இதழ்: 18     ஆடி (15 - 30) (July 15 - 30), 2014
   
 
  உள்ளடக்கம்
 
தியடோர் பாஸ்கரனுடன் - யமுனா ராஜேந்திரன் உரையாடல் - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
காணும் முறைகள் - ஜான் பெர்ஜர் - தமிழில்: யுகேந்தர்
--------------------------------
விருப்பம் வேலையானால் – பிலிம்நியூஸ் ஆனந்தன் - 5 - தினேஷ் குமார்
--------------------------------
தமிழில் சினிமா சஞ்சிகைகள் - அறந்தை மணியன்
--------------------------------
இந்திய சினிமா வரலாறு – 4 - பி.கே.நாயர்
--------------------------------
உலக சினிமா சாதனையாளர்கள் - 4 - நிமாய் கோஷ் - சுனிபா பாசு
--------------------------------
கே.வி. சுப்பண்ணா உடன் ஒரு நேர்காணல் - சந்திப்பு: ஞாநி
--------------------------------
நூல் விமர்சனம் - முரண்படும் படிமங்கள் - கே.எஸ்.சங்கர்
--------------------------------
திரைப்படம் எடுப்பது: சில குறிப்புகள் - அகிரா குரோசவா
 
   


   

 

 

காணும் முறைகள் - ஜான் பெர்ஜர்

- தமிழில்: யுகேந்தர்


குறிப்பு: ஜான் பெர்ஜர் எழுதிய மிக முக்கியமான புத்தகமான Ways of Seeing பார்த்தலில் இருக்கும் பல கூறுகளை நுட்பமாக அலசுகிறது. ஒருமுறை தமிழ்த்திரைப்பட ஆய்வாளர் தியடோர் பாஸ்கரன் எனக்கு இந்த புத்தகத்தை அறிமுகப்படுத்தினார். சில பக்கங்களை படித்தவுடனேயே நண்பர் யுகேந்திரனிடம் இதனை தமிழில் மொழியாக்கம் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். பிறகு முழு புத்தகத்தையும் படித்து முடித்தவுடன், பார்த்தலில் இருக்கும் நுட்பங்களை அறிந்து வியந்தேன். அந்த வியப்பை, காட்சி ஊடகத்தின் சிறப்பை தமிழ் பார்வையாளர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கில் வேஸ் ஆப் சீயிங் என்கிற இந்த நூலை தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிடுகிறோம். இந்த புத்தகத்தை எனக்கு அறிமுகம் செய்த தியடோர் பாஸ்கரன் எப்போதும் என் நன்றிக்கு உரியவர். தமிழில் மொழியாக்கம் செய்வதில் தீவிர அக்கறை எடுத்து செய்து வரும் நண்பர் யுகேந்திரனுக்கு பேசாமொழி சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
--------------------------------------------------------------------------------------------------

1

வார்த்தைகளுக்கு முன்பு காண்பது வருகிறது. பேசுவதற்கு முன் குழந்தை பார்த்து அறிந்துக்கொள்கிறது.

வேறொரு விதத்திலும் வார்த்தைகளுக்கு முன்பு காண்பது வருகிறது. பார்ப்பதே நம்மை சுற்றியுள்ள உலகில் நம் இடத்தை நிலைநாட்டுகிறது; நாம் அந்த உலகை வார்த்தைகளால் விளக்குகிறோம், ஆனால் வார்த்தைகளால் உலகம் நம்மை சுற்றியுள்ளது என்பதை எப்போதும் மாற்ற முடியாது. நாம் பார்ப்பதற்கும் நம்முடைய புரிதலுக்குமான தொடர்பு முடிவற்றது. ஒவ்வொரு மாலையும் சூரியன் மறைவதை காண்கிறோம். பூமி சூரியனைவிட்டு திரும்புகிறது என்பது நமக்கு தெரியும். எனினும் நம் அறிவு, அறிவியல் விளக்கம், நாம் பார்க்கும் காட்சிக்கு எப்போதும் பொருந்துவதில்லை. ஒரு ஓவியத்தை பார்ப்பதற்க்கும் வார்த்தையால் விளக்குவதற்கும் எப்போதும் இருக்கும் இடைவேளையை "கற்பனைகளின் திறவுகோல்" [The Key of Dreams] என சர்ரியலிஸ [அடிமன வெளிப்பாட்டிய] ஓவியர் மேக்ரிட்டே (Magritte) கூறினார்.

நமக்கு என்ன தெரியும் அல்லது எதை நம்புகிறோம், அதன் தாக்கம் நம் காணும் முறையில் இருக்கும். இடைக்காலத்தில் நரகத்தின் இருப்பை மக்கள் நம்பியபோது, நெருப்பின் தோற்றம் இப்போது அர்த்தப்படுவது போலல்லாமல் வேறொரு அர்த்தத்தை கொடுத்திருக்கும். இருப்பினும், நரகம் குறித்த அவர்களின் எண்ணமே தீ பரவுதல், மீதமுள்ள சாம்பல் மற்றும் தீக்காய வலியினால் அவர்களுக்கு ஏற்படும் அனுபவம் போன்ற காட்சிகளுக்கு காரணமாகியது.

