வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


திரைத் துறையில் ஓய்வின்றி உழைத்தாலும் தனக்கு இலக்கியத்தின் மீது உள்ள காதலால் தொடர்ந்து எழுதி வரும் திரு. ரவிவர்மன் ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்கு உரிய அத்துனை அடையாளங்களையும் கொண்டுள்ளார். 

திரைத்துறையில் பணிபுரியும் பலருக்கு இலக்கியத்தின் மீது ஆர்வம் இருந்தாலும், தங்களை இலக்கியத்தில் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்வதில்லை. ஆனால் திரு. ரவிவர்மன் அவர்கள் பரவலாக அறியப்பட்ட ஓர் எழுத்தாளர். இலக்கியம் மீது தீராக் காதல் கொண்டவர். அவரது எழுத்தின் நடை, சொல்லாடல் போன்றவை தனித்தன்மை பெற்று விளங்குபவை.

"யாவரும் கேளிர்" தொடர்கதை (நாவல்) கிராமத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்படும் தொடர். அவரது சொல்லாடல், காட்சிப்படுத்துதல் போன்றவை ஒரு கிராமத்திற்கே சென்றது போன்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்தும். இன்றைய எந்திர உலகில் நாம் இழந்த நமது கிராமத்து உணர்வுகளை, நிகழ்ச்சிகளை நம் கண்முன்னே அழைத்து வரப்போகிறது இந்தத் தொடர். 

 

 
     
     
     
   
யாவரும் கேளிர்
1
 
யாவரும் கேளிர்
ஆசிரியர் பற்றி
------------------------

 
 

 
 



ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்

கிராமத்து மைந்தனாக இருந்தாலும் திரைத்துறை மீது கொண்ட காதலால் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் ரவிவர்மன் அவர்கள், தமிழ், தெலுகு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களிலும், ஹிந்தி உள்ளிட்ட வடமொழிப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

"ஆட்டோகிராப்", "அந்நியன்", "வேட்டையாடு விளையாடு", "தசாவதாரம்", "வில்லு", போன்ற தமிழ் படங்களிலும், "கிளிச்சுண்டன் மாம்பலம்" (கிளிசுண்டன் மாம்பழம்), போன்ற மலையாளப் படங்களிலும், "ஜெய்" (Jai), போன்ற தெலுகுப் படங்களிலும் "பிர் மிலேஞ்சே" (Phir Milenge), ராம்ஜி லண்டன் வாளா" (Ramji London Vala) போன்ற ஹிந்திப் படங்களிலும், "பைவ் பைவ் போர்" (Five Five Four) போன்ற இந்திய ஆங்கிலப்படங்களிலும்

ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.இது தவிர M.I.A Video 2007 (English) ஆல்பத்திலும், சைல்ட் என்விரான்மென்ட் (Child Environment) என்கிற ஆங்கில ஆவணப்படத்திலும், ஐநூறுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

இதுவரை அவர் பெற்றுள்ள விருதுகள்:

2000 ஆம் ஆண்டு சாந்தம் என்கிற மலையாளப் படத்துக்காக 23 EME 3rd continents International Award மற்றும் அதே திரைப்படத்திற்காக கேரளா சாலச்சித்ரா விருதையும் (2000) பெற்றுள்ளார். SICA வழங்கும் சாதனையாளர் விருதை 2001 வருடமும், அந்நியன் திரைப்படத்திற்காக 2005 ஆம் ஆண்டு பிலிம் பேர் (Film Fare) விருதையும், இந்தியா டுடேவின் Award for face of the feature in cinema (2005) விருதையும், வேட்டையாடு விளையாடு" படத்திற்காக தமிழக அரசின் விருதையும் (2005), இதே படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2005) விருது மற்றும் IIFA (2006) விருதையும், தசாவதாரம் படத்திற்காக எம். ஜி. ஆர். & சிவாஜி பாப்புலர் (2009) விருதையும் பெற்றுள்ளார்.

 

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS யாவரும் கேளிர் TS ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் யாவரும் கேளிர் வாயில்

யாவரும் கேளிர் - 40

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்  

பெரும்பாலும் வெளிநாடுகளில் வாரம் முழுவதும் மக்கள் உழைத்து கலைத்து தங்களுடைய அல்லல்களை போக்க இரவு நேர விருந்துகளில் உண்டுகளிப்பது உண்டு. அப்படித்தான் இலங்கை பெண் யாழியும், மது அருந்திக்கொண்டு இருந்தாள். அரிதாவை பார்த்த யாழி,
“என்ன அரிதா முகத்துல ஏதோ மலர்ச்சி? புத்துணர்ச்சி பெற்றவளாக தெரிகிறாய்.”
“அது எல்லாம் ஒண்ணுமில்லடி ஒருத்தன் நேத்து என் மனச பிசைய வச்சுட்டாண்டி.”
“என்னடி சொல்லுற”
“வாழ்கையே முடுஞ்சு போச்சு.. இதுதான் என் கடைசி பக்கம்னு நினைச்சு ஒரு
பாதைக்கு போனா ஒரு வழிப்போக்கன் என் பாதைய மாத்திட்டான்டி. புதிய உலகத்துக்கு 'போ' ன்னு என்னைய புடிச்சு தள்ளிவிட்டுட்டான்டி”
“யாருடி அவன்”
“அவன முழுசா தெரியல, ஆனா புதுசா இருக்கான். அவன புரிஞ்சுக்க முடியல, எனக்கு என்னய புரியவச்சுட்டான். காதல் ஒரு காமம்ன்னு சொல்றான், வாழ்கை வாழ்வதற்கு அல்ல, கற்றுக்கொள்வதற்கு என்கிறான். மொத்தத்துல என்னைய மாத்திட்டான்.”
“யாருடி அவன்”
“பேரு 'செல்லா'ன்னு சொன்னவன் எங்கிட்ட சொல்லாமலே மனசுக்குள்ள புகுந்துட்டான். இது எல்லாம் எங்க நடந்துச்சுன்னு தெரியுமா......? தற்கொலை பண்ணப்போன இடத்துல”
“ நீ தற்கொலை பண்ணப்போனியா”
“அதான் எங்க அம்மா, அப்பா செத்து, ஒருத்தன் என்னைய நம்பவச்சு கழுத்தருத்துட்டுட்டு ஒடி,.... ம் அந்த நினப்பு என்னைய தினந்தோறும் அரிக்க அதுவே உடம்பொல்லாம் சொரி, சிறங்கு மாதிரி என்ன அரிச்சு என் மனசுக்குள்ள ஜலமாகவும், கண்ணுக்கு வெளியே கண்ணீராவும் வழிஞ்சுட்டு இருந்தது.”
யாழி: “உனக்கு நடந்தத பெரிய விசயமா நீ நினைக்குற எனக்கும் என் ரத்தங்களுக்கும் என் நாட்டுல நடந்த விசயங்களுக்கு, நடக்குற விசயங்களுக்கு நான் நூறுவாட்டி தற்கொலை பண்ணிக்கனும். சரி...வா அதோ அந்த போர்டுல நமக்கு புடிச்ச விசயத்த எழுதலாம்.”

அந்த சிறிய விருந்து அரங்கிற்குள் ஒரு வெள்ளை பலகை, கலர் பென்சிலை சுமந்து கொண்டுயிருக்க அதில் அவர்களுக்கு பிடித்த வாசகங்களை திருக்குறள் போல் இருவரியில் எழுதி அதற்கு கீழ் கையொப்பமிட்டு இருந்தனர். அங்கே கூடி இருந்த அனைவரும் தமிழர்கள் அந்த பலகையில் எழுதப்பட்டிருந்த அனைத்து வரிகளும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தன. அந்த பலகை அருகில் ஒரு சிறுமியும் அமர்ந்துதிருந்தாள். அந்த சிறுமி பலகையில் எழுதப்பட்டிருந்த குறிப்புகளை அவள் கையில் இருந்த நோட்புக்கில் குறிப்பெடுத்துக்கொண்டு இருந்தாள். யாழி மட்டும் “தமிழினம் எப்போதும் வீழ்வதல்ல. வீழ்பவை அனைத்தும் விருச்சகமாக உண்டாகவே. தமிழ் வாழ்க” என்று எழுதினாள். அதைப்படித்து “பிரமாதம், அற்புதம்” என்று அனைவரும் கைதட்டினர். யாழி மட்டும் தனக்குள்ளே வருத்தங்களை மறைத்துக்கொண்டு இருக்க, விருந்து முடிந்து விருந்தினர்கள் கலைந்து செல்ல, யாழி கார் ஒட்ட அரிதா அமர்ந்திருந்தாள். இருவரும் காரில் சென்றுகொண்டு இருந்தனர்.
“ஆமா எல்லோரும் English-ல எழுதும் போது நீ மட்டும் ஏண்டி தமிழ்ல எழுதின”
யாழி, அரிதாவிடம் “உங்க அப்பா பேரென்ன?”
“வெள்ளச்சாமிதேவர்”
“உங்க அப்பாவோட அப்பா பேரென்ன?”
அரிதா இடைமறித்து “நான் கேட்டதற்கு பதில் சொல்லாம நீ மீண்டும் கேள்வி கேட்குற”
“நான் பதில் சொல்றேன் முதல்ல நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு”
சரி“எங்க அப்பாவோட அப்பா பேரு வேம்பைய்யன்”
“உங்க அப்பாவோட தாத்தா பேரென்ன”
“முருகைய்யன்”
“உங்கப்பாவோட தாத்தாவோட அப்பா பேரென்ன”
“அது தெரியலடி”
“அப்படித்தான் நாமெல்லாம் தமிழர்களா இருந்து எப்படி உங்கப்பாவோட தாத்தாவோட அப்பா பேர் தெரியாமபோச்சோ அதேபோல அடுத்து வரப்போற சந்ததிகளான நம்ம பிள்ளைகளோட பிள்ளைகளான பிள்ளைக்கு நம் முன்னோர்கள் தமிழையும் இங்லீசையும் சேர்த்து தங்லீஸா பேசி இன்னைக்கு நாம இங்லீஷ் பேச ஆரம்பிச்சு நாளைக்கு கிராமரோட நம்ம சந்ததிங்க ஆங்கிலமா பேசப் ஆரமிக்கும் போது தமிழ் அகராதியே இல்லாம போயிடுமோன்னு பயமாயிருக்கு அதனால தான் போர்டுல தமிழ்ல எழுதினேன்.”
“என்னைய ரொம்ப யோசிக்க வச்சுட்டயேடி”
“நான் மட்டுமில்லடி, அந்த வழிப்போக்கனும்தான் உன்னைய யோசிக்க வச்சிருக்கான் சரி நீ அவனப்பத்தி என்ன நினைக்குற”
“அவனப்பத்தி நான் நினைக்குறதவிட, என்ன அவன் மட்டுமில்ல நீயும் சேர்ந்துதான் வாழ்கையுல நிறைய சந்திக்கணும்னு யோசிக்க வச்சுட்டீங்க. பரவாயில்ல நீயும் ஒரு எதிர்காலத்த சந்திக்கப்போற சந்ததிதான”
“ஆமாம் நீ சொல்லுற நேரத்துல வேற ஒரு ஆசைகூட இருக்கு”
“என்ன ஆசை”
“எங்கப்பாவோடது.. அவர் சொல்வாரு.. எல்லாத்தையும் துறந்து துறவரம்பூண்டு இந்தியாவுல இருக்குற காசிக்கு போயி சன்யாசியாகி கங்கை நதியோரம் அனையாம எரிஞ்சுட்டுயிருக்குற அரிச்சந்திரனோட இடுகாட்டுல நாமலும் சேர்ந்து பிணமா புகஞ்சு கங்கை நதியில கரஞ்சு போகணும்னு சொல்வாறு. அந்த ஆசை எனக்கு அடிக்கடி வருது இப்ப.”
யாழி சிரித்தாள்.
“ஏண்டி சிரிக்குற,”
”காசியப்பத்தி தெரிஞ்சா உனக்கு சிரிப்பே வராது தெரியுமா?”
“அப்ப நீ காசிக்கு போயிருக்கியா?”
“எங்கப்பா அடிக்கடி காசி யாத்திரை கதையை எனக்கு தினமும் சொல்லுவாரு”
யாழி “நான் காசிக்கு போயிருக்கேன்..”
“என்னடி சொல்லுற நீ சிலோன்ல இருந்தில்ல சிக்காக்கோ வந்தேன்னு நினச்சேன். எங்க ஊரு காசிக்கு போனேன்னு சொல்லுற”
“ஆமான்டி சிலோன்ல தமிழச்சியா பிறந்து தமிழினத்துக்கு ஏதாவது செய்யணுமேன்னு நினச்சு தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைகளை பத்திரிக்கை மூலமா எழுதி உலகத்துக்கு தெரிவிக்க ஆவேசமா போராடினேன். அதுக்கு எனக்கு கிடச்ச விலை என்னய சிங்களர்கள் கற்பழிச்சதுதான். ஏதோ நான் பத்திரிகையாளரா பத்திரிகையில வந்த செய்திகள் அனைத்தும் தூக்கத்தில் இருக்கும் நம்மை அதிகாலையில் பொழுதுவிடிகிறது, விழித்துக்கொள்ளுங்கள் என்று கூரைமீது அமர்ந்து “கொக்கரக்கோ” என்று கூப்பிடும் கோழி என்ற புனைப்பெயரில் எழுதியதால், அந்த கோழி, இந்த யாழி இல்லை என்று என்னைய இலங்கை அரசு விட்டுவிட்டது. அப்பத்தான் நான் முதலில் இலங்கையில் இருந்து இந்தியா வந்தேன். அகதிகள் முகாமுக்கு சென்றேன். தமிழ் நாட்டில் தமிழர்களே அகதிகள் என்று எங்களை அன்னியமாக்கியபோது அப்படி நாம் வாழ்வதைவிட இந்தியாவில் ஏதோ ஒரு புண்ணிய நதியில் விழுந்து இறந்துவிடலாம் என்று காசிக்கு சென்றேன். ஒரு மாலைப்பொழுதில் சூரியன் அஸ்தமமான நேரம். கங்கை நதி கரைப்பகுதியின் ஒரமாக வழிந்து, நடந்து, குழைந்து சென்று கொண்டு இருந்தாள். அதில் இறங்கி குளித்தேன் அந்த குளிர் என்னை லேசாக இதமாக்கியது. நான் தண்ணீரில் இருந்து வெளியே வரும்போது கண்களைமூடி ஒம் என்று உச்சரித்து என் மூச்சுக்குழாய் வற்றியபோது ஒம் என்ற வார்த்தை முடிந்தன. மீண்டும் கங்கையில் வீசிய காற்றை உள்வாங்கியபோது கண்களை திறந்தேன்.எனக்கு எதிர்திசையில் தண்ணீர் இன்றி வரண்ட மணலில் நடந்த காட்சியை கண்டு அதிர்ச்சியில் உரைந்தேன். இறந்து ஒரு நாளேயான ஒரு மனித சடலத்தை 5 நாய்கள் திண்றுகொண்டு இருந்தன.

தொடரும்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</