வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை
இதழ்: 2 :: சித்திரை (May), 2015
   
 
  உள்ளடக்கம்
 
நகுலனின் இரு கவிதைகள் - விக்ரமாதித்தன் நம்பி
--------------------------------
மனிதன் - ஈ.பீ.டொங்காலா - தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்
--------------------------------
வந்தாரங்குடி - கண்மணி குணசேகரன் - தமிழ்மகன்
--------------------------------
கோடை - எம்.ரிஷான் ஷெரீப்
--------------------------------
தமிழ் ஸ்டுடியோ நடத்திய சிறுகதை பயிற்சிப் பட்டறை - 1 - தினேஷ்
--------------------------------
மூர் மார்க்கெட் எரிந்து முடிந்தது - விட்டல்ராவ்
--------------------------------
அஞ்சலி : திருமதி. கமலினி செல்வராஜன் - எம்.ரிஷான் ஷெரீப்
--------------------------------
மொழியும், இலக்கியமும் - விட்டல்ராவ்
--------------------------------
 
   
 
1

 
 
 
 
   
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
அஞ்சலிக் குறிப்பு

திருமதி. கமலினி செல்வராஜன் (1954 - 7 ஏப்ரல் 2015)

- எம்.ரிஷான் ஷெரீப்


இலங்கை வானொலியின் இலங்கை, இந்தியத் தமிழ் ரசிகர்கள் எவராலும் அதன் சிரேஷ்ட அறிவிப்பாளர் திருமதி. கமலினி செல்வராஜனை இலகுவில் மறந்து விட முடியாது. அறிவிப்பாளர், தமிழ், சிங்கள திரைப்பட, நாடக நடிகை, செய்தி வாசிப்பாளர், தொலைக்காட்சி மற்றும் மேடை நிகழ்ச்சித் தொகுப்பாளர், பின்னணிக் குரல் கொடுக்கும் கலைஞர், பாடகி, நாட்டுக் கூத்துக் கலைஞர் என இலங்கையின் தவிர்க்க முடியாத ஆளுமையாகத் திகழ்ந்தவர் இவர்.

இலங்கையில், யாழ். பருத்தித்துறை புலோலியூரில் தமிழ் வித்துவப் பரம்பரையில் உதித்த தமிழ் பண்டிதர் புலோலியூர் மு. கணபதிப்பிள்ளைக்கும், வயலின் வித்தகியாகத் திகழ்ந்த தனபாக்கியத்திற்கும் மூத்த மகளாக 1954 ஆம் ஆண்டு பிறந்த இவர் இலங்கையில் தமிழ் முற்போக்கு எழுத்தாளர்களின் எழுச்சிக் காலமாக இருந்த 1970 காலப் பகுதியில், முற்போக்கு எழுத்தாளர் அமைப்பில் பிரதானமானவர்களில் ஒருவராக இருந்த கவிஞர் சில்லையூர் செல்வராஜனைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். பல்கலை வேந்தர், இலக்கியச் செம்மல், பளிங்குச் சொல் பாவலர், பாவேந்தர் ஆகிய பட்டங்களைப் பெற்ற திறமையான கவிஞர் சில்லையூர் செல்வராஜன்.

இலங்கையில் தமிழ் திரைப்படங்கள் வெளிவரத் தொடங்கியிருந்த இக் காலப்பகுதியில், இத் தம்பதிகள் இருவரும் ஜோடியாக பிரதான கதாபாத்திரங்களையேற்று நடித்த ‘கோமாளிகள்’ திரைப்படம் பெரும் வெற்றியையும், வரவேற்பையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ், சிங்களம், ஆங்கிலமென மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற திருமதி.கமலினி செல்வராஜன், தனது பட்டப்படிப்புக்காகத் தேர்ந்தெடுத்திருந்தது நாட்டுக் கூத்துக் கலைகள் பற்றிய ஆய்வு. இவ்வாறாக இயல், இசை, நாடகம் ஆகிய கலைகள் மீது பேரார்வம் கொண்டிருந்த இவர், கணவரின் மறைவிற்குப் பின்னர் அவரது கவிதைகளைத் தொகுத்து ‘சில்லையூர் செல்வராசன் கவிதைகள்’ என நூலுருவில் வெளியிட்டிருக்கிறார்.

2010 ஆம் ஆண்டு நோர்வே நாட்டின் தமிழ் ஒபரே கலை மன்றத்தின் அழைப்பின் பேரில் நோர்வே நாட்டுக்குச் சென்றிருந்த இவர் அங்கு ஒரு வருடம் தங்கி தமிழ் கலை பண்பாட்டை அழிந்துவிடாமல் பேணுவதில் ஆர்வம் கொண்டிருந்தவர்களின் சந்ததிகளுக்கு, மரபுக் கலைகளில் ஒன்றான ‘நாட்டுக் கூத்தை’ கற்பித்து அரங்கேற்றி சாதனை படைத்துள்ளார்.

இலங்கையிலும், சர்வதேசத்திலும் தமிழுக்காகவும் கலைக்காகவும் பல விருதுகளைப் பெற்றுள்ள இவரை முத்தமிழுக்காக தனது வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்டவர் எனக் கூறினால் அது மிகையாகாது.

ஆழ்ந்த அஞ்சலிகள் !


மேலே செல்க...(go to top)
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

  </