வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


எப்போதும் தமிழ் சமூகத்திற்கு ஒரு சாபக் கேடு உண்டு. கலைஞர்களையோ, படைப்பாளிகளையோ அவர்கள் வாழும் காலத்தில் நாம் நாம் அறிந்துக் கொள்வதே கிடையாது. தான் வாழும் காலத்தில் பத்து கோடி மக்கள் தொகை கூட இல்லாத காலத்தில் ஷேக்ஸ்பியர் கொண்டாடப்பட்ட விதமும், முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில் பாரதியார் கொண்டாடப்பட்ட விதமும் நாம் அறிந்ததே. இறந்தப் பின்னரும் கூட நாம் ஒரு சில கலைஞர்கலைதான் கொண்டாடுகிறோமே தவிர திறமை படைத்த அனைவரையும் கொண்டாடுவதில்லை. அந்த வகையில் தமிழ் திரைப்படத் துறையில் சாதித்த ஒரு சில இசைக் கலைஞர்களை பற்றியக் கட்டுரைகள் இந்தப் பகுதியில் இடம்பெறப் போகிறது.

"சிகரம் தொட்டவர்கள்". திரு. பி.ஜி. எஸ். மணியன் அவர்கள் எழுதவிருக்கும் இந்தத் தொடர் குறைந்த பட்சம் உங்களுக்குள் ஒரு சிறு அதிர்வையாவது, அல்லது அந்தக் கலைஞர் பற்றிய ஒரு புரிதலையாவது ஏற்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை.

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


பி.ஜி.எஸ். மணியன்

இலக்கியத்திலும், இசையிலும் மிகுந்த ஈடுபாடு உள்ள அவர், இசையில் ஓரளவிற்கு பரிச்சயமும் உள்ளவர். ஆன்மீக கட்டுரைகளை மதராஸ் அய்யப்ப சேவா சங்கம் (கச்சாலீஸ்வரர் கோவில் - அரண்மனைக்கார தெருவில் - அமைந்துள்ளது) வெளியிட்ட ஆண்டு விழா மலர்களில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். தமிழில் "மகாலக்ஷ்மி சுப்ரபாதம்" எழுதி வெளியிட்டுள்ளார்.

அவற்றுக்கு அவரே ராகங்களும் அமைத்து இருக்கிறார். (தற்போது அவரது சொந்த உபயோகத்துக்கு கூட ஒரு புத்தகமும் இல்லாமல் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

ஆன்மீக சொற்பொழிவுகள் சிலகாலம் செய்துள்ளார்.

அரக்கோணம் அருகில் உள்ள நெமிலி பாலா பீடத்தின் சார்பாக "சொற்பொழிவு செம்மல்" என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பழைய திரைப்படங்களில் ஆர்வம் அதிகம்.

இனி தான் எழுதப் போகும் தொடர் பற்றி அவரே கதைக்கிறார்.

பொழுது போகாமல் சமீபத்தில் ஒருநாள் சிந்தித்துக் கொண்டிருந்த போது அந்தக்காலத்து இசை அமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா அவர்களை பற்றிய தகவல்கள் கிடைத்தன.

அவர் போன்று அந்தக்காலத்தில் சாதனை படைத்த இசை அமைப்பாளர்கள் வாழ்வில் கடந்து வந்த பாதைகளை பார்க்கும்போது பெரும் வியப்பு ஏற்படுகிறது.

அறிவியல் வளர்ச்சி குறைவான அந்தக்கால கட்டத்தில் அவர்கள் இசை அமைத்த பாடல்கள் இன்றும் காலத்தை வென்று நிலைத்து நிற்கின்றன.

அவர்களை பற்றி "சிகரம் தொட்டவர்கள்" என்ற தலைப்பில் தமிழ் ஸ்டுடியோவில் எழுதலாமே என்று தோன்றி இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. வாரந்தோறும் கட்டுரைகளைப் படித்து விட்டு உங்கள் மேலான கருத்தகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS சிகரம் தொட்டவர்கள் தொடர்கள் வாயில்


எஸ்.வி. வெங்கட்ராமன் -10

பி.ஜி.எஸ். மணியன்  

"மீரா"வுக்குப் பின்...

உலக சரித்திரத்தை கிறிஸ்து பிறப்பதற்கு முன்னால் என்றும் பின்னால் என்றும் ஆராய்ச்சியாளர்கள் இரண்டாகப் பகுத்திருக்கிறார்கள். அதுபோல எஸ்.வி. வெங்கட்ராமன் அவர்களின் வாழ்க்கை சரிதத்தையும் மீராவுக்கு முன், மீராவுக்கு பின் என்று இரண்டாகப் பிரிக்கலாம்.

ஏனென்றால் மீரா படத்துக்கு முன்னால் நமது நாட்டிலும், திரை உலகிலும் நிலவி வந்த சூழல் வேறு. அதற்குப் பின்னால் இருந்த நிலை வேறு.

ஹிந்தி மீரா வெளிவந்த போது நம் நாடு சுதந்திரம் அடைந்த புதிது. அதுவரை ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்து வந்த அனைத்து துறைகளும் - திரைப்படத் துறை உட்பட - புதிய சுதந்திர இந்திய அரசாங்கத்தின் ஆளுமைக்கு கீழே வந்தன. திரைப்படத்துறையும் புதிய மாற்றங்களுக்கு தயாராகிக் கொண்டிருந்தது.

"மீரா"வுக்கு முன்னால் பெரும்பாலும் புராணக் கதைகளே படமாக்கப்பட்டு வந்தன. நாடு சுதந்திரம் அடைந்த பிறகோ புதிய புதிய கருத்தாக்கங்கள் தோன்ற வித்தியாசமான கதை அம்சங்கள் கொண்ட சமூகப் படங்களும், சரித்திரத்தை பின்னணியாகக் கொண்ட கதைகளும் படமாகத் தயாரிக்கப் பட ஆரம்பித்தன.

"மீரா"வுக்கு முன்னால் வரை நடிக நடிகையர் சொந்தக் குரலில் பாடி நடித்த காலம். மீராவுக்குப் பின்னால் இந்த நிலை மெல்ல மெல்லக் குறைந்து பின்னணி சங்கீதம் முன்னுக்கு வந்து கொண்டிருந்தது.

(இந்த வகையில் பதிவான முதல் பின்னணிப் பாடலுக்கு இசை அமைத்தவர் எஸ்.வி. வெங்கட்ராமன் தான் என்பதை முன்பே பார்த்தோம்.) புதிய பின்னணிப் பாடகர்களும் பாடகியர்களும் திரை இசைத் துறையில் புக ஆரம்பித்தனர். எம்.எம். மாரியப்பா, திருச்சி லோகநாதன் ஆகியோர் பின்னணிப் பாடகர்களாகவும், பி.ஏ.பெரியநாயகி, எம்.எல்.வசந்தகுமாரி, டி.கே. பட்டம்மாள் போன்ற இசை மேதைகள் படவுலகில் பின்னணிப் பாடகியராகவும் நுழைய ஆரம்பித்தனர்.

பாடலுக்கு மட்டுமே இசை அமைப்பாளர், பின்னணி சங்கீதத்துக்கு ஆர்கெஸ்ட்ரா போதும் என்ற நிலை மாறி முழுப் பொறுப்பையும் இசை அமைப்பாளரே ஏற்று நடத்தும் நிலையும் உருவானது. இதன் காரணமாக ஒன்றிரண்டு இசை அமைப்பாளர்களே இருந்து வந்த திரை உலகில் புதிதாக இசை அமைப்பாளர்கள் நுழைந்து திறமையை வெளிக்காட்ட ஆரம்பித்தனர்.

எஸ்.வி. வெங்கட்ராமன் அவர்களின் சம காலத்தவர்களாக ஜி. ராமநாதன், ஆர். சுதர்சனம், சி. ராமச்சந்திரா, எஸ். ராஜேஸ்வரராவ், சி. ஆர். சுப்பராமன் ஆகிய இசை மேதைகளும் திரை உலகில் தத்தம் பாணியில் சாதனைகள் படைக்க ஆரம்பித்தனர். ஒரு ஆரோக்கியமான தொழில் போட்டி அவர்களுக்குள் நிலவ ஆரம்பித்தது. "நேற்றைய சாதனைகள் நேற்றோடு. இன்று புதிதாக செய்யவேண்டும்." என்று அன்றைய சாதனைகளே அடுத்த வாய்ப்புக்கான அடிக்கல்லாக அமைய ஆரம்பித்த நிலை.

படத் தயாரிப்பு நிறுவனங்களும் புதிதாக நிறைய உருவாக ஆரம்பித்தன. ஜுபிடர் மட்டுமே பெரிய நிறுவனமாக இருந்த நிலை மாறி ஏ.வி.எம், ஜெமினி, மாடர்ன் தியேட்டர்ஸ் ஆகிய நிறுவனங்களும் மெல்ல மெல்ல பிரபலமாகி வந்து கொண்டிருந்தன.. ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனமும் ஒவ்வொரு புதிய இசை அமைப்பாளரை தனதாகக் கொண்டு இயங்க ஆரம்பித்தது.

அந்த வகையில் ஒரு புதிய தயாரிப்பு நிறுவனம் உருவானது. அதுவரை சென்னை கீழ்ப்பாக்கத்தில் நியூடோன் ஸ்டுடியோவில் ஒரு சாதாரண கடை நிலை ஊழியராக சேர்ந்து கலை இயக்குனராக உயர்ந்த திரு. எப். நாகூர் அவர்கள் தனது நண்பரான திரு. ஜோசப் தளியத் அவர்களுடன் இணைந்து "சிட்டாடல்" தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார்.

