|
முள்ளும் மலரும்...
- சுஜாதா தேசிகன்
ப்ரியா படம் நேற்று இரவு 11மணிக்கு சன் டிவியில் ஆரம்பித்த போது ஆர்வமாக பார்க்க உட்கார்ந்தேன். வசந்தாக வந்த அந்த நடிகரை பார்த்த போது ஸ்ரீதேவியை நினைத்து வருத்தப்பட்டேன். ரஜினி எப்படியும் அவரை காப்பாத்திவிடுவார் என்று டிவியின் மெயின் சுவிட்சை அணைத்த போது ஒரு மாசம் முன்பு அருண் "முள்ளும் மலரும் பார்த்துவிட்டு உங்க அப்பிராயத்தை எழுதி தாங்க" என்று சொன்னது நினைவுக்கு வந்தது.
முள்ளும் மலரும் நான் சின்ன வயசில் பார்த்திருக்கிறேன். எப்போது என்று நினைவில்லை ஆனால் சரத்பாபு பாடும் 'செந்தாழம் பூவில்..." மட்டும் நினைவு இருக்கிறது. சின்ன வயசு கருப்பு வெள்ளை ஃபோட்டோவை பார்க்கும் போது ஒரு விதமான மகிழ்ச்சி ஏற்படும். அதே மகிழ்ச்சி எனக்கு நேற்று முள்ளும் மலரும் படம் பார்க்கும் போது ஏற்பட்டது.
|
|
|
------------------------------------------------------------------------------------------------------------------------------ |
|
முள்ளொன்று மலர்ந்தது.
- கார்த்திக் பாலசுப்பிரமணியன்
அது ஒரு மாபெரும் மேடை. கீழே ரசிக வெள்ளம். கரவொலியும், விசில் சத்தமும் விண்ணைப் பிளந்து கொண்டிருக்கிறது. மேடையில் நிற்பது தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரிடம் "உங்களுக்குப் பிடித்த இயக்குனர் யார்?" என்ற கேள்வி கேட்கப் படுகிறது. கேள்வியைக் கேட்பவர் இயக்குனர் இமயமும் ரஜினியின் திரையுலக குருவுமான இயக்குனர் பாலச்சந்தர். அந்தக் கேள்விக்கு மேடையில் ரஜினி சொன்ன பதில் "மகேந்திரன்". தமிழ் கமர்சியல் சினிமாவின் முடிசூடா மன்னனான ரஜினி, இன்றளவும் தன் மனதிற்கு நெருக்கமாய் பார்க்கும் படம் "முள்ளும் மலரும்".
மற்ற படங்களைப் போன்ற கதைச் சுருக்கம் இப்படத்திற்கு அவசியமே இல்லை. கிட்டத்தட்ட தமிழ் நாட்டில் அனைவராலும் கொண்டாடப்பட்ட படம்.
|
|
------------------------------------------------------------------------------------------------------------------------------ |
|
ஒருபோதும் வாடாத 'மலர்'
- எம்.ரிஷான் ஷெரீப்
'எவன் தயவும் எனக்கு வேண்டாம். சாகுற வரைக்கும் உங்களையெல்லாம் வச்சு நான் சோறு போடுவேன்டா. கை போனா என்னடா? என்ன செத்தா போயிட்டேன்? ஒப்பாரி வைக்கிறாங்க..ஒப்பாரி. போங்கடா...போங்க.'
இந்தளவு தன்னம்பிக்கை மிகுந்த வசனங்களை அண்மைக்கால தமிழ்த் திரைப்படம் எதிலும் நான் பார்க்கவில்லை. ஒரு விபத்து. கதாநாயகனின் ஒரு கை முற்றுமுழுதாக அகற்றப்படுகிறது. அதுவரைக்கும் அவனது குடும்பத்தின் வாழ்வாதாரம் அவன் மட்டும்தான். ஊராரின் பாசம் அவனுக்கு ஆறுதல் சொல்லத் தூண்டுகிறது. அந்த ஆறுதலை அவன் மனது ஏற்க மறுக்கிறது.
|
|
------------------------------------------------------------------------------------------------------------------------------ |
|
முள்ளும் மலரும்
- கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி
சிறு வயது முதல் இந்தப் படத்தின் தலைப்பை கேட்கும்போதெல்லாம் ஒரு சந்தேகம் மேலெழுந்தபடியே இருந்தது. இது முள் மற்றும் மலர் என்று குறிக்கிறதா அல்லது முள் கூட மலரும் என்று குறிக்கிறதா என்று. இப்போது வரை இந்த சந்தேகம் தீரவில்லை என்றாலும் படத்தை தொடர்ந்து பார்த்ததில் இரண்டு அர்த்தங்களையும் இது உள்ளடக்கியுள்ளதாகவே தோன்றுகிறது.
ஒரு திரைப்படம் என்பது அந்த காலத்தின் தன்மையோடும் அப்போது நிறைந்திருந்த சமூக கலைத்தன்மையோடும் இணைத்துப்பார்க்கப்பட வேண்டியது. அகிரா குரசேவாவின் படங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பல உத்திகளை இப்போது பார்த்தால் ‘என்னடா இது, எத்தன படத்துல பாத்துருப்போம் இத’ என்று தான் தோன்றும்.
|
|
------------------------------------------------------------------------------------------------------------------------------ |
|
முள்ளும் மலரும் - முள்ளில் மலர்ந்த மலர்....- அருண்
ஒரே வருடத்தில் வெளிவந்த இரண்டு படங்களில் ஒரே மாதிரியான காட்சியில், நடிப்பின் உச்சக்கட்ட பரிமாணத்தை ரஜினிகாந்த் தொட்டிருப்பார். ஒன்று பதினாறு வயதினிலே, இன்னொன்று முள்ளும் மலரும். அந்த காட்சி, முக்கு கடை ஒன்றின் அருகே பெஞ்ச் போடப்பட்டிருக்கும், அதில் சக கூட்டாளிகளுடன் ரஜினிகாந்த் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் காட்சி.
பதினாறு வயதினிலே படத்தில் எதிர்மறை கதாநாயகனாகவும், முள்ளும் மலரும் படத்தில் கதையின் நாயகனாகவும் மேற்சொன்ன காட்சியில் ரஜினிகாந்த் நடித்திருப்பார். ஆனால் இந்த முக்கு கடை காட்சி இரண்டு படங்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கட்டமைப்பையே கொண்டுள்ளது.
|
|
------------------------------------------------------------------------------------------------------------------------------ |
|