இதழ்: 23     புரட்டாசி (October 01 - 15), 2014
   
 
  உள்ளடக்கம்
 
கோவிந்த் நிஹ்லானி - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
லத்தீன் அமெரிக்க சினிமா 4 - சாரு நிவேதிதா
--------------------------------
உயிர் கொடுக்கும் கலை 13 - டிராட்ஸ்கி மருது
--------------------------------
திரைமொழி - 12 - Steven D. Katz தமிழில்: ராஜேஷ்
--------------------------------
ஹெர்ஸாக் பற்றி ஹெர்ஸாக் - 8 - பால் க்ரானின் :: தமிழில்: எஸ்.ஆனந்த்
--------------------------------
காணும் முறைகள் - ஜான் பெர்ஜர் - தமிழில்: யுகேந்தர்
--------------------------------
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை 6 - தம்பிஐயா தேவதாஸ்
--------------------------------
விருப்பம் வேலையானால் – பிலிம்நியூஸ்ஆனந்தன் - 8 - தினேஷ் குமார்
--------------------------------
ஏகாதிபத்தியப் பார்வையில் போராட்டம், புரட்சி, தீவிரவாதம் - டி.டி.ராமகிருஷ்ணன்
--------------------------------
 
   


   

 

 

காணும் முறைகள் - ஜான் பெர்ஜர்

- தமிழில்: யுகேந்தர்


அத்தியாயம் 1 - பகுதி 5

பெரும்பாலான மக்கள், கலை அருங்காட்சியங்கத்தைப் பார்க்க வருகை தருவதில்லை. கல்வி தகுதி, எவ்வாறு கலை ஈடுபாட்டுடன் நெருக்கமாக தொடர்புடையதென பின்வரும் அட்டவனை காட்டுகிறது.

கலை அருங்காட்சியக பார்வையாளர்களின் கல்வி நிலை தகுதிபடி தேசியளவு விகிதம்.
ஒவ்வொரு கல்வி நிலை பிரிவாக கலை அருங்காட்சியங்கத்தைப் பார்க்க வருகின்றவர்களின் விழுக்காடு.

Source : Pierre Bourdieu and Alain Darbel L'Amour de l'Art, Editions de Minuit, Paris 1969, Appendix 5, table 4

பெரும்பாலானவர்கள், அருங்காட்சியத்தைப் புனித சின்னங்களால் நிறப்பட்டது என்று கருதுகிறார்கள். தங்களை விளக்கி வைக்கிற, காரணங் கூறமுடியாத செல்வத்தின் புதிரான புனித சின்னம். வேறுவிதமதாக சொல்வதெனில், உண்மையான சிறந்த கலை படைப்பு என்பது செழிப்பான பணக்காரர்கள் அழியாது பாதுகாக்கவே (பொருளாதாரரீதியாகவும் ஆன்மிகரீதியாகவும்) என அவர்கள் கருதுகிறார்கள். ஒவ்வொரு சமூக வர்கத்திற்கும் கலை அருங்காட்சியகம் என்னவாக தோன்றுகிறது என கீழுள்ள அட்டவனை காட்டுகிறது.

கீழே பட்டியலிடப்பட்டுள்ள இடங்களில், ஓர் அருங்காட்சியகம் உங்களுக்கு எதை நினைவுப்படுத்துகிறது ?

Source: as above, appendix 4, table 8

இன்றைய மறு உருவாக்க காலத்தில், ஓவியத்தின் பொருள் அதற்கு பொருந்துவதாக இல்லை. அவற்றின் பொருள் அனுப்பத்தக்கதாக ஆகிறது, ஒரு வகை தகவலாகிறது என கூறலாம். மற்ற அனைத்து தகவல் போன்றே, அதை பயன்படுத்தலாம் அல்லது பொருட்படுத்தாமல் ஒதுக்கலாம். ஓர் தகவல் தனியாக எந்த சிறப்பதிகாரமும் கொண்டில்லை. ஓர் ஓவியம் பயன்படுத்த ஆரம்பிக்கும் போது, அதன் பொருள் மாற்றமடைக்கிறது அல்லது முற்றிலும் மாறிவிடுகிறது. இதில் என்ன ஈடுபட்டிருக்கிறதென மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். மறு உருவாக்கம் செய்யப்பட்ட ஓவியம், அசலின் சில அம்சங்களை உண்மையாக கொண்டிருக்கவில்லை என்பதல்ல கேள்வி. ஒரு படத்தை பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தலாம், மறு உருவாக்கம் செய்யப்பட்ட படம், அசல் போல் அல்லாமல் அனைவருக்கும் தன்னை கொடுக்க முடியும். மறு உருவாக்கம் இதை சாத்தியப்படுத்துகிறது என்பதே கேள்வி. மறு உருவாக்கம் செய்யப்பட்ட படம் இப்படியான பயன்பாட்டிற்கு தன்னை கொடுக்கும் சில வழிகளை ஆராய்வோம்.

மறு உருவாக்கம் ஓவியத்தின் ஒரு விவரத்தை முழுவதிலிருந்து தனிமைப்படுத்துகிறது. விவரம் மாற்றமடைகிறது. ஓர் தொடர் உருவகப் படைப்பு, ஒரு பெண் ஓவியமாகிறது.

திரைப்பட கேமரா மூலம் ஒரு ஓவியம் மறு உருவாக்கம் செய்யும் போது, அது திரைப்பட இயக்குநரின் வாதப்பொருளாக மாறுவது தவிர்க்க இயலாது.

ஓவியவத்தை மறு உருவாக்கம் செய்யப்பட்ட திரைப்படம், ஓவியத்தின் வழியாக பார்வையாளரை இயக்குநரின் சொந்த முடிவுகளுக்கு இட்டுச்செல்லும். ஓவியம் திரைப்பட இயக்குநருக்கு அதிகாரத்தை கொடுக்கிறது.

ஏனெனில் திரைப்படம் குறிப்பிட்ட நேரத்திற்குள் வெளிப்படுகிறது, ஆனால் ஓவியம் அப்படியல்ல.

திரைப்படத்தில் ஒர் படிமத்தை தொடர்ந்து மற்றொரு படிமம் பின்தொடரும், அடுத்தடுத்து வரும் படிமங்கள் மாற்ற முடியாத ஒரு வாதத்தை கட்டமைக்கிறது.

ஒர் ஓவியத்தில் இருக்கும் அனைத்து பகுதிகளையும் அதே நேரத்தில் காண வேண்டும். பார்வையாளருக்கு ஓவியத்தின் ஒவ்வொரு பகுதியையும் ஆய்வு செய்ய நேரம் தேவைபடலாம், ஆனால் ஒரு முடிவை அடையும் போது, அந்த முடிவை மாற்றவோ அல்லது வருணிப்பை மாற்றவோ ஓவியத்தின் முழு பகுதி அங்கேயே இருக்கிறது. ஓவியம், அதன் சொந்த அதிகாரத்தைப் பராமரிக்கிறது.

ஓவியங்கள் பெரும்பாலும், வார்த்தைகள் சேர்க்கப்பட்டே மறு உருவாக்கம் செய்யப்படுகிறது.

பறவைகள் வெளியேறி பறக்கும் சோள வயலின் இயற்கை நிலக்காட்சி இது. ஒரு கணம் இதை பாருங்கள்.

இப்போது இந்த ஓவியத்தின் குறிப்பை படித்தபின் மீண்டும் அதே ஓவியத்தை ஒரு கணம் பாருங்கள்.

"வான்கா வரைந்த இறுதி ஓவியம் இது. தற்கொலை செய்வதற்கு முன் வரைந்த ஓவியம்"

வார்த்தைகள் ஓவியத்தின் பார்வையை எப்படி மாற்றியுள்ளது என வரையறுப்பது கடினமானதாகும், ஆனால் சந்தேகத்திற்கிடமின்றி மாற்றியுள்ளது. வாக்கியத்தை அந்த ஓவியம் இப்போது விளக்குகிறது.

இந்த கட்டுரையில் உள்ள ஒவ்வொரு மறு உருவாக்க படிமமும் வாதத்தின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது, ஓவியத்தின் சுயாதீன அர்த்தத்திற்கும் இதற்கும் ஒன்றும் சம்பந்தமில்லை அல்லது சிறிய தொடர்பே உண்டு. ஓவியங்களின் சொந்த வாய்மொழி அதிகாரத்தை உறுதிபடுத்தவே வார்த்தைகளான மேற்கோள் கொடுக்கப்பட்டது. (இந்த புத்தகத்தில் வார்த்தைகள் இல்லாமல் உள்ள கட்டுரைகள் இந்த வேறுபாட்டை தெளிவாக உணர்த்தலாம்.)

தொடரும்...

படங்களை பெரிதாகக் காண, அதன் மீது சொடுக்கவும்.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </