ஜெயகாந்தனும் தமிழ் சினிமாவும் - தியடோர் பாஸ்கரன்

அரசியலும் சினிமாவும் பின்னிப் பிணைந்திருக்கும் தமிழக வரலாற்றில் இடதுசாரி முகாமிலிருந்து அவ்வப்போது திரைக்கு வந்தவர்களில் சிறப்பிடம் பெற்றிருப்பவர் ஜெயகாந்தன். மார்க்சீய சிந்தாந்த்தால் உந்தப்பட்ட ஜெயகாந்தன், சமுதாயக் கரிசனத்துடன் சினிமா செயல்பட வேண்டும் என்றும் அதற்கு தமிழ் இலக்கியம் உதவ முடியும் என்றும் நம்பினார். ஹிந்திப்படவுலகில் கே.ஏ. அப்பாஸின் முயற்சிகளை கண்டு வியந்தார். சத்யஜித் ரேயின் மூன்று அப்பு படங்களின் நேர்மையையும் தாகத்தையும் போற்றினார். சினிமா கலையை முறையாக கற்காமலேயே அதன் அழகியலை உணர்ந்தவர் ஜெயகாந்தன். இவ்விஷயத்தில் இவர் மலையாள சினிமாவின் அரவிந்தனை எனக்கு நினைவூட்டுகின்றார்.

  மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------------------------------------

சில நேரங்களில் சில மனிதர்கள் - B.லெனின்

ஆசாரமான பிராமண குடும்பத்தில் பிறந்த இக்கதையின் நாயகி ‘கங்கா’, கல்லூரிவிட்டு வரும் வழியில் அவன் கயவனா... காமுகனா... என்று அறிந்து கொள்ள முடியாதவனும், ஊர்பேர் தெரியாதவனுமான ஒருவனால் தன்னை உணர்ந்தா...? உணராமலா...? என்ற கேள்விக்கு அப்பாற்பட்டு ‘தன்னை இழக்கிறாள்...!’ தன் மகளின் நிலைகண்ட தாய் பதறிப் போனவளாய் செய்வதறியாது திகைக்கிறாள், இங்கும் அங்கும் ஓடியவளாய், கடைசியில் ‘கங்க ஜலத்தால், கங்காவை கழுவுகிறாள், அதன் மூலம் அவள் ‘பாவத்தை’ கழுவி விட்டதாக கூறுகிறாள்.

  மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------------------------------------

உன்னைப் போல் ஒருவன் - அம்ஷன் குமார்

சிட்டி ஒரு தறுதலையாக வளர்கிறான் அவன் தீங்கான செயல்களுக்கு தாவுமுன்னரே அதிர்ஷ்டவசமாக ஒரு ஐஸ்கிரீம் தொழிற்சாலை முதலாளியை சந்திக்கிறான். அவர் அவனுக்கு வேலை தருகிறார். அவர் நடத்தும் இரவுப் பள்ளியில் அவனை பயிலவும் வைக்கிறார். தாய் என்னும் உறவின் மேன்மையையும் அவரிடமிருந்து அவன் கற்றுக் கொள்கிறான். தங்கத்திற்குத் தனது மகனின் வளர்ச்சி ஆச்சர்யத்தையும் ஆனந்தத்தையும் தருகிறது.

  மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------------------------------------

வரலாற்றுக்கு எதிராக ஜெயகாந்தன் - யமுனா ராஜேந்திரன்

ஜெயகாந்தனின் அரசியல் அபிப்பிராயங்கள் ஒரு உணர்ச்சிவசமான இலட்சியவாதம் கொண்ட மனிதனின் பகுத்தறிவுக்கும் தரவுகளுக்கும் புறம்பான பார்வைகள் என ஒதுக்கிவிடுவதே நல்லது. ஜெயகாந்தன் தொடர்பான இவ்விவகாரங்களிலான தமது கருத்துக்களை கம்யூனிஸ்ட்டுகள் வெளிப்படையாக முன் வைத்திருக்க வேண்டும். விளிம்புநிலை மனிதர்கள் குறித்ததாகப் படைப்புகளை முன்வைத்த முன்னாள் தோழனாக அவர்மீது பாராட்டுணர்வு கொண்ட அவரது கம்யூனிஸ்ட் நண்பர்கள் ஜெகேவின் அரசியல் தொடர்பாகவும் தெளிவாகக் கருத்துச்சொல்வது பல பிரச்சினைகளுக்குத் திறவுகோலாக அமையும்.

  மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------------------------------------
   
 
சினிமாவுக்குப் போன சித்தாளு - ஜெயகாந்தன்

இந்த ‘சினிமாவுக்கு போன சித்தாளு’ கதையை ஒரு சிறுகதையாக ஒரே இதழில் எழுதவேண்டும் என்று தான் திட்டம் போட்டேன். இப்போதும்கூட இது ஒரு சிறுகதை தான். ஆனால் இதைக் கண்ணதாசன் மாத இதழில் ஐந்தாறு இதழ்களுக்கு மேல் தொடர்ச்சியாக எழுதினேன். இது வெளி வந்தபோது இதைப் பலரும் பாராட்டினார்கள். பாராட்டியவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தக் கதையின் நோக்கத்தைச் சந்தேகித்தார்கள். இப்படிச் சந்தேகித்தவர்களே இந்தக் கதையை எழுதி யாரையோ தனிப்பட்ட முறையில் நான் தரம் தாழ்த்திவிட்டதாகக் குறை கூறினார்கள்.





  மேலும் படிக்க
 
 


ஜெயகாந்தனின் அறிவை செப்பனிட்ட சினிமா - அம்ஷன் குமார்


ஜெயகாந்தனின் கம்பீரம் நிறைந்த குரலில், “இந்தப் படத்தின் கதை சேரி மாந்தர்களைப் பற்றியது. அவர்களின் உணர்ச்சிகள் பற்றியது. அவர்களின் ஆன்மாவைப் பற்றியது. இந்தப் படம் அந்த வாழ்க்கையைப் போல் தேக்கமானது. இயல்பானது. ஆழமானது. இந்த முதல் முயற்சியில் குறைகள் பல இருக்கலாம். அவை புதுமையான குறைகளாக இருப்பின் நான் திருப்தியுறுவேன்” என்று ஒலித்த இவ்வார்த்தைகள் டைட்டிலாகவும் காட்டப்பட்டு ‘உன்னைப் போல் ஒருவன்’ படம் (1964) வெளிவந்தது.உன்னைப் போல் ஒருவன் என்று தனது கதாநாயகக் கதாபாத்திரமான சிறுவன் சிட்டியை அவர் அறிமுகப்படுத்தினார். சிட்டி சேரியில் பிறந்து வளர்ந்தவன். பிறந்தவுடன் அவன் தகப்பன் ஓடிவிடுகிறான்.

  மேலும் படிக்க
       
 
 
‘யாருக்காகவோ அழுதான்...!’- B.லெனின்

இந்திய சினிமா சரித்திரத்தில் நிலைப்பெற்றிருக்கும் தயாரிப்பாளர்களையும் டைரக்டர்களையும் விரல்விட்டு எண்ணிவிடலாம். இதனால் தான் திரும்பத்திரும்ப, சத்யஜித்ரே, அரவிந்தன், அடூர் கோபாலகிருஷ்ணன், பாரதிராஜா, பாலச்சந்தர், மகேந்திரன், பீம்சிங், ஜெயகாந்தன், மிருனாள் சென், சாந்தாரம், பிமல்ராய், ஸ்ரீதர், ரிஷிகேஷ் முகர்ஜி, வாசுதேவன் நாயர், ராமு காரியத், பத்மராஜன் போன்றவர்களையே சொல்ல வேண்டியிருக்கிறது.

ஏனெனில் அவர்கள் நவீன கலையாகிய சினிமாவை, அதன் ஆற்றலை, அதன் முழு வீச்சை அந்தக் கலையின் தர்மத்திற்குப் பயன்படுத்தினார்கள். புகழும் பெற்றார்கள். செல்வமும் பெற்றார்கள்.

 

  மேலும் படிக்க
 
 
காணும் முறைகள் - ஜான் பெர்ஜர் - தமிழில்: யுகேந்தர்

தீர்ப்பளிப்பவருக்கு உரியவராவதே பரிசு, அதாவது அவருக்கு கிடைக்கக்கூடியவராக உள்ளேன் என சொல்வதாகும். இரண்டாம் சார்லஸ் இரகசியமாக ஒரு ஒவியம் தீட்ட சொல்லி லீலியை நியமித்தார். அந்த பாரம்பரியத்தின் மிகவும் வழக்கமான ஓவியம் அது. பெயரளவில் அது "வீணஸ் அன்ட் குப்பிட்" ஆக இருக்கலாம். உண்மையில் அது ராஜாவின் வைப்புகளில் ஒருவரான நெல் கிவெயெனின் ஓவியம். தன்னை நிர்வாணமாக பார்த்துக்கொண்டிருக்கும் பார்வையாளரை பரபரப்பின்றி அவள் பார்பதாக அந்த ஓவியம் காட்டுகிறது. இது நிர்வாணம் ஆகாது, அவளுடைய சொந்த உணர்வுகளின் ஒரு வெளிப்பாடு எனலாம்; உரிமையாளரின் உணர்வுகள் அல்லது கோரிக்கைகளுக்கு அடிபணிதல் என்பதற்கான அறிகுறியாகும்.




  மேலும் படிக்க
   
------------------------------------------------------------------------------------------------------------------------------
   
 
பார்வையாளர்களின் கூட்டு உளவியலும், ஹாலிவுட் மையநீரோட்ட சினிமாவும் 2 - வருணன்

எல்லா காலகட்டத்திலும் மேலுலகிற்கு (வானுலகு அல்ல) இணையாக ஒரு கீழுலகு (Underworld) நம் பார்வைக்கு வராமல் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது. இப்படியும் சொல்லலாம்- நாம் அந்த இருண்மை நிறைந்த உலகைப் பற்றி அறிய விரும்புவதில்லை. அப்படி ஒன்று இருக்கும் போதிலும் அது இல்லவே இல்லையென நம்பவே ஆசைப்டுகிறோம். முப்பதுகளில் தான் இந்த மறைத்துவைக்கப்பட்டிருந்த கீழுலகின் மாந்தர்கள் உலவும் கதைகள் திரைபடங்களாக உருப்பெற்றன. அது சினிமாவிற்கு ஒரு புதிய வகைமையை கொடுத்தது. கேங்ஸ்டர் திரைப்படங்கள் (Gangster Films) என்று அழைக்கப்படும் அவை பெரும்பாலும் சமகாலத்தில் வாழ்ந்த நிழல் உலகத்தினர் குறித்து செய்தித் தாள்களில் வெளியான முதல் பக்கச் செய்திகளையே அடிப்படையாகக் கொண்டிருந்தன.




  மேலும் படிக்க
 
 


இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை - தம்பிஐயா தேவதாஸ்

டொக்டர் முரளியின் உதவியுடன் தோணிக் கரை வந்த மஞ்சுளாவுக்கு (பார்வதி) அதிர்ச்சி காத்திருக்கிறது. அவள் யாரை இறந்ததாக எண்ணியிருந்தாளோ அதே சங்கர் மீண்டும் தோணிக்கரையில் நின்றான். சி.ஐ.டி. சிவராம் சங்கரைப்போல் உருவமுள்ளவனாகையால் ரௌடி ராஜப்பனையும் அவன் கள்ளக் கடத்தல் செய்வதனையும் சங்கர் என்ற பெயரில் வந்து கண்டுபிடிக்கிறான். அதுவரை தனக்கு உதவிய மஞ்சுளாவை விரும்பிய டொக்டர் முரளி உண்மையை உணர்ந்து அவர்களுக்கு உதவுகிறார். இதுதான் மீனவப்பெண் திரைப்படத்தின் கதைச் சுருக்கமாகும். ராமையாவாக வீ. சுப்பையாவும், பார்வதியாக ராஜலக்ஷ்மியும், சங்கராக ஜெயகாந்தும், ராஜப்பனாக தேவன் அழகக்கோனும் டொக்டர் முரளியாக சுசில்குமாரும் தோன்றினார்கள்.


 

 

  மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------------------------------------
 
 
 
   
   
   
பேசாமொழி பதிப்பக நூல்களை இணையத்தில் பெற:

http://cms.vidhaiorganicstore.com
/onlineshop/index.php?cPath=72
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
     
     
     
     
     
     
     
     
 
 
 
 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

காப்புரிமை © பேசாமொழி

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome