வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
-------------------------

தமிழ் சினிமா பேச ஆரம்பித்து எழுபத்து எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. 1931ல் முதன் முதல் பேசிய தமிழ்ப்படம் காளிதாஸ். அதன் பிறகு இதுவரை சுமார் ஐயாயிரம் படங்களுக்கு மேல் வெளிவந்துவிட்டன என்று எண்ணிக்கையைச் சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ளலாம். இன்றளவும் உலகத்தரமான படம் ஒன்றைக்கூட நம்மால் தயாரிக்க இயலாமல்போனது மிகப்பெரிய அவலம்தான்.

ஏதோ, கதை பண்ணிக்கொண்டு வந்திருக்கிறோம். சமீபகாலமாக சில நல்ல இலக்கியவாதிகள் திரைத்துறைக்கு வந்திருப்பது சற்று ஆறுதலை அளிக்கிறது. இன்றைய தமிழில் முக்கிய படைப்பாளிகள் -- ஜெயமோகன் (நான் கடவுள்) ச. தமிழ்ச்செல்வன் (பூ), நாஞ்சில் நாடன் (சொல்ல மறந்த கதை) எஸ். ராமகிருஷ்ணண் (சண்டக்கோழி) போன்றோரின் -- வருகை, இனி வரும் காலத்தில் உன்னதமான திரைப்படங்கள் உருவாவதற்கு ஒரு தளம் அமைத்துக்கொடுக்கும் என்கிறவிதத்தில் நம்பிக்கையை அளிக்கிறது. மேலும் சில சிறந்த இளம் இயக்குனர்கள் நவீன தமிழ் இலக்கியத்தின் பரிச்சயத்தோடு திரைத்துறைக்கு வர ஆரம்பித்திருப்பதும் ஒரு நல்ல அடையாளம். எனவே இந்த இலக்கியவாதிகளின் புதிய வரவு நம்மை நம்பிக்கை கொள்ள வைக்கும் அதே நேரம், தமிழ்த் திரையுலகின் ஆரம்ப காலங்களிலிருந்து இத்துறைக்கு பங்களிப்பு செய்த, செய்து வரும் இலக்கியவாதிகள் சிலரை இந்நேரம் நினைவு கூரத்தோன்றுகிறது. இந்த மாய உலகத்தில் உலவிய இவர்களில் சிலரை இப்போது நினைவு கூர்வோம்.

 
     
     
     
   
தொடர்கள்
1
 
மாயலோகத்தில்
ஆசிரியர் பற்றி

------------------------
 
 

 

 
 

என்னைப்பற்றி நான் என்ன சொல்ல? அடிப்படையில் நான் ஒரு எழுத்தாளனே அல்ல! ஒரு பொறியாளனாக இருந்தேன். அவ்வளவுதான். ஆனால் எழுத்துடன் தொடர்புடைய குடும்பப் பின்னணி எனக்கு உண்டு. என் அண்ணன் ஒரு எழுத்தாளனாக இருந்து, மிகக்குறைவாக எழுதி, மிகக்குறைந்த வயதிலேயே எங்களை விட்டுப்பிரிந்தார். கிருஷ்ணன் நம்பி என் சகோதரர். என்னை விட எட்டு வயது பெரியவர். தேவையானபோதெல்லாம் கிருஷ்ணணன் நம்பியின் தம்பி என்கிற முகமூடியை அணிந்து கொள்வது சற்று சௌகரியமாக இருக்கிறது. கிருஷ்ணன் நம்பியின் இக்கியப் பின்னணி என்னை ஒரு நல்ல வாசகனாக உருவாக்கிக் கொள்வதற்கு உதவியாக இருந்தது. பணியிலிருந்து 1998ல் ஓய்வு பெறுவது வரை ஒரு வாசகனாக மாத்திரமே இருந்து வந்தேன்.

2002ல் கிருஷ்ணன் நம்பி மறைந்து 25வது வருட நினைவு தினக்கூட்டம் ஒன்று நாகர்கோவிலில் நடைபெற்றபோது அதனை ஒட்டி நம்பியைப் பற்றி புத்தகம் ஒன்றைத் தொகுப்பும் வாய்ப்பும் கிடைத்தது. சொல்லப்போனால் உருப்படியான ஒரு முதல் இலக்கியப் பணியாக இதைச் சொல்லலாம்.

'அமுதசுரபி' எனது சில கட்டுரைகளை அவ்வப்போது வெளியிட்டு என்னை எழுதத் தூண்டியது. ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், முன்னாள் ஆசிரியர் அண்ணா கண்ணன் ஆகியோருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். 'ஆடியகாலும், பாடிய வாயும் சும்மா இருக்காது' என்பார்கள். அது எழுத்துக்கும் பொருந்தும். எழுதி, ஒரு முறை அதை அச்சில் பார்த்துவிட்டால், அதன் பிறகு அந்த மோகம் குறைவதே இல்லை. எனவே, எழுதத்தெரியாத நான் எதையாவது எழுதிப்பார்த்துவிட வேண்டும் என்கிற விழைவில் மீண்டும் எழுத முயற்சி செய்தபோது, சிறு வயதிலிருந்தே சினிமா கிறுக்கனாக இருந்த எனக்கு திரைப்படம் சார்ந்த விஷயங்களின்பால் ஆர்வம் ஏற்பட்டது இயல்பானது. இதன் விளைவாக 1940 தொடங்கி 1960 வரையிலான காலத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, நான் பார்த்த சில நல்ல தமிழ்ப்படங்கள் பற்றிய குறிப்புகளை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசையில் அப்படங்கள் பற்றிய குறிப்புகளை எழுத, ஆரம்பித்தேன். அதில் ஒரு சிலக் கட்டுரைகள் 'உயிரோசையில்' வெளிவந்தது.

கிருஷ்ணன் வெங்கடாசலம்

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS மாயலோகத்தில் TS கிருஷ்ணன் வெங்கடாசலம் தொடர்கள் வாயில்


இளங்கோவன்

கிருஷ்ணன் வெங்கடாசலம்  

இவரது இயற்பெயர் தணிகாசலம். எம்.கே. தியாகராஜ பாகவதர் நடித்த 'அம்பிகாபதி' படத்தின் வாயிலாக திரை உலகில் அடி எடுத்து வைத்தார். தமிழ் சினிமாவில் தமிழைப் பேச வைத்த முதல் வசன கர்த்தா இளங்கோவன். இவர் 'மணிக்கொடி' இலக்கியப் பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணிபுரிந்திருக்கிறார். சிலகாலம் 'தினமணி' பத்திரிகையிலும் உதவி ஆசிரியராக இருந்திருக்கிறார்.

பி.யூ. சின்னப்பா நடித்த 'கண்ணகி' படத்தின் மூலம் புகழின் உச்சிக்கே சென்ற வசன கர்த்தா. தனது படங்களுக்கு இளங்கோவன் வசனம் எழுதுவதாக இருந்தால் மாத்திரமே நடிக்க ஒப்புக்கொள்வேன் என எம் கே டி பாகவதர் கண்டிஷன் போடும் அளவிற்கு விசேஷத் திறமை படைத்தவர்.
அம்பிகாபதி திரைப்படத்தில் ஒரு காட்சி
 

திரை உலகில் கலைஞர் கருணாநிதிக்கு அடுத்து எண்ணிக்கையில் அதிகப் படங்களுக்கு வசனம் எழுதிய நபர்களில் ஒருவராக இளங்கோவனைச் சொல்ல முடியும். 1937ல் ஆரம்பித்த இவரது பணி 1957 வரையிலும் நீடித்தது. சுமார் 30 திரைப்படங்களுக்கு மேலாக, கதை, வசனம் என்று இவரது பணி நீண்டது.

இவர் பணியாற்றி வெற்றியடைந்த படங்கள் ஏராளம். குறிப்பாக அசோக்குமார், அம்பிகாபதி (எம்கே தியாகராஜ பாகவதர்) கண்ணகி (பி யூ சின்னப்பா) சிவகவி (எம் கே டி பாகவதர்) குண்டலகேசி (ஹொன்னப்பா பாகவதர்)
கண்ணகி திரைப்படத்தில் ஒரு காட்சி
 

பவளக்கொடி (டி ஆர் மகாலிங்கம்) ஏழை படும்பாடு (வி. நாகையா) ஆசை (ஜெமினி கணேசன்) சக்கரவர்த்தித் திருமகள் (எம்ஜிஆர்) போன்றவை முக்கியமானவை.

ஏ.எஸ்.ஏ. சாமி, கலைஞர் கருணாநிதி, அறிஞர் அண்ணா போன்றவர்கள் திரையுலகில் நுழைந்து புகழ் பெற ஆரம்பித்தபின் இவரது மவுசு மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தது. 1957க்குப் பிறகு இவரது வசனத்தில் படங்கள் எதுவும் வந்ததாக வரலாறு இல்லை. மிகவும் ஏழ்மை நிலையில் மரணமடைந்த இவரது திரைப்படப் பணி தமிழ் திரையுலகில் எவருக்கும் குறைந்ததில்லை. 1961 ல் இவருக்குக் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.

இளங்கோவன் பணியாற்றிய திரைப்படங்கள்

1937 அம்பிகாபதி வசனம்
1941 அசோக்குமார் வசனம்
1941 அலிபாபாவும் நாற்பது திருடர்களும் வசனம்
1941 கதம்பம் வசனம்
1942 கண்ணகி வசனம்
1942 தமிழறியும் பெருமாள் திரைக்கதை வசனம்
1943 சிவகவி வசனம்
1944 மகா மாயா கதை வசனம்
1944 ஹரிதாஸ் வசனம்
1946 வால்மீகி வசனம்
1947 கன்னிகா கதை வசனம்
1947 தெய்வநீதி கதை வசனம்
1948 கோகுலதாசி கதை வசனம்
1949 இன்பவல்லி கதை வசனம்
1949 பவளக்கொடி வசனம்
1950 ஏழை படும்பாடு வசனம்
1950 பாரிஜாதம் வசனம்
1951 சுதர்சன் (ஏஎஸ்ஏ சாமியுடன் இணைந்து) வசனம்
1951 வனசுந்தரி கதை வசனம்
1953 பொன்னி வசனம் (ஏஎஸ்ஏ சாமியுடன் கூட்டாக)
1953 வேலைக்காரி மகள் வசனம்
1953 ஜெனோவா வசனம் (இருவருடன் கூட்டாக)
1955 டாக்டர் சாவித்திரி (ஏ கே வேலன், ஆசார்யாவுடன் கூட்டாக)
1956 ஆசை வசனம்
1957 புதுவாழ்வு கதை வசனம்
1957 ராஜராஜன் கதை வசனம்
1957 சக்கரவர்த்தி திருமகள் வசனம்

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.