வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

தொடர் பற்றி
---------------------

இந்தப் பகுதில ''இஷ்டம் போல பூந்து வெள்ளாடு ராசா''ன்னு

பூரண சுதந்திரம் 'கூடு' கொடுத்திருப்பதால் அந்தப் பக்கம்

இந்தப்பக்கமென சுழன்று - இலக்கியம், சினிமா, சமூக நிகழ்வுகள்

நூல் அறிமுகம், விமர்சனம் என திசையெட்டும் சிலம்பம் சுழற்ற விருப்பம்

கோபம், கொஞ்சல், ரசனை, மதிப்பீடு என அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம்

வெல்லப் பிள்ளையாரைக் கிள்ளி ''கிச்சு கிச்சு தாம்பாளம்.... கிய்யா கிய்யா

தாம்பாளம்'' எனத் தருவது தான் அடியேன் கடமை!

கவிதையும் கதையும் கட்டுரை நாடகமென வேறுவேறுத் திசைகளில்

பயணிப்பவன் வேற்றுமுகத்தோடு விளையாட்டைத் தொடங்குகிறேன்!

கூடு-க்கும், கூடு பறவைகளுக்கும் மறுபடியும்

வணக்கமுங்கோ.... ஓ...ஓ...ஓ....ஓ

போலாம் ரைய் ரைட்!!!

 

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
சய்லேன்ஸ் - ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 

 
 


கட்டியங்காரன்

வாசிக்கிற எல்லார்க்கும் வந்தனம்
வணக்கமுங்கோ!

நாந்தான் கட்டியங்காரன்

''அதாம்ணே! 'சைலேன்ஸ்'' கட்டியங்காரன்!

மொதல்ல. கட்டியங்காரன்னா யாருன்னு தெரியுமா மக்கா....?

தெருக்கூத்து தெரியும் தானே! அந்த தெருக்கூத்து

என்கிற தமிழன் உன்னதமான

நிகழ்த்துக்கலையில நடக்கவிருக்கிற கூத்துகதையோட

சுருக்கம் சொல்லி, கதாபாத்திரங்களை அறிமுகஞ்செய்து,

நடுநடுவில் நகைச்சுவைத் தூவி, கிச்சுகிச்சு மூட்டி

சொல்சிலம்பாடி சுகமாய்ச் சிரிக்க வைக்கிற

மகாகலைஞன் தான் கட்டியங்காரன்!

கட்டிங்காரன் - கட்டியங்கூறுபவன் - முன்மொழிபவன்

வருமுன் உரைப்பவன்!

 

 

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS கட்டியங்காரன் தொடர்கள் வாயில்


சய்லேன்ஸ் - 6

கட்டியங்காரன்  


1. தமிழ் ஹைகூ.... நூற்றாண்டை நோக்கி

தமிழில் 'ஹைகூ' என்று ஜப்பானிய கவிதையை அறிமுகப்படுத்தியவர் மகாகவி பாரதி. (பார்க்க - பாரதியார் கட்டுரைகள்)

ஹைகூவின் சுருக்கமான மூன்றடி வடிவமும், வாசனையைத் தனக்குள் ஈர்க்கும் சுவைத் தன்மையும் புதுமை வடிவங்களை விரும்பிய பாரதியை ஈர்த்ததில் வியப்பில்லை.

பின் சி.மணி, ஜப்பானிய ஹைகூக்களை தமிழில் மொழி பெயர்த்தார். இலக்கிய வெளிவட்டம் இதழும் பல ஹைகூக்களை 1965களில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளது.

கவிக்கோ அப்துல் ரகுமான் 'சிந்தர்' என்ற பெயரில் ஹைகூக்களைத் தர சுஜாதாவின் உசுப்பேத்தலில் ஹைகூ பற்றிக் கொண்டது.

தமிழின் முதல் ஹைகூ தொகுப்பு ''புல்லின் நுனியில் பனித்துளி'' யா (அறிவுமதி) புள்ளிப்பூக்களா (அமுதபாரதி) என்ற பட்டிமண்டபம் இன்று வரைத் தொடர்கிறது. என்றாலும் ரெண்டுமே collectors item டாக்டர் லீலாவதி, ஜப்பானிய ஹைகூக்களை தமிழில் மொழி பெயர்த்து தந்தார்.

ஈரோடு தமிழன்பன், இராம குருநாதனின் வழிகாட்டல் வெளிச்சத்தில் இளைஞர்கள் ஹைகூ உலகுக்குள் நுழைந்தார்கள்.

பழையக் குளம்
புதிய தவளை
ப்ளக்

புதுவையில் ஹைகூ முயற்சிகளை சீனு தமிழ்மணி தொடங்கி வைக்க தமிழகத்தில் மு.முருகேஷின் முன் முயற்சியில் ஹைகூ திருவிழா போன்ற விழாக்களில் ஹைகூ கொண்டாடப்பட்டது.

இன்றைக்கு சற்றேறக்குறைய 500 ஹைகூ நூல்கள் வெளிவந்துள்ளன.

ஹைகூவின் கிளை வடிவங்களான மறைக்கூ, சென்ரியூ, ஹைபுன், ஹைகா போன்ற வடிவங்களி தமிழ் ஹைகூப்புவர்கள் பின்னி பெடலெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த 5.12.2010 சென்னை கன்னிமாரா நூலகத்தில் ஹைகூ திருவிழா கோலாகலமாய் நிகழ்ந்தது. அன்றைக்கு தொடங்கிய அமுதபாரதி, தமிழன்பன் தொடங்கி நேற்றைக்கு எழுத வந்திருக்கும் புலவர் வரை விழாவுக்கு வந்து மாலை வரை மழையைப் பொருட்படுத்தாமல் கலந்து சிறப்பித்தார்கள்.

ஹைகூ நூல்களில் பலவும் பதர்கள் என்பதும் பல ஹைகூக்கள் தேறவே தேறாது என்பது பகல் நேரச் சூரியன்.

மொத்த தமிழ் ஹைகூவையும் தரம் பிரித்தால் நூறு ஹைகூ கிடைத்தால் நான் தன்யனானேன்.

மின் சிக்கனவாரம் ... ஓர் யோசனை!

போனவாரம் சம்சாரம் சண்டபோட்டு ''வூட்டுக்கு ஒரு வேல செய்யா! போய் கெரண்டு பில் கட்டிட்டு வா'' எனப் பகர்ந்தாள்.

''தோ பார்றா... கெரண்டே கெடயாது'' கெரண்டு பில் மட்டும் வருமாம். இந்த கேறாமய. எங்க போய் சொல்ல..

ஈபி ஆபீசுல போனா... அங்க ஒரு போஸ்டர் ''மின் சிக்கன வாரம் 12.12.10 - 20.12.10. வரை'' அட்ரா சக்க!

மின் சிக்கனத்துக்கு பலான பலான யோஜனைங்க சொல்லியிருந்தாங்க பா,

தோஸ்த்து.. எனக்கு தெரிஞ்சத அப்டியே சொல்ட்டா.

இப்போ சீறாதே. மின்சார மந்திரி அவுரையே இன்னும் நூறு வருஷத்துக்கு இதே டிபார்ட்மென்ட்ல கண்டினியூ பண்ண சொல்ங்கப்பா..

மின்சாரத்தை சேமிக்கறதுன்னா.. ஏற்றுமதியே பண்ணலாம்.

நீ இன்னா பா சொல்ற!

தமிழில் ஹைகூ வுக்கென முதன்முதலாய் தயாரானது புதுவையின் 'கரந்தடி' இதழ். சீனு தமிழ் மணியை ஆசிரியராக கொண்ட கரந்தடி இதழின் வெள்ளிவிழா. நவம்பர் 2010ல் புதுவையில் நிகழ்ந்தது. அடாத மழையிம் சுமார் நூறு பேர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஓவிய கண்காட்சி ஹைகூ வாசிப்பு என பலத்துளிகள் நிகழ்வுக்கு சிறப்பு சேர்த்தன!

4) தூறல்

தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கி கொண்டிருக்கிற நேரத்தில் ஒரு சிற்றிதழ்!தூறல்!

சிறப்பான படைப்புகளோடு சிறந்த கோட்டோவியங்களும் கலந்து சிற்றிதழ்களுக்கு உரிய கல்யாணக்குணமான தாமதத்தோடு பிரசவித்திருக்கிறது. தூறல் ஒன்பதாம் இதழ். கவிதை, கட்டுரை, ஆய்வு, நூல்/குறும்பட விமர்சனம் என பல்சுவைகளைக் கொண்ட தூறலின் சுவை யறிய...

தூறல்

சந்தியூர் கோவிந்தன்
2/10 முத்தாக் கவுண்டர் தோட்டம்
சந்தியூர் அஞ்சல்,
சேலம் மாவட்டம் - 636 203
பேசி 98946 40464
மின்னஞ்சல் govimallur@gmail.com

5) தமிழில் ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு நல்ல ஹைகூ தொகுப்பு நா.விச்வநாதனால் தரப்பட்டுள்ளது. முன்னில் அமரும் பனித்துளி.

பனித்துளியின் ரெண்டு மூணு துளிகளிதோ

தவளை மொழிக்கு
அகராதியில் தேடாதேபொருள்
முகிலைப் பிடி விரைந்து

விருந்தாளி பையில் திராட்சை
பொருளற்ற கூடத்துப் பேச்சு
உறங்கும் குழந்தைகள்

ஓய்ந்த போர்
பிணங்கள் பார்த்துக்கொள்ளும்
சிநேகிதமாய்

முழுதும் பருக..

இருவாட்சி - உதயக்கண்ணன்
41, கல்யாண சுந்தரம் தெரு
பெரம்பூர். சென்னை-11
விலை ரூ.40

தொடரும்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.