காதல்வயப்பட்டிருக்கும் போது, எந்த ஒரு வார்த்தைகளும் தழுவதலும் காதலியின் பார்வையிலுள்ள முழுமைக்கு இணையாகாது. காதல் செய்யும் போது மட்டுமே அந்த முழுமைக்கு தற்காலிகமாக இடமளிக்கிறது.

நாம் எதை நோக்குகிறோமோ அதையே காண்கிறோம். எதை பார்ப்பது என்பது தேர்ந்தெடுக்கும் ஒரு செயலாகும். இந்த செயலின் விளைவாக, நாம் எதை காண்கிறோமோ அது நம் எல்லைக்குள் வசப்படுகிறது, எனினும் நம் கைகளின் எல்லைக்குள் என்று அவசியமில்லை.

தொடுதலின் மூலம் ஒருவர் தம் இடங்குறித்து ஒரு பொருளோடு தொடர்பு படுத்திக்கொள்கிறார். (கண்களை மூடி ஒரு அறையினுள் சுற்றி வாருங்கள், தொடுகைத்திறன் ஒரு நிலையான, வரையறுக்கப்பட்ட காணும் திறன் என்பதை கவனியுங்கள்.) நாம் எப்போதும் ஒரே ஒரு பொருளைக் காண்பதில்லை. நாம் பொருட்களுக்கும் நமக்கும் இடையேயான தொடர்பையேக் காண்கிறோம். நமது பார்வை தொடர்ந்து இயங்கும், தொடர்ந்து நகர்ந்துக் கொண்டும், தொடர்ந்து பொருட்களை ஒரு வட்டத்தில் நிலை நிறுத்தும், தற்போதுள்ள நமக்கான ஒரு அமைப்பாகிறது.

நம்மால் பார்க்க முடிந்த உடனே, நம்மையும் மற்றவர்கள் பார்க்கலாம் என்று உணர்கிறோம். மற்றவர்களின் கண்கள் நம் கண்களோடு இணைந்து, நாம் காணக்கூடிய இந்த உலகத்தின் ஒரு பகுதி என்பதை முழுமையாக நம்பகமாக்குகிறது. நாம் அங்கே இருக்கும் மலையை காண்கிறோம் என்று ஒப்புக்கொள்வோமேயானால், நாம் அந்த மலையிலிருந்துக் காணப்படலாம் என்பதை முன்மொழிவோம். பார்க்கும் ஆற்றலின் எதிரிடை பண்பு என்பது பேசுப்படும் வசனத்தை விட மிகவும் அடிப்படையானதாகும். மற்றும் பேச்சு என்பது 'நாம் எப்படி ஒரு பொருளைக் காண்கிறோம் என்பதை எழுத்தியல்பாக எடுத்துரைத்தல் அல்லது ஒருவர் எப்படி காண்கிறார் என்பதை கண்டுணர்ந்து' சொற்களால் தெரிவிக்கும் முயற்சியாகும்.

இந்த புத்தகத்தில் இந்த வார்த்தயை பயன்படுத்தும் அர்த்தம், அனைத்து படிமங்களும் மனிதனால் உருவாக்கப்பட்டதாகும்.

ஓர் படிமம் என்பது பார்ப்பதற்காக மீள் உருவாக்கம் செய்யப்பட்டது. அது ஒரு தோற்றம் அல்லது தோற்றங்களின் தொகுதி, முதலில் தோன்றிய இடத்திலிருந்தும் காலத்திலிருந்தும் பிரித்தெடுக்கப்பட்டு சில தருணங்கள் அல்லது சில நூற்றாண்டுகள் பாதுக்காக்கப்படுகிறது. ஒளிப்படமும் கூட, ஒளிப்படங்கள் பெரும்பாலும் கருதுவது போல் ஒரு இயந்திர ஆவணமல்ல. ஒவ்வொரு முறை நாம் ஒளிப்படம் பார்க்கும் போது, ஒளிப்பட கலைஞர் சாத்தியமான பல கோணங்களிலிருந்து ஒரு கோணத்தை தேர்ந்தெடுத்துள்ளார் என்பது நமக்கு சிறிதளவேனும் தெரியும். சாதாரண குடும்ப ஒளிப்படத்திலும் இது உண்மையே. ஒளிப்பட கலைஞரின் காணும் முறை அவரது பொருள் தேர்வில் பிரதிபலிக்கிறது. ஓவியரின் காணும் முறை அவரது பொருள் தேர்வில் பிரதிபலிக்கிறது. கேன்வாஸ் அல்லது தாளில் ஓவியரின் கோடுகள் மூலம் அவரது காணும் முறை மாற்றியமைக்கப்படுகிறது. இருப்பினும், ஒவ்வொரு படிமத்தை பார்ப்பதற்கென்று ஒரு முறை உள்ளது. நமது கருத்து அல்லது ஓர் படிமத்தை பாராட்டுவது என்பது நமது பார்க்கும் முறையை சார்ந்துள்ளது. (எடுத்துக்காட்டாக, படிமத்தில் இருபதில் ஒருவராக ஷீலா இருக்ககூடும், ஆனால் சொந்த காரணத்திற்காக நமது கண்கள் அவளை மட்டுமே பார்க்கும்.)

ஆரம்பத்தில், இல்லாத ஒன்றை கண்முன் கொண்டுவரவே படிமங்கள் உருவாக்கப்பட்டது. ஓர் படிமம் நெடுங்காலம் நீடித்திருக்க முடியும் என்பது படிப்படியாக தெளிவானது, யாரோ ஒரு முறை பார்த்ததன் விளைவால் அந்த பொருள் எவ்வாரு மற்றவர்களால் பார்க்கப்பட்டது என்பதும் தெரிந்தது. பின்னர், படிமம் உருவாக்கியவரின் குறிப்பிட்ட பார்வையும் ஆவணத்தின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்டது. 'X','Y'யை எப்படி கண்டார் என்பதன் ஆவணமே ஒர் படிமம். வரலாற்றின் விழிப்புணர்வு அதிகரித்ததின் விளைவாக இது இருந்தது. துல்லியமான ஒரு தேதியை கூற முயற்சிப்பது சரியாகாது. ஆனால் நிச்சயமாக ஐரோப்பாவில், இப்படியான உணர்வு மறுமலர்ச்சியின் ஆரம்பத்திலிருந்தே இருந்தது.

கடந்த காலத்தில் வேறு எந்த விதமான சின்னமும் அல்லது நூலும் மக்கள் சூழந்த உலகை குறித்து இது போன்று நேரடி சாட்சியம் அளித்ததில்லை. இந்த வகையில் படிமங்கள் மிகவும் துல்லியமானதும் இலக்கியத்தைவிட உயர்ந்ததாகவும் இருக்கிறது. இப்படி சொல்வதனால், கலை உணர்ச்சி அல்லது கற்பனை தரம் கொண்ட எழுத்தை வெறும் ஆவண சான்று என்று மறுக்கவில்லை. அதிக கற்பனை தரம் கொண்ட படைப்பில், ஓவியரின் அனுபவத்தை மேலும் ஆழ்ந்து கூற அனுமதிக்கிறது.

இருப்பினும் ஒர் படிமத்தை கலை படைப்பென காட்சிப்படுத்தும் போது, மக்கள் பார்க்கும் முறையை கீழ் குறிப்பிட்டுள்ள யூகங்கள் தாக்கம் செலுத்துகின்றன்.

அழகு
உண்மை
நுண்ணறிவு
நாகரிகம்
வடிவம்
அந்தஸ்து
இரசனை, முதலியன

தற்போதைய உண்மை நிலையினால், இந்த அனுமானங்கள் கடந்ததை தெளிவில்லாததாக்குகிறது. இவை தெளிவுப்படுத்துவதற்கு பதில் புரியாததாக்குகிறது. சரியாக அது என்ன என அங்கீகரிக்க, கண்டுபிடிக்க கடந்தவை அங்கேயே இருப்பதில்லை. கடந்த கால மற்றும் நிகழ் காலத்தின் உறவை உள்ளடக்கியதே வரலாறு. இதன் விளைவாக, தற்காலத்தின் அச்சம், கடந்த காலத்தை புதிராக்க வழிவகுக்கிறது. கடந்தவை தொடர்ந்து வாழ்வதற்கல்ல, எப்படி செயல் பட வேண்டும் என வரையறுக்கும் முடிவங்களின் பெட்டகம். கடந்தவையின் கலாச்சாரம் புதிராக்கம் இரட்டை இழப்புகளை கொடுக்கும். கலை படைப்புகள் தேவையில்லாமல் தொலைவில் வைக்கப்படும். செய்ய வேண்டிய சிலவற்றை முடிவுக்கு கொண்டுவரும்.

ஒரு இயற்கைக்காட்சியை பார்க்கும் போது, நம்மை அதில் இருத்திக்கொள்கிறோம். கடந்தகால கலைப்படைப்பை பார்த்தால், நாம் வரலாற்றில் நம்மை இருத்திக்கொள்வோம். அதை நாம் பார்க்க தடைவிதிக்கப்பட்டால், நமக்கு சொந்தமான வரலாற்றை நாம் இழக்கிறோம். இந்த இழப்பினால் யாருக்கு நன்மை? இறுதியில், கடந்த கால கலைப்படைப்பை புதிராக்குக்கிறார்கள். தனி சலுகை பெற்ற ஒரு சிறுபான்மை ஆளும் கூட்டம் வரலாற்றை தங்களுக்கு நியாயப்படுத்த முயலும். அப்படியான நியாயப்படுத்தல் நவீன முறையில் பயனளிக்காது. அதனால், தவிற்க இயலாமல், அது புதிராக்குகிறது.

இப்படியான புதிராக்கம் குறித்து ஒரு எடுத்துக்காட்டை பார்ப்போம்.

- தொடரும் -

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </