தணிக்கை-அதிகாரம்-சுதந்திரம் - யமுனா ராஜேந்திரன்

'சினிமா பாரடைசோ' படத்தில் ஒரு காட்சி வரும். திரைப்படத்தைத் தணிக்கை செய்வதற்காக உள்ளுர் பாதிரியார் வந்து அமர்ந்திருப்பார். ஆண்- பெண் முகங்கள் முத்தத்திற்காக நெருங்கும்போது அங்கே வெட்ட வேண்டும்-தணிக்கை செய்ய வேண்டும் என்பதைக் குறிக்க முகத்தை அறுவருப்பாக வைத்துக்கொண்டு பாதிரியார் கை உயர்த்தி விசிறி விசிறி மணியடிப்பார். ஸ்கீரினிங் ரூமில் சுற்றிக் கொண்டிருக்கும் பிலிம்ரோலில் அந்த இடத்தில் அடையாளத்திற்கு பேப்பர்துண்டு சொருகப்படும். இத்தாலியில் திரைப்படத் தணிக்கையை கத்தோலிக்க தேவாலயம் கையில் வைத்திருந்தது என்பதற்கு இது ஒரு திரைச்சான்று. ஈரானில் எழுபதுகளில் அயதுல்லா கொமேனியின் தலைமையில் ஷா மன்னருக்கு எதிராகப் ஈரானியப் புரட்சி வெற்றிபெற்றவுடன் கலாச்சாரக் காவல்துறையின் மேற்பார்வையில் புனிதநூல் குரானது அடிப்படையில் திரைப்படத் தணிக்கைவிதிகள் கொண்டுவரப்பட்டன.

  மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------------------------------------

சுயாதீன திரைப்பட இயக்குனர் லீனா மணிமேகலையுடன் ஒரு நேர்காணல் - தமிழ் ஸ்டுடியோ அருண்

"தணிக்கை" வாரியம், "சான்றிதழ்" தரும் வாரியமாக மட்டும் செயல்படும் வகையில் எண்பதுகளின் இறுதியிலேயே சட்டரீதியான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு விட்டன. ஆனால் நடைமுறையில் தணிக்கை வாரியமாகவே CBFC செயல்பட்டு வருகிறது. அடிப்படையில் CBFC Censor Board அல்ல, Certification Board என்பதை படைப்பாளிகளும் பார்வையாளர்களும் தெரிந்துக்கொள்ள வேண்டும். இந்த நாடு சனநாயக நாடு தான் என்பது உண்மையெனில், இந்திய அரசியலைமைப்பு சட்டத்தின் Article 19 வழிகாட்டுதலின் படி படைப்பு/கருத்து/பேச்சு சுதந்திரத்திற்கு நாம் இந்நாட்டின் குடிமகன்களாக கடப்பாடுடையவர்கள் எனில், தணிக்கை வாரியத்திற்கு என்ன தேவை இருக்கிறது? படங்களுக்கான "வயது வந்தோர் பார்க்க கூடிய படம்", "பெற்றோரின் வழிகாட்டுதலின் பேரில் குழந்தைகள் பார்க்க கூடிய படம்" போன்ற "வகை சான்றிதழ்கள்" தரக்கூடிய நிறுவனமாக மட்டும் CBFC செயல்படுவது தான் சட்டப்படி சரி, நியாயம்.

  மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------------------------------------

திரைப்படத் தணிக்கை வாரிய முன்னாள் தலைவர் லீலா சாம்சன் அவர்களுடன் ஒரு நேர்காணல் - தமிழில்: யுகேந்தர் | நன்றி: லீனா மணிமேகலை

தணிக்கை வாரியம் எப்போதும் ஆளும் கட்சியின் அழுத்தத்தின் கீழ் உள்ள ஒரு நிறுவனமாகவே இருந்து வந்துள்ளது. பா.ஜ.க'வின் தலையீடு புதிய நிகழ்வா?
இல்லை. 'தன்னாட்சி' என்று அழைக்கும் நிறுவனங்களை நல்ல காரணங்களுக்காக அரசு அமைக்கிறது. ஆனால் அவர்கள் அந்த அமைப்பை மேம்படுத்த, வசதிகளை மேம்படுத்த, பணி ஆட்கள் சேர்க்க தேவையான நிதியை வழங்காமல் அதை நசுக்கவும் முடியும். 'நாட்டின் நலனுக்காக' என்று மேற்கோள் காட்டி எங்கள் குறுக்கீடு முக்கியம் என மேலும் அவர்கள் விருப்பத்திற்க்கேற்ப தலையிடவும் முடியும், முன்னர் புகைப்பிடிப்பது குறித்து குறுக்கீடு செய்தார்கள், தற்போது ஆபாச வார்த்தைகள் குறித்து குறுக்கீடு செய்கிறார்கள்.

  மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------------------------------------

பேசாமொழி - திரைப்படத் தணிக்கை சிறப்பிதழ் - தமிழ் ஸ்டுடியோ அருண்

தமிழ் ஸ்டுடியோவின் பேசாமொழி இணைய இதழ் ஒவ்வொரு இதழிலும் ஏதேனும் ஒரு வகையிலான சிறப்பிதழை கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இந்த இதழ் இந்தியத் திரைப்படத் தணிக்கை தொடர்பான சிறப்பிதழாக வெளிவருகிறது. சினிமா என்பது ஒருவகையான வணிகத்திற்குரிய போகப் பொருளாக மாறிக்கொண்டிருக்கும் சூழலில், அதன் வணிக எல்லைகளை உடைத்தெறிய சுயாதீனத் திரைப்படங்களின் வருகை அவசியமாகிறது. சுயாதீனத் திரைப்படங்கள் வெளிவருவதற்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டியது, நல்ல சினிமாவை நேசிக்கும் ஒவ்வொருவரின் கடமை. சுயாதீனத் திரைப்படங்கள் அதிகமாக வெளிவர, முதலில் திரைப்படங்கள் தொடர்பாக இருக்கும் பல்வேறு மாயைகள், அதன் வணிகம் சார்ந்து உருவாக்கப்படும் கருத்தாக்கங்களை பொதுவெளியில் வைத்து உரையாட வேண்டும்.

  மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------------------------------------
   
 
தணிக்கை வாரியத்தின் செயல்பாடு - தியடோர் பாஸ்கரன்

தணிக்கையாளர்களுக்கு சினிமாவின் இயல்புகளில் பரிச்சயம் இல்லாததால், கதையின் கருவைப் பார்க்காமல், தனித்தனி காட்சிப்படிமங்களை பாலியல் ஒழுக்க ரீதியில் கண்காணித்து மையக்கருத்தை கோட்டை விட்டுவிடுகிறார்கள். படத்தின், தாக்கம் பற்றிய சுரணையேயில்லை. ரத்தக்கண்ணீரில் (1954) பாலியல் தொழிலாளியுடன் உறவு கொண்ட கதாநாயகனுக்கு தொழுநோய் வருகின்றது. தொழுநோய் பாலியல் நோயல்ல. கணிகையரையும் தொழுநோயாளிகளையும் இப்படம் இழிவு படுத்துகின்றது. இந்திய தொழுநோய் சங்கத்தின் எதிர்ப்பு தணிக்கை வாரியத்தால் உதாசீனப்படுத்தப்பட்டது. இன்றும் இப்படம் சிரமமின்றி ஒவ்வொரு பத்தாண்டும் சான்றிதழ் பெறுகின்றது.


  மேலும் படிக்க
 
 
சினிமா மீதான கட்டுப்பாடுகள் - பி.டி.கர்கா | தமிழில் - யுகேந்தர்


சினிமாவின் சமூக சக்தி உணரப்பட்ட பின், அதை கட்டுப்படுத்த வேண்டும் என்ற அழுத்தங்கள் எழுந்தது. திரைப்படங்கள் பொழுதுபோக்குக்கானவை மட்டுமல்ல என்ற பயம், அவை சிறிய தீமைகளை ஒழிக்க மற்றும் நீதியின் பெயரில் நடத்தப்படும் போலியான செயல்களை உணர்த்த முடியும் என்று தெரிய வந்தது. இந்த புதிய விழிப்புணர்வே தணிக்கை அதிகாரிகள் தடை உத்தரவு கொடுக்கவும் திரைப்பட காட்சிகளை வெட்டுவதற்கும் வழிவகுத்தது; அழுத்தம் கொடுக்கும் குழுக்கள் கண்டனங்களை தெரிவித்து புறகணிப்பதாக அச்சுறத்தவும் செய்தனர். 'திரைப்படங்கள் நிலைத்திருக்கிறது, அவ்வப்போது கருத்து சுதந்திர உரிமையை உபயோக்கிறது' என்பது 'ஆச்சரியான விஷயம்' என கில்பெர்ட் செல்ட்ஸ் தெரிவிக்கிறார்.
  மேலும் படிக்க
       
 
 
என்றும் அழியா உண்மை - ஆனந்த் பட்வர்தன் :: தமிழில்: யுகேந்தர்

"கோத்ரா தக்" என்கிற தன்னுடைய முதல் ஆவணப்படத்தை எடுத்த பின்னர் சுப்ரதீப்பை நான் 2002'இல் முதலில் சந்தித்தேன். அவர் பத்திரிக்கையாளராக இருந்தார், ஆனால் குஜராத் பயங்கரம் அவரை திரைப்படைப்பாளியாக மாற்றியது. 59 இந்து பயணிகளின் இறப்பிற்கு வழிவகுத்த தொடர் வண்டி எரிப்பு சம்பவத்தில் தனது கவனத்தை செலுத்தினார். கருகிய உடலை பொதுக் காட்சிக்கு அனுமதித்த குஜராத் அரசு, இஸ்லாமியர்களுக்கு எதிரான திட்டமிட்ட படுகொலைகள் தொடங்கிய போது வேறு திசை பார்த்துக்கொண்டிருந்தது. இஸ்லாமியர்கள் தொடர் வண்டி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்கள் என்ற வதந்தி பரவ ஆரம்பித்தது. இந்த கருத்தை கேள்வி கேட்கும் தடயவியல் ஆதாரங்கள் குறித்தும் திட்டமிட்டு இஸ்லாமியர்களை எதிரியாக சித்தரித்ததைக்...

 

  மேலும் படிக்க
 
 
பப்பிலியோ புத்தா திரைப்பட இயக்குனர் ஜெயன் செரியனுடன் ஒரு சந்திப்பு - நந்திதா தத்தா :: தமிழில்: யுகேந்தர்
இந்த திரைப்பட உருவாக்கம் உண்மையான சவாலாக இருந்தது. திரைப்பட கதாபாத்திரங்களுக்கான நடிகர் தேர்வில் நான் சில சோதனைகளை செய்துள்ளேன். திரைப்படத்தின் முக்கிய பாத்திரத்தில் நடித்தவர்கள் உண்மையான செயற்பாட்டாளர்கள், அதேசமயம் எப்போதும் வரும் முக்கிய நடிகர்களை இரண்டாம் நிலை பாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளேன். இந்திய சினிமாவில், தலித் கதாபாத்திரங்கள் மற்றும் நடிகர்கள் ஓரங்கட்டப்படுவதை நாம் பெரும்பாலும் பார்க்கிறோம். ஆனால் இந்த படத்தில், நான் அவர்களை மையத்தில் கொண்டு வர முயற்சி செய்துள்ளேன்.அதே நேரத்தில், எப்போதும் மையத்தில் இருப்பவர்களை ஓரத்தில் வைத்துள்ளேன். பெரும்பாலான முக்கிய கதாபாத்திரங்கள் தங்கள் வாழ்க்கைக்கு நெருக்கமான வேடங்களிலேயே...




  மேலும் படிக்க
   
------------------------------------------------------------------------------------------------------------------------------
   
 
தணிக்கை வாரிய அலுவலகத்தில் இடைத்தரகர்கள் ஏன் தழைத்தோங்குகிறார்கள்! - பிகாஸ் மிஷ்ரா :: தமிழில்: யுகேந்தர்

அவர்களின் ஆலோசனையின் பேரில் நான் செய்ய வேண்டியிருந்த இரண்டாவது திருத்தம், எனது படத்தை "இசை" என அறிவிப்பதாகும். விசித்திரமாக உள்ளதா, ஆனால் அந்த ஒரு வழி மட்டுமே இருந்தது. படிவத்தில் படத்தின் மொழியை ஒரு பகுதியில் பூர்த்திச் செய்ய வேண்டும். எனது படத்தில் வசனங்களே இல்லை. அந்த பெண் குழப்பமடைந்தார். சிறிது யோசனைக்கு பின் படத்தில் இசை உள்ளதா என கேட்டார். இந்த படம் நடன கலைஞர் பற்றியது, ஒரு காட்சியில் அவன் ஆடுவான் டிரம்மர்ஸ் டிரம்ஸ் அடிப்பார்கள் என சொன்னேன், உடனே அவர் "இசை" என்று அந்த பகுதியில் பூர்த்திச்....



  மேலும் படிக்க
 
 
நூல் அறிமுகம் - சினிமாவும் தணிக்கையும் : இந்திய அரசியல் கட்டுப்பாடுகள் - நமீதா மல்ஹோத்ரா :: தமிழில்: தீக்ஷன்யா ரெங்கநாதன்

அமெரிக்க, இங்கிலாந்து திரைப்படங்களில் வரும் வெள்ளைக்காரர்களை, மாநிறம் கொண்ட ஆசிய மக்கள் தங்களோடு ஒன்றாதவர்களாகவும், விரும்பத்தகாதவர்களாகவும் பார்த்தனர். இதுவே, அன்றைய காலனித்துவ தணிக்கைத் துறை அதிகாரிகளுக்குப் பெரும் கவலையாக இருந்தது. எனவே, இதற்கென ஒரு கட்டமைப்பை, தனி விதிமுறைகளை உருவாக்கினார்கள். ஆனால், முந்தைய காலனித்துவ தணிக்கைத் துறையின் மரபுகள் இன்றும் பெரும்பாலும் மாறாமலேயே உள்ளது. இன்றைய நவீன காலனிய இந்தியாவிலும், முன்பிருந்த பழைய காலனி ஆதிக்கக் கட்டுப்பாட்டில் செயல்பட்ட தணிக்கைத் துறை.......




  மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------------------------------------
 
 
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
     
     
     
     
     
     
     
     
 
 
 
 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

காப்புரிமை © பேசாமொழி

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome