இதழ்: 20     ஆவணி (August 15 - 30), 2014
   
 
  உள்ளடக்கம்
 
பேசாதிருத்தல் என்பது ஒரு தேர்வுரிமை ஆகாது - ஆனந்த் பட்வர்தனோடு உரையாடல்
--------------------------------
லத்தீன் அமெரிக்க சினிமா - சாரு நிவேதிதா
--------------------------------
கடவுளின் பெயரால் - வசந்தி சங்கரநாராயணன்
--------------------------------
மீண்டும் ஒரு சவால் & ஆனந்த் பட்வர்தனுடன் நேர்காணல் - கே.எஸ்.சங்கர் & ராஜா
--------------------------------
தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது வழங்கும் விழா 2014 - தினேஷ் & யுகேந்தர்
--------------------------------
தமிழ் ஸ்டுடியோ லெனின் விருது - அருண் மோ.
--------------------------------
தனி மர தோப்புகள் - வருணன்
--------------------------------
இந்திய சினிமா வரலாறு – 6 - பி.கே.நாயர்
--------------------------------
உலக சினிமா சாதனையாளர்கள் - 6 - கே.ஹரிஹரன்
--------------------------------
   

   

 

 

லத்தீன் அமெரிக்க சினிமா

- சாரு நிவேதிதா

கடந்த தலைமுறையைச் சேர்ந்த எல்லா தமிழர்களையும் போலவே எனக்கும் எம்ஜியாரும் சிவாஜியும்தான் கனவு நாயகர்களாக இருந்தார்கள். படித்தது ஃப்ரெஞ்ச் மற்றும் ஆங்கில இலக்கியமாக இருந்தாலும் பார்த்தது என்னவோ எம்ஜியாரும் சிவாஜியும்தான். இரண்டு பேரில் யார் சிறந்தவர்கள்? நடிப்பிலா? எம்ஜியாருக்கு நடிக்க வராதே? அப்படியானால் அன்பே வா படத்தை பத்துப் பதினைந்து முறை எப்படிப் பார்க்க முடிகிறது? சிவாஜியைப் போல் நடிக்க ஆளே இல்லை. நடிகர் திலகம். புதிய பறவையில் ’பார்த்த ஞாபகம் இல்லையோ?’ காட்சியில் சிவாஜி சிகரெட் குடிக்கும் ஸ்டைல், அந்த உடல் மொழி... யாருக்கும் வராது. பிறவி நடிகன்.

1978-இல் தில்லிக்குப் போகும் வரை சினிமா என்றால் இவ்வளவுதான் எனக்குத் தெரிந்திருந்தது. இப்படி இருந்த எனக்கு சர்வதேச சினிமாவை அறிமுகப்படுத்தியர் வெங்கட் சாமிநாதன். 1980-இல் தில்லியில் அவரை நான் சந்தித்தேன். அதற்குப் பிறகு என் வாழ்க்கையின் இலக்கு மாறி விட்டது. அந்த வகையில் ’லத்தீன் அமெரிக்க சினிமா’ என்ற இந்தத் தொடரை ஆரம்பிக்கும் வேளையில் வெங்கட் சாமிநாதனை மிகுந்த நன்றி உணர்வோடு நினைவு கூருகிறேன்.

தில்லியில் ஆண்டு தோறும் நடந்து கொண்டிருந்த சர்வதேசத் திரைப்பட விழா ஒன்றில் Focus On Latin America என்ற பிரிவில் பல லத்தீன் அமெரிக்கத் திரைப்படங்கள் திரையிடப் பட்டன. எண்பதுகளின் முற்பகுதி. லத்தீன் அமெரிக்க இலக்கியத்தை மிகத் தீவிரமாகப் படித்துக் கொண்டிருந்த நேரம் அது. அதனால் அந்தப் படங்களின் சமூக அரசியல் பின்னணியோடு என்னால் வெகு எளிதாக என்னைப் பொருத்திக் கொள்ள முடிந்தது.

அந்தத் திரைப்பட விழாவில் பார்த்த லத்தீன் அமெரிக்கப் படங்களை வைத்தே ’லத்தீன் அமெரிக்க சினிமா – ஓர் அறிமுகம்’ என்ற நூலை எழுதினேன். ஆனால் அதை வெளியிட பதிப்பகம் எதுவும் கிடைக்காததால் பிறகு நானே அதை வெளியிட நேர்ந்தது.
***
சினிமா என்ற பேச்சை எடுத்தாலே எல்லோரும் ஹாலிவுட்டிலிருந்துதான் ஆரம்பிக்கிறார்கள்; முடிக்கிறார்கள். இல்லாவிட்டால் ஜப்பானிய சினிமா (அகிரா குரஸவா), கொரியன் சினிமா (கிம் கி டுக்), ஈரானிய சினிமா. இதை விட்டால் வேறு பேச்சே இல்லை. மிகச் சிலருக்கு ஐரோப்பிய சினிமா பரிச்சயமாகி இருக்கிறது. அதுவும் பெர்க்மன், ஃபெலினி போன்ற பிரபலமான கலைஞர்கள் தானே தவிர Ulrike Ottinger போன்ற கலைஞர்கள் பற்றி யாரும் பேசுவது இல்லை. (உல்ரிக் ஒட்டிஞ்சரின் ஒருசில படங்களைப் பார்த்து ஒரு நீண்ட கட்டுரையும் எழுதியிருக்கிறேன். ஆனால் அவர் எடுத்த Taiga (1992) என்ற எட்டு மணி நேர ஆவணப்படம் இன்னும் எனக்குப் பார்க்கக் கிடைக்கவில்லை. ஒட்டிஞ்சர் வடக்கு மங்கோலியாவில் ஒரு ஆண்டு தங்கி எடுத்த படம் அது. டிவிடியின் விலை கிட்டத்தட்ட 25,000 ரூ என்று தெரிகிறது. ஒரு குழுவாக சேர்ந்து வாங்கிப் பார்க்கலாம்.)

மேற்படி சூழ்நிலையில் தென்னமெரிக்க சினிமா பற்றி உலக அளவிலேயே யாரும் கவனம் செலுத்துவது இல்லை. அதிலும் கூபா என்ற நாடு உலகில் உள்ள புத்திஜீவிகளின் கனவு தேசமாக இருப்பதால் கூபாவின் சினிமா பற்றி தமிழில் ஒருசில புத்தகங்கள் எழுதப் பட்டுள்ளன. அதிலும் தொமாஸ் அலெயா (Tomas Gutierrez Alea) சற்று அதிகப் பிரபலமாக இருக்கிறார். ஆனால் அலெயாவைப் போலவே, அல்லது அதை விடவும் அதிக முக்கியத்துவம் கொண்ட இயக்குனர்கள் ப்ரஸீல், அர்ஜெண்டினா, மெக்ஸிகோ, வெனிஸுவலா போன்ற நாடுகளில் உருவாகி இருக்கிறார்கள்.
அவர்களில் முதல் முதலாகக் குறிப்பிடப்பட வேண்டியவர் க்ளாபர் ரோச்சா (Glauber Rocha) என்ற ப்ரஸீலிய இயக்குனர். அவருடைய பூமியின் வயது (The Age of the Earth) என்ற படத்தை தில்லி திரைப்பட விழா ஒன்றில் பார்த்த போது நான் அடைந்த பரவசம் இன்னமும் எனக்கு ஞாபகத்தில் உள்ளது.

(சிறு வயது ரோச்சா)

