சய்லேன்ஸ் - 3
நீண்டதொரு காலம் போய் மீண்டதொரு சந்திப்பு
நீண்ட நாட்களுக்குப் பிறகு மும்பை நண்பர்களான மதியழகன் சுப்பையா மற்றும் புதிய மாதவியை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. மதியழகன் சுப்¬யா - தென் மாவட்டமான திருநெல்வேலியை சேர்ந்தவர். மும்பையில் பிறந்து வளர்ந்தவர். ரிலையன்ஸ் இன்போ டாட் காமில் பணியாற்றும் மதியழகன் கவிதை, சிறுகதை, நாடகம் திரைப்படம் மொழி பெயர்ப்பு துறைகளில் ஆர்வங்கொண்டு பங்களிப்பவர். 'அணி' என்ற கவிதைக்கான சிற்றிதழின் ஆசிரியர் மதியழகனுடன் உரையாடுகையில் பொங்கும் நகைச் சுவையில் நமது எடை குறைந்துவிடும். கவலைகள் பறந்தோடி விடும்.
புதிய மாதவி-யும் நெல்லைச் சீமையின் வள்ளியூர்தான். மல்லிகா - இலக்கியத்துக்காக புதிய மாதவி - யாய் அவதாரமெடுத்து சற்றேறக்குறைய நூல்களை கவிதை. கட்டுரை, சிறுகதை, விமர்சனம் போன்ற தளங்களில் வழங்கியவர்.
தற்போது தலித்தியம், பெண்ணியம் குறித்து தீவிரமாக சிந்தித்து வருபவர், மொழிபெயர்ப்பிலும் தன்னைக் கரைத்து கொண்டு வருகிறார். இணையத்தில் தீவிரமாக பங்காற்றி வரும் புதிய மாதவி விரைவில் தனது மொழிபெயர்ப்பு கவிதை நூலையும் புதினத்தையும் தரவிருக்கிறார்.
மும்பையை பிரிந்து ரெண்டு வருஷமாச்சு சந்தோஷமாயிருந்தது. மாற்றம் மிகுந்த மும்பையைப் பார்க்க. சின்னச் சின்ன மாற்றங்கள்.
மின்ரயில்கள் புதியப் பெட்டிகளுடன் வசதியான காற்றோட்டமானப் பயணம்.
குண்டு வெடிப்புக்களையும் துப்பாக்கியோசனையும் மறந்து கேட வே ஆப் இந்தியா கட்டடத்துகு முன் நின்று வெளிநாடுகளிலும் உள்நாடுகளிலும்
புகைப்படம் எழுத்துக் கொள்கின்றன. கடுமையான துப்பாக்கி சண்டைக்குப் பிறகு தாஜ் ஓட்டல் இயங்கத் தொடங்கிவிட்டது பழையப் புறாக்களுக்குப் பதிலாக புதிய புறாக்கள்...
மாறாதது ஒன்றுதான்ல.
மின் ரயில்களில் உட்கார இடமில்லாத ஓயாதககூட்டம். கூட்டம் கூட்டம்.
''வி.டி.யிலிருந்து
விரைந்து பறக்கும்
மந்தை மனிதரைப் பார்த்து
நகைத்து
நடந்து போகும்
மும்பை புறாக்கள்
எப்போதோ படிந்தது. பம்பாய் மும்பையான பிறகும் மாறாமலே இருக்கிறது.
பம்பாயின் வாடகை பத்து பவுண்ட் தான்.
நம்புவீங்களா. பம்பாயின் வாடகை பத்து பவுண்ட் அதாவது 750 ரூவா தாம்ணே சங்கதி என்னன்னால வெளங்கணும்னா ஒரு கொசுவத்தி கொழட்டுங்கண்ணா...
(வைரமுத்து வாய்ஸ்ல படிங்கண்ணா..?)
அது 1662 மே மாதம் இங்கிலாந்து மன்னன் இரண்டாம் சார்லஸ்
நிறைய வரதட்சணை (?) வாங்கி கொண்டு குமாரி கேத்தரின் என்பவளை மணக்கிறான். அந்த வரதட்சணையில் ஓர் பகுதி.
போர்ச்சுகீசியர்கள் வசமிருந்த தீவான பம்பாய். சார்லஸ், கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்துக்கு வருடம், பத்து பவுண்ட் - க்கு சமமான
தங்கத்துக்கு பம்பாயை வாடகைக்கு தருகிறார்.
நெனச்சுப்பாருங்கண்ணே. ஒரு சதுர அடி இன்னைக்கு மும்பைல என்னவெல தெரியுங்களா...?
(ஆதாரம் டைம்ஸ் ஆப் இந்தியா ஆகஸ்ட் 17, 2010)
ஒரு ரன் .. விவகாரம்
சீறீலங்கா, இந்தியா ஒரு நாள் கிரிக்கெட். வீரேந்திர சேவாக் 99ல் செஞ்சுரிக்காக காத்திருக்கிறார். வீசும் கை விக்கெட் மேல் எழ பந்து வீச வருகிறார் ரந்தீவ்.
அது நோ - பால். எனினும் சேவாக் அடித்து விடுகிறார். 6 ரன் இந்தியா ஜீத் ஹை. லெகின் சேவாக் பாட்டா செருப்பு. விலை போல 99ல் தேங்கிவிட நூறு வாய்ப்பு நழுவி நொறுங்கிவிடுகிறது.
இந்தியாவின் ஊடகங்கள் இந்த ஒரு ரன் விவாகரத்து மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து முதல் பக்க செய்தியாக்கி அலறி -- அலசுவதைப் பார்க்கும்போது எழுகின்றன
பல கேள்விகள்?
வெள்ளைக்கொடியோடு வந்தவர்களை எந்திரத் துப்பாக்கிக்கு இரையாக்கியது எந்த வகை நியாயம்?
உலகப் போர் நியதிகளுக்கு மாறாக கொத்து குண்டுகளை வீசி தம் நாட்டு மக்களையே கொன்றது எவ்வித தர்மம்?
கூட்டங் கூட்டமாய் பாலியல் வன்முறையும், படுகொலைகளும் செய்துவிட்டு இராமேஸ்வரமும், திருப்பதியும் சென்று வந்தால் ரா(ட்ச)ஷபக்ஷேவின் பாவங்கள்
தீர்ந்து விடுமோ?
வெறிலங்கா வீசுவது எப்போது 'நோபால்'கள்தான் டெல்லியில் இருக்கிற தேர்டு அம்பயர்கள் உதவிடும்போது நியாயங்களாவது தர்மங்களாவது?
ஜீஜீபி
ஒரு கவிதை
அதான் நாகேஷ்
சிலநேரம் மட்டுமே கர்வங்கொள்கிறது 'பூமி'
''இங்கிவனை யான் பெறவே
என்ன தவம் செய்து விட்டேன்''
மைசூர் மண்ணுக்கு பெருமித கர்வம்
பிறந்தானொரு தலைமகன்
நாகேஷ் என்கிற நடிப்புக்கலை மகன்
சேஷ்டைகளால் சிரிப்பூட்ட கற்றவன்
நகைச்சுவையெனும் நல்வரம் பெற்றவன்
மனித நாகேஸ்வரராவ்
மைசூர் மாதா பிரசவித்தது
கலைஞன் நாகேஷ் - தமிழ்க்
கலைத்தாய் தத்தெடுத்தது
பேசி சிரிக்க வைக்கலாம்
பேசாமல் நகைக்க வைக்கலாம்
அங்க சேஷ்டைகளால் அதிர வைக்கலாம்
எங்கள் நாகேஷ்
உடலை மொழியாக்கி உள்ளம் புகுந்தவர்
நுழைவது தொடங்கி வெளியேறல் வரை
உங்கள் நகைச்சுவை ராஜாங்கத்துக்கு
அடிமையானோம் நாங்கள்
நகைச்சுவை என்ற பெயரில் சிலர்
ரசிகர்களின் உயிர் அறுக்க
பிணமாக நடித்தும் பிரமாதப் படுத்தியவர்
நாகேஷ்
மெல்லிய உடலுக்கு ஒளிந்திருந்ததோ
மின்னலாய் நடிப்புக்கலை
குறலின் ஏற்றத்தாழ்வில்
குதூகலம் பூசிய மந்திரவாதி
நாயகன் .. வில்லன் .. குணச்சித்திரம் .. நகைச்சுவை
நடிப்பினில் பதித்தது முத்திரை
உன் நடனம். அடடாவோ அடடா.
கால்களால் கவிதையெழுதியவன் நீ
ஒவ்வொரு அசைவிலும் உயிர்
ஒவ்வொரு வெளிப்பாட்டிலும் தனீரகம்.
நாகேஷ் கலைஞர்களின் கலைஞன்.
பாத்திரத்துக்குள் புகுந்து வெளியேறல்
ஓர் திறம்
பாத்திரமாகவே வாழ்தல் பிறிதொரு ரகம்
மேம்பட்ட நடிப்பால் எம் ரசனையை
மேம்படுத்தியவனை
தீண்டவில்லை விருதுகளின் நகங்கலும்..
தேவனே தேவனே
எங்கள் நாகேஷை ஏன் பிரித்தீர்கள்
எம்மிடமிருந்து..
உடலை மட்டுமே கொண்டு செல்ல முடிந்தது
கடவுளுக்கு துயரமிருக்குமோ..
ஆண்டவனின் ஆத்மாவையும்
உவகையில் பூரிக்க வைத்திருப்பார்.
அதான் நாகேஷ்.
தொடரும்...
|