அது வரை பெரும்பாலும் ஹிந்து சமயப் புராணங்களையே அடிப்படையாகக் கொண்டு திரைப்படங்கள் தயாரிக்கப் பட்டு வந்தன. அதற்கு மாறுபட்டு கிறிஸ்தவ மதத்தை பின்னணியாகக் கொண்டு வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளை கர்த்தர் அருளால் வெற்றி கண்ட ஒரு பெண்ணின் கதையை "ஞான சௌந்தரி" என்ற பெயரில் தங்கள் முதல் படமாகத் தயாரிக்க முடிவு செய்தனர்.

டி. ஆர். மகாலிங்கம் - எம்.வி. ராஜம்மா இணைந்து நடித்த இந்தப் படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பை எஸ்.வி. வெங்கட்ராமன் அவர்களுக்கு கிடைத்தது. (முதலில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் பி. பானுமதி அவர்கள். சில காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக பானுமதி படத்திலிருந்தே விலகிக் கொள்ள எம்.வி. ராஜம்மாவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது..)

படப்பிடிப்பு தொடங்கிய புதிதில் ஒரு நாள் இசையமைப்பாளர் எஸ்.வி. வெங்கட்ராமன் தயாரிப்பாளருடன் பாடல் காட்சி சம்பந்தமாக விவாதித்துக் கொண்டிருந்த போது ஜெமினி ஸ்டுடியோவில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த திரு. சிட்டிபாபு தனது சகோதரியின் பதினோரு வயது மகளுடன் அவர்களைச் சந்திக்க வந்தார்.

"இந்தப் பொண்ணு ரொம்ப நல்லாப் பாடுவா. ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப் பாருங்க." என்று கேட்டுக்கொண்டார்.

"சின்னப்பொண்ணு. அப்படி என்ன பெரிசாப் பாடிடப் போறா?" என்று நினைக்காமல் அவளை அழைத்து ஒரு பாட்டு பாடச் சொல்லிக் கேட்ட எஸ்.வி. வெங்கட்ராமன், "குரல் ரொம்ப நல்லா இருக்கு. நம்ம படத்துலே சின்ன வயசு ஞான சௌந்தரிக்கு இந்தப் பெண்ணே பாடிடட்டுமே" என்று வாய்ப்புக் கொடுத்தார்.

அப்படி எஸ்.வி. வெங்கட்ராமனால் அன்று முதல் வாய்ப்பைப் பெற்று சிறுமியாக திரை உலகில் நுழைந்த அந்தப் பின்னணிப் பாடகி கிட்டத் தட்ட பதினைந்து ஆண்டு காலம் தனது தேன் குரலால் ரசிகர்களைக் கவர்ந்து தென்னிந்தியத் திரை உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
அவர்தான் - "ஜிக்கி".

"ஞான சௌந்தரி" படத்தில் இடம் பெற்று பட்டி தொட்டி எங்கும் பிரபலமான "அருள் தாரும் தேவ மாதாவே. ஆதியே இன்ப ஜோதி" என்ற கம்பதாசனின் பாடல் பல்லவி முதல் முதலாக ஜிக்கியின் குரலில் தான் துவங்கியது. வளர்ந்த ஞானசௌந்தரிக்காக பி.ஏ. பெரியநாயகி பாடினார். இன்று வரை அந்தப் பாடல் மிகப் பிரபலமான பாடலாகவே இருந்து வருகிறது. http://us.dada.net/music/paperiyanayaki_jikki_paperiyanayaki/arul-tharum-deva_1363110m.html

பி.ஏ. பெரியநாயகி பாடிய "கன்னியே மாமரித் தாயே" பாடல் சோகம் இழையோடும் அருமையான மெலடி http://us.dada.net/music/paperiyanayaki_jikki_paperiyanayaki/kanniye-mamarithaye_1363111m.html என்றால் "ஜீவிய பாக்கியமே" சந்தோஷம் பொங்கித் ததும்பும் உற்சாகத்தை அருமையாக வெளிப்படுத்தியது.

"வெட்டுண்ட கைகள்" பாடல் காட்சி படத்தின் திருப்பு முனையாக அமையும் காட்சி. இந்தப் பாடலிலும் சரி.. இணைப்பிசையிலும் சரி தனி முத்திரை பதித்தார் எஸ்.வி. வெங்கட்ராமன். http://us.dada.net/music/paperiyanayaki_jikki_paperiyanayaki/vettunda-kaigal_1363112m.html

தேவமாதாவின் அருள் ஞான சௌந்தரி படத்தில் சம்பந்தப் பட்ட அனைவரையும் நன்றாகவே ஆசீர்வதித்தது.

"ஞான சௌந்தரி" படம் பெருவெற்றி பெற்றது. அதன் வெற்றிக்கு பல காரணங்கள் இருந்தாலும் மிக முக்கியமான ஒரு காரணம் திரு. எஸ்.வி. வெங்கட்ராமனின் இசை" என்று குறிப்பிடுகிறார் திரை ஆய்வாளரும் பிரபல எழுத்தாளருமான திரு. ராண்டார் கை அவர்கள்.

 

சிகரம் தொடுவோம்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.