இதழ்: 1, நாள்: 15-டிசம்பர்-2012
   
 
  உள்ளடக்கம்
 
பழையத் திரைப்படம் - அ.முத்துலிங்கம்
--------------------------------
காலத்தின் கலைஞன் சாதத் ஹசன் மண்ட்டோ - உதய ஷங்கர்
--------------------------------
திரைமொழி - ராஜேஷ்
--------------------------------
ஒரு கதை கவிதையாகும் தருணம் - யாளி
--------------------------------
லீனாவுடன் நேர்காணல் - ஜெயச்சந்திரன் ஹஸ்மி
--------------------------------
ஜெயச்சந்திரன் ஹஸ்மியுடன் நேர்காணல் - சுரேஷ் சுந்தர்
--------------------------------
கல் மனிதர்கள் - கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி
--------------------------------
வரியும்...ஒளியும் - கார்த்திக் பாலசுப்பிரமணியன்
--------------------------------
சிக்கன் அலா கார்ட் - கார்த்திக் பாலசுப்பிரமணியன்
--------------------------------
கர்ண மோட்சம் - கார்த்திக் பாலசுப்பிரமணியன்
--------------------------------
குறும்பட சந்தை - அருண் மோகன்
--------------------------------
சிறுகதையும்....திரைமொழியும் - அருண் மோகன்
--------------------------------
         

 

சிறுகதையும்....திரைமொழியும்....

அருண் மோகன்

இந்த பகுதியில் காட்சி மொழியுடன் கூடிய சிறுகதைகளை அறிமுகப்படுத்துகிறோம். வாய்ப்பிருந்தால் நண்பர்கள் அதனை குறும்படமாக எடுக்க முயற்சிக்கலாம்.

-----------------------------------------------------------------------------------------------------------

எழுத்தாளர் ஜெயமோகன்

ஒரு நாவலை படமாக்கும்போது எழும் சில சிக்கல்கள் கூட ஒரு சிறுகதையை, அதுவும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் சிறுகதையை திரைப்படமாக அல்லது குறும்படமாக உருவாக்கும்போது எழுவதில்லை. மிக முக்கியமாக வாசிப்பு பழக்கம் இல்லாத நண்பர்கள் ஒரு படைப்பை உருவாக்கும்போது அது ஒரு தெளிவில்லாத அல்லது முழுமையற்ற படைப்பாகவே இருக்கும். வாசிப்பு பழக்கம் இல்லாதவர்களுக்கு, சுய அனுபவங்கள் நிறைய இருந்திருக்க வேண்டும். இரண்டுமே இல்லையென்றால் நிறைய நல்லப் படங்களை பார்த்திருக்க வேண்டும். இது எதுவும் இன்றி நல்ல படைப்பு ஒருவரிடம் இருந்து வெளிவர வாய்ப்பே இல்லை.

சில விஷயங்கள் நமக்கு புரியாமல் போவதன் அடிப்படையே நாம் அதன் மீது செலுத்தும் தெளிவற்ற கவனிப்பே. கொஞ்சம் உற்றுநோக்கினால், அல்லது அதை ஒரு பொருட்டாக நினைத்து அதற்காக நமது நேரத்தை செலவழித்தால் இங்கே புரியாதது என்று ஒன்றுமே இல்லை. சிக்மன்ட் பிராய்டின் நூல்களைப் படிக்கும்போது ஒரு பக்கத்தை முடிக்க சில சமயங்களில் எனக்கு ஒரு மாதம் கூட ஆகி இருக்கிறது. அதற்கான மற்ற தரவுகளை திரட்டி நான் படித்து, புரிந்துக் கொண்டு செய்யும் புன்முறுவல் ஒரு பித்தநிலையை கடந்த வந்தது போல் இருக்கும்.

எந்த விதமான சவாலான குறைபாடுகளும் இல்லாதவர்களே இந்த சமூகத்தில் வாழ அச்சப்படும்போது சில சவாலான குறைபாடுகளோடு பிறந்தவர்கள் வாழ்வதற்கு இது சாத்தியமான சமூகமே அல்ல. திரையரங்கங்கள் உள்ளிட்ட பல இடங்களில் மாற்று திறனாளிகளுக்கான வசதிகள் இருக்கிறதா என்று நினைத்துப் பார்த்தாலே இதற்கான அர்த்தம் விளங்கும்.

ஜெயமோகனின் "தம்பி" சிறுகதையை படித்து முடித்ததும் எனக்குள் எழுந்த கேள்விகள் எண்ணிலடங்காதவை. சில படைப்புகளை ரசித்துவிட்டு உள்ளே சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். சில படைப்புகளை ரசித்துவிட்டு அது கொடுக்கும் பாதிப்புகளை மீண்டும் மீண்டும் அசை போட வேண்டும். சமூகத்திற்கான மாற்றங்களை படைப்புகள் கொடுக்கும் இடம் அங்கிருந்துதான் தொடங்குகிறது.

Schizophrenia (பிளவாளுமை)

இதே மாதிரி ஒரு உளச்சிக்கலை சரியாக பதிவு செய்திருக்கும் திரைப்படங்களை தமிழில் சுட்டிக் காட்டி விட முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. உளச்சிக்கல்களை படமெடுக்கும் எத்தனை பேருக்கு அதிகபட்சம் பிராய்டு பற்றி தெரிந்திருக்கும். அல்லது இதுப் போன்ற சிறுகதைகளை எத்தனை பேர் படித்திருப்பார்கள். அப்படியான தேடல் உருவாவதே சிறந்த படைப்புகளை கொடுக்க இன்னொரு சிறந்த வழி என்று நினைக்கிறேன்.

இந்த கதையை படியுங்கள். குறும்படமாகவோ அல்லது பெரிய படமாகவே எடுப்பதற்கு சிறந்த சிறுகதைதான். படித்துவிட்டு சாதாரணமாக நகர்ந்து போய் விடாதீர்கள். கொஞ்சம் உள்ளுக்குள் அசைப் போட்டுப் பாருங்கள்.

தம்பி சிறுகதை: http://www.jeyamohan.in/?p=29490


தொடரலாம்.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </