வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. நேர்காணல்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

கி.ராஜநாராயணன்

கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர்.

 

 

 

 
     
     
     
   
கதை சொல்லி
1
 
 

பாவண்ணன் 

பாஸ்கரன் என்ற இயற்பெயருடைய இவர் பாவண்ணன் என்னும் புனைப்பெயரில் எழுதுகிறார். புதுச்சேரியில் பிறந்தவர். கவிதை சிறுகதை நாவல் குறுநாவல் திறனாய்வுக் கட்டுரை எழுதுகிறார். சிறுபத்திரிக்கைகளில் எழுதத் தொடங்கி அனேகமாக எல்லாப் பத்திரிகைகளிலும் எழுதுகிறார்.

கவிதைத் தொகுதிகள்

1. குழந்தையைப் பின்தொடரும் காலம்
2. கனவில் வந்த சிறுமி
3. புன்னகையின் வெளiச்சம்

சிறுகதைத்தொகுதிகள்

1. வேர்கள் தொலைவில் இருக்கின்றன
2. பாவண்ணன் கதைகள்
3. வெளiச்சம்
4. வெளiயேற்றம்
5. நேற்று வாழ்ந்தவர்கள்
6. வலை
7. அடுக்கு மாளiகை
8. நெல்லித்தோப்பு
9. ஏழுலட்சம் வரிகள்
10. ஏவாளiன் இரண்டாவது முடிவு
11. கடலோர வீடு
12. வெளiயேற்றப்பட்ட குதிரை
13. இரண்டு மரங்கள்

கட்டுரைத்தொகுதிகள்

1. எட்டுத்திசையெங்கும் தேடி
2. எனக்குப் பிடித்த கதைகள்
3. ஆழத்தை அறியும் பயணம்
4. தீராத பசிகொண்ட விலங்கு
5. எழுத்தென்னும் நிழலடியில்
6. வழிப்போக்கன் கண்ட வானம்
7. இருபத்திரண்டு அட்டைப்பெட்டிகள்
8. மலரும் மணமும் தேடி
9. நதியின் கரையில்
10. துங்கபத்திரை
11. ஒரு துண்டு நிலம்
12. உரையாடும் சித்திரங்கள்
13. வாழ்வென்னும் வற்றாத நதி

குறுநாவல்கள்

1. இது வாழ்க்கையில்லை
2. ஒரு மனிதரும் சில வருஷங்களும்

நாவல்கள்

1. வாழ்க்கை ஒரு விசாரணை
2. சிதறல்கள்
3. பாய்மரக்கப்பல்

மொழிபெயர்ப்புகள்

1. நவீன கன்னடக் கவிதைகள்
2. பலிபீடம்
3. நாகமண்டலம்
4. மதுரைக்காண்டம்
5. வினைவிதைத்தவன் வினைஅறுப்பான்
6. நீர்யானை முடியற்றதாய் இருந்தபோது
7. புதைந்த காற்று
8. ஊரும் சேரியும்
9. கல்கரையும் நேரம்
10. கவர்மென்ட் பிராமணன்
11. பசித்தவர்கள்
12. அக்னியும் மழையும்
13. பருவம்
14. ஆயிரம் மரங்கள் ஆயிரம் பாடல்கள்
15. நூறு சுற்றுக் கோட்டை
16. வடகன்னட நாட்டுப்புறக்கதைகள்
17. ஓம்நமோ

குழந்தைப்பாடல்கள்

1. பொம்மைக்கு ஓர் இடம் வேண்டும்
2. பச்சைகிளியே பறந்துவா

 

 
     
     
     
     
     
     
 

 

 

 
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  கதை சொல்லி

 

 
கதை சொல்லி - பாவண்ணன்

 

 

லிவி

 

 

பெங்களூரின் காலைப் பனியில் நடந்துக் கொண்டே அன்று எழுத்தாளர் பாவண்ணனை தமிழ் ஸ்டுடியோவின் கதைச் சொல்லி பகுதிக்காக சந்திக்க போகிறோம் என்ற நினைப்பு மனதில் ஒரு உற்சாகத்தை உருவாக்கிக் கொண்டிருந்தது. கல்லூரி நாட்களில் அவர் எழுதிய "ஏவாளின் இரண்டாம் உலகு" புனைவுலகில் வாழ்வதற்கு என்னை பழக்கிற்று. அவரைத் தொடர்ந்து வாசிக்கத் தொடங்கும் ஒரு வாசகனுக்கு அலுப்பை ஏற்படுத்தாத வசீகர சொல் நடை கொண்டவர். காலையில் அவரைத் தொடர்பு கொண்டதும் தன்னை அவர் பணிபுரியும் அலுவலகத்தில் வந்து சந்திக்கும் படி கேட்டுக் கொண்டார்.

ஜெயநகர் 5 வது ப்ளாக் என்ற முகவரி எனக்கு ஈடன் தோட்டத்தை ஏனோ நினைவு படுத்தியது? எனக்குப் பிடித்த எழுத்தாளர் அங்கு வசிப்பதே காரணமாய் இருக்கலாம். ஈடன் தோட்டத்திற்கு ஆட்டோக்காரருக்கு வழி தெரியவில்லை. இறுதியில் கடவுளே கன்னடத்தில் வழி சொன்னார். தன் இருப்பிடம் தேடி அலைய விடாமல் அவரே வாசலில் நின்று வரவேற்றார்.

ஒரு புன்னகையுடன் அறிமுகம் செய்து கொண்டோம். அருகே இருந்த மிக பெரிய மைதானதின் ஒர் மூலையில் அமர்ந்து கொண்டு கதை சொல்லிக்காக அவரே எழுதிய இரண்டு கதைகளை, அவரது குரலில் பதிவு செய்யத் தொடங்கினோம். தூரத்தில் சில இளைஞர்கள் கால்பந்து விளையாடிக்கொண்டு இருந்தார்கள். பாவண்ணன் கூடு வாசகர்களுக்கு வணக்கம் சொல்லி கதையை வாசிக்கத் தொடங்கினார். கனவு காண்பது போல் கதையை பதிவு செய்யத் தொடங்கினேன். அவர் கதை வாசித்து முடிந்த பின்னர் தான் கவனித்தேன் கதை பதிவு செய்யும் கருவியில் கதை முழுதாக பதிவாகவில்லையென்று.

விலக்கப்பட்ட கனியை (ஆப்பிள்) தின்ற பின் கடவுள் முன் நிற்கும் ஆதாமைப் போல் உணர்ந்தேன். இக் கடவுள் என்னை சபிக்கக் கூடும். என்னை இத்தோட்டதில் இருந்து விலக்கி வைப்பபார். என் சந்ததியை ஜென்ம பாவங்களோடு பிற‌க்க வைப்பார். பெண்ணை அடிமை பட்டுக்கிடவென அவர் சினம் கொள்ளக்கூடும். அவள் பிள்ளைகளை பெரும் துயருக்கு பின்னரே ஈன்றெடுக்க வேண்டும் என்று சம்பந்தமே இல்லாமல் கடியக்கூடும். எதற்கும் துணிந்தே பாவண்ணன் முன் நின்றேன்.

"பரவாயில்லை விடுங்க, அதனால் என்ன ? மறுபடியும் பதிவு பண்ணிக்கலாம்" என்றார். நான் நிம்மதி பெரு மூச்சு விடுவதற்குள் பாட்டரி தீர போவதற்காண அறிகுறியை காட்டியது. என் பதற்றத்தை புரிந்து கொண்ட அவர், தன் மகனை தொடர்பு கொண்டு வேறு வழிகளை ஆலோசிக்கத் தொடங்கினார்.பின் தானே கதையை பதிவு செய்து எங்களுக்கு தருவதாக சொன்னர்.

என்னை ஆற்றுவதற்காக தான் சொல்கிறார் என எண்ணிக் கொண்டேன். தன் அலுவலக காண்டீனுக்கு அழைத்துச் சென்று தேனீர் பஜ்ஜியுடன் உபசரித்தார். பிறகெங்கு இவர் கதை தரப்போவது அய்யகோ! தோல்வியுடனே தாயகம் திரும்புவதை நினைத்து மனம் வருந்தினேன். மறுநாளுக்கு அடுத்த நாள் அவரை தயக்கத்துடன் தொடர்பு கொண்ட போது பதிவு செய்த சி.டியை தம்மிடம் வந்து பெற்றுக் கொள்ள முடிந்தால் பெற்றுக்கொள்ளளாம் என்றார். எழுத்தாளர்களின் நேரத்தை வீணடிக்கும் வாசகர்களுக்கு கட்டணம் வசூலிப்பது அல்லது பிடிக்காத கேள்வியை கேட்கும் வாசகர்கள் வோட்கா போத்தல் வாங்கி வர வேண்டும் என சும்மாநாச்சுக்கும் அன்பு கட்டளை இடும் எழுத்தாளர்கள் கவனிக்க!.

பழகுதற்கு இனிமையான பாவண்ணன் அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். இக் கதை சொல்லியில் அவரின் "காலணி ", " கழிமுகம்"கதைகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

( இனி கதைசொல்லி பகுதி ஒவ்வொரு வாரமும் திங்களன்று வெளிவரும் )


பாவண்ணன்  - காலணி

 

நிமிடம்: 17 --  நொடி: 50

 



பாவண்ணன்  - கழிமுகம்
நிமிடம்: 21 --  நொடி: 12

 
 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

</