இதழ்: 31    பங்குனி (March), 2015
   
 
  உள்ளடக்கம்
 
காணும் முறைகள் - ஜான் பெர்ஜர் - தமிழில்: யுகேந்தர்
--------------------------------
பேசாமொழி பதிப்பகத்தின் - ஒளி எனும் மொழி நூல் வெளியீட்டு விழா - தினேஷ்
--------------------------------
பார்வையாளர்களின் கூட்டு உளவியலும், ஹாலிவுட் மையநீரோட்ட சினிமாவும் - வருணன்
--------------------------------
வெட்கத்தினால் உடைந்தழிந்து போனார் புத்தர் - - எம்.ரிஷான் ஷெரீப்
--------------------------------
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை - தம்பிஐயா தேவதாஸ்
--------------------------------
மலையாள சினிமாவின் 75 ஆண்டுகள் - சுகுமாரன்
--------------------------------
டாக்குமெண்டரி படங்களின் தந்தை ராபர்ட் ஃப்ளஹர்ட்டி - ரவி இளங்கோவன்
--------------------------------
குறும்படங்களின் பத்தாண்டுகள் – 1900 – 1909 - லதா ராமகிருஷ்ணன்
--------------------------------
”கண்ணீர் வேண்டாம் சகோதரி” – தான்யா
--------------------------------
 
   


   

 

 

காணும் முறைகள் - ஜான் பெர்ஜர்

- தமிழில்: யுகேந்தர்


அத்தியாயம் 3 - பகுதி 2

.. . ஆதியாகமத்தில் கூறப்பட்டிருக்கும் கதையை இங்கு குறிப்பிடுவது சரியாக இருக்கும் :

"அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதன் கனியைப் பறித்து, புசித்து, தன் கணவனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.

அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள். . . . அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார். அதற்கு அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன் என்றான்..

அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் கணவனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார். "

இந்த கதையில் கவனத்திற்குரியது எது?. ஆப்பிளை சாப்பிட்டதனால் அவர்கள் நிர்வாணமாக இருப்பதை உணர்ந்தனர், இருவரும் ஒருவரையொருவர் வித்தியாசமாக கண்டனர். காண்பவரின் மனதிலேயே நிர்வாணம் உருவாக்கப்பட்டது.

இரண்டாவதாக கவனிக்க வேண்டிய உண்மை என்னவெனில், பெண் மீதே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது, ஆணுக்கு கீழ்ப்படிந்து செல்ல வேண்டும் என்ற தண்டனையும் கொடுக்கப்பட்டுள்ளது. பெண் சம்பந்தப்பட்டதென்றால், ஆண் தான் இறைவனின் முகவராகிறான்.

இடைக்கால மரபில் இந்த கதை பெரும்பாலும் தொடர் காட்சிகளாக சிறிய துண்டு கார்ட்டூனில் இருப்பது போன்று விளக்கப்பட்டது.

Fall and Expulsion from Paradise by Pol De Limbourg (early 15th Century)

மறுமலர்ச்சி காலத்தில் தொடர் காட்சி விவரிப்பு காணாமல் போயிற்று, சித்தரிக்கப்பட்ட அந்த ஒரு கணம் அவமான தருணமாக மாறியது. அவர்கள் இருவர் அத்தி இலைகள் உடுத்தியிருப்பார்கள் அல்லது தங்கள் கைகளால் அடக்கமுள்ள சைகையை செய்வார்கள். பார்வையாளருக்கு இப்போது அவர்களது அவமானம் அவர்கள் இருவரை பொறுத்தமட்டும் அவ்வளவு பெரியதில்லை.

Adam and Eve by Mabuse (early 16th century)

பின்னர், அவமானம் ஒரு காட்சி முறையாக ஆனது.

The Couple by Max Slevogt, 1868-1932

Advertisement for Underwear

ஓவிய பாரம்பரியம் மதச்சார்பற்றதாக ஆன போது, மற்ற கருப்பொருள்களிலும் ஆடையற்று (Nude) இருப்பதை வரைவதற்கு வாய்ப்புகள் தோன்றியது. ஆனால் அவை எல்லாவற்றிலும் உட்குறிப்பு ஒன்று இருந்தது, பார்வையாளர் தன்னை பார்க்கிறார் என்று "வரை பொருளுக்கு (பெண்)" தெரிந்திருந்தது.

அவளாக அவள் நிர்வாணமாக இல்லை.
பார்வையாளர்கள் பார்க்கும் போதே அவர் நிர்வாணமாக இருக்கிறாள்.

"சுசன்னா மற்றும் பெரியோர்கள்" என்ற அபிமான பொருளின் ஓவியங்களுக்கு இதுவே உண்மையான கருப்பொருளாகும். சுசன்னா குளிப்பதை வேவு பார்க்க பெரியோர்களுடன் நாமும் இணைகிறோம். நாம் அவளை பார்ப்பதை அவள் திரும்பிப் பார்க்கிறாள்.

Susanna and the by Elders Tintoretto

டின்டொரெட்டோவின் இதே பொருளின் இன்னொரு பதிப்பில், சுசன்னா தன்னையே கண்ணாடியில் பார்க்கிறார். இதனால் தன்னை பார்க்கும் பார்வையாளருடன் அவளும் இணைகிறாள்.

Susanna and the by Elders Tintoretto

பெண்ணின் கர்வத்தின் சின்னமாகவே பெரும்பாலும் கண்ணாடி பயன்படுத்தப்பட்டது. எனினும் இந்த நியாயவாதம் பெரும் பாசாங்குத்தனமாகும்.

Vanity by Memling

அவளை பார்த்து அனுபவிப்பதில் உனக்கு மகிழ்ச்சி என்பதால் நிர்வாணமாக பெண்ணை நீ வரைந்தாய், அவள் கையில் ஒரு கண்ணாடியை கொடுத்து அந்த ஓவியத்தை "கர்வம்" என நீ அழைத்தாய், உனது சொந்த இன்பத்திற்காக நிர்வாணமாக நீ சித்தரித்த பெண்ணை ஒழுக்கரீதியில் கண்டிக்கிறாய்.

கண்ணாடியின் உண்மையான செயல்பாடு வேறு. பெண், தன்னை முதலும் முக்கியமாக ஒரு சிறந்த காட்சியாய் பாவிக்க வேண்டும் என்பதை இரகசியமாய் கண்டுங்காணாது பெண்ணை நினைக்க செய்வதாகும்.

தொடரும்...

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </