வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. நேர்காணல்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

கி.ராஜநாராயணன்

கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர்.

 

 

 

 
     
     
     
   
கதை சொல்லி
1
 
 

எஸ். ராமகிருஷ்ணன்

அன்று கதை தெரியாத சிறுவர்களே இல்லை. அது போலவே சிறுவர்களுக்கு விருப்பமாக கதை சொல்லும் பெரியவர்களும் இருந்தார்கள். ஊர் கிணற்றடியின் ஒரு பக்கம் தான் கதை சொல்லும் களம். இரவிலும் யாராவது ஒரு பெண் தண்ணீர் இறைக்க வந்து கொண்டேயிருப்பாள். கிணற்றில் வாளி விழும் சப்தம் கேட்பது ஆனந்தமாகயிருக்கும். கிணற்றை சுற்றிலும் சிமெண்டால் கட்டியிருப்பார்கள். அத்துடன் கிணற்றடியில் எப்போதும் குளிர்ச்சியிருக்கும்.

அங்கே நாலைந்து பேராக துவங்கும் கதை சொல்லும் நிகழ்ச்சியின் முடிவில் பத்துபேருக்கு மேலாக ஆகிவிடும். நாவிதர், மாட்டு தரகர் , சமையற்காரர், சலவை தொழிலாளி இவர்களே ஊரில் அதிகம் கதை அறிந்தவர்கள். பள்ளி ஆசிரியர்கள் எவருக்கும் தெரியாத கதைகள் இவர்களிடமிருந்தன. பெண்கள் இரவில் கதை சொல்வதில்லை. பலரும் பகலில் வேலை செய்தபடியே கதை சொல்லக்கூடியவர்கள். அதிலும் திருகை திரித்தபடியோ, நெல்அவித்தபடியோ, தென்னை ஒலையை பின்னியபடியே கதையை வளர்த்து சொல்வார்கள்.

அப்படி எண்ணிக்கையற்ற கதைகளை கேட்டிருக்கிறேன். கதை கேட்கும் ஒவ்வொரு சிறுவனும் தானே ஒரு கதையை சொல்ல துவங்கிவிடுவான். இதில் சுப்பையா என்ற சிறுவன் தினமும் கதை சொல்வான். அவன் எந்தக் கதையை துவக்கினாலும் நடுராத்திரி பனிரெண்டுயிருக்கும். ஒரு ஊர்ல ஒரு ராஜா என்று தான் ஆரம்பிப்பான். அவனுக்கு நடுராத்திரி பனிரெண்டு மணி என்பது அச்சமூட்டும் ஒரு நேரம். அதை விலக்கி அவனால் ஒரு போதும் கதை சொல்ல முடியாது.

 
  ---------------------------------  
  கதை சொல்பவர்களின் உடல் மொழி மற்றும் பாவனைகளை அறிந்து கொள்ள இந்த வீடியோ இணைப்புகள் உதவக்கூடும்.

 
 

Ki. Rajanarayanan Telling a Story
http://www.youtube.com/watch?v=bBkSEVzn46I

Traditional African Story Telling.
http://www.youtube.com/watch?v=WP_LTtFYt3A

Native American Indian Story Teller
http://www.youtube.com/watch?v=gAk5auElCDo

arab story teller
http://www.youtube.com/watch?v=izSfwz2Ewh4

Marrakesh Storyteller
http://www.youtube.com/watch?v=zYrOii-zHZo\

Chinese Storyteller Eric Shepherd
http://www.youtube.com/watch?v=ephWySu6lQk&feature=related

Rakugo Japanese Storyteller
http://www.youtube.com/watch?v=Vaf0esKLMZg

நன்றி: எஸ். ராமகிருஷ்ணன்

 
  ---------------------------------  
     
     
 

 

 

 
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  கதை சொல்லி

கதை சொல்லி
 
# கதைசொல்லிகள் கதை கேட்பு
23. ஜீ.முருகன் லிவி
22. கல்கி லிவி
21. பாமா  லிவி
20. எம். ஜி. சுரேஷ் லிவி
19. ந. முத்துசாமி இதயா
18. அ. வெண்ணிலா றெமியதாஸ்
17. லிவிங் ஸ்மைல் வித்யா லிவி
16. அழகிய பெரியவன் லிவி
15. அஜயன் பாலா சித்தார்த் றெமியதாஸ்
14. சா. கந்தசாமி லிவி
13. ஷோபா சக்தி லிவி
12. குட்டி ரேவதி லிவி
11. அய்யப்ப மாதவன் லிவி
10. பவா செல்லதுரை லிவி
9. சாரு நிவேதிதா லிவி
8. மனுஷ்யபுத்திரன் லிவி
7. இந்திரா பார்த்தசாரதி ஆதவன்
6. பாஸ்கர் சக்தி லிவி
5. கோவை ஞானி லிவி
4. பாவண்ணன் லிவி
3. கி. ராஜநாராயணன் ஆதவன்
2. கௌதம நீலாம்பரன் ஆதவன்
1. தமிழ்மகன் ஆதவன்

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)


  </