சினிமா வடிவம்
Facebook இல் நடந்த திரைப்பட வடிவம் குறித்த விவாதத்தை இங்கே பகிர்ந்துக் கொள்கிறோம்.
முகமூடி…
மிஸ்கினின் முந்தைய திரைப்படங்களை மனதில் வைத்து இந்த படத்திற்கு செல்லாமல், வெற்று மனதோடு சென்று பார்த்தால், நிச்சயம் இந்த படம் ஒரு நேர்த்தியான படைப்பே.
மாற்றான்…
மாற்றான் திரைப்படத்தில் முன் வைக்கப்படும் அரசியல், Corporate களுக்கு எதிரானது. அதுவும் உலகின் மிக வேகமாக, அதிகமாக விற்பனையாகும் பால் உணவுப் பொருளை மையப்படுத்தி ஆனந்த் அதகளப்படுத்தி இருப்பார். மாற்றான் ஒரு மிக சிறந்த படைப்பு. Corporate அரசியல், உணவு அரசியல் தெரியாதவர்களால் மாற்றான் மட்டமாக்கப்பட்டுவிட்டது.
————————————————————------------------------------------------------------
விமர்சனங்களை இப்படியும் மாற்றி அமைக்கலாம். அல்லது நேர்மறையான சிந்தனை எனும் வஸ்துவைக் கொண்டு எல்லாவற்றையும் இப்படி நேர்மறையாகவே விமர்சிக்கலாம்.
கடல், ஆதிபகவன் போன்ற படங்களுக்கு இப்படியான விமர்சனங்கள்தான் வந்துக் கொண்டிருக்கிறது. மிக எளிமையான ஒரு கேள்வி என்னிடம் இருக்கிறது.
தினத்தந்தி போன்ற பத்திரிகையில் ஒரு அரசியல் கட்டுரை வெளிவருவதற்கும், உயிர்மை போன்ற சிற்றிதழில் ஒரு அரசியல் கட்டுரை வெளிவ்தற்கும், அரசியல் பின்புலத்தை அடிப்படையாக கொண்டு ஒரு கதை எழுதப்படுவதற்கும் என்ன வேறுபாடு? அல்லது இந்த மூன்றுக்கும் என்ன ஒற்றுமை?
ஏன் ஒருவர் அரசியலை பின்புலமாக வைத்துக் கொண்டு சிறுகதையோ அல்லது நாவலோ எழுத வேண்டும்? கட்டுரையாக எழுதி விட்டு போனால் என்ன? ஒரு தவறும் இல்லை.
வடிவங்கள்தான் வேறு. ஒன்று கட்டுரை. இன்னொன்று சிறுகதை அல்லது நாவல்.
அப்படிதான் சினிமாவும். சினிமா என்பது ஒரு வடிவம். அரசியல் நிகழ்வு ஒன்று கட்டுரையாக விவரிக்கப்படுவது போலவே ஒரு சிறுகதை எழுதப்பட்டால் அதை சிறுகதை என்று ஒப்புக்கொள்வீர்களா?
கட்டுரை என்பது ஒரு வடிவம். சிறுகதை என்பது ஒரு வடிவம். சினிமா என்பதும் இதிலிருந்து மாறுபட்டு காட்சிகளால் விளக்கும் புதியதொரு வடிவம்.
நீங்கள் எதுபற்றி வேண்டுமானாலும் பேசுங்கள். கடுமையான அரசியல் பற்றி பேசுங்கள். பொதுவுடைமை பற்றி பேசுங்கள். ஆனால் அது எந்த வடிவத்திற்காக, அல்லது எந்த வடிவில் பேசுகிறீர்கள் என்பதே எனது கேள்வி. ஒரு படம் மிக சிறந்த அரசியலை முன்வைக்கிறது என்பதற்காக அதை மிக சிறந்த திரைப்படம் என்று வரையறை செய்து விடமுடியுமா?
நான் அடிக்கடி சொல்வதுபோல் நாம் சினிமா என்கிற வடிவம் புரிபடாமல், அந்த வடிவத்திற்குள் நாமாகவே பல மாயைகளை, கட்டுடைப்புகளை செய்துக் கொள்கிறோம். அரசியல், அல்லது எதுவோ, கட்டுரை வடிவிலும், சிறுகதை வடிவிலும், சினிமா வடிவிலும் சொல்லப்படும்போது அதன் வடிவம்தான் முதலில் முக்கியம். அதன் அரசியல், கதையெல்லாம் அடுத்ததுதான்.
சினிமா என்கிற வடிவத்திற்குள்ளேயே வராத படங்கள் சிறந்த அரசியலை பேசுகிறது என்று சொன்னால், அந்த படத்தில் வேலை செய்தவர்களை போய் அரசியலில் சேர சொல்லுங்கள். அங்கே அரசியல் பேச சொல்லுங்கள். அதை சினிமா என்கிற வடிவம் தெரியாமல், சினிமாவிற்குள் செய்ய வேண்டாம்.
- அருண் தமிழ் ஸ்டுடியோ
இது தொடர்பாக நடந்த விவாதங்கள்..
Ravithambi Ponnan அவருக்கான சினிமாவை அவர் எழுதுகிறார்.ஆனால்,அவருக்கான சினிமா யாருக்கானது என்பது அவருக்கே வெளிச்சம்.
February 26 at 9:32pm · Unlike · 2
Jayashree Govindarajan பணம் கொடுத்து தியேட்டரில் உட்கார்ந்து பார்க்கற உரிமை எல்லாருக்கும் இருக்கும்போது, பார்த்துவிட்டு வெளியில் வரும் யாருக்கும் சினிமாவுக்கு விமர்சனம் வைக்கவும் உரிமை உண்டு.
February 26 at 9:35pm · Like
அருண் தமிழ் ஸ்டுடியோ : ராஜன் குறை சார், குண்டாந்தடி எடுக்கிறேன், தகுதி இல்லாமல் பேசுகிறேன் என்பதெல்லாம் கொஞ்சம் ஓவராக இல்லையா?
\\\\\\அரசியல் கருத்திற்காக சினிமா எடுக்காதீர்கள் என்றெல்லாம் தகுதி, வடிவநேர்த்தி போன்றவற்றை முன்னிறுத்தி பேசுவதை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது//// என்று சொல்கிறீர்கள். நான் எங்கே அப்படி சொல்லி இருக்கிறேன். சிறந்த அரசியலை படம் பேசுகிறது என்பதற்காக சிறந்த படம் என்று சொல்லாதீர்கள் என்றுதான் சொன்னேன். எத்தகைய சிறந்த கருத்துகளை சொன்னாலும், அந்த எந்த சொல்லப்படுகின்ற வடிவில் சரியாக இருக்க வேண்டும் என்பதே நான் சொல்ல வருவது. தவிர, சினிமாவிற்கான வடிவம் மாறிக் கொண்டே வரலாம். ஆனால் சினிமாவிற்கு என்று அடிப்படை வடிவம் இருப்பதை மறுத்தால் இங்கே மேற்கொண்டு விவாதிப்பதே தேவையற்றது என்று நினைக்கிறேன்.
February 26 at 9:37pm · Like
Ravithambi Ponnan எனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்கிற அகந்தையின் வெளிப்பாடாகாவே இருக்கிறது அவரின் விமர்சனங்களும்,கருத்துகளும்!
February 26 at 9:38pm · Unlike · 3
இரா. சித்தானை முதலீட்டியம் பேசுறத நிறுத்துங்க பாஸ்
February 26 at 9:41pm · Like
தமிழ்ப்பெண் விலாசினி அருண் : 'இது தான் சிறந்த படம்', 'இது தான் சிறந்த விமர்சனம்' என்றோ, 'இப்படித்தான் சினிமாவோ, விமர்சனமோ இருக்க வேண்டும்' என்றோ கூற முடியுமா?
