வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


எப்போதும் தமிழ் சமூகத்திற்கு ஒரு சாபக் கேடு உண்டு. கலைஞர்களையோ, படைப்பாளிகளையோ அவர்கள் வாழும் காலத்தில் நாம் நாம் அறிந்துக் கொள்வதே கிடையாது. தான் வாழும் காலத்தில் பத்து கோடி மக்கள் தொகை கூட இல்லாத காலத்தில் ஷேக்ஸ்பியர் கொண்டாடப்பட்ட விதமும், முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில் பாரதியார் கொண்டாடப்பட்ட விதமும் நாம் அறிந்ததே. இறந்தப் பின்னரும் கூட நாம் ஒரு சில கலைஞர்கலைதான் கொண்டாடுகிறோமே தவிர திறமை படைத்த அனைவரையும் கொண்டாடுவதில்லை. அந்த வகையில் தமிழ் திரைப்படத் துறையில் சாதித்த ஒரு சில இசைக் கலைஞர்களை பற்றியக் கட்டுரைகள் இந்தப் பகுதியில் இடம்பெறப் போகிறது.

"சிகரம் தொட்டவர்கள்". திரு. பி.ஜி. எஸ். மணியன் அவர்கள் எழுதவிருக்கும் இந்தத் தொடர் குறைந்த பட்சம் உங்களுக்குள் ஒரு சிறு அதிர்வையாவது, அல்லது அந்தக் கலைஞர் பற்றிய ஒரு புரிதலையாவது ஏற்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை.

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


பி.ஜி.எஸ். மணியன்

இலக்கியத்திலும், இசையிலும் மிகுந்த ஈடுபாடு உள்ள அவர், இசையில் ஓரளவிற்கு பரிச்சயமும் உள்ளவர். ஆன்மீக கட்டுரைகளை மதராஸ் அய்யப்ப சேவா சங்கம் (கச்சாலீஸ்வரர் கோவில் - அரண்மனைக்கார தெருவில் - அமைந்துள்ளது) வெளியிட்ட ஆண்டு விழா மலர்களில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். தமிழில் "மகாலக்ஷ்மி சுப்ரபாதம்" எழுதி வெளியிட்டுள்ளார்.

அவற்றுக்கு அவரே ராகங்களும் அமைத்து இருக்கிறார். (தற்போது அவரது சொந்த உபயோகத்துக்கு கூட ஒரு புத்தகமும் இல்லாமல் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

ஆன்மீக சொற்பொழிவுகள் சிலகாலம் செய்துள்ளார்.

அரக்கோணம் அருகில் உள்ள நெமிலி பாலா பீடத்தின் சார்பாக "சொற்பொழிவு செம்மல்" என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பழைய திரைப்படங்களில் ஆர்வம் அதிகம்.

இனி தான் எழுதப் போகும் தொடர் பற்றி அவரே கதைக்கிறார்.

பொழுது போகாமல் சமீபத்தில் ஒருநாள் சிந்தித்துக் கொண்டிருந்த போது அந்தக்காலத்து இசை அமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா அவர்களை பற்றிய தகவல்கள் கிடைத்தன.

அவர் போன்று அந்தக்காலத்தில் சாதனை படைத்த இசை அமைப்பாளர்கள் வாழ்வில் கடந்து வந்த பாதைகளை பார்க்கும்போது பெரும் வியப்பு ஏற்படுகிறது.

அறிவியல் வளர்ச்சி குறைவான அந்தக்கால கட்டத்தில் அவர்கள் இசை அமைத்த பாடல்கள் இன்றும் காலத்தை வென்று நிலைத்து நிற்கின்றன.

அவர்களை பற்றி "சிகரம் தொட்டவர்கள்" என்ற தலைப்பில் தமிழ் ஸ்டுடியோவில் எழுதலாமே என்று தோன்றி இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. வாரந்தோறும் கட்டுரைகளைப் படித்து விட்டு உங்கள் மேலான கருத்தகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS சிகரம் தொட்டவர்கள் தொடர்கள் வாயில்

சிகரம் தொட்டவர்கள் - தொடர்ந்து தொடுவதற்கு முன்னால்... சில விளக்கங்கள்

பி.ஜி.எஸ். மணியன்  pgs.melody@gmail.com

"சிகரம் தொட்டவர்கள்" திரை இசை அமைப்பாளர்களைப் பற்றிய தொடரை நான் கடந்த ஒரு வருட காலமாக தமிழ் ஸ்டூடியோவில் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறேன்.

ஐம்பது வாரங்கள் - வாசகர்கள் கொடுத்துவரும் தொடர் ஆதரவு நினைத்தாலே பிரமிக்க வைக்கிறது..அதே சமயம் சில தவறுகளும் சுட்டிக்காட்டப்பட்டு வந்திருக்கின்றன.

ஆரம்பத்தில் திரு. சி.ஆர். சுப்பராமன் அவர்களைப் பற்றிய பதிவில் முதலில் "உதயணன்" படத்துக்கு பாடல் பதிவு ஆரம்பிக்கும் வேளையில் பாகவதர் கைதுசெய்யப்பட்டதாக நான் எழுதி இருந்தேன்.

அது தவறு என்றும் பாடல்கள் அனைத்தும் பதிவான பிறகுதான் பாகவதர் கைது செய்யப்பட்டதாக நண்பரும் இசை ஆய்வாளருமான திரு. லலிதா ராம் அவர்கள் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். இதே தகவலை பிரபல எழுத்தாளர் திரு. ராண்டார் கை அவர்களும் உறுதிசெய்தார்.

ஒலிப்பதிவிற்கு முன்னால் பாகவதர் கைதாகி இருந்தாலும் சரி, அல்லது அதன் பிறகு என்றாலும் சரி உண்மையில் சி.ஆர். சுப்பராமன் தனது முதல் பட வாய்ப்பை இழந்தது என்னவோ இழந்ததுதானே?. எனது கூற்றுக்கு ஆதாரமாக நான் கொண்டிருந்தது திரு. வாமனன் அவர்களின் "திரை இசை அலைகள்" தான். என்றாலும்.. எனது தவறை சுட்டிக்காட்டிய நண்பர் திரு. லலிதா ராம் அவர்களுக்கும், திரு. ராண்டார் கை அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதே போல திரு. எஸ்.வி. வெங்கட்ராமன் அவர்களைப் பற்றிய பதிவில் அவருக்கு "கலைமாமணி" விருதுகூட வழங்கப் படவில்லை என்று நான் எழுதி இருந்தேன். அது தவறு என்று அரசின் கலைத் துறையில் பணியாற்றும் நண்பர் ஒருவர் சுட்டிக்காட்டி இருந்தார்.

நான் இணையத் தேடலில் கிடைத்த தகவலைத் தான் எழுதி இருந்தேன். தவறை சுட்டிக் காட்டிய திருத்திய அன்பருக்கும் என் நன்றிகள். என்றாலும் தள்ளாத வயதில் தனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று அந்த இசைமேதை வருந்தியதென்னவோ உண்மைதான். இந்த இடத்தில் இன்னொரு தகவலும் இணையத்தில் சலித்த போது கிடைத்தது. தமிழ் சினிமாவின் முதல் நட்சத்திர நடிகருக்கான சிறப்பு விருது அவருக்கு சினிமா எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் சார்பாக 2001ஆம் வருடம் வழங்கப் பட்டிருக்கிறது. அவர் காலமாகி மூன்று வருடங்களுக்கு பிறகு..! அதனை அவர் சார்பாக அவரது மகன் பெற்றுக்கொண்டதாக அந்தத் தகவல் தெரிவிக்கிறது.

இந்த இரு தவறுகளைத் தவிர..

வாசக நண்பர் திரு. கணேஷ் குமார் ஜி. ராமநாதனைப் பற்றிய எனது பதிவுகளுக்கு கருத்து தெரிவிக்கும் போது "சில தகவல்கள் ஏற்கெனவே "வாமனன்" அவர்களின் புத்தகத்தில் படித்தவைதான்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த சந்தேகம் எழுந்துவிடக் கூடாதே என்பதற்காகத் தான் நான் ஜி. ராமநாதன் அவர்களைப் பற்றி எழுதத் துவங்கிய முதல் அத்தியாயத்திலேயே திரு. வாமனன் அவர்கள் ஜி. ராமநாதனைப் பற்றி புத்தகமே எழுதி இருப்பதை குறிப்பிட்டிருந்தேன்.

என்றாலும் ஒருவரது வாழ்க்கை வரலாற்றை பற்றி எழுதும் போது இதற்கு முன்னால் எழுதியிருப்பவர்கள் கூறிய தகவல்களை எல்லாம் ஒதுக்கிவிட முடியாது. அதே சமயம் அதை அப்படியே "ஈயடிச்சான் காப்பி"யாகவும் கொடுத்துவிடக்கூடாது. ஆகவேதான் நான் திரு. வாமனன் அவர்கள் கொடுத்திருந்த தகவல்களை ஒதுக்கிவிடாமல் கொடுக்க நேர்ந்தது. அதே சமயம் அவர் கூறியவற்றை அப்படியே குறிப்பிட நேர்ந்த சந்தர்ப்பங்களில் "மேற்கோளிட்டு" அவர் கூறியதாகவே கொடுத்தும் வந்திருக்கிறேன்.

இந்த இடத்தில் இன்னொரு முக்கியமாக விஷயத்தையும் வாசக அன்பர்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

"சிகரம் தொட்டவர்கள்" - வெறும் வரலாற்றுத் தொடர் மட்டும் அல்ல. ஒரு தன்னம்பிக்கைத் தொடர்.

டி.ஜி. லிங்கப்பாவாகட்டும், திரை இசை மூவர்களாகட்டும் எப்படிப் பட்ட தடைகளை எல்லாம் தாண்டி முன்னேறி வந்திருக்கிறார்கள் என்பதை படிக்கும் இளைய தலைமுறையினர் - குறிப்பாக கலைத் துறையில் கால் பதித்து சாதிக்கத் துடிக்கும் இளம் கலைஞர்கள் அவர்கள் சந்தித்ததைப் போன்ற ஏமாற்றங்களையும், சோதனைகளையும் சந்திக்க நேரிடலாம். அவர்கள் சோர்ந்துபோகாமல் முன்னேற்றப் பாதையில் மனதை வைத்து முழுமூச்சாய் அதற்காக உழைக்கவேண்டும் என்பதற்காக எழுதப் பட்ட தொடர் இது.

இந்த என் நோக்கம் சரியாக உணர்ந்துகொள்ளப் பட்டிருக்கிறது என்பதற்கு திரை உலகில் உதவி இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் ஒரு இளைஞர் என்னிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு, "எனது தொடர் அவருக்கும் அவருடன் இருக்கும் நண்பர்களுக்கும் ஒரு உற்சாக டானிக்காக" இருப்பதாக கூறி நன்றி தெரிவித்துக் கொண்டார் என்ற தகவலை வாசகர்கள் முன் வைக்க கடமைப் பட்டிருக்கிறேன்.

ஜி. ராமநாதனைப் பற்றிய எனது பதிவுகளை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்து தனது பாராட்டுக்களை அலைபேசி மூலம் பகிர்ந்து கொண்ட அவரது மகளின் மகளும், பிரபல நகைச்சுவை நடிகர் திரு. எஸ்.வி. சேகர் அவர்களின் மனைவியுமான திருமதி. உமா சேகர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனது பதிவுகளை தொடர்ந்து வாசித்து கருத்துப்பதிவு செய்து உற்சாகமும் ஊக்கமும் கொடுத்த வாசக நெஞ்சங்களுக்கு - குறிப்பாக போற்றுதலுக்கும் வணக்கத்துக்கும் உரிய எழுத்தாளர் திரு. "கலாப்ரியா" அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

எல்லாவற்றுக்கும் மேலாக என்னை எழுதவைத்து ஒரு அங்கீகாரம் ஏற்படுத்திக் கொடுத்த தமிழ் ஸ்டூடியோ ஆசிரியர் குழுமத்தைச் சேர்ந்த நண்பர் திரு. அருண் அவர்களுக்கு நான் கட்டாயம் நன்றி கூறியே ஆகவேண்டும்.

அவரது பொறுமை அபாரமானது. பதிவுகள் அனுப்புவதில் ஏற்படும் கால தாமதத்தையும் பொறுத்துக்கொண்டு (பிழை திருத்தங்களுக்கு மட்டுமே சில சமயம் மூன்று நான்கு முறைகள் மறுபதிவு செய்து கொடுத்திருக்கிறார்!) என்னை தொடர்ந்து எழுதத் தூண்டிவரும் அவருக்கு என் ஸ்பெஷலான நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டு ...

இரண்டாவது பாகத்தில் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்...

அதுவரை ஒரு "ஷார்ட் ப்ரேக்"..

************************************************************

-----------------------------------------------------------------------------------------------------
உதவிக் கரம் கொடுத்தவர்கள்:

* திரு. வாமனன் அவர்களின் "திரை இசை அலைகள்" தொடர் தொகுதிகள்.

* திரு. வாமனன் அவர்களின் "சங்கீதச் சக்ரவர்த்தி" ஜி. ராமநாதன்.

* திரு. ராண்டார் கை அவர்களின் திரை விமர்சனக் கட்டுரைகள் - “THE HINDU” நாளிதழில் வெளிவந்தவை மற்றும் அவரது இணையதளம்.

* அமரர் கல்கியின் "மீரா யாத்திரை".

* திரு ஆரூர் தாஸ் அவர்களின் "சிவாஜி வென்ற சினிமா சாம்ராஜ்யம்" விகடன் பிரசுரம்.

" "பாபநாசம் சிவன்" - திரு. வீயெஸ்வீ - விகடன் பிரசுரம்.

" எம்.எஸ். - ஒரு வரலாற்றுப் பொக்கிஷம் - திரு. திரு. வீயெஸ்வீ .

* பேசும் படம், பொம்மை - ஆரம்பகாலக் கட்டுரைகள், நேர்காணல்கள், திரை விமர்சனங்கள். (இவற்றுக்காக சென்னை தரமணியில் உள்ள "ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்திற்கு மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன்.)

* WWW.CARNATICA.COM - இணைய தளம்.

* WWW.SANGEETHAM.COM - இணைய தளம்.

*******

 

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.