வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------

இந்தப் பகுதில ''இஷ்டம் போல பூந்து வெள்ளாடு ராசா''ன்னு

பூரண சுதந்திரம் 'கூடு' கொடுத்திருப்பதால் அந்தப் பக்கம்

இந்தப்பக்கமென சுழன்று - இலக்கியம், சினிமா, சமூக நிகழ்வுகள்

நூல் அறிமுகம், விமர்சனம் என திசையெட்டும் சிலம்பம் சுழற்ற விருப்பம்

கோபம், கொஞ்சல், ரசனை, மதிப்பீடு என அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம்

வெல்லப் பிள்ளையாரைக் கிள்ளி ''கிச்சு கிச்சு தாம்பாளம்.... கிய்யா கிய்யா

தாம்பாளம்'' எனத் தருவது தான் அடியேன் கடமை!

கவிதையும் கதையும் கட்டுரை நாடகமென வேறுவேறுத் திசைகளில்

பயணிப்பவன் வேற்றுமுகத்தோடு விளையாட்டைத் தொடங்குகிறேன்!

கூடு-க்கும், கூடு பறவைகளுக்கும் மறுபடியும்

வணக்கமுங்கோ.... ஓ...ஓ...ஓ....ஓ

போலாம் ரைய் ரைட்!!!

 

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
சய்லேன்ஸ் - ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 

 
 


கட்டியங்காரன்

வாசிக்கிற எல்லார்க்கும் வந்தனம்
வணக்கமுங்கோ!

நாந்தான் கட்டியங்காரன்

''அதாம்ணே! 'சைலேன்ஸ்'' கட்டியங்காரன்!

மொதல்ல. கட்டியங்காரன்னா யாருன்னு தெரியுமா மக்கா....?

தெருக்கூத்து தெரியும் தானே! அந்த தெருக்கூத்து

என்கிற தமிழன் உன்னதமான

நிகழ்த்துக்கலையில நடக்கவிருக்கிற கூத்துகதையோட

சுருக்கம் சொல்லி, கதாபாத்திரங்களை அறிமுகஞ்செய்து,

நடுநடுவில் நகைச்சுவைத் தூவி, கிச்சுகிச்சு மூட்டி

சொல்சிலம்பாடி சுகமாய்ச் சிரிக்க வைக்கிற

மகாகலைஞன் தான் கட்டியங்காரன்!

கட்டிங்காரன் - கட்டியங்கூறுபவன் - முன்மொழிபவன்

வருமுன் உரைப்பவன்!

 

 

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS கட்டியங்காரன் தொடர்கள் வாயில்


சய்லேன்ஸ் - 3

கட்டியங்காரன்  

1. சைலேன்ஸ் பற்றிய பேச்சு - ஒரு விளக்கம்

அப்பாடி! ஒரு வழியாக கூடு - 'சைலேன்ஸ்'-ஐப் பேச வைத்து விட்டது! 'சைலேன்ஸ்-1 - பற்றி சில நண்பர்களின் அபிப்ராயங்களைப் படித்தேன்.

''சில செய்திகள் பழசாக இருக்கின்றன'' ஏஞ்சாமி! பழசுல சுவாரஸ்யம் இல்லீங்களா...? பழையதும் மீன்கொழம்பும் செமருசின்னு தெரியாதா? ரொம்பப் பழசான 'சிந்து சமவெளி நாகரீகம்' குறித்து இன்றைக்கும் படிக்கிறோம்! ரொம்ப ரொம்ப புதுசான 'சிந்து சமவெளி' படம் ஒ.. டியேப் போயிடுச்சே...! என்னாசாமியோவ் நாஞ்சொல்றது!

பழைய சங்கதிதான்! இன்னைக்கும் அயோத்தி பிரச்னை பத்தி எரிய வச்சிடுதே!

ஒயின்-ல பழசுக்குத்தான் மரியானதங்கோ!

பழைய ஞாபகங்கள் தானே 'அழகி'யும் 'ஆட்டோகிராப்'-பும் பழைய டி.ஆர். ராஜகுமாரி-யின் கண் ஆட்டத்தையும் பத்மினியின் பரதத்தையும் மறந்து விட முடியுமா...? பழசை மறப்பவர்களுக்கு பஸ்சுல சீட் கெடக்காது! போங்கப்பா!

2. வாசித்ததில் நேசித்தது

கவிஞர் கண்ணதாசனின் 'மனவாசம்' - சற்றேறக்குறைய கவிஞரின் சுய புலம்பல் -- சாரி.. சுயசரிசை -- வாசித்தேன்.

அறுபதுகளின் அரசியல் சூழல் குறித்த பதிவுகள்.. கவிஞரின் அபிப்ராயங்கள் பட்டைய கௌப்புதுங்கோ...! கொஞ்சம் சாம்பிள் பாருங்கோ..!

''சாதாரணமாகவே அரசியல்வாதிகள் கூடுகிற கூட்டத்தில் குஷியாகி நம்மைச் சுற்றியுள்ளது தான் உலகம் என்று முடிவு கட்டி விடுவார்கள். இதற்கு காமராஜரும் விலக்கல்ல. கருணாநிதியும் விலக்கல்ல!'' (ப.124)

''ஹிட்லரது வாழ்க்கை வரலாற்றை அவன் படித்துப் பார்த்தபோது, ஹிட்லரின் 'நாஜி'க் கட்சிக்கும், தி.மு.க. வுக்கும் சில அம்சங்களில் ஒற்றுமை இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. ஜெர்மனிக்கு நாஜிக்கட்சி எப்படி ஒரு சாபக்கேடா, அப்படியே தமிழகத்துக்குத் தி.மு.க. ஒரு சாபக்கேடு' என அவன் முடிவு கட்டினான் (பக்.75)

''காங்கிரஸ் பேரியக்கம் எவ்வளவுக்கெவ்வளவு உன்னதமானதோ, அவ்வளவுக்கவ்வளவு அதிலிருந்த காங்கிரஸ்காரர்கள் பலர் சுயநலக்காரர்கள்.'' (பக்.104)

''காங்கிரஸ் எப்போதுமே எதிரிகளால் அழிந்ததில்லை. காங்கிரஸ்காரனாலேயே அழிந்திருக்கிறது.'' (பக்.121)

''அண்ணா நல்லவர், பண்பானவர், சில விஷயங்களில் காமராஜரையும் விட உயர்ந்தவர். ஆனால் தி.மு.க. என்பது தமிழர் நாகரீகத்துக்கு இறைவன் கொடுத்த சாபம்'' (பக்.138)

''மேலே குறிப்பிட்டதெல்லாம் கடுகு வெடிகள் தான்! நூலை முழுமையாக படியுங்கள்! பக்கத்துக்குப் பக்கம் டெட்டனேட்டர் இருப்பது தெரிய வரும்.

(பின் குறிப்பு - சமீப காலத்து வேட்டி கிழிப்பு, மண்டை உடைப்பு கூட்டங்களை இதனோடு சம்பந்தப்படுத்திக் கொள்ள வேண்டாம்)

3. பாடி பறந்த பறவை!

ஸ்வர்ணலதா என்கிற தேன்குரல் தேவதை நுரையீரல் நோய்க் காரணமாக தனது வாழ்வை முடித்துக் கொண்டது!

'போறாளே பொன்னுத்தாயி' பாடலுக்காக தேசிய விருது பெற்றவரின் வயலின் குரலை மறக்கக் கூடுமோ...!

'மாலையில் யாரோ மனதோடு பேச' - மெலடியும் 'ஆட்டமா கொண்டாட்டமா' - துள்ளலும் காற்றும் காதுகளும் உள்ளவரை மறக்க வியலாதவை!

4. தலைநகரிலிருந்து வெளிவரும் தமிழ் இதழ்!

இந்தியத் தலைநகராம் புதுதில்லியிலிருந்து இலக்கிய இதழ் ஒன்று வெளிவந்து வெற்றி நடைபோடுவது பலருக்கும் தெரிந்திருக்குமோ!

'வடக்கு வாசல்' - என்கிற சிற்றிதழின் ஆசிரியர் நவீன நாடக /இலக்கியவாதியான யதார்த்தா பென்னேஸ்வரன்.

சிறுகதை, கவிதை, கட்டுரை, விமர்சனம் எனப் பல்சுவையும் தாங்கி வருகிற 'வடக்கு வாசலை' வாங்கிப் படிக்க

VADAKKU VAASAL PUBLICATIONS

5A/11032, SECOND FLOOR, GALI NO 9

SAT NAGAR, KAROL BAGH, NEW DELHI 110 005

PHONE NEW DELHI (011-25815476)

MOBILE 099110031958

email : vadakkuvaasal@gmail.com

www.vadakkuvaasal.com

5. முத்து என்கிற கோவ(வை)க் கவிஞர்!

கண்ணதாசனின் மனவாசம் படித்துக் கொண்டிருக்கும்போதே மேட்டூரிலிருந்து 'மணல்வீடு' வந்தது. கோ(வ)வைக்காரரான கவிஞர் ந.முத்துவின் சினங்கொண்ட சென்ரியூக்கள் பிரபலமானவை. ந. முத்துவின் நக்கல் தமிழ்க் கவிஞர்களில் பலருக்கும் வாய்க்காதது. அவரது சமீபத்திய (சமகால விமர்சனமாய்) கவிதை ஒன்று. மணல்வீடு இதழுக்கும் மற்றய சுரணையுள்ள கவிஞர்களுக்கும் பெருமை சேர்ப்பது!

அயல்நாட்டு
ஆய்வரங்க அறிஞருக்கும்
வாழும் வள்ளுவருக்கும்
அவர்தம் வம்சத்தாருக்கும்
ஐந்து நட்சத்திர விடுதி.

நாடாளும் அமைச்சருக்கும்
அவர்தம் அள்ளைகளுக்கும்
நான்கு நட்சத்திர விடுதி

முக்கிய புள்ளிகளுக்கும்
சிக்கியப் புள்ளிகளுக்கும்
மூன்று நட்சத்திர விடுதி

இளிக்கும் வாயுடைய
இந்நாட்டு தமிழ் அறிஞருக்கு
இரண்டு நட்சத்திர விடுதி

ஆட்சிப்பணி அலுவலர்களுக்கு
அடுத்த நட்சத்திர விடுதி

காவல் பணியாளர்களுக்கோ
கல்வி நிலையமே விடுதி

உதட்டிலும் உள்ளத்திலும்
தமிழைத் தவிர வேறு அறியா
உடன் பிறப்புக்கு
ஆயிரம் நட்சத்திரங்கள் பூத்திருக்கும்
வீதியே விடுதி

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

பின் குறிப்பு - ந. முத்து கவியரசரோ, கவிச்சக்கரவர்த்தியோ கவி சாம்ராட்ரோ அல்ல. தாடிக்காரக் கிழவன் வழி நடக்கும் சாதாரணன்!

தொடரும்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.