February 26 at 9:41pm · Like
Siddarth Kandasamy அருண் சொல்லும் //சினிமாவிற்கு என்று அடிப்படை வடிவம் இருப்பதை...// என்ற கருத்தில் எனக்கு நூறு சதவிகிதம் உடன்பாடு உண்டு.
February 26 at 9:42pm · Like
Nanda Gopal அவர் பதிவு செய்யும் நிறைய கருத்துகள் சிக்கல் தன்மையானவை... கடவுள் கூறும் கருத்துகளை போல... மேலிருந்து தராசு கல்லின் அளவிடுவது போல...
இது குறித்து தங்கள் வெளிப்படையாக ஒரு பதிவை இட்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது... தங்கள் இருவரும் இடையில் ஏதேனும் வாதம் நடைபெற்றதா என்பதை நான் அறியேன்... ஆனால் இது மகிழ்ச்சிக்குரியது...
ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்களங்கான சரியான தத்துவ விவாதங்கள் இல்லாமலிருப்பது பெரும் குறை... அன்றாட வாழ்வை ஊடுருவும் சினிமா விற்கான வரையறைகளை நான் பல நேரங்களில் குறும் படங்களுக்கு பொருத்தி பார்க்கிறேன்... ஆனால் தேவை அது மட்டுமன்று...
தத்துவ மற்றும் செயல் தளங்களை கணக்கில் கொண்டு சில விசயங்களை கவனப்படுத்துவதே அருணின் கருத்தியலை ஒத்துள்ளவர்களுக்கு சரியான பதிலடியாக இருக்கும்.
February 26 at 9:45pm via mobile · Like · 1
அருண் தமிழ் ஸ்டுடியோ விலாசினி இந்த விவாதம், சினிமாவின் வடிவம் பற்றியதே. அதுபற்றியே நான் பேச விரும்புகிறேன். சினிமா என்பதற்கு ஒரு அடிப்படை வடிவம் இல்லையென்றால், அப்படிஎன்றால் சினிமா என்பது என்ன? அது என்ன? எந்த வகை?
ஒரு சிறந்த கருத்து சொல்லப்பட்டிருக்கிறது, ஒரு சிறந்த அரசியல் கையாளப்பட்டிருக்கிறது என்கிற காரணத்திற்காகவே அது ஆக சிறந்த, அல்லது சிறந்த திரைப்படம் என்று சொல்லி விடுவீர்களா? சிறந்த திரைப்படத்திற்கான வரையறை, இதுதான் சிறந்த திரைப்படம், இதுதான் சிறந்த விமர்சனம், என்றெல்லாம் பேச வேண்டாம். முதலில் இதுதான் திரைப்படம் என்று பேச வேண்டும். இங்கே திரைப்படம் என்கிற வடிவம் பற்றிய புரிதலே சரியாக கவனிக்கப்படமால் இருக்கும்போது சிறந்த என்கிற கூடுதல் தகுதி நோக்கி சிந்திப்பது அர்த்தமற்றது.
வடிவம் & உள்ளடக்கம்.. (Form and Content) என்பதன் பொருள் என்ன?
February 26 at 9:48pm · Like · 1
Rajan Kurai Krishnan அருண் தமிழ் ஸ்டுடியோ அருண், ஒரு சில தினங்கள் முன்னால் நீங்கள் முகப்புத்தகத்திலும், வலைத்தளத்திலும் யார், யாரோ தகுதியில்லாமல் விமர்சனம் செய்கிறார்கள் என்று புலம்பினீர்கள். அதை படித்தபோதே எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இன்றைக்கு அரசியலை சினிமாவாக எடுப்பவர்கள் அரசியலுக்கு போகலாம், சினிமா எடுக்க வேண்டாம் என்றீர்கள். இதெல்லாம் அலுப்பூட்டும் அழகியல் அடிப்படைவாதம் சேர்ந்தவை. வாழ்க்கை என்னும் பெருநதியில் எல்லாம் கலந்துதான் பிரவகிக்கும். விமர்சனம் எனபது சிந்தனையை துல்லியமாக்கும், புதிய கருத்தாக்கங்களை உருவாக்கும் தளம் எனக் கொள்ளவேண்டுமே தவிர நமக்கு பிடித்த சினிமாவை அனைவரையும் ஏற்றுக்கொள்ளவைக்கும் முயற்சியாக இருக்கக் கூடாது. உங்கள் முகப்புத்தக புலம்பல்களையும், சலம்பல்களையும் தொடர்ந்து படிப்பதால்தான் இதை சொல்கிறேன். உங்கள் அளவுக்கு எனக்கு சினிமா தெரியாதென்றாலும் கொஞ்சம் கோட்பாடுகளில் பரிச்சயம் உண்டு என்பதால் சொல்லத் தோன்றியது.
February 26 at 9:52pm · Like · 5
தமிழ்ப்பெண் விலாசினி ஒவ்வொன்றிற்குமே அடிப்படை என்று உண்டு தான். ஆனால் அது இது தான் என்று வரையறுப்பதில் இருக்கும் வித்தியாசங்களையே நான் சுட்டி காட்டுகிறேன். சினிமாவின் அடிப்படை என்று நினைத்தால் திரையும், பார்வையாளனும் என்பது தான் என் கருத்து. இவற்றில் ஒன்று இல்லை என்றாலும் சினிமா இல்லை.
February 26 at 9:53pm · Like · 5
அருண் தமிழ் ஸ்டுடியோ விலாசினி நான் வாதத்தை இங்கே நிறுத்துகிறேன். நான் வடிவம் என்கிறேன். நீங்கள் அடிப்படை என்பதோடு நிறுத்துக் கொள்கிறீர்கள். அடிப்படை, வடிவம் இரண்டும் ஒன்றா?
February 26 at 9:55pm · Like
தமிழ்ப்பெண் விலாசினி நான் முன்னமே உங்களிடம் இது குறித்து கேள்வி கேட்டேன், நீங்கள் அப்போழுது விளக்கமளிக்கவில்லை. நீங்கள் சொல்லும் வடிவம் என்பது என்ன? அதைத் தான் புரிய வையுங்களேன்...
February 26 at 9:57pm · Like
Siddarth Kandasamy Rajan Kurai Krishnan. //விமர்சனம் எனபது சிந்தனையை துல்லியமாக்கும், புதிய கருத்தாக்கங்களை உருவாக்கும் தளம் எனக் கொள்ளவேண்டுமே தவிர நமக்கு பிடித்த... அனைவரையும் ஏற்றுக்கொள்ளவைக்கும் முயற்சியாக இருக்கக் கூடாது// இந்த விமர்சனத்தை மற்ற சில விஷயங்களில் உங்கள் மீதும் வைக்க முடியும் என்று நான் கருதுகிறேன் சார்... சொல்லப் போனால் நீங்கள் அருணை விடவும் கடுமையாய்(அப்படி நீங்கள் நம்பினால்) நடந்து கொள்வதாய் நான் கருதுகிறேன்.
February 26 at 10:00pm · Like
Rajan Kurai Krishnan Siddarth Kandasamy எடுத்துக்காட்டுடன் கூறினால் என்னை திருத்திக்கொள்ள வசதியாக இருக்கும். என்னைப்பொறுத்தவரை "எடுக்காதீர்கள்" "செய்யாதீர்கள்" போன்ற கட்டளைச் சொற்களை உருவகமாகக் கூட பயன்படுத்துவதில்லை. இரண்டாவது, அய்யகோ இவர்கள் விமர்சிக்கலாமா, பேசலாமா இவர்கள் தகுதி என்ன என்றெல்லாம் பிறரை பற்றி கேட்பது கிடையாது. மற்றபடி என் விமர்சன சட்டகத்தில் எனக்கு கண்டனத்திற்கு உரியவையாக தோன்றும் விஷயங்களை நான் கண்டிப்பது உண்டு. அது விமர்சனத்தின் பகுதி.
February 26 at 10:22pm · Like · 6
அருண் தமிழ் ஸ்டுடியோ ராஜன் குறை சார், இந்த கட்டளை வார்த்தைகள் தான் பிரச்சனையா? என்னிடம் கூட இப்படி கட்டளை வார்த்தைகளை பயன்படுத்தாதே என்று நேரடியாக சொன்னால் எனக்கும் உபயோகப்படுமே?
February 26 at 10:27pm · Like · 2
Rajan Kurai Krishnan அருண் தமிழ் ஸ்டுடியோ அருண், கட்டளை வார்த்தைகள் ஒரு மனோபாவத்தை பிரதிபலிப்பதாக எனக்கு தோன்றுகிறது. நீங்கள் சினிமா என்றால் என்ன என்று ஏதோவொரு கருத்தாக்கத்தை உருவாக்கிக் கொண்டு அதை அனைவரும் ஏற்க வேண்டுமென எதிர்பார்ப்பதாக படுகிறது. என்னைப் பொறுத்தவைரை சினிமா என்பது எழுத்து என்பதற்கு சமம். எழுத்தில் எத்தனை வகைகள், முறைமைகள், பாணிகள், வடிவங்கள் உண்டோ அத்தனையும் சினிமாவிற்கு இருக்க முடியும். சினிமா என்பது வார்த்தையில்லாத எழுத்து என்ற என் சொந்த விமர்சன வரையறையை கோட்பாட்டு அடிப்படையில் "கதாநாயகனின் மரணம்" நூலில் விளக்கி உள்ளேன். உங்கள் பார்வைக்கு வந்ததா என்று தெரியாது. எனவே பலவகையான சினிமாக்கள் எடுக்கப்பட்டு வெவ்வேறு சமூகங்களால் வெவ்வேறு காலகட்டங்களில் ரசிக்கப்படும், பயன்படுத்தப்படும் என்றே புரிந்துகொள்கிறேன். விமர்சனம் என்பது படைப்பின் உள்ளார்ந்த தர்க்கத்தை நோக்கி சிந்தனையை இட்டுச்செல்வது என்ற அளவில்தான் நான் விமர்சனம் செய்து வருகிறேன். உங்கள் பொறுமைக்கு நன்றி,
February 26 at 10:36pm · Like · 6
Siddarth Kandasamy Rajan Kurai Krishnan. அம்பேத்கர் கார்ட்டூன் குறித்த சர்ச்சையில் நான் உங்களிடம் வேறுபட்டபோது நீங்கள் என்னிடம் "அத படிச்சிட்டு வா... இத தெரிஞ்சிக்கிட்டு வா.." என்று கோபப்பட்டீர்கள் சார். இதை அடுத்து உங்கள் நண்பர் ஒருவர் நான் சொன்ன அதே கருத்தை சொன்னபோது அவரை சாந்தமாக எதிர்கொண்டீர்கள்...
February 26 at 10:38pm · Like · 2
அருண் தமிழ் ஸ்டுடியோ ராஜன் குறை சார், நான் எப்போதும் யார் மீதும், எனது கருத்துகளை திணிப்பதில்லை. தவிர, நான் வெகுஜன சினிமாவின் எதிரியும் அல்ல. நீங்கள் சொன்னது போலவே, எழுத்தில் எப்படி பல வகைகள், முறைமைகள் இருக்கிறதோ, அப்படியே சினிமாவிலும் பல வகைகள், முறைமைகள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. நானும் அதையேதான் சொல்கிறேன். சினிமாவின் அத்தகைய வகைகளில் ஒன்றான மாற்று சினிமா குறித்துதான் நான் பேசுகிறேன். ஆனால் நீங்கள் மீண்டும் மீண்டும் சினிமா என்பதே வணிகம் தொடர்புடையது என்று சினிமாவின் ஒற்றை முகம், அல்லது வகைமை பற்றியே பேசுகிறீர்கள்.
தவிர, நான் இன்னொரு வகைமை பற்றி பேசுகிறேனே, தவிர அதை பிறர் மீது திணிக்க ஒருபோதும் முற்பட்டதில்லை. நன்றி.
February 26 at 10:40pm · Like
Rajan Kurai Krishnan Siddarth Kandasamy உங்களை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். மீண்டும் அந்த உரையாடலை படித்துப் பார்க்கிறேன்.
February 26 at 10:41pm · Unlike · 3
தமிழ்ப்பெண் விலாசினி இதைப் போன்ற விவாதங்கள் என் சிறிய அறிவு வளர்வதற்கு நல்ல உரம். அருண் என்னை புரிந்து கொண்டு பிளாக் செய்ய மாட்டார் என்று நம்புகிறேன்... அனைவருக்கும் நன்றி.
February 26 at 10:41pm · Unlike · 1
Siddarth Kandasamy Rajan Kurai Krishnan. மன்னிப்பு என்றெல்லாம் சொல்லி என்னை தர்மசங்கடப் படுத்தாதீர்கள் சார் நன்றி...
February 26 at 10:42pm · Unlike · 1
Siddarth Kandasamy எவ்வளவோ நல்ல நிகழ்சிகளை நடத்தியிருக்கும் அருண், தங்கள் பார்வையில் சினிமா என்றால் என்ன என்ற ஒரு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்து, அவரும் ராஜன் குறை போன்றோரும் பேசலாம். தவிர சினிமாவை பற்றி எழுதுவதைவிடவும் பேசி மற்றவர்களுக்கு புரியவைக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.
February 26 at 10:45pm · Like · 1
Suriya Narayanan சினிமா ஒரு சாதாரணனுக்கான கலை. திறந்த மனதோடு பார்த்து நமக்கு பிடிபடும் விஷயந்தான் அதன் உள்ளடக்கம். இங்கு எழுத்தில் உள்ள மேதாவித்தனங்களைக் கடந்து, தனது பாதையில் ஒவ்வொருவருக்குமான புரிதலுக்கும் தன்னை அளித்துவிட்டு தன்னிச்சையாக மேம்பட்டுக்கொண்டிருக்கும் வடிவம் தான் நல்ல சினிமாக்களுடையது என்பது என் தாழ்மையான எண்ணம்.
February 27 at 7:11am · Like · 3
Athisha Vino Sharing னு ஒன்னிருக்கு..
Preaching னு ஒன்னிருக்கு..
சாதாரண மனிதர்கள் தன்னைப்போன்ற சாதாரண மனிதர்களிடையே தனக்கு தெரிந்ததை அறிந்ததை புரிந்ததை ஷேரிங் பண்ணுவாங்க..
...See More
February 27 at 11:44am · Like · 6
Thangavel Maran Athisha vino,உலகில் சாதாரண மனிதன், உயர்ந்த மனிதன் என்கிற அளவீடுகள் முற்றிலும் போலியானவை. ரூபாய் நோட்டுகளை அடுக்கிவைத்துக்கொண்டு தன்னை உயர்ந்த மனிதன் என்று நினைப்பவன் தான் இந்த உலகில் பெரிய முட்டாளாக இருக்க முடியும் . நீங்கள் சாதாரண மனிதர்கள் என்று நினைக்கும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் உழைப்பில் தான் இந்த உலகம் இயங்குகிறது.
February 27 at 4:45pm · Like · 1
Athisha Vino @thangavel maran உயர்வு தாழ்வு என்பது வெறும் நோட்டுகளால் மட்டுமே வருவதில்லை. இன்ட்டெலெக்சுவல் வர்க்க பாகுபாடுனு கூட ஒன்னிருக்கு.. எனக்கு அலெஜாண்ட்ரோ ஜோரோவ்ஸ்கி தெரியும் என்பதால் மட்டுமே நான் உயர்ந்தவனாகிவிட முடியாதில்லையா.. உங்களுக்கு அவர் யார் என்று தெரியாததால் மட்டுமே தாழ்ந்தவராகிவிடமுடியாதில்லையா.
உங்களுக்கு அவரை தெரியாது என்பதற்காக அவர் சார்ந்த துறைபற்றியே நீங்கள் பேசக்கூடாது என்பது இன்டலெக்சுவல் சர்வாதிகாரமில்லாமல் வேறென்ன..
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |