கட்டியங்காரன்
வாசிக்கிற எல்லார்க்கும் வந்தனம்
வணக்கமுங்கோ!
நாந்தான் கட்டியங்காரன்
''அதாம்ணே! 'சைலேன்ஸ்'' கட்டியங்காரன்!
மொதல்ல. கட்டியங்காரன்னா யாருன்னு தெரியுமா மக்கா....?
தெருக்கூத்து தெரியும் தானே! அந்த தெருக்கூத்து
என்கிற தமிழன் உன்னதமான
நிகழ்த்துக்கலையில நடக்கவிருக்கிற கூத்துகதையோட
சுருக்கம் சொல்லி, கதாபாத்திரங்களை அறிமுகஞ்செய்து,
நடுநடுவில் நகைச்சுவைத் தூவி, கிச்சுகிச்சு மூட்டி
சொல்சிலம்பாடி சுகமாய்ச் சிரிக்க வைக்கிற
மகாகலைஞன் தான் கட்டியங்காரன்!
கட்டிங்காரன் - கட்டியங்கூறுபவன் - முன்மொழிபவன்
வருமுன் உரைப்பவன்!
இந்தப் பகுதில ''இஷ்டம் போல பூந்து வெள்ளாடு ராசா''ன்னு
பூரண சுதந்திரம் 'கூடு' கொடுத்திருப்பதால் அந்தப் பக்கம்
இந்தப்பக்கமென சுழன்று - இலக்கியம், சினிமா, சமூக நிகழ்வுகள்
நூல் அறிமுகம், விமர்சனம் என திசையெட்டும் சிலம்பம் சுழற்ற விருப்பம்
கோபம், கொஞ்சல், ரசனை, மதிப்பீடு என அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம்
வெல்லப் பிள்ளையாரைக் கிள்ளி ''கிச்சு கிச்சு தாம்பாளம்.... கிய்யா கிய்யா
தாம்பாளம்'' எனத் தருவது தான் அடியேன் கடமை!
கவிதையும் கதையும் கட்டுரை நாடகமென வேறுவேறுத் திசைகளில்
பயணிப்பவன் வேற்றுமுகத்தோடு விளையாட்டைத் தொடங்குகிறேன்!
கூடு-க்கும், கூடு பறவைகளுக்கும் மறுபடியும்
வணக்கமுங்கோ.... ஓ...ஓ...ஓ....ஓ
போலாம் ரைய் ரைட்!!! |