உள்ளடக்கம்
 
   
--------------------------------
   
--------------------------------
   
--------------------------------
   
--------------------------------
   
--------------------------------
   
--------------------------------
   
--------------------------------
   
--------------------------------
   
--------------------------------
   
--------------------------------
   
   
   
   

 

 

பேசாமொழி இதழ் பற்றிய தங்கள் கருத்துகளை, வாசகர்கள், எழுத்தாளர்கள், திரைப்பட ஆளுமைகள் இங்கே பகிர்ந்துக் கொள்கிறார்கள்.

 


வணக்கம் பேசாமொழி

நான் இந்தப்புத்தகத்தைப்பற்றி நண்பர் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை… தற்போது தங்கள் இணையப்பத்திரிக்கை மூலம் அவ்வாய்ப்பை அமைத்து கொடுத்ததற்கு நன்றி. ராஜேஷ் அலைஸ் கருந்தேள் நன்றாக எழுதுவார் அவரின் ப்ளாக் ஒரு மாதத்திற்கு முன்புதான் எனக்கு அறிமுகம்… ஆனால் அவருக்கு நன்றாக எழுத வரும் என்பது அவர் ப்ளாக்கை நான் முதலில் வாசித்தப்போதே உணர்ந்துகொண்டேன். இங்கும் அவர் கலக்குவார் என நம்புகிறேன்.

தொடர் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
விக்னேஷ்

-----------------------------------------------------------------------------------------------------------

அன்பு ஆசிரியர் அவர்களுக்கு

”பேசாமொழி” வலைதளம் சிறப்பாகவிருக்கிறது.

குறும்பட விமர்சனமும் ஆவணப்படங்களைப் பற்றிய அறிமுகங்களும் சிறப்பு.
இளம் படைப்பாளிகளுக்கு தங்கள் வலைதளம் சிறப்பானது. இது அவர்களுக்கான ஒரு அங்கீகார தளம்.
உங்கள் சேவை தொடரட்டும்.

வளைகுடாவிலும் பல தமிழ்ப் படைப்பாளிகள் தங்கள் படைப்புத்திறமையை வெளிக்கொணர்கின்றனர்.அவர்களைப்பற்றிய தகவல்களையும் அவ்வப்போது தங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். தேவைப்படின் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

அன்புடன்
வி.களத்தூர் ஷா
பத்திரிக்கையாளர்

அபுதாபி
ஐக்கிய அரபு அமீரகம்
(AbuDhabi)
U.A.E.

-----------------------------------------------------------------------------------------------------------

அன்புள்ள பேசாமொழி குழுவிற்க்கு,

உங்களின் இதழை படித்தேன் ... அருமையான முயற்சி... திரு. ராஜேஷ் முலம் உங்கள் இதழை பற்றி அறிந்துகொண்டேன் ..

ராஜேஷ் அவர்களின் மொழிபெயர்ப்பு கட்டுரை ... ஆரோக்யமான முயற்சி... நல்ல ரசிகர்களுக்கும்... நல்ல படைப்புகளை உருவாக்க நீனைப்பவர்களுக்கும் ... உபயோகமான முயற்சி...

பாலுமகேந்திரா அவர்களின் குறும்படங்களை பற்றிய கட்டுரையும் அதில் இருந்த ஆதங்கமும் உண்மையில் நல்ல பதிவு ... அந்த குறும்படங்களின் புத்தகத்தை மாடும்தன் என்னால் வாங்க முடிந்தது.... DVD யை வாங்க வேண்டும்... அந்த கட்டுரையை படித்து பார்துவிட்டு மீண்டும் ஒரு முறை அந்த கதையை பார்க்கும் போது ... புதிதாக ஒரு முறை பார்த்தது போல் இருந்தது ...

அன்புடன்
அருண் குமார்


-----------------------------------------------------------------------------------------------------------

நல்லபதிவு. தரமான படம் பற்றிய கருத்தாடலாக மணிமேகலை அவர்களுடைய நேர்காணல் காணப்படுகின்றது. சமூகத்தின் அவலங்களினை ,ஒடுக்கு முறைகளினை பதிவு செய்வதற்கான கனதியான ஊடகமாக ஆவணப்படங்கள் விளங்குகின்றன. நானும் இத்து றையில் ஈடுபாடு கொண்டவன் எனும் வகையில் மகிழ்வான பதிவினை வாசித்த திருப்தி ஏற்ப்படுகின்றது. (எஸ்.ரி.அருள்)

-----------------------------------------------------------------------------------------------------------
இயக்குனர் மிஸ்கின் - நேர்காணல் கட்டுரைக்கான என்னுடைய கருத்து

தமிழ் சினிமாவை பொருத்தவரை பல திரைப்படங்கள் பார்த்ததுண்டு. அந்நிய சினிமாவின் மீது இருந்த ஒரு ஈர்ப்பு அது இயக்குனர் மிஷ்கின் அவர்களின் சினிமாவை பார்க்கையில் அதிகமாயிருந்தது. ஓநாயும் ஆட்டுக்குட்டியாகட்டும் பிசாசுவாகட்டும் வித்தியாசங்களை அவர் பாராமல் அவர் பிடித்ததை மட்டும் செய்கிறார் . அவர் கூறியது போல என்னைப்பொருத்தவரையும் ஒரு சிறந்த திரைக்கதை ஆசிரியர் இயக்குனர் மிஷ்கின் மட்டும்தான். நான் பார்த்த இயக்குனர்களில் என் பெருமைக்குரியவரும் அவர்தான்..

மோகன் தாஸ்

-----------------------------------------------------------------------------------------------------------

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamoli

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </