கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
  காணொளி TS படைப்பாளிகள் TS கட்டுரைகள் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை
 
 
 
தமிழ் ஸ்டுடியோவின் தொடர் செயல்பாடுகள்
-----------------------------------
 
குறும்பட வட்டம்

தமிழ் ஸ்டுடியோவின் 64 வது குறும்பட வட்டம்

நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் 64வது குறும்பட வட்டத்தில் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக அரங்கேறிக்கொண்டிருக்கும் பெண்கள் மீதான வன்முறைகள் குறித்து, கேரளாவின் முக்கியமான ஆவணப்பட இயக்குனர் கோபால் மேனன் தயாரித்து ஒளிப்பதிவு செய்திருக்கும் ஆவணப்படமான மௌனம் பேசும்போது திரையிடப்படவிருக்கிறது. இதன் இயக்குனர் நிஷா பொன்தாதில்.

  மேலும் படிக்க
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------


Shyam Raat Seher - ஒளியில் கசியும் மௌனம்.

 நகர வாழ்வில் சிக்கி தங்கள் சுயங்களை இழக்கும் சராசரி மனிதர்களின் வாழ்வு தான் இந்தக் குறும்படம். ஒரு நாடகக் கலைஞன், மாடல், ஹேன்ட் மாடல் (பல நேரங்களில் நமக்குக் காட்டப்படும் மாடல் பெண்களின் கைகள், விரல்கள் போன்றவை சரியில்லை என்றால், அவர்களுக்கு தங்கள் கைகளை மட்டும் மாடல்களாக வைத்து, பின்னணியில் இருக்கும் மாடல் பெண்கள்......

  மேலும் படிக்க
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
   
 
ஜெயகாந்தன் - திரைப்படங்கள் திரையிடல்

18-04-2015, சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு.

இக்சா மையம், ஜீவனஜோதி அரங்கம், எழும்பூ
ர்

நண்பர்களே, ஜெயகாந்தன் நினைவாக ஜெயகாந்தன் பற்றிய ரவிசுப்ரமணியன் இயக்கத்தில் வெளியான ஆவணப்படமும், ஜெயகாந்தனே எழுதி இயக்கிய யாருக்காக அழுதான் திரைப்படமும் எதிர்வரும் சனிக்கிழமை மாலை ஜீவனஜோதி அரங்கில் திரையிடப்படவிருக்கிறது. நண்பர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் பங்கேற்று மறைந்த மாபெரும் இலக்கிய ஆளுமையான ஜெயகாந்தனுக்கு அஞ்சலி செலுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.



 

  மேலும் படிக்க
 
 
படைப்பாளிகள் - கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி

ஒரு பிரச்சினையின் தீவிரத்தையும் அதன் விளைவுகளையும் எடுத்துரைக்க, அந்த பிரச்சினையை பற்றியே அதிகம் விவரித்து அதை பிரச்சார ரீதியில் காட்டுவதை விட, அந்த பிரச்சினையினால் நிகழ்ந்த பாதிப்புகளை காட்டுவதன் மூலமே அந்த வலியை மிகவும் வீரியமாக பார்ப்பவர்களுக்கு கடத்த முடியும் என்று நம்புகிறேன். உதாரணமாக, போரைப் பற்றி காட்டுவதை விட, போரினால் வீடிழந்த, உறவிழந்தவர்களின் போருக்குப் பிந்தைய வாழ்வின் மூலமே போரின் விளைவுகள் மிகவும் வீரியமாக பதிவு செய்யப்படும். அத்தகைய ஒரு முறையைத்தான் மௌன மொழியிலும் கையாண்டிருந்தேன். அடுத்தது, ஒரு திரைப்படம் பிரச்சார நொடியில் இருப்பதை நான் விரும்பவில்லை. 



  மேலும் படிக்க
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
       
 
 
குறும்பட சேமிப்பகம் - எங்கேயோ பார்த்த மயக்கம்

அப்பெண்ணை அவன் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாகவே தற்செயலாக இருவரும் சந்தித்துக்கொண்ட்துதான் நாயகனின் இம்முயற்சிகளுக்கு காரணம். அவள் தன்னை ஞாபகம் வைத்திருப்பாள் என்று இவனுக்கு துளியும் நம்பிக்கையில்லை. அப்பெண்ணைப் பார்த்தால் உங்களுக்கு made for each other என்பதில் நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்கவேண்டும் என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருக்கையில் அவனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. அத்துடன் அவன் கனவு களைந்து, அந்தப்பெண்ணை தேடிப்பார்க்கிறான், அவளைக் காணவில்லை. ஒருவேளை அவள் சென்றுவிட்டால் என்று விரக்தியில் அலைபேசியை எடுக்கையில், அவனுக்கு பின்புறம் தான் அப்பெண் நிற்கிறாள். லாம் -

 

  மேலும் படிக்க
 
 


தமிழ் ஸ்டுடியோவின் புதிய பகுதி - திரைப்பயணம்.

தமிழ் ஸ்டுடியோவின் புதிய திட்டம், திரைப்பயணம். இதன் படி இனி மாதம் ஒருமுறை / அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ஆர்வமுள்ள நண்பர்களை இணைத்து தமிழ் ஸ்டுடியோ இந்த திரைப்பயனத்தை தொடர்ந்து நடத்தும். திரைப்படம் சார்ந்த இடங்களுக்கு சென்று அந்த இடத்திற்கு திரைப்படங்களுக்கு உள்ள தொடர்பு, அங்கே இருக்கும் திரைப்படம் சார்ந்த தகவுகள், திரைப்படத் துரையின் வளர்ச்சியில் அந்த இடத்தின் பங்கு, அந்த இடத்தில் இருந்து வந்த திரைப் பிரபலங்கள் போன்ற திரைப்படத் துறைக்கும் பயணம் செல்லும் இடத்திற்கும் உள்ள பிணைப்பை இந்த திரைப்பயணம் விவரிக்கும்.

 



  மேலும் படிக்க
   
   
   
 
 
தமிழ் ஸ்டுடியோவின் குறும்பட வட்டம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை எக்மோரில் உள்ள ஜீவன ஜோதி அரங்கில் நடைபெறும். இந்த இடம் கன்னிமாரா நூலகம் எதிரில் உள்ளது.  
   
 
---------------------------------  
பௌர்ணமி இரவு
 
ஒவ்வொரு பௌர்ணமி இரவும் தமிழ் ஸ்டுடியோ அலுவலகத்தின் மொட்டை மாடியில் திரைப்படங்கள் திரையிட்டு இரவு முழுக்க விவாதம் நடைபெறும்.  
   
 
   
லெனின் விருது
 
தமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று சுயாதீனத் திரைப்படக் கலைஞர்களுக்காக படத்தொகுப்பாளர் பீ.லெனின் அவர்கள் பெயரில் விருது வழங்கி வருகிறது.  
---------------------------------  
 
---------------------------------  
பாலு மகேந்திரா விருது  
தமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு ஆண்டும் மே 19ஆம் தேதி குறும்படக் கலைஞர்களை கவுரவிக்கும் விதமாக இயக்குனர் பாலு மகேந்திரா அவர்கள் பெயரில் விருது வழங்கி வருகிறது.  
     
   
  ---------------------------------  
  ஒளிப்படத் தொகுப்பு  
  தமிழ் ஸ்டுடியோ சார்பாக நடக்கும் நிகழ்வுகளின் புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பு. இந்த இணைப்பில் பெரும்பாலான நிகழ்வுகள் சார்ந்த புகைப்படங்களை பார்க்கலாம்.  
     
   
     
 
 
 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எங்களைப் பற்றி பிரிவுகள் செயல்பாடுகள் தமிழ் ஸ்டுடியோவில் தேட பின் தொடர
         
  கருத்துகள் திரைக் களஞ்சியம் குறும்பட வட்டம்

Google Thamizhstudio
Facebook
Picasa Web Albums
Twitter
YouTube
   
  பத்திரிகை செய்திகள் குறும்பட சேமிப்பகம் பௌர்ணமி இரவு
  நிர்வாகம் படைப்பாளிகள் குறுந்திரைப் பயணம்
  தொடர்புக்கு போட்டிகள் குறும்பட உதவிகள்
     
 

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ - All rights reserved.

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome

Concept, design, development & maintenance by Thamizhstudio