1980-இல் தயாரிக்கப்பட்ட இந்தப் படமே துரதிர்ஷ்டவசமாக இதுவே ரோச்சாவின் கடைசி படமாகவும் அமைந்து விட்டது. நுரையீரலில் ஏற்பட்ட தொற்றுநோயால் ரியோ தி ஹனைரோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் இறந்த போது அவர் வயது 42 தான். பூமியின் வயதைப் பார்த்த போது ரோச்சாவை ஒரு மேதை என்றே எண்ணினேன். அப்போதெல்லாம் கணினி வசதி கிடையாது என்பதால் க்ளாபர் பற்றி மேலும் அறிந்து கொள்ள முடியவில்லை. பிறகு லத்தீன் அமெரிக்க சினிமா பற்றிய ஆய்வு நூல்களில் பார்த்த போதுதான் அது உண்மை என்று தெரிந்தது. மேதை என்று சொல்வதை விட ரோச்சா ஒரு புதிதான சினிமா மொழியை உருவாக்கியவர் என்று சொல்லலாம். ரோச்சாவின் சினிமாவைப் பார்க்காமல் இந்த வாக்கியத்தை நீங்கள் படித்தால் நான் சொல்ல வருவதை உங்களால் புரிந்து கொள்ள இயலாது. எப்பாடு பட்டாவது ரோச்சாவின் பூமியின் வயது படத்தைப் பார்த்து விடுங்கள். ஹாலிவுட் ஆர்வலர்கள், மற்ற உலக சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் இதை நான் ஒரு கோரிக்கையாக வைக்கிறேன். பூமியின் வயது படத்தை உங்களால் ஒரே அமர்வில் பார்க்க முடிகிறதா, உள்வாங்கிக் கொள்ள முடிகிறதா என்று பாருங்கள். ஏனென்றால், சினிமா என்றால் உங்கள் மனதில் என்னென்ன அர்த்தமாகிறதோ அது அனைத்திலிருந்தும் வேறுபட்டதாக இருக்கும் ரோச்சாவின் சினிமா. உங்களுடைய சத்யஜித் ரே, கிம் கி டுக் என்று யாராக இருந்தாலும் அவர்களுடைய சினிமாவிலிருந்து வேறு ஏதோ ஒரு இடத்தில் இருப்பவர் ரோச்சா. கிட்டத்தட்ட ஒரு வேற்றுக் கிரகத்து மனிதனைப் பார்த்தால் அது நமக்கு எந்தவித அதிர்வையும் தாக்கத்தையும் தருமோ அதுதான் ரோச்சாவின் சினிமா. சப் டைட்டில் இல்லாமல் ரோச்சாவின் படங்களைப் பார்ப்பதில் அர்த்தம் இல்லை. காரணம், அவருடைய வசனங்கள் அவ்வளவு வலுவானவை, கவித்துவமானவை, அரசியல் ரீதியான முக்கியத்துவம் கொண்டவை. ஆனால் ரோச்சாவை நான் வேற்றுக்கிரகத்து ஜீவி என்று சொன்னதை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டுமானால் இரண்டரை மணி நேரம் ஓடக் கூடிய பூமியின் வயது படத்தின் முதல் 26 நிமிடங்களைப் பார்த்தால் போதும். இந்த 26 நிமிடங்களுக்கு வசனம் கிடையாது.

முதல் காட்சி சூரியோதயம். நான்கு நிமிடங்களுக்கு நீடிக்கும் இசை. ஆதிகுடிகளின் இசையும் நவீன இசையும் கலந்து, இதுவரை நம் வாழ்விலேயே கேட்டிராத mystic தன்மை கொண்டிருக்கிறது. இந்த நான்கு நிமிடங்களும் கேமரா கோணத்தில் எந்த மாற்றமும் இருப்பதில்லை. நான்காவது நிமிடத்திலிருந்து அடுத்த பதினான்கு நிமிடங்கள் ஆடையில்லாத ஆதி மனிதர்களைப் போல் தோற்றமளிக்கும் உருவங்களின் குறியீட்டுத் தன்மை கொண்ட அசைவுகள். இந்தக் காட்சிக்குப் பிறகு – அதாவது பதினெட்டாவது நிமிடத்தில்தான் தற்காலத்திய ஆடை அணிந்த மனிதர்களையே பார்க்கிறோம். அதுவும் ஒரு கார்னிவல்தான். இப்படியாக இந்த இசை கார்னிவல் எந்த வசனமும் இல்லாமல் 26 நிமிடங்கள் தொடர்கிறது. அடுத்த காட்சியில் Brahms (ப்ராம்ஸ் தான் எதிர் கிறிஸ்து) பத்து நிமிடங்களுக்கு ப்ரஸீலின் அரசியல் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார். ஒரே ஒருவர் அவர் பேசுவதைக் கேட்பார். ஆனால் குறுக்கிட மாட்டார். கேமரா கோணத்தில் மாற்றம் இல்லாமல் ஒரு பாத்திரம் பத்து நிமிடங்களுக்குப் பேசிக் கொண்டிருப்பதை கற்பனை செய்து பாருங்கள். இதேபோல்
அதற்குப் பிறகும் கூட படத்தில் எந்தக் கதையும் கிடையாது. நான்கு விதமான கிறிஸ்துக்கள் வருகிறார்கள். ஒரு எதிர் கிறிஸ்து வருகிறார். அவர்களுக்கிடையிலான தத்துவ, சமூக, அரசியல், கலாச்சார ஊடாடல்கள்தான் படம். படிமங்களும், குறியீடுகளும், உருவகங்களும், நீண்ட பேச்சுக்களும், பாடல்களும், ஆட்டங்களும் கொண்ட ஒரு நீண்ட சர்ரியலிஸக் கவிதையே பூமியின் வயது.
சினிமா என்றால் சலன சித்திரம் என்கிறோம். ஆனால் ரோச்சாவின் சினிமாவில் சலனமே இருப்பதில்லை. பாத்திரங்களின் நீண்ட பேச்சும், நடை உடை பாவனையும் நமக்குள் ஒருவிதமான மயக்கநிலையை (hallucination) உருவாக்குகின்றன. பாத்திரங்கள் நடக்கும் போது கூட ஏதோ நிலவில் நடப்பது போல், மிதப்பது போல் நடக்கிறார்கள். கையை உயர்த்துவது கூட அப்படித்தான் இருக்கிறது. திடீரென்று ஒரு பாத்திரம் வந்து கேமரா முன்னால் இப்படிச் சொல்லி விட்டு மறைகிறது:
ஒவ்வொரு நிமிடமும் அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. சமுத்திரத்தில் இருக்கும் மீன்களைப் பாருங்கள். விருட்சத்தில் இருக்கும் கனிகளைப் பாருங்கள். பூமியில் இருக்கும் கிழங்குகளைப் பாருங்கள். அவையெல்லாம் மனிதனுக்கு உணவாக இருக்கின்றன.

ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு சடங்கு என்பதாகவே எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் திடீரென்று கேமரா தலைகீழாக மாறுகிறது, சுற்றுகிறது, ஆடுகிறது. திடீரென்று ப்ராம்ஸாக நடிப்பவர் உணர்ச்சிவசப்பட்டு கீழே விழுந்து விடுகிறார். உடனே ஸாரி க்ளாபர், இன்னொரு முறை முயற்சி செய்கிறேன் என்று படத்தின் இயக்குனரை நோக்கிச் சொல்லி விட்டு மீண்டும் அந்தக் காட்சியில் நடிக்கிறார். பாத்திரங்கள் ஒரே வசனத்தைத் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். சில காட்சிகள் தொடர்ச்சியாக திரும்பத் திரும்ப வருகின்றன. ஒரு காட்சி அப்படி ஐந்து முறை திரும்ப வருகிறது. மற்றொரு காட்சியில், ஒருவன் எட்டு முறை தான் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்கிறான்.
சுதந்திரம், குடியாட்சி, அடிமைகளை ஒழித்தது இதெல்லாம் நம் மக்கள் சாதித்தவை. அதனால்தான் அவர்களை என் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றுவேன் என்கிறேன். வன்முறையில் ஈடுபடுவதாக இருந்தாலும் மிக உயர்வான மனித உரிமைகளைப் பேணுவதற்காகவே அதில் ஈடுபடுவேன் என்பதை நான் அறிந்திருக்கிறேன்.

மேற்கண்ட வசனத்தை ஒரு ஆள் மிக மெதுவாக எட்டு முறை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார் என்றால் அதை எப்படி நீங்கள் எடுத்துக் கொள்வீர்கள்? படத் தொகுப்பில் ஏதோ பிரச்சினை என்று தானே? ஆனால் அப்படி இல்லை. அந்தப் பாத்திரம் மேற்கண்ட வசனத்தை சொல்லச் சொல்ல அவன் குடித்துக் கொண்டிருக்கும் ஒயின் குறைந்து கொண்டே இருக்கிறது. அவன் குடித்துக் கொண்டிருக்கும் சுருட்டு குறைந்து கொண்டே இருக்கிறது.

பல இடங்களில் படம் ரோச்சாவின் அந்தரங்க டயரி போல் இருக்கிறது. படம் இரண்டு மணி நேரம் கடந்த நிலையில் ரோச்சா நேரடியாகத் தன் குரலில் பின்னணியிலிருந்து பேசுகிறார். அந்தப் பேச்சை அப்படியே தருகிறேன்:

The day the great Italian poet Pasolini was murdered I thought of making a film about the life of Christ in the Third World. Pasolini filmed the life of Christ just as John XXIII was overcoming the ideological paralysis of the Catholic Church with regard to the problems of the underdeveloped peoples of the third world and the European working class. It was the rebirth, the resurrection of a Christ who was not adored on the Cross but a Christ who was revered, revolutionary and experienced in the ecstasy of resurrection. Over Pasolini’s dead body I saw of Christ as a new, primitive phenomenon in a very primitive, very new civilization. Twenty, thirty, forty, fifty million years. Science, physics, archeology, anthropology… all the sciences that materialize desire. Language itself is lost. Portuguese cannot adequately express our knowledge of a past devoid of memory. 500 years of white, Portuguese, European civilization mixed with Indians and blacks. And millennia immeasurable by mathematical time or folly. We don’t know where they come from, not even the nebula of chaos of nothingness. In other words: God or nothing. If you don’t believe in God, you believe in nothingness. If nothingness is God, then History is very swift, fantastically swift. A lysergic despair undefinable by any Word that might define the meaning of the pyramid.

Here in Brasilia, for instance, on this fantastic stage at the heart of the Brazilian plains, the radiant source, the light of the Third Word, a metaphor unrealized by History… but it fulfills a sense of greatness: The vision of paradise. That pyramid, this pyramid is the mramatic geometry of the social State. Power is at its zenith. Its foundations lie below us and then the intricate labyrinths of class mediations . All of it in the theatre. Quite the city and the jungle. Brasilia is Eldorado, “El dorado.” An entire ideology of love focused by Christianity which is a religion of the African, Asian, European and Latin American peoples, of all the peoples… Christianity that occurs not only within the Catholic Church, but also in all the other religions that find the figure of Christ within their deepest, inner most, most eternal, subterranean or forgottan symbols… A Christ who is not dead but alive and preaching love and creativity. The search for eternity and victory over death because death is a structure determined by a fatalistic code possibly sexual or genetic in origins… who knows? Death can be vanquished.

So, civilization is a small thing before Christ and after Christ. A technological, economic development in Europe… Mercantilism, capitalism, neo-capitalism, socialism, trans-capitalism, trans-socialism, anarcho-constructivism… All mankind’s despair in its search for the perfect society. Utopias, the march of society.

Religious conflicts between Catholics and Protestants have brought about explosions, navigations and wars. Moorish invasions in Europe, Christian invasions in North Africa, Spain, Portugal and England, occupied America, the other shore, Massacred Indians, imported blacks… Wars of independence, land wars, industrial wars, land wars and industrial wars, industrial wars and land wars, civil wars, uprisings, dictators, wars, guerrillas, revolutions, Coup d’etat, democracies, regressions, advances, retreats, sacrifices, martyrdoms… The progress of America, of North America… American technological progress leads civilization into the world of twentieth century… The Soviet revolution, the Soviet Revolution of 1917 led by Lenin, Trotsky and Stalin utterly subverts North American capitalist discourse… Meanwhile, the underdeveloped people of Latin America, of Africa and of Asia pay the price for the technological development of Europe, of the United States, of capitalist Europe, of socialist Europe, of Catholic Europe, of Protestant Europe, of aethist Europe, of the United States…

Underdelopment is at the base of the pyramid. The underdeveloped are powerless. They all hope for peace. Everyone must seek peace. A dialectical synthesis of capitalism and socialism shall come to pass I am sure of it… And the Third World shall see the birth of a new true democracy. Democracy is neither socialist, communist nor capitalist… Democracy has no adjectives… Democracy is the reign of the people. De-moc-ra-cy is the un-reign of the people… We all know we are dying of hunger in the Third World. We all know about the poor children, the forgotten elderly, the insane, the hungry, so much poverty, so much ugliness, so much misfortune. We all know this. An economic, social, technological, cultural, spiritual, sexual revolution is needed so that people may truly experience pleasure…

Brazil is a large country… Latin America, Africa – one cannot think of a single country. We must multinationalize and internationalize the world… an interdemocratic regime… with the great contribution of Christianity and other religions, all religions… Christianity is the same as all other religions. Between the understanding of the religions and politicians who have converted to love…

க்ளாபர் ரோச்சாவின் இந்த நீண்ட பேச்சுக்குப் பிறகு ஒரு பெரிய கார்னிவலோடு படம் முடிகிறது.
இந்தப் படத்தின் இன்னொரு விசேஷம், இதன் நீண்ட காட்சிகளை நாம் எந்த முறையில் வேண்டுமானாலும் மாற்றி மாற்றித் திரையிட்டுப் பார்த்துக் கொள்ளலாம், ஹூலியோ கொர்த்தஸாரின் (Julio Cortazar) Hopscotch நாவலைப் போல.

1.அடுத்த கட்டுரையில் க்ளாபர் ரோச்சாவின் படங்களை Aesthetics of Anarchy என்று வரையறுப்பது பற்றிப் பேசலாம்.

2. பேசா மொழி அடுத்த இதழ் வருவதற்குள் நண்பர்கள் க்ளாபர் ரோச்சாவின் படங்களில் இரண்டையாவது பார்த்து விட்டால் இந்தத் தொடரைப் புரிந்து கொள்ள உதவும். க்ளாபர் தன் படங்களைப் பற்றிப் பேசுவதை விட அதைப் பார்ப்பதே அதைப் புரிந்து கொள்ள உதவக் கூடியது என்கிறார். பூமியின் வயது மற்றும் க்ளாபரின் முதல் படமான கறுப்புத் தெய்வமும் வெள்ளைச் சாத்தானும் பார்க்கலாம். அந்தப் படத்தின் ஆங்கிலத் தலைப்பு: Black God, White Devil.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </