்: 12, நாள்: 15- கார்த்திகை -2013 (November)
   
 
  உள்ளடக்கம்
 
திரைமொழி 8 - ராஜேஷ்

--------------------------------

இயக்குனர் மகேந்திரனுடன் ஒரு நேர்காணல் - கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி

--------------------------------
மகேந்திரனின் உதிரிப்பூக்கள் – ஒரு மறுபார்வை - வெங்கட் சாமிநாதன்
--------------------------------
இலங்கையின் கொலைக்களம் ஆவணப்பட சாட்சியம்- மௌனமாக்கப்பட்ட குரல்கள் - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
உதிரிப்பூக்கள் – அம்ஷன் குமார்
--------------------------------
உதிரிப்பூக்கள் – வாடாமலர் - ஆனந்த், கோணங்கள்.
--------------------------------
கல்ட் மூவிஸ் இன் சிக்ஸ்டி செகண்ட்ஸ் - சோரன் மெக்கர்தி - தமிழில்: யுகேந்திரன்
--------------------------------
ஹெர்ஸாக் பற்றி ஹெர்ஸாக் - பால் க்ரானின் - தமிழில்: ஆனந்த், கோணங்கள்.
--------------------------------
சுரையாவின் மீது கல்லெறியும் உதிரிப் பூக்கள் - எம்.ரிஷான் ஷெரீப்
 
   

   

 

 

புதிய தொடர்

கல்ட் மூவிஸ் இன் சிக்ஸ்டி செகண்ட்ஸ் (Cult Movies in Sixty Seconds) up

- சோரன் மெக்கர்தி (Soren McCarthy)

- தமிழில்: யுகேந்திரன்

சினிமா இரசனையை வளர்ப்பதற்கு சிறந்த திரைப்படங்களை பார்ப்பது மிக முக்கியமான ஒன்றாகும். அப்படியான சினிமாவை இந்த தொடரில் அறிமுகம் செய்ய உள்ளோம். மாதம் இரு திரைப்படங்கள். சினிமா என்பது காட்சி மொழி. படித்துவிட்டு சென்றுவிடாதீர். திரைப்படத்தை மறவாமல் பார்க்கவும். இவை திரைப்படங்கள் குறித்தான் விமரிசனம் அல்ல, ஒரு சிறிய அறிமுகம் மட்டுமே. பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். சோரன் மெக்கர்த்தி அவர்களின் கல்ட் மூவிஸ் கட்டுரைகளின் மொழிப்பெயர்பே இவை.
-----------------------------------------------------------------------------------------------------------

அகிரா (Akira)

ஆண்டு: 1988
இயக்குநர்: கட்சுஹிரோ ஒட்டோமோ
கதை: கட்சுஹிரோ ஒட்டோமோ, இசோ ஹஷிமோட்டோ
நேரம்: 124 நிமிடங்கள்
நாடு: ஜப்பான்
மொழி: ஜப்பானிய

புதிய டோக்கியோ வெடிக்கப் போகிறது.
-----------------------------------------

ஜப்பானிய அனிமேஷன் வகை திரைப்படங்களைப் பார்ப்பதற்கென்றே ஒரு பெரிய கூட்டம் உள்ளது. ஜப்பானிய அனிமேஷன் படங்களில் சிறந்தது என ஒரு பட்டியலை தேர்ந்தெடுப்பது எப்போதும் சிரமமானது. அனிமேஷன் திரைப்படங்களை உணர்வுபூர்வமாக பின்தொடர்பவர்கள் மிக அதிகமானவர்கள், அதனால் எந்த ஒரு பட்டியலும் ஜப்பானிய அனிமேஷன் இரசிகர்களுக்கு போதுமானதாக இருக்காது. எந்த ஒரு பட்டியலும் இந்த திரைப்பட பெயரில்லாமல் முழுமை அடையாது, மறுக்கவியலாத சிறந்த படம் : அகிரா

அடிப்படையில் இது ஒரு அறிவியல் புனைகதை அமைப்பை கொண்ட ஹாங்காங் சண்டை (அனிமேஷன்) படம். பேரழிவுக்கு பிந்தைய ஜப்பானில் நடக்கும் கதை, அரசின் நலதிட்டங்கள் நடைமுறையில் இருக்கும், அடக்கப்பட்ட சமுதாயம் முன்னேறி செல்லத் தொடங்கிய காலம். இரண்டு மோட்டார் சைக்கிள் குழு உறுப்பினர்கள் மற்றும் தப்பிய சிறுவன் ஒருவன், இவர்கள் ஒரு புதிய உலக ஒழுங்கை நிறுவ வினையூக்கிகளாகிறார்கள்.

குழுவின் தலைவன் கனேடா மற்றும் அவனது நண்பன் டெட்சுவா, எதிரி குழுவுடன் சண்டையிடுகிறார்கள். டெட்சுவா தீவிர காயமடைந்ததால், இராணுவ மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறான். அங்கு அவன் இராணுவத்தின் இரகசிய சோதனை பொருளாக மாறுகிறான். சோதனையின் வெளிப்பாடாக, அவன் அழிக்க நினைக்கும் அனைத்தையும் அழிக்கலாம் என்ற நிலையை அடைகிறான்.

மருத்துவமனையில் இருந்து தப்பித்து, பைத்திய விளிம்பில், டெட்சுவா டோக்கியாவை தனது அபூர்வ சக்தி மூலம் சுற்றிப்பார்கிறான். டெட்சுவாவை நிறுத்தி, உலக அழிவை தடுத்து நிறுத்தும் பணி, கனேடா, தனது போராளி நண்பன் கேய் மற்றும் 'psionics' மூவர் ஆகியவரிடம் தான் உள்ளது.

படத்தின் கதை சிக்கலான ஒன்று, அந்தரத்தில் நிலையற்று இருக்கும் கருத்துக்களை ஓரளவு பிடித்துக்கொண்டிருக்கிறது, கவனத்தை சிதறடிக்காமல் இருக்க பல துணை கதைகள் மற்றும் சிறு நாடகங்களை கொண்டுள்ளது. அனைத்து கூறுகளையும் ஒன்றாக இணைத்து, அகிராவை முழுமையாக புரிந்துக்கொள்ள விரும்பினால், குறைந்தது மூன்று முறை பார்க்க பரிந்துரைக்கிறேன்.

இந்த கருவை அடிப்படையாக வைத்து இயக்குநர் திரைப்படத்திற்கு முன்பே காமிக் உருவாக்கி இருந்தார். இது அரிதாக நடக்கும் ஒரு நிகழ்வாகும். 38 தொகுதி மாங்கா காமிக்ஸ்களை 2 மணி நேர படமாக மாற்றுவது மிகவும் சவாலான காரியமாகும்.

அனிமேஷன் அதிர்வை ஏற்படுத்துகிறது - புதிய டோக்கியோவின் நியான் ஒளி, மிகப் பெரிய விளம்பர பலகைகள் வானளவு மிதக்கின்றன, சலசலக்கும் தெரு சந்தைகள், மோட்டார் வழி பாதை முழுவதும் மோட்டார் சைக்கிள் ஒளி கோடுகள் மூலம் வண்ணம் தீட்டுவது ஆகியவை குறிப்பிட வேண்டியவையாகும். ஒளி மற்றும் நிறம் சாதகமாக குறைகிறது, குறிப்பாக படத்தின் மறக்க முடியாத முதல் பத்து நிமிடங்கள். படத்தில் தனித்து நிற்க்கும் ஒன்று, விவரங்கள். கட்டிடங்களின் மேல்தளக் கலைவேலைப்பாடு, யதார்த்தமான ஒளி அமைப்பு மற்றும் நிலையான பின்னணியில் இயக்கம், ஆகியவை படத்தின் சூழ்நிலையை சிறப்பாக காண்பித்துள்ளது. வலுவூட்டும் விளைவுடுனான சிறந்த ஒலிப்பதிவை செய்துள்ளார் ஷோஜி யமஷிரோ.

கதாபாத்திரங்கள் மிகவும் தத்ரூபமாக உள்ளது. திரைப்படத்தின் டப் செய்த வடிவம் சிறப்பானதாக இருக்காது. சப்-டைட்டிலிட் வடிவத்தில் கதாப்பாத்திரங்களின் வாயசைவும் பேச்சும் பொருந்தியிருக்கிறது. வசன கூறுகள் மற்றும் உணர்ச்சியை உண்மையில் வெற்று மொழிபெயர்ப்புகள் மழுங்கடித்து விட்டது.

அகிரா அதிக அதிர்வுகள் ஏற்படுத்திய திரைப்படம். மிகவும் செல்வாக்கான திரைப்படம். அனிமேஷன் வகையை பொது தளத்திற்கு கொண்டுவந்தது அகிரா தான். அகிராவின் ஆழமான மற்றும் நவீனமான தாக்கம், அனிமேஷன் படங்கள் மட்டுமல்லாது அறிவியல் புனைகதை படங்களிலும் இருந்தது. அகிரா மற்றும் தி மேட்ரிக்ஸ்(1999) திரைப்படங்களில் இருக்கும் ஒற்றுமை தற்செயலானதல்ல. மேட்ரிக்ஸின் இயக்குநர்களான வசோவ்ஸ்கி சகோதரர்கள், அகிரா திரைப்படத்தின் பாதிப்பும்/ஊக்கமும் தங்களுக்கு இருந்தது என குறிப்பிட்டுள்ளனர்.
---------------------------------------------------------------------------------------------

பேட் பாய் பப்பி (Bad Boy Bubby)

ஆண்டு: 1993
இயக்குநர்: ரால்ஃப் டி ஹீர்
கதை: ரால்ஃப் டி ஹீர்
நேரம்: 112 நிமிடங்கள்
நாடு: ஆஸ்த்ரேலியா
மொழி: ஆங்கிலம்

அவனக்கு தேவை அன்பு மட்டுமே.
-------------------------------------

மனவளர்ச்சி குன்றியவர்களை விந்தையான, விரும்பத்தகுந்த, நகைச்சுவையான, முழுதும் நன்மை செய்கிற, எப்போதாவது புத்திசாலிதனமான விஷயங்களை சொல்பவராகவே ஹாலிவுட் திரைப்படங்கள் சித்தரிக்கிறது. இல்லை, ஒரு நிமிடம், நான் ஆஸ்த்ரேலியர்களை குறித்து நினைக்கிறேன். இரண்டு மரபுகளையும் தகர்க்கும் திரைப்படம் பார்க்க விரும்பினால், பேட் பாய் பப்பி பார்க்கவும்.

ஒரு ஓவியம் உருவம் பெறுவது போன்று தோன்றலாம், நீங்கள் இப்படத்தை பார்ப்பதை நிறுத்திவிடலாம் என்று நினைக்கும் நிலைக்கு வந்துவிடுவீர். உங்களுக்கு நீங்களே ஒரு உதவி செய்து கொள்ளுங்கள், முதல் ஐந்து நிமிடங்களை பொறுத்துக்கொள்ளுங்கள், அதே போல அடுத்து ஐந்து நிமிடங்கள், இன்னொரு ஐந்து நிமிடங்கள். முதல் இருபது நிமிடங்களுக்கு பிறகு, இந்த படத்தை தொடர்ந்து முழுவதாக பார்த்ததற்கு நிச்சயம் நீங்கள் பாராட்டுவீர்கள்.

பப்பி (நிக்கோலஸ் ஹோப்) தனது அறையில், அவனது 35 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டிருக்கிறான். அவனது அம்மா செக்ஸ் பொம்மையாக அவனை பயன்படுத்துக்கிறாள். இறுதியில் அங்கிருந்து தப்பி நிஜ உலகிற்கு வருகிறான், அனுபவத்தின் மூலமும், உலகில் நடப்பதை பார்த்தும் பப்பி கற்றுக்கொள்கிறான், ஒரு கிளி பேசுவது போல் பப்பி கேட்டதை மட்டுமே பேசுகிறான்.

தொடர் காட்சிகள் மூலம் இது ஒரு தேடல் பயணம் என்பதை சரியாக வெளிபடுத்தவில்லை. அவனது பயணத்தின் பெரும்பகுதி, தற்செயலான நிகழ்வுகள், எண்ணங்களையும் பொருள்களையும் சின்னங்களால் தெரிவித்தல், சின்ன பட்ஜெட் கருத்து படங்களில் மட்டுமே வரும் வெளிப்படையான சுயம் அறிந்த கதாபாத்திரங்கள் ஆகியவையே இருக்கிறது. சிறு சருக்கல்களை ஒதுக்கி வைப்போம். பலவற்றை காட்சிப்படுத்தியுள்ள இப்படம், மிக தனித்துவமான மற்றும் தைரியமான படமாகும். தொழில்நுட்பம், இறையியல், இசை மற்றும் செக்ஸ் ஆகியவையை தனது பயணத்தில் பப்பி சந்திக்கிறான். அவன் ஒரு செயலற்ற பார்வையாளன் அல்ல. அவன் பார்ப்பவைகளை தொட்டு, தொடர்பு படுத்தி அதில் பங்கெடுக்க விரும்புகிறான். சில நேரங்களில் அது கேடு விளைவிக்கவும் செய்கிறது, ஆனால் அது இறுதியில் அவனுக்கு உதவுகிறது.

பல ஹாலிவுட் நடிகர்கள் மாற்று திறனாளி பாத்திரத்தில் நடிப்பதற்கு தங்களது கர்வத்தை விடுவதில்லை. ஏனென்றால் அதை அவர்கள் பெருமைக்காக செய்கின்றார்கள். பப்பியாக நிக்கோலஸ் ஹோப் மிக சிறப்பாக நடித்துள்ளார். படத்தின் சில இடங்களில் சிரிக்கவும் பப்பி நமக்கு வாய்ப்பளிக்கிறார். மாற்று திறனாளி நடிகர்களின் பயன்பாட்டை நான் பாராட்டுகிறேன், அவர்கள் வரும் காட்சிகள் நேர்மையானதாகவும் ஆதரவு கோரி நிற்பதாகவும் இல்லை.

வெளி உலகை முதல் முறை நுழையும் கதாபாத்திரம் படத்தில் இருப்பதால், வசனங்கள் சில நீதிபோதனைகளாக இருந்தால் அதை நீங்கள் மன்னிப்பீர்கள். கலாச்சாரங்களின் வரலாறு பற்றிய பேண்ட் உறுப்பினரின் உரை சிறப்பான ஒன்றாகும். அது ஒரு எளிய விளக்கம் மற்றும் தொந்தரவு செய்யும் உண்மை.

ஹாலிவுட் திரைப்படங்கள் அனைத்தையும் ஓட்டுமொத்த சமூகத்தை பொருத்துவதாகவே அணுகுகிறது: அவற்றை தள்ளுபடி செய்யும் வழிமுறையாக நமது நல்வாழ்வு உணர்விற்கு சவால்களையும் அனுமதிக்கிறது, சமுதாயத்திற்கு பெரிய பங்கிருக்கிறது என பேட் பாய் பப்பி அறிவிக்கிறது. கதாபாத்திரம் ஒன்றின் உரையில் "கடவுள் இல்லை என நினை, அவரை அவமானப்படுத்துவது நமது கடமை, உனக்கு தைரியம் இருந்தால் என்னை அடித்து கீழே தள்ளு, குரூரமானவனே, இல்லாத மோசடிகாரனே. கடவுள் இல்லை என நினைப்பது நமது கடமை, அப்போது தான் நாம் யார் என்பதற்கு முழு பொறுப்பையும் நாம் ஏற்றுக்கொள்வோம்". என் சொந்த முடிவுகளை பெற என்னை நம்பவைக்கும் எந்த படத்துக்கும் நான் ஆதரவளிப்பேன்.

ஒவ்வொருவரின் இரசனையை பொருத்தது. ஒவ்வொருவரும் தொந்தரவு செய்யும், திருப்பங்கள் உறுதிபடுத்தும் ஏதாவது ஒன்றை இந்த படத்தில் கண்டுபிடிப்பீர்கள். நீங்கள் பப்பியின் ஆர்வத்தை பகிர்ந்து கொண்டால், அதை நீங்களும் மிக இரசிப்பீர்கள்.

தொடரும்